இதயம் – 11
அவனுக்கோ, உடல் முழுதும் நடுக்கம் கொண்டது.
அவனை அறியாமலேயே விழிகளில் இருந்து ஒரு சொட்டு கண்ணீர் உருண்டோடியது.
எச்சிலைக் கூட்டி விழுங்கிக் கொண்டான்.
அவன் கண்ட உருவமோ, கற்பழிக்கப் பட்ட பெண்ணின் கையில் நாடித் துடிப்பை பரிசோதித்துப் பார்க்க, அதே அதிர்ச்சி மாறா பார்வையுடன் காம இச்சையில் வேட்டையாடப் பட்டு இறந்துக் கிடந்த பெண்ணை வெறித்தான்.
அவளது முகத்தில் ஆழமாக படிந்த அவனது பார்வை கூர்மை பெற, சட்டென அப் பெண்ணின் செவி மடலில் நிலைத்தது.
அதுவோ, வளர்ச்சி அடையாமல் இருக்க, அவனது இதழ்களோ அதைப் பார்த்த மாத்திரத்திலேயே ‘மைக்ரோஷியா’ என்று உச்சரித்திருந்தன.
ஆம், அன்று வள்ளி கொடுத்த வாக்குமூலத்தின் படி காணாமல் போன வர்ஷாவுக்கு செவிமடல் வளர்ச்சியடையாமல் அதாவது மைக்ரோஷியா எனும் குறைபாடு இருப்பதாக சொன்னாரே! அப்படியென்றால் இவள் வர்ஷாவாக இருப்பாளோ என்ற சந்தேகம் வலுத்தது.
அவசரமாக தனது அலைபேசியில் அப் பெண்ணின் முகத்தை கரங்கள் நடுங்க புகைப் படம் எடுத்துக் கொண்டவன் விழிகள் ஒரு கணம் யோசனையில் சுருங்க, அதற்கு விடையாக இவ்வளவும் காணொளியாக பதிவு செய்து எடுத்துக் கொண்டு மூச்சிறைக்க வேகமாக தனது அறைக்கு ஓடி வந்தது வேறு யாராக இருக்க முடியும் சாட்சாத் மித்ராவே தான்.
அவளைப் பார்த்து புருவம் மேலேறி இறங்க, ‘சுவிம்மர் மித்ரா’ என்று சொல்லிக் கொண்டவனுக்கு அவளை எதனால் கொன்று இருக்கின்றனர் என்று இப்போதே ஒவ்வொன்றும் தெள்ளத் தெளிவாகப் புரிந்து போனது.
நம்ப முடியாத அதிர்ச்சியுடன் அறைக்கு வந்த மித்ரா அக் காணொளியின் தொடர்ச்சியில் மேலும் சில விடயங்களைக் கூற, அதைக் கேட்க கேட்க உடல் விறைத்துப் போனவன் அவளது துணிச்சலை நினைத்து வியப்படைந்தான்.
தனக்கு ஆபத்து வரும் என்று தெரிந்துக் கொண்டே சிங்கத்தின் குகைக்குள் எவ்வித பாதுகாப்புகளும் இன்றி நுழைவது போலல்லவா சிரமப்பட்டு அவ்வளவு ஆதாரங்களையும் தனியொருவளாக செயற்பட்டு சேகரித்து இருக்கின்றாள்.
அதனை சிந்திக்கும் போதே அவளது துணிச்சலை பாராட்ட வேண்டும் என்ற எண்ணம் எழ, அடுத்த கணமே அவனது மனதோ, ‘உயிருடன் இல்லாதவளை எப்படி பாராட்டப் போகின்றாய்?’ என்ற கேள்வியை எழுப்பியது.
அப்போது தான் அவள் உயிருடன் இல்லை என்பது நெற்றிப் பொட்டில் அறைந்த போல நிதர்சனம் உரைக்க, ஆழ்ந்து ஒரு பெரு மூச்சை விட்டுக் கொண்டே இருக்கையை விட்டு எழுந்தவன் விழிகள் அக் கயவர்களை பழி தீர்க்க வேண்டும் என்ற வெறியில் மின்னியது.
தளர்ந்த நடையுடன் கீழே ஹாலுக்கு வந்தவன் தொலைக்காட்சியைப் போட்டு விட்டு அமர, அவன் வந்தமர்ந்ததை பார்த்துக் கொண்டே எழுந்து வந்து அவனருகில் அமர்ந்த ஆதிரா குரலை செருமினாள்.
சட்டெனப் பக்கவாட்டாகத் திரும்பி அவளை ஆழ்ந்து பார்த்தான்.
அவனின் பார்வையில் மேனியோ சில்லிட்டுப் போக, சட்டென தொலைக்காட்சியின் புறம் தன் பார்வையைத் திருப்பிக் கொண்டவள் “என்ன சார் சஸ்பென்ஷன் நீங்களாவே கேட்டு இருக்கீங்க போல?” என்று நக்கலாக கேட்டாள்.
கழுத்தில் கையை வைத்து நெட்டி முறித்துக் கொண்டே அவள் புறம் நன்றாக திரும்பி அமர்ந்தவன் “எஸ், நானே தான் கேட்டேன். எவ்வளவு நாள் தான் பிரைனை போட்டு கசக்கிட்டு வேலை பார்க்குறது எனக்கும் கொஞ்சம் ப்ரேக் வேணாமா?” என்று நக்கலாக கூற…
“ஒரு போலீஸா இருந்திட்டு எப்படி பொறுப்பே இல்லாம பேசுறீங்க ஷர்வீத்?”
அவளை ஒரு மார்க்கமாக பார்த்தவன் “லீவ் இட், என்றவன் நீ டீல் பண்ண போல எனக்கு சஸ்பென்ஷன் கிடைக்க போகுது பட் அதுக்கு நான் ஒரு பதில் சொன்னேனே அது மட்டும் கொஞ்சம் கஷ்டம் தான் பேபி” என அவன் சொல்ல, சட்டென அவளின் முகமோ யோசனையில் சுருங்கியது.
அவள் யோசிப்பதற்குள் அவனே “உன்ன தொடாமல் என்னால சன்னியாசம் எல்லாம் இருக்க முடியாது சோ…” என்றவன் குனிந்து அவளின் இதழில் லேசாக இதழ் பதித்து விட்டு எழுந்து கொள்ள “ஷர்வீத்” என்று அவள் கத்திக் கொண்டு எழ, “வாட் இஸ் ராங் வித் யூ ஆதிரா?” என்று அவள் அருகில் அமர்ந்து தொலைக்காட்சியை பார்த்துக் கொண்டு இருந்தவன் அவள் எழுந்து நின்று அதிர்ச்சியில் கத்துவதைப் பார்த்துக் கேட்க…
அதிர்ந்து விட்டாள் அவள்.
“நீங்க என்னை… இங்க…” என்று ஏதேதோ பிதற்றிய படி தான் அமர்ந்திருந்த இடத்தை பார்க்க…
“என்னடி?” என்றான் அழுத்தமாக…
தன் இதழ்களை வருடிக் கொண்டே வெகு வெகு நிதானமாக முன்பு இருந்ததைப் போல இருந்தவனை பார்த்து தன் தலையை இரு புறமும் அசைத்து “நீங்க என்…” என்று சொல்ல வந்தவள் மிகுதி வார்த்தைகளை சொல்ல முடியாமல் தடுமாற “என்ன நான் புரியல?” என்றான் கேள்வியாக அவளைப் பார்த்து…. “அதுஉஉ… என்று இழுத்தவள் நெற்றியை அழுத்தி விட்ட படி நத்திங்” என்று விட்டு குழப்பமாக தன் அறையை நோக்கி சென்றிருந்தாள்.
போகும் அவளை வெறித்தவன் இதழ்களில் மந்தகாசப் புன்னகை தவழ்ந்தது.
அன்றைய நாள் அப்படியே கழிய, அதனைத் தொடர்ந்து அடுத்த நாளே ஷர்வீத்தை இடைக்கால பதவிநீக்கம் செய்வதாக பூர்ணிமா ஒப்புக் கொண்டதாக ஓர் அறிக்கை வெளியிட்டதைத் தொடர்ந்து எரிந்து போன பெண்ணின் வழக்கினை சிபிஐ மூலம் புலன் விசாரணை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது.
அவனைப் பொறுத்த வரையில் இப்போதைக்கு மித்ரா தான் இறந்தது என்று யாருக்கும் தெரியபடுத்தாமல் நிதானமாக செயற்பட யோசித்தான்.
வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்பதைப் போல தனக்கு கிடைத்த ஆதாரங்களை வைத்தே காயை நகர்த்த சித்தம் கொண்டான்.
‘மித்ரா’ என்று விடயம் வெளியில் கசிந்தால், நிச்சயம் காவல் துறையினர் அவர்களைக் கண்டு பிடித்து விடுவார்கள் என்று குற்றவாளிகள் சுதாரித்து தப்பிக்க வாய்ப்பு உண்டல்லவா!
இரு நாட்கள் கடந்த நிலையில் அனைத்தையும் நினைத்த படி காரில் சாய்ந்து நின்றவனின் சிந்தை ஆதிராவின் குரலில் கலைந்தது.
“கிளம்பலாமா?” என்றாள் முறைத்துக் கொண்டே…
அவளை மேலிருந்து கீழாக ஆராய்ச்சியாகப் பார்த்தவன் “என்னடி ட்ரெஸ் இது?” என்றான் கடுப்பாக…
“இது தான் இப்போ ட்ரென்டிங்” என்றாள் இதழை சுளித்த படி…
“வாட்? இதுவா டிரண்டிங், புல்ஷிட் அதுவும் ஏதோ பஜ்ஜியை சேர்த்து தச்ச போல ஸ்லீவ்லெஸ் டி ஷர்ட் என்று வேறெதோ சொல்ல வந்தவனின் வாயை எட்டி தன் கரத்தால் பொத்தியவள் “90’ஸ் க்கு எல்லாம் 2கே’ஸ் கிட் ஃபேஷன் தப்பா தான் தெரியும்” என்று சொல்ல…
அவளின் கரத்தை விலக்கி விட்டு அவளைப் பார்த்தவன் “அஹான்… தென் ஓகே என்றவன் நானும் 2கே கிட்ஸ் ஃபேஷன் ட்ரை பண்றேன் என்று சொன்னவன் தான் போட்டிருந்த கருப்பு நிற ஷர்ட்டின் மேலிரு பட்டன்களை திறந்து விட்டவன், அவளின் திகைத்த முகத்தை திருப்தியாகப் பார்த்து புன்னகைத்தவாறே கையை முட்டி வரை மடித்து விட்டு பாக்கெட்டில் இருந்த கூலர்ஸ்ஸை எடுத்து போட்டுக் கொண்டவன் “கிளம்பலாமா?” என்று கேட்க…
அதெல்லாம் எங்கே அவள் காதில் வீழ்ந்தது?
அவளது பார்வை மொத்தமும் படிந்து இருந்தது என்னவோ பட்டன்களை திறந்ததன் பயனாக வெளிப்பட்ட அவனது உரமேறிய திண்ணிய மார்பு பகுதியில் தான்.
‘செம்ம ஹாட் தான்’ என மனதில் சொல்லிக் கொண்டே அவனது தோற்றத்தில் மயங்கி தான் போனாள் பாவையவள்.
அவளின் இமைக்கா பார்வையில் தன் அடர்ந்த கேசத்தை கோதிக் கொண்டவன் “ஹலோ மேடம்” என்று அவள் முகத்தின் முன் சொடக்கிட்டு அழைக்க, ‘இப்படியா மயங்கி வைப்ப ஆதிரா? ஷிட் ஹையோ போச்சு என்று மனம் பதற, கெத்தை விடாத மெயின்டெய்ன் பண்ணு’ என தனக்குள் சொல்லிக் கொண்டவள் முகத்தை கடுகடுவென வைத்துக் கொண்டு “இதோ பாருங்க மிஸ்டர் என் புருஷனா வர்றதுக்கு சில கண்டிஷன்ஸ் இருக்கு” என்றாள் சீற்றமாக…
மணிக்கட்டை திருப்பி கைக் கடிகாரத்தில் மணியைப் பார்த்தவன் “ஹும் சொல்லு கேட்போம்” என்றபடி மார்புக்கு குறுக்கே கைகளைக் கட்டிக் கொண்டு காரில் சாய்ந்து நின்றுக் கொண்டான்.
‘இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல’ என்று மனதில் கறுவிக் கொண்டவள் “ஹான், என் புருஷன் வெட்ட வெளில ஸ்டைல்ன்ற பேர்ல இதுபோல என்னை பார் என் அழகை பார்ன்னு காட்டிட்டு சுத்த கூடாது அண்ட் மோரோவர் அவரோட மொத்த கவனமும் என்கிட்ட மட்டும் தான் இருக்கணும்” என்று சொல்ல…
இதழ்களுக்குள் சிரித்துக் கொண்டவன் “வேற?”
“முக்கியமாக ப்ரெஷ் பீஸா இருக்கணும்” என்றாளே பார்க்கலாம்.
விழிகள் விரிய “வாட்? புரியல” என்று கேட்டான்.
“ஐ மீன் என் டிக்ஷனரில லைட் ஆஹ் பக்கத்துல போற பொண்ணை திரும்பி பார்த்தாலே அவன் ப்ரெஷ் இல்லாதவன்னு முடிவு கட்டிடுவேன்” என்றாள் தீவிரமாக…
இதழ் குவித்து ஊதியவன் “பட் நான் ப்ரெஷ் இல்லையே பேபி” என்று இதழ்களை பிதுக்க…
“அப்போ இந்த கல்யாணத்தை நிறுத்திடலாம்” என்று சொல்ல…
“அப்போ உன் ஷிப் ஜாப் ஃப்ளாப் ஆகிடுமே” என்று அவளின் பீபியை எகிற வைக்க…
“நோ இஸ்யூஸ், லெட்ஸ் கால் ஆப்” என்று சொல்ல…
“ஹேய், வெயிட் என்னை நிறைய பொண்ணுங்க சைட் அடிச்சு இருக்காங்க சோ நான் என்ன பண்ணட்டும் பேபி? அப்போ நானும் ப்ரெஷ் இல்லை தானே” என்க…
இழுத்து பெரு மூச்சை விட்டுக் கொண்டவள் “இனிமேல் அடக்கவடக்கமா இருக்கணும். எந்த பொண்ணு கூடவும் நீங்க பேச கூடாது” என்று கட்டளையிட்டவள் விழிகளால் அவனின் திறந்திருந்த ஷர்ட் பட்டன்களை காட்ட…
புருவங்கள் உயர, “அப்போ நான் வெர்ஜினா இல்லைனா?”
“கல்யாணம் நடக்காது ஐ வாண்ட் ப்ரெஷ் பீஸ்” என்றாள் அழுத்தம் திருத்தமாக…
“ஓகே ஜோக்ஸ் அபார்ட், அம் பியூர் வெர்ஜின் பேபி” என்று அடக்கப்பட்ட சிரிப்புடன் சொல்ல…
‘அது எனக்கு தெரியும் வெண்ணெய் மவனே இல்லனா’ என்று உள்ளே பல்லைக் கடித்தவள் “தட்ஸ் குட்” என்று சொல்லிக் கொண்டே காரின் கதவை திறந்தவளிடம் “வெயிட் நானும் என் கண்டிஷன்ஸ் சொல்லணும் என்க…
‘என்ன சொல்லப் போறானோ தெரியலயே’ என்று மனதில் சொல்லிக் கொண்டே “ம்ம்” என்றவள் கேள்வியாக அவனைப் பார்த்தாள்.
“நீ சொன்ன போல சேம் கண்டிஷன்ஸ் தான் எனக்கும்” என்று சொல்ல…
“நான் ப்ரெஷ் தான். வேணும்னா டெஸ்ட் எடுத்து ப்ரூஃப் பண்ணட்டுமா?” என்று அவள் கேட்க…
குரலை செருமிக் கொண்டவன் “நீ ப்ரெஷ்ஷே இல்லனாலும் நான் கல்யாணம் பண்ணிக்க ரெடி தான்” என்று சொல்ல அவளுக்கு தான் அவனின் வார்த்தைகளில் முகம் சிவந்து போனது.
எத்தனை பெரிய வார்த்தைகள் அவை.
கற்பை பார்க்கும் ஆண்கள் மத்தியில் இவன் போல் ஆண்மகனும் இருக்கத்தான் செய்கின்றார்கள். மனதில் மெக்சிக் கொண்டாள்.
“இட் மீன்ஸ் உன் டிரெஸ்ஸிங் சென்ஸ் தான்” என்று நேரடியாக சொல்லியே விட்டான்.
‘ஹையோ! உன் வாயாலே கெட்டுட்டியே ஆதிரா. இப்போ மறுபடி ட்ரெஸ் சேஞ்ச் பண்ணனுமா?’ என்று மனதில் சலித்துக் கொண்டவள் என்ன நினைத்தாளோ அதற்கு மேல் வாதிடாமல் “ஆல் ரைட் சேஞ்ச் பண்ணிட்டு வரேன் வெயிட் பண்ணுங்க” என்று விட்டு திரும்பியவள் கையைப் பற்றி தன்னை நோக்கி இழுத்தவன் “நீ ஸ்விம்மிங் ட்ரெஸ் போட்டா கூட ஓகே தான் அதுவும் என் முன்னாடி மட்டும் என்று சொன்னவன் அதிர்ந்து விரிந்துக் கொண்ட அவளின் விழிகளில் முத்தம் பதித்தவன் லேட் பண்ணாமல் சேஞ்ச் பண்ணிட்டு வா பேபி” என்க…
மந்திரித்து விட்டதை போல வீட்டினுள் நுழைந்தவள் இதயமோ படு வேகமாகத் துடித்தது.
