Menu

இதயம் – 14

இதயம் – 14

அவன் தெரிவு செய்த அடர் ஊதா நிற லெஹெங்காவை வருடிப் பார்த்துக் கொண்டு அமர்ந்து இருந்தாள் பெண்ணவள்.

தன் பிறந்தநாள் அன்றே திருமணத் திகதியை ஜோதிடர் மூலம் குறித்து உறுதி செய்து இருந்தனர்.

இவ்வளவு சீக்கிரமாக தன் திருமணத்தை எதிர் பாராதவள் திகைத்துப் போய் தான் அமர்ந்து இருந்தாள்.

ஆம், இன்னும் நான்கு நாட்களில் திருமணமாம்.

நன்நாளென ஜோதிடர் கூறவும் தன் அன்னையின் மின்னல் வேக செயல் அவளை மேலும் வியப்பில் ஆழ்த்தியது.

திகதியை குறித்து கொடுத்த அடுத்த நொடியே திருமண பத்திரிகை முதற்கொண்டு அனைத்தையும் ஒன்றரை நாளிற்குள் தயார் செய்து இருந்தார் பூர்ணிமா.

காவல் அதிகாரி என்பதினாலோ என்னவோ கட்டளையிடப்பட்ட வேலைகள் யாவும் கெதியாக நடந்துக் கொண்டிருக்க, அனைத்தையும் நினைத்து இதழ் குவித்து ஊதிக் கொண்டே தன் கையிலிருந்த உடையை எடுத்து வாட்ராப்பில் வைத்தவள் ஒரு பெரு மூச்சுடன் எழுந்து கல்யாண பத்திரிக்கைகளை எடுத்துக் கொண்டு அறையை விட்டு வெளியே வந்த அதேநேரம் ஷர்வீ த்தும் பக்கத்து அறைக்குள் இருந்து வெளியே வந்து இருந்தான்.

அவனை ஒரு கணம் பார்த்து விட்டு விறுவிறுவென படிகளில் இறங்கிச் சென்றாள்.

போகும் அவளைப் பார்த்து புருவம் சுருக்கியவன் ‘என்னாச்சு? நல்லா தானே இருந்தா’ என்று சொல்லிக் கொண்டவனும் வெளியில் கிளம்ப புறப்பட காரினை நெருங்கிய கணம், அவளோ ஸ்கூட்டியை உதைத்து கிளப்ப முயன்றுக் கொண்டு இருந்தாள்.

“எங்க போகணும்?” என்று கேட்டவன் பார்வை அவளின் கையில் இருந்த திருமணப் பத்திரிகையில் படிந்து மீண்டது.

“சேம் புட் மார்ட் தான் போகணும் பட் நானே…” என்றவளை “வந்து கார்ல ஏறு ஐ வில் ட்ராப்” என்க…

“இல்ல வேணாம்” என்றவளை அவன் பார்த்த பார்வையில் என்ன கண்டாளோ சட்டென “ம்ம் வரேன்” என்றவள் சென்று பின் இருக்கையில் அமரக் கதவைத் திறக்கச் சென்றவள் அவனின் அழுத்தமான பார்வையில் சட்டென முன் கதவைத் திறந்துக் கொண்டு உள்ளே ஏறி அமர்ந்துக் கொண்டாள்.

அமர்ந்து இருந்தவள் இதயமோ, ஏகத்துக்கும் படபடத்துக் கொண்டு இருந்தது.

என்ன பார்வை அது?

ஒற்றை பார்வையே உயிரை ஊடுருவுவதைப் போல் அல்லவா இருந்தது?

தன் பார்வையை திருப்பி பக்கவாட்டாகத் திரும்பி அவனைப் பார்த்தாள்.

அவனது பார்வை சாலையில் பதிந்து இருந்தாலும் கவனம் மொத்தமும் அவளிடத்தில் தான் நிலைத்து இருக்க, காரினை வளைத்து சட்டென திருப்ப, அவளோ அவனின் செயலில் “ஷர்வீத் என்ன பண்றீங்க?” என்று ஹை டேசிபலில் கத்தினாள்.

அப்படியே அவளின் புறம் சரிந்து ஷீட்டினை பின்னோக்கி சரித்த அதே கணம், அவனது வலது கரத்தின் புஜத்தை தோட்டாக்கள் உரசிக் கொண்டு சென்றன.

கண நேரத்தில் அனைத்தும் நடந்து முடிந்து இருந்தது.

அதிர்ச்சியில் மூச்சு விடக் கூட மறந்து போனவளாய் அவளின் பார்வையோ, அவனில் தான் நிலைக் குத்தி நின்றது.

அவனோ, அவளுக்கு ஏதும் ஆகி விடக் கூடாது என்று வழித் தடுமாறி சென்ற வாகனத்தை தனது உதிரம் வழிந்துக் கொண்டிருந்த ஒற்றை கரத்தால் லாவமாக திருப்பி வேகமாக செலுத்தினான்.

அவனது விழிகள் அப்பட்டமாக சிவந்து இருந்தன.

அடித்து நொறுக்க வேண்டும் என்ற அளவுக்கு கண்மண் தெரியாத ஆத்திரம் கிளர்ந்தது.

ஸ்டியரிங்கில் அழுத்தத்தைக் கொடுத்தான்.

மறு கையால் கியரை அழுந்த பற்றியபடி காரினை மின்னல் வேகத்தில் செலுத்தியவன் ரியர்வியூ மிரரில் பார்த்தான்.

அவர்களை மோதுவது போல பார ஊர்தியொன்று வேகமாக வந்துக் கொண்டிருக்க,இதழ்களில் கேலிப் புன்னகையுடன் வீதியின் எல்லையில் முடியும் பாலத்தை நோக்கி வண்டியை வேகமாக செலுத்த ஆரம்பித்து விட்டான்.

வேகம் என்றால் அப்படியொரு வேகம்.

அதிலும் திரும்பி அவளின் நலனைத் தான் ஆராய்ந்தான்.

உச்சு முதல் பாதம் வரை அவளை ஆராய்ந்தவனுக்கு அப்போது தான் அவளின் சுயநினைவற்ற மயங்கிய நிலையே புத்தியில் உரைத்தது.

விழிகளை அழுந்த மூடித் திறந்து இதழ் குவித்து ஊதிக் கொண்டே நொடிப் பொழுதில் காரினை வெட்டித் திருப்பி இருக்க, அதுவோ வீதியின் அடுத்த பக்கத்தில் இருந்த அடர்ந்த காட்டிற்குள் நுழைந்து இருந்தது.

இதனை சற்றும் எதிர்ப் பார்க்காத பார ஊர்தியை ஓட்டி வந்தவனோ வேகத்தினை கட்டுப் படுத்திக் கொள்ள முடியாமல் நேராக பாலத்திலேயே மோதி இருந்தது. அது மட்டுமா என்ன? வந்த வேகத்தில் அவ் ஊர்தியோ பாலத்தில் தடையை பிய்த்துக் கொண்டு மேல் நோக்கி பறந்த வேகத்தில் அவ் ஆழ் பள்ளத்தாக்கில் பலத்த சத்தத்துடன் கீழே வீழ்ந்து சிதறியது.

இங்கோ, மரத்தில் மோத இருந்த காரினை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தவன் வேகமாக தனது ஷீட் பெல்ட்டினை தளர்த்தி விட்டு காரை விட்டு வெளியேறி வந்தான்.

அவனின் ஷர்ட் முழுதும் உதிரத்தால் நனைந்து இருந்தது.

இருந்தும் அதனை எல்லாம் அவன் பொருட்படுத்தாமல் காரின் கதவை திறந்து அவளைத் தன் கைகளில் வாகாக ஏந்திக் கொண்டவன் பின் இருக்கையில் கிடத்தி விட்டு சுற்றும் முற்றும் பார்த்தான்.

காரின் உள்ளே வைத்திருந்த தண்ணீர் போத்தலும் காலியாக கிடக்க, தன் நடுங்கும் கரங்களால் அவளின் மென் கன்னத்தை மெதுவாக தட்டி விட்டபடி “ஆதிரா… ஆதிரா” என்று அழைத்தான்.

ஆனால், அவளோ ஆழ்ந்த மயக்கத்தின் பிடியில் அல்லவா கிடந்தாள்.

அவனுக்கோ, இதயத்தை உருவி எடுப்பதைப் போல வலித்தது.

“பேபி, எழுந்திரு மா” என்று மீண்டும் அவளின் கன்னத்தை தட்டி பார்த்தான்.

பலனோ, பூச்சியம் தான்.

இதயம் எம்பிக் கீழே குதித்து விடும் என்ற அளவுக்கு படு வேகமா இதயம் துடித்துக் கொண்டிருக்க, வேகமாக காரின் கதவை சாற்றி விட்டு லாக் செய்தவன் எங்கேனும் நீர் கிடைக்கின்றதா? என்று நின்ற இடத்தில் இருந்து விழிகளை சுழல விட்டுப் பார்த்தான்.

அடர்ந்த கானகம் தான்.

நகரின் மத்தியில் இவ்வளவு பெரிய கானகம் இருப்பதே அவனுக்கு வியப்பைத் தான் கொடுத்திருந்தது.

இவ்வாறு இருக்கும் பொது அடர் மரங்களுக்கு இடையே எங்கே நீர் இருக்கும் இடத்தை தேடித் செல்வது?

 

அவளைத் தனியாக விட்டு போகவும் கொஞ்சம் கூட அவனின் மனமும் இடம் கொடுக்கவில்லை.

ஒருவேளை வழி தவறி விட்டால் என்ற எண்ணம் அவனை ஆட்கொள்ள, செய்வது அறியாது விழிகளை மூடி காரில் சாய்ந்து நின்று இருந்தவன் கன்னத்தில் நீர்த் துளி பட்டுத் தெறித்தது.

சட்டென விழிகளைத் திறந்து வானத்தை வெறித்தான்.

வானம் இருண்டு இருக்க, எங்கோ கேட்ட இடியின் சத்தத்தைத் தொடர்ந்து அடித்து மழை பெய்ய ஆரம்பித்து இருக்க, இதழ் பிரித்து புன்னகைத்தவன் விழிகளில் இருந்து கண்ணீர் வழிந்து மழை நீருடன் கலந்தது.

அடுத்த நொடியே சற்றும் தாமதிக்காமல் பின் இருக்கையில் சலனமற்று மயக்கத்தில் கிடந்தவளை கரத்தில் மீண்டும் எந்திக் கொண்டவன் அவளுடன் சேர்ந்து அடித்துப் பெய்த மழையில் நனைய ஆரம்பித்து இருந்தான்.

அவளின் மூடிய இரு நீள் விழிகளை ஆழ்ந்து பார்த்துக் கொண்டு நின்றிருந்தவன் மனமோ, அவள் விழித்து விட வேண்டும் என்ற கோரிக்கையை இறைவனிடம் விடாது பிரார்த்தித்துக் கொண்டு இருக்க, சற்று நேரத்திலேயே தான் எங்கோ தொப்பலாக நனைந்துக் கொண்டு இருக்கின்றோம் என்று உணர்ந்தலோ என்னவோ மெதுவாக விழிகளைத் திறந்துப் பார்த்தாள்.

ஷர்வீத் தன்னை ஏந்தி இருப்பதைப் பார்த்து நினைவு வந்தவளாய் தன் பார்வையை அவனின் வலக் கரத்தின் புஜத்தை பதித்தாள்.

அங்கேயோ உதிரம் பெருகிக் கொண்டே போக, பதைபதைத்துப் போனவள் “ஷர்வீவீவீத் என்று அலறிக் கொண்டு திமிற முயன்றவளை “ஆதிரா பிளீஸ் காம் டவுன். இப்போ இங்க இருந்து காரை எடுத்திட்டு போக முடியாது. சோ பீ ரிலாக்ஸ்” என்றவன் அவளை மீண்டும் பின் இருக்கையில் அமர வைத்து விட்டு தானும் அவளின் அருகில் ஏறி அமர்ந்துக் கொண்டான்.

மீண்டும் அவள் மயங்கி விடக் கூடாது என்ற எண்ணத்தில் அவளுடன் பேச்சினை தொடர்ந்து இருந்தான்.

நிதானமாக இருக்க சொல்கின்றானா?

எப்படி நிதானமாக இருக்க முடியும்?

பார்த்துக் கொண்டு இருக்கும் போதே ஒரு கொலை முயற்சி.

அன்றும் அவன் உயிருக்கு ஆபத்து தான்.

அதே இன்றும் தொடர்கின்றது என்றால்?

இதில் வேறு அவனின் புஜத்தில் இருந்து உதிரமோ நில்லாமல் கசிந்துக் கொண்டு இருந்தது.

“எப்படி ஷர்வீத் கூலா இருக்க முடியும்?” என்று கேட்டுக் கொண்டே தன் நடுங்கும் கரங்களால் அவனின் வலது கரத்தின் புஜத்தை லேசாக தொட்டாள்.

அவனோ, வலியை இதழ் கடித்து அடக்கிக் கொண்டு இருக்க, தன்னையும் மீறி விழிகளில் இருந்து வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டவள் “ஷர்வீத் பிளீஸ் உங்க ஷர்ட்டை கழட்டி தாங்க” என்று பதறினாள்.

“எதுக்காக?” என்று கேட்டான்.

“பிளீஸ்” என்றாள் கெஞ்சலாக…

அவனோ, பல்லைக் கடித்து வலியை அடக்கிக் கொண்டு ஷர்ட்டினை கழட்டிக் கொடுக்க, அதை வாங்கி மடித்தவள் அவனின் கண்களை கட்ட முயல, அவளின் செயலில் புரியாமல் விழித்தவன் “என்ன பண்ண போற?” என்று கேட்டு இருந்தான்.

அவனில் இருந்து பார்வையை அகற்றி தாழ்த்திக் கொண்டவள் “அது.. என்கிட்ட துப்பட்டா இல்ல சோ என்னோட டாப்பை கழட்டி உங்க கைல…” என்று சொல்ல வந்தவளை இதழ்களுக்குள் புன்னகைத்த படி பார்த்தவன் “அப்போ உனக்கு ட்ரெஸ்?” என்று புருவம் உயர்த்தி கேட்டான்.

“உங்களோட ஷர்ட் தான்” என்றதும் அவனுக்கோ விழிகள் இரண்டும் பெரிதாக விரிந்துக் கொண்டன.

அதை எப்படி போட்டுக் கொள்வாள் அவள்?

வெண்ணிற ஷர்ட் வேறு. முழுதாக நனைந்தும் இருக்க, அதை அவள் போட்டால்? என்று சிந்திக்கும் போதே அவனுக்கோ, மந்தகாச புன்னகை தவழ்ந்தது.

அவளின் நிலையைக் கூட யோசிக்காமல் தனக்காக யோசித்து இருக்கின்றாள் என்ற எண்ணமே அவனை சிலிர்க்க வைத்திருந்தது.

 

“ நீ இவ்வளவு தூரம் அறிவா யோசிப்பனு நான் திங்க் பண்ணவே இல்லையே” என்றதும் “சீக்கிரம் ஷர்வீத் ப்ளீட் ஆகுது” என்று மீண்டும் எட்டி கண்ணைக் கட்ட முயன்றவளை குரலை செருமிக் கொண்டே விலக்கி நிறுத்தியவன் “உன் டாப் எல்லாம் வேணாம் பிகாஸ் உன்ன பார்த்திட்டு இருக்க நான் ஒன்னும் முனிவன் கிடையாது பேபி என்று கேசத்தைக் கோதிக் கொண்டே சொன்னவன் சோ இந்த ஷர்ட்டை கட்டி விடு” என்றான் உள்ளே போன குரலில்…

ஆம், சரி தானே இந்த யோசனை ஏன் தனக்கு வர வில்லை?

அவளுக்கோ அவனின் பேச்சிலும் அருகாமையிலும் வெட்கம் பிடுங்கித் தின்றது.

‘ஹையோ இப்படியா யோசிக்காம உளறி வைப்ப ஆதிரா? ஓஹ் கோட், மானமே போச்சே’ என்று மனதில் புலம்பித் தள்ளியவள் வெளியில் எவ்வித உணர்வுகளையும் முகத்தில் காட்டாது எட்டி அவனது புஜத்தில் உதிரம் வெளியேறாத வண்ணம் ஷர்ட்டினை மடித்துக் கட்டிக் இருந்தாள்.

‘ஐயோ! ஒரு மாதிரி பார்க்குறானே!’ என்று மேலும் புலம்பிக் கொண்டே விழிகளை தாழ்த்தியபடி பார்வையை வெளியே திருப்பிக் கொள்ள, அவனோ மெதுவாக சாய்ந்து அவளின் மடியில் படுத்து இருந்தான்.

அதிர்ந்து விட்டாள் பெண்ணவள்.

விழி விரிய திரும்பியவள் பார்வை இப்போது அவனின் பார்வையை சந்திக்க, அவனோ ஒற்றை புருவத்தை உயர்த்தி ஒற்றைக் கண்ணை வேறு அடிக்க, அவளுக்குத் தான் நிலத்துக்குள் புதைந்து விடலாமா என்கின்ற அளவுக்கு வெட்கம் நெட்டித் தள்ளியது.

“போலீஸ் பொண்டாட்டி ஆக போற, சோ இதுக்கெல்லாம் டென்ஷன் ஆனா எப்படி பேபி? போலீஸ் பொண்டாட்டினா அடுத்து என்ன பண்ணனும்னு தெளிவா யோசிச்சு ஸ்கெட்ச் போடு” என்றிட…

அவனின் பேச்சுக்கு பதில் கூறாமல் “அவங்க யார் ஷர்வீத்?” என்று கேட்டு இருந்தாள் குரல் நடுங்க…

“எனக்கு நிறைய எனிமிஸ் இருக்காங்க சோ இவங்க யார்னு எனக்கு எப்படி தெரியும்?” என்று அவளிடமே திருப்பிக் கேட்டு இருந்தான் சர்வ சாதாரணமாக…

“இது ரெண்டாவது முறை உங்களை கொல்ல ட்ரை பண்றாங்க ஷர்வீத். எப்படி உங்களால இவ்வளவு கூலா பதில் சொல்ல முடியுது?” என்றாள் கோபமாக….

ஒரு நொடியில் அவளின் உயிர்த் துடித்தது அவளுக்கல்லவா தெரியும்.

“தேவை இல்லாமல் எதுக்கு இப்போ கற்பனை பண்ற?” என்றவன் அவளின் வயிற்றில் முகத்தை புதைத்து விழிகளை மூடிக் கொள்ள, அத்தோடு பேச நா எழாமல் அவளுக்குத் தான் அவனின் செயலில் குறுகுறுக்க ஆரம்பித்து இருந்தது.

விழிகளை மூடிக் கொண்டவன் அணைப்போ ‘இவள் என்னவள். என்னை மீறி அவளை யாராலும் நெருங்க விடவே மாட்டேன்’ என்று மனதில் உறுதி கொண்டவன் எலும்புகள் நொறுங்கி விடுமோ என்ற அளவுக்கு இறுக அணைத்திருந்தான்.

ஆம், இம்முறை அவனவளைத் தான் கொல்லத் துணிந்து இருந்தனர்.

அவர்கள் மோத நினைத்தது ஒன்றும் சாதாரணமானவன் அல்லவே!

அரிமா அவனோ, தன் இணையை காக்க எந்த எல்லைக்கு வேண்டுமென்றாலும் செல்வான் என்று அவர்கள் அறிய வாய்ப்பே இல்லையே!

அடுத்து கல்யாண எபியில் சந்திப்போம் பேபிஸ்! 😍

இனி டாம் அண்ட் ஜெர்ரி ரொமன்ஸ்

தான்😁 சீக்கிரம் ஷிப்கு கூட்டி போய்டலாம் சுத்தி பார்க்க….

ஸ்டே டியூன்ட்

👁️ 300 Views
4.6 5 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
⚠️ இத்தளத்தின் உள்ளடக்கங்கள் DMCA
பாதுகாப்பில் உள்ளது. Copy / Screenshot / PDF
உருவாக்குதல் தடை செய்யப்பட்டுள்ளது.