Menu

இதயம் – 15

இதயம் – 15

திருமண மண்டபம் முழுதும் மேள தாளங்கள் முழங்க பரபரப்புடன் காணப்பட்டது.

 

அது மட்டுமா என்ன?

 

திருமண மண்டபத்தை சூழ காவல் அதிகாரிகளும் சுற்றி பாதுகாப்பு கொடுத்து இருக்க, இனி சொல்லவும் வேண்டுமா? அனைவரையும் கண்காணித்த படி நின்று இருந்தனர்.

 

அத்தோடு ஒரு புறம் பல அதிகாரிகளும் வந்த வண்ணம் இருந்தனர்.

இதற்கிடையில் முகூர்த்த நேரமும் நெருங்கி இருக்க, தங்க ஜரிகை வைத்த பட்டுப் புடவையுடன் சகல ஆபரணங்களும் பூட்டி முகம் முழுதும் நாணம் ததும்ப பாந்தமாக நடந்து வந்துக் கொண்டு இருந்தாள் பெண்ணவள்.

 

மணமேடையில் அமர்ந்து இருந்தவனோ, தன்னை நோக்கி வந்துக் கொண்டு இருந்தவளைத் தான் இமை சிமிட்டாமல் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தான்.

 

‘ ப்பாஹ்… கோர்ஜியஸ்’ என்று இதழ்களுக்குள் முணுமுணுத்துக் கொண்டே அவள் தன்னைப் பார்க்கிறாளா? என்று அவளில் இருந்து இம்மியும் பார்வையை அகற்றாது அவளையே ஊடுருவுவது போல பார்த்தான்.

 

அவளோ, மணமேடையை நெருங்கியதும் சற்றே ஏறிட்டு அவனைப் பார்த்தாள். அவள் தன்னை பார்க்கும் வரை அவனின் மொத்த பார்வையும் அவளிலிருக்க, அவளின் பார்வை தன்மேல் படியவும் விடுவானா என்ன?

 ஒற்றைப் புருவத்தை மேலேற்றி இறக்கி ஒற்றைக் கண்ணை அடிக்க, மீடியாக்கள் ஒரு புறம் இருக்க, அவளுக்கோ அனைவர் முன்னிலையிலும் அவனின் செயலில் கோபம் வருவதற்கு பதிலாக அநியாயத்திற்கு வெட்கம் வந்து தொலைக்க, தன் முக சிவப்பை மறைக்க மீண்டும் முகத்தைத் தாழ்த்திக் கொண்டவள் தன்னவனருகில் மணமேடையில் வந்தமர்ந்தாள்.

 

அதனைத் தொடர்ந்து அவனோடு இணைந்து புரோகிதர் கூறும் மந்திரங்களை கூற ஆரம்பித்து விட, அவளின் கரங்களை உரசிக் கொண்டே அவனும் ஓமகுண்டத்தில் கரங்களில் இருக்கும் மலர்களை போட, அவனின் சிறு சிறு சில்மிஷங்களில் அவள் தான் தவித்துப் போனாள்.

 

அவளின் தவிப்புக்கு விடையாக, ஆசீர்வதிக்கப்பட்டு புரோகிதரிடம் கொடுக்கப்பட்ட தாம்பூலத்திலிருந்த பொன் தாலி சரடை எடுத்து விழிகளை மூடி வணங்கிய புரோகிதரோ திரும்பி ஷர்வீத்திடம் நீட்டி இருந்தார்.

 

இதழ்களில் தேங்கிய புன்னகையுடன் அதனை வாங்கிக் கொண்டவன் அவள் அருகே சற்றே குனிந்து “பேபி, லுக் அட் மீ” என்றான் ஹஸ்கி குரலில்…

 

அவனின் மூச்சுக் காற்று தன் கழுத்தில் பட, மயிர்கூச்செறிய மெதுவாக அவனை நிமிர்ந்தவளின் பார்வை அவனின் பார்வையுடன் கலந்ததும் அவனோ, அவளின் சங்கு கழுத்தில் மங்கல பொன் தாலி சரடை கட்டி அவனே மூன்று முடிச்சினையுமிட்டவன் அவளைத் தனது சரிபாதியாக்கிக் கொண்டான்.

 

தன் மார்பில் தொங்கிய தாலியை லேசாக விழிகளில் நீர் திரையிட பார்த்தவள் அதற்கு உரிமையானவை மீண்டும் ஏறிட்டு பார்த்த அதே நொடி, அவனின் வலக் கரமோ அவளின் நெற்றி வகிட்டில் குங்குமத்தை வைத்திருக்க, அவ் அழகான காட்சியும் புகைப்படமாக எடுக்கப்பட்டிருந்தது.

 

அதனைத் தொடர்ந்து நடந்த சடங்குகள் யாவும் அவளோடு இணைந்து செய்தவன் அவளை விழிகளால் விழுங்கி விடுவது போல பார்த்தே முழுதாக நாண வைத்திருந்தான்.

 

எப்போதுடா அவனின் பார்வையில் இருந்து தப்பலாம் என்று நேரத்தை நெட்டித் தள்ளியபடி இருந்தவளின் விழிகளை பின்னால் இருந்து கட்டி விட்டவன் “டிரஸ் சேஞ்ச் பண்ணிட்டு வா பேபி” என்று சொல்ல, “எதுக்கு ட்ரஸ் சேஞ்ச் பண்ணனும்?” என்று சொல்லிக் கொண்டே விழிகளிலிருந்த கட்டினை அவிழ்க்க முயன்றவள் கரத்தினை கீழே இறக்கி விட்டவன் “பிளீஸ்” என்றான்.

அதில் என்ன நினைத்தாளோ “ம்ம்” என்றவளினை பூர்ணிமா அழைத்து சென்றிருக்க, இதழ் குவித்து ஊதிக் கொண்டே வந்திருக்கும் தனது நண்பர்களுடன் கதைத்துக் கொண்டிருந்தவனும் சற்று நேரத்தில் உடையை மாற்ற சென்று இருந்தான்.

 

இங்கோ, அறைக்குள் வந்தவள் கட்டை அவிழ்த்து விட்டு பூர்ணிமாவை பார்த்து “அம்மா எதுக்காக ட்ரஸ் சேஞ்ச் பண்ணனும்?” என்று புரியாமல் கேட்க,

“ சர்ப்ரைஸ் ஆஹ்ம்டி, சோ நான் சொல்ல போறதில்ல நீயே கொஞ்ச நேரத்துல தெரிஞ்சிப்ப” என்று சொன்னவர் அவளின் முகம் யோசனையில் சுருங்குவதைப் கண்டும் காணாமல் அவளின் கையில் ஷர்வீத் அவளுக்காக தேர்தெடுத்த லெஹெங்காவை திணித்தார்.

 

அவளுக்கோ அதிர்ச்சி மேல் அதிர்ச்சி.

 

என்னவென்றாவது சொல்லி விட்டு செய்யலாமே!

 

“அம்மா, இதை என் வாட்ராப்ல வச்சு இருந்தேன். இப்போ உங்ககிட்ட இருந்து வருதுனா எப்போ இதை எடுத்தீங்க?” என்ற அவளின் அடுத்த கேள்வியில் சலித்துக் கொண்டவர் “சும்மா கேள்வி மேல கேள்வி கேட்டுட்டு இருக்காமல் சீக்கிரம் ரெடியாகிட்டு வா. நான் போய் உன் ப்ரெண்ட்ஸ்ஸை அனுப்பி வைக்கிறேன்” என்றவர் அறையை விட்டு வெளியேறி இருந்தார்.

 

இன்று தனக்கு திருமணம் மட்டும் தானே! பத்திரிகையில் கூட எதுவும் குறிப்பிட்டு இருக்கவில்லையே! என்று மனதில் சொல்லிக் கொண்டவள் உடையை எடுத்து அணிய ஆரம்பித்து இருந்தாள்.

 

***************************************

சரியாக ஒரு மணித்தியாலத்திலேயே தன் நண்பிகளுடன் அறையை விட்டு வெளியே வரும் போதே அவளின் நண்பிகளோ மீண்டும் அவளின் விழிகளை மெல்லிய துணியால் கட்டி விட, ‘என்னவோ பண்ண போறான் போல’ எனத் தனக்குள் சொல்லிக் கொண்டவள் இதயமோ கொஞ்சம் கொஞ்சமாக துடிக்கும் வேகத்தை அதிகரித்திருந்தது.

 

தன் நண்பிகளின் துணையுடன் ஓரிடத்தில் வந்து நின்றிருந்தாள் பெண்ணவள்.

அவள் வந்து நின்றிருந்த இடத்தில் மெல்லிய வெளிச்சம் அவளில் பட்டுத் தெறிக்க, அவளில் இருந்து விழியை அகற்றாமல் அவளை நெருங்கியவனின் ஆண்மை வாசத்தை அவள் உணர்ந்து இருப்பாள் போலும் “ஷர்வீத், பிளீஸ் “ என்று சொல்லிக் கொண்டே விழிகளை திறக்க தன் கரத்தினை உயர்த்த எத்தனித்தவளின் விழிகளிலிருந்த கட்டினை அவனே அவிழ்த்து விட்டான்.

 

விழிகளை சிமிட்டி அவனை கேள்வியாக நோக்கியவளிடன் “ஓபன் யுவர் மௌத்” என்றான்.

 

சற்றே தயங்கியவள் சுற்றிலும் தன் விழிகளை சுழல விட்டாள்.

அவள் நின்று இருக்கும் இடத்தை தவிர சுற்றிலும் இருளாகத் தான் இருந்தது.

 

இருவரையும் தவிர யாரும் அங்கு இல்லாததைப் போல தான் அந்த இடமே இருளாகவும் நிசப்தமகவும் இருக்க, அவனின் அருகாமையில், இதயம் படபடக்க மெதுவாகத் தன் இதழ்களைப் பிரித்தவள் வாய்க்குள் தன் கையில் மறைத்து வைத்திருந்த கேக்கின் சிறிய பகுதியை அவளின் இதழ்களுக்கு இடையில் வைத்திருக்க, அவளோ “மா… மாமா என்ன பண்ண போறீங்க?” என்று வார்த்தைகள் தந்தியடிக்க கேட்டவள் பற்களுக்குள் என்னவோ கடிபடவும் விழிகளை விரித்து என்ன? என எடுத்துப் பார்த்தவள் விழிகள் மேலும் பெரிதாக விரிந்துக் கொண்டன.

 

ஆம், அவளின் கரத்தில் இருந்தது பல லட்சங்களை விழுங்கிய வைர மோதிரமே!

 

விழிகள் கலங்க அவனைப் பார்த்துக் கொண்டிருந்தவளுக்கோ பேச நாவே எழவில்லை.

 

அவளின் முகம் காட்டும் ஜாலங்களில் தன்னைத் தொலைத்தவன் அவளின் கரத்தில் இருந்த மோதிரத்தை எடுத்து “கேன் ஐ?” என்றான் கேள்வியாக….

இது என்ன கேள்வி?

 

தாலியே கட்டி விட்டான். மோதிரத்தை போட்டு விட எதற்காக அனுமதி கேட்டுக் கொண்டு இருக்கின்றான்? என்ற அவளின் மனதில் எழுந்த கேள்வியை அவன் படித்து விட்டான் போலும், “கேன் ஐ கி…” என்று மீண்டும் கேட்க வந்தவனின் வார்த்தைகளை முடிக்கும் முதலே “எஸ் பிளீஸ்” என்று சொல்லிக் கொண்டே தன் கரத்தை நீட்டி இருந்தாள் ஆதிரா.

 

இதழ்களுக்குள் புன்னகைத்தவன் அவளின் விரலில் மோதிரத்தை அணிவித்த அடுத்த கணமே, இழுத்து அவளின் இதழை ஆழமாகவும் அழுத்தமாகவும் கவ்வி இருந்தான்.

 

ஆம், அவன் அனுமதி கேட்க நினைத்து இதழ் முத்ததிற்கு அல்லவா?

அதற்குள் அவனுக்கு கேள்வியை முழுதாக கிரகிக்காமல் அவளே சம்மதம் கூறி இருக்க, இனி அவனைத் தடுக்க முடியுமா என்ன?

 

அவனும் ஆண் தானே!

 

அவன் எடுத்துக் கொடுத்த உடையிலேயே தேவதைப் போல தன் முன் வந்து நின்றவளை கண்டதும் அவனது உணர்வுகள் கிளர்ந்தெழ ஆரம்பித்து விட்டன.

அதனைக் கட்டுப் படுத்திக் கொள்ளும் வழியறியாமல் தன்னவள் என்ற உரிமையில் அவளின் இதழ்களில் தன் உரிமையை நிலைநாட்டிக் கொண்டிருந்தான்.

 

அப்போது தான் சுற்றிலும் கேட்ட கூச்சலிலும் ஆரவாரத்திலும் தன்னவனின் இதழணைப்பில் ஆழ்ந்துப் போய் நின்று இருந்தவள் சட்டென அவனின் மார்பில் கையை வைத்து தள்ளி விட்டு முகம் சிவக்க விலகி நின்று இருந்தாள்.

 

தன்னை நிமிர்ந்து கூட பார்க்காமல் நிலத்தை நோக்கியவாறு நின்று இருந்தாள் பெண்ணவள்.

 

நெற்றியை நீவிக் கொண்டே அருகில் இருந்த மைக்கை எட்டி எடுத்தான் ஷர்வீத்.

 

அனைவரின் கரகோஷத்தின் மத்தியில், மெல்லிய வெட்கப் புன்னகையுடன் அவளைப் பார்த்துக் கொண்டே “கண்டேன் கண்டேன் என்னுடையவளை

தந்தேன் தந்தேன் மிச்ச உயிரை…” என்று அவன் பாட ஆரம்பித்ததும் சட்டென அவனை நிமிர்ந்து பார்த்து இருந்தாள் பாவை.

அவனின் காந்தக் குரல் அவளை மட்டுமல்ல அங்கு இருந்த அனைவரையும் கவர்ந்து ஈர்த்து இருந்தது.

 

இவ்வளவு அழகாகப் பாடுவானா? என்று அவளுக்கே நம்ப முடியாது வியந்தாள்.

 

அவளின் மொத்த பார்வையும் தன்மேல் படிந்திருப்பதனை உணர்ந்த ஆடவனுக்கோ பித்தம் தலைக்கு ஏற, பிண்ணனியில் ஒலித்துக் கொண்டிருந்த இசையில் தன்னை தொலைத்தவன் கண நேரத்தில் நெருங்கி அவளின் இடையைப் பற்றி இருந்தான்.

 

அவனின் குரலில் மயங்கிப் போய் நின்று இருந்தவள் அவனின் அருகாமையில் சித்தம் திணறிப் போனாள்.

ஏன்? சுற்றம் கூட மறந்தாள்.

அவளின் கரங்களோ தானாக உயர்ந்து அவனின் தோளைப் பற்றிப் பிடித்திருக்க, அவளின் விழிகளைப் பார்த்துக் கொண்டே மறு கரத்திலிருந்த மைக்கினை சுழற்றிய படி அவளிடம் நீட்ட, எவ்வித மறுப்பும் காட்டாமல் வாங்கிக் கொண்டவள் அவனது விழிகளைப் பார்த்துக் கொண்டே அவன் விட்ட இடத்திலிருந்து பாட ஆரம்பித்து இருந்தாள்.

“கண்டேன் கண்டேன் என்னுடையவனை

தந்தேன் தந்தேன் மிச்ச உயிரை…” என்று பாடியவளின் இடையைப் பிடித்துக் கொண்டே அவளோடு இணைந்து ஆட ஆரம்பித்து விட, இருவரின் மோன நிலையும் கவிதையாய் அனைவரின் பார்வையை நிறைத்திருந்தது.

 

பாடல் வரிகள் மூலம் அவனுக்கு விடை அளித்துக் கொண்டிருந்தவளின் கரத்தோடு கரம் நுழைத்தவன் அவளோடு இணைந்து ஆடிக் கொண்டே “ சோ டுடே நைட் உன்ன எனக்கு கொடுத்துடுவல” என்ற அவனின் ஹஸ்கி குரலில், விழிகளோ கீழே தெறித்து வீழ்ந்து விடுவது போல விரித்தவளின் கரத்திலிருந்து நழுவி விழ இருந்த மைக்கினை லாவகமாக மறு கையில் பிடித்துக் கொண்டவன் “வெட்பம் குளிர் எது வந்தாலும்

இதமாக இணைப்பாயா திக்கு முக்கு ஆடிப்போகின்றேன்…” என்ற பாடலின் நடுவிலிருக்கும் வரிகளை அவன் பாடியதும் ‘ஆத்தி டபிள் மீனிங் பாட்டா இது!’ என்று மனதில் அரண்டு போனவள் அவனின் கையில் இருந்த மைக்கினை மெல்லிய புன்னகையுடன் வாங்கிக் கொண்டவள் அவனை முறைக்க முடியாமல் தோற்று தான் போனாள்.

 

 

👁️ 281 Views
5 6 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
⚠️ இத்தளத்தின் உள்ளடக்கங்கள் DMCA
பாதுகாப்பில் உள்ளது. Copy / Screenshot / PDF
உருவாக்குதல் தடை செய்யப்பட்டுள்ளது.