இதயம் – 16
உறவினர்கள் என்று யாரும் இல்லாத காரணத்தால் தனித்து நின்று அவராகவே அன்றைய நாளில் வீட்டில் செய்ய வேண்டிய சம்பிரதாயங்களையும் தடையே இன்றி இருவரையும் செய்ய வைத்திருந்தார் பூர்ணிமா.
அதனைத் தொடர்ந்து தன்னை சுத்தப் படுத்திக் கொண்டு கீழே இறங்கி வந்தவளைப் பார்த்த படி, கால் மேல் கால் போட்டு அமர்ந்திருந்தவன் பார்வையோ அவளின் கழுத்தில் தொங்கிய மாங்கல்யத்தில் படிந்து கீழிறங்க, குரலை செருமிக் கொண்டே ஓர் உஷ்ணப் பெருமூச்சை விட்டுக் கொண்டான்.
இவ்வளவு நாட்களும் அவளில் மோகமாக படியாத அவனது பார்வை, இப்போதோ தன்னவள் என்ற உரிமையும் சேர்ந்ததும் கொள்ள, அவளைத் தடையின்றி ரசிக்க வைத்திருந்தது.
கழுத்தில் தாலியுடன் தன் அருகில் வந்தமர்ந்தவளிடம் குரலை செருமிக் கொண்டே “லிரிக்ஸ் பிடிச்சு இருந்ததா?” என்று கேட்டான் அடக்கப்பட்ட புன்னகையுடன்…
அவளோ, அவன் புறம் திரும்பி நன்றாக அமர்ந்து கொண்டவள் “டபிள் மீனிங் சாங் எல்லாம் தெரியுதே உண்மையாவே நீங்க போலீஸ் தானா?” என்று கேட்டாள்.
“போலீஸ்னா சாங் கேட்க கூடாதா என்ன?” என்றான் பதிலுக்கு …
அவன் கேட்பதும் சரி தானே!
இதற்கு மேல் பேசினால் பேசி பேசியே ஒரு வழியாக்கி விடுவான் என்று மனதில் எச்சரித்துக் கொண்டவள் “கேட்கலாம் கேட்கலாம் தப்பே இல்லை” என்றாள் பெண்ணவள்.
அவளின் எண்ணப்போக்கு போகும் திசையைத் தான் அவன் அறிவானே!
கன்னத்தில் நாவை முட்டி மென் புன்னகையுடன் அமர்ந்திருந்தவனிடம் “அம்மா எதுக்காக கூப்பிட்டாங்க?” என்று கேட்டாள்.
“ஐ டோண்ட் க்னோ” என்று இதழ்களைப் பிதுக்கியவன் மணியைப் பார்த்தான்.
இரவு ஏழு மணியைத் தாண்டி இருந்தது.
அவர்களின் கேள்விக்கு விடையாக இருவரின் முன்னிலையில் வந்து நின்ற பூர்ணிமாவோ இரண்டு டிக்கெட்களை நீட்ட, முதலில் அதை வாங்கிப் பார்த்தவன் “இதெல்லாம் இப்போ எதுக்கு மேடம்?” என்றான் புருவம் சுருக்கி…
அவன் மேடம் என்றதும் முறைத்த பூர்ணிமா “இப்போ நான் உனக்கு அக்கா மட்டும் இல்ல அத்தையும் கூட சோ என்றவர் மேடம் வேணாம் டா அட்லீஸ்ட் அத்தைனு கூப்பிடு” என ஆற்றாமையுடன் முடித்திருந்தார்.
“நான் கேட்டதுக்கு இது பதில் இல்லையே”
“ரெண்டு பேரும் நான் புக் பண்ண ரிசார்ட்கு போறீங்க, ஓகே” என்றவர் மிரண்டு போய் அமர்ந்து இருந்த ஆதிராவை பார்த்தவர் “என்னடி ட்ரஸ் இது போ, போய்ட்டு வெளில போடுற போல ட்ரஸ் பண்ணிட்டு கிளம்பு” என்றார்.
இதழ் குவித்து ஊதிக் கொண்டே “இங்கேயே…” என்று ஆரம்பித்தவனை மேலும் கடுமையாக முறைத்தவர் “ஷர்வா” என்றார் அழுத்தமாக…
அவனோ சட்டெனத் திரும்பி ஆதிராவைப் பார்த்தான்.
அவளோ, முகம் வெளிற அமர்ந்து இருந்தாள்.
இவ்வளவு நேரம் இருந்த இதமான மனநிலையில் அவள் இதைப் பற்றியெல்லாம் யோசிக்கவே இல்லையே!
மனதில் ஏதேதோ எண்ணங்கள் வந்து அலைக்கழித்தன.
மீண்டும் தன் உணர்வுகளை கட்டுப்படுத்தும் வழி அறியாது தனக்குள் இறுகினாள்.
அவளின் முகத்தில் தெரிந்த நொடி நேர அச்சம் அவனுக்கு என்னவோ உணர்த்த, அவள் விருப்பம் இல்லாமல் இப்போது எதுவும் வேண்டாம் என்று நினைத்தவன் அவளைத் துளைதெடுக்கும் பார்வை பார்த்துக் கொண்டே “அவளுக்கு கொஞ்சம் டைம் கொடுக்கலாம் சோ அப்புறம் பார்த்துக்கலாம்” என்றான் நிதானமாக…
சட்டென அவனைத் திரும்பிப் பார்த்தாள்.
எனக்காக யோசிக்கின்றானா?
அதுவும் பாடலின் மூலம் அவளிடம் அனுமதி கேட்டதை அவள் உணர்ந்தாள் அல்லவா!
ஏனோ மனம் நிலையில்லாமல் தவித்தது.
“ஆதிரா” என்றார் பூர்ணிமா.
அமைதியாகத் திரும்பி தன் அன்னையின் முகத்தைப் பார்த்தாள்.
“நானும் பேரன் பேத்தியை பார்க்கணும்னு ஆசைப்படுறது தப்பா?” என்று நேரடியாகவே கேட்டவர் விசும்ப ஆரம்பித்து விட, அதிர்ச்சி விலகாது அவரைப் பார்த்தவனோ “ஓஹ் கோட் அக்மார்க் மாமியார் போல நடந்துகுறீங்க” என்று சொல்லிக் கொண்டவன் “ஆதிராகு ஓகேனா கிளம்பலாம்” என்றதும் அவளோ “ நான் ட்ரஸ் சேஞ்ச் பண்ணிட்டு வந்துடுறேன்” என்று தலையை தாழ்திக் கொண்டே தனதறையை நோக்கி சென்றிருந்தாள் பெண்ணவள்.
போகும் அவளைப் பார்த்து விட்டு பூர்ணிமாவைப் பார்த்தவன் “இப்போ இந்த ஏற்பாடு எல்லாம் தேவை தானா?” என்று கேட்டான்.
அவனுக்கே ஏதோ போல் அல்லவா இருந்தது.
“என்னடா ஊர் உலகத்துல நடக்காததை நான் பண்ணிட்ட போல பேசுற. எவ்வளவு நாளைக்கு என் கூடவே ரெண்டு பேரும் சுத்த போறீங்க? என்று கேட்டவர் அவனை ஆழ்ந்து பார்த்துக் கொண்டே ஐ க்னோ உனக்கு அவளை ரொம்ப பிடிக்கும்னு உன்ன தவிர வேற யாராலும் என் பொண்ணை சந்தோஷமா பார்த்துக்க முடியாது ஷர்வா” என்று தன் பேச்சை முடித்து இருந்தார் பூர்ணிமா.
மென் புன்னகையுடன் அவரைப் பார்த்தவன் “எல்லாம் ஓகே என்றவன் என்னாச்சு சிபிஐ கண்டு பிடிச்சிட்டாங்களா?” என்று பேச்சை ஆரம்பித்தான்.
“ஸ்டில் இன்வெஸ்டிகேஷன் போய்ட்டு இருக்குடா. அட்லீஸ்ட் நீ கொடுத்து விட்ட எவிடென்ஸ் அதான் என்று நெற்றியை நீவிக் கொண்டே ஹான், அந்த லைட்டர் அதை வச்சு கூட ஒன்னும் க்ளூ கிடைக்கல” என்றதும் மர்மமாக புன்னகைத்துக் கொண்டவன் மனதிலோ ‘கடைசி வரைக்கும் கண்டு பிடிக்க முடியாது’ என்று நினைத்துக் கொண்டான்.
ஆம், அவன் கண்டு பிடித்த லைட்டரை கொடுக்காமல் வேறொன்றை அல்லவா மாற்றிக் கொடுத்திருந்தான்.
என்னவோ, சிந்தனையில் இருந்தவனை உலுக்கிய பூர்ணிமா “
“டேய் அவ வர்றா” என்று சொல்ல…
அப்போது தான் தன் முன் வந்து நின்றவளைப் பார்த்தான்.
அடர் நீல நிறத்தில் கவுன் அணிந்து இருந்தாள்.
பேரழகியாக வந்து நின்றவளை பார்த்துக் கொண்டு நின்றிருந்தவன் ‘கன்ட்ரோல் ஷர்வீத். அவளோட விருப்பம் இல்லாமல் தொடாதே ஐ வான்ட் டூ கன்ட்ரோல் மைசெல்ப்’ என்று தனக்குள் மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டவன் புருவத்தை வருடிக் கொண்டே “போகலாமா?” என்று கேட்டான்.
“ம்ம்..” என்றவள் பூர்ணிமாவை பார்த்து தலை அசைத்து விட்டு முன்னே செல்ல…
இழுத்து ஒரு பெரு மூச்சை விட்டுக் கொண்டவன் “எதாச்சும் எமர்ஜென்ஸினா கால் பண்ணுங்க” என்றான்.
“நானும் போலீஸ் தான்” என்றார் கிண்டலாக…
“இட்ஸ் நாட் அ ஜோக்” என்று அழுத்தமாக சொன்னவன் என்ன நினைத்தானோ இறுக்கமாக அணைத்து விடுவித்தவன் “பீ சேஃப்” என்று சொல்லி விட்டுக் கிளம்பி இருந்தான்.
போகும் அவர்களை புன்னகையுடன் பார்த்துக் கொண்டு இருந்தவர் முகமோ வினாடியில் கலவரத்தை தத்தெடுத்து இருக்க, சட்டென கதவை மூடி விட்டுத் தன் அறைக்குள் சென்று அடைந்து இருந்தார்.
அவரின் எண்ணமோ நொடிக்கு நொடி பதைபதைதுக் கொண்டிருந்தது.
விழிகளை மூடி கட்டிலில் படுத்துக் கொண்டார்.
விழிகளை மூடிய மறுநொடியே ‘உன் பொண்ணை கொல்லாமல் விட மாட்டேன்’ என்ற பெண்ணின் குரலைத் தொடர்ந்து பல பழைய நினைவுகள் மனதை வாட்டி வதைத்தது.
அவரின் எண்ணங்களுக்கு காரணமே பெயரில்லா எண்ணில் இருந்து வந்த அழைப்பு தான்.
குரலைக் கேட்டதும் அடையாளம் கண்டு கொண்டார் பூர்ணிமா.
தெரியாத எண்ணாக இருந்தாலும் அழைப்பை ஏற்று இருக்கக் கூடாதோ? என்றெல்லாம் எண்ணம் பயணிக்க, தூக்கமோ தொலைதூரமாகி போனது.
இங்கோ, இருவரும் சரியாக ஒரு மணித்தியாலத்திலேயே ரிசார்ட்டை வந்தடைந்து இருந்தனர்.
அதுவும் சாதாரண ரிசார்ட் அல்லவே!
ஷெரடொன் கிராண்ட் ரிசார்ட் என்றால் சொல்லவும் வேண்டுமா?
இரவு நேரமாகையால் கடலின் ஆர்ப்பரிப்பு ஒரு புறம் கேட்டுக் கொண்டு இருக்க, அந்த ரிசார்ட்டின் பிரம்மாண்டமே கண்ணைக் கவர்ந்திழுத்தது.
ஒருமாதிரியான தளம்பல் மனநிலையில் இருந்தவள் காரைத் திறந்துக் கொண்டு ஷர்வீத் இறங்கப் போகும் சமயமே வந்து சேர்ந்த இடத்தைப் பார்த்தாள்.
அந்த இடமே அழகாகவும் பிரம்மாண்டமாகவும் இருந்தமையால் அவளின் பார்வையில் ரசனை கூடியது.
காரில் இருந்து இறங்கிக் கொண்டவள் பார்வையோ இப்போது ஷர்வீத்தின் மேல் படிந்தது.
போலீஸ் என்று அடித்துக் கூறினாலும் நம்ப முடியாத தோற்றம் தான்.
வெண்ணிற நிற ஷர்ட் அணிந்து கையை முட்டி வரை மடித்து இருந்தான்.
காற்றில் கலைந்த அவனது அடர்ந்த கேசம் நெற்றியில் புரள , நொடிக்கொரு தடவை கரத்தால் கேசத்தைக் கோதிக் கொண்டே காரின் உள்ளே இருந்த பையினை எடுத்தவனின் ஆளுமையை அவளால் ரசிக்காமல் இருக்கவே முடியவில்லை.
பார்வையோ அவனை விட்டு அகலவே மாட்டேன் என்பதைப் போல சண்டித்தனம் செய்தது.
‘ ஹையோ! என்னடி இவ்வளவு நாளும் வெறிச்சு பார்க்காத நீ இப்படி பார்த்து வைக்கிற ஓஹ் கோட்! என்று தன்னைத் தானே நொந்துக் கொண்டவள் நீ சைட் அடிக்கிறனு அவன் கண்டு பிடிக்கிறதுக்குள்ள வேற எங்கயாச்சும் பார்த்து தொலை ‘ என்று எச்சரித்தவள் கடினப்பட்டு பார்வையைத் திருப்பி தரையை பார்த்த அதே சமயம் அவனும் பையை எடுத்து விட்டுத் திரும்பவும் சரியாக இருந்தது.
‘ ஆத்தி, அட் அ டைம்ல தப்பிச்சேன் ‘ என்று நினைத்துக் கொண்டவள் விறைப்பாக நின்று இருக்க, அவளின் அருகில் நெருங்கியவன் தன் கரத்தை நீட்டினான்.
சும்மாவே பிரம்மை பிடித்தவள் போல் அவள் நின்று கொண்டு இருக்க, இப்போது அவன் கரத்தை வேறு நீட்டவும் திணறி விட்டாள்.
“ஷர்வீத் நீங்க போங்க நான் வரேன்” என்று வார்த்தைகளைக் கோர்த்து அவள் கூறி முடிப்பதற்குள் உள்ளே படபடத்துப் போனாள்.
“நீயும் வா” என்று சொன்னவன் அவளை நோக்கி நீட்டிய கரத்தை இறக்காது நிற்க, அவர்கள் நிற்கும் இடத்தை தாண்டி சென்ற ஒரு வெளிநாட்டு யுவதி கூட அவனை அப்பட்டமாக பார்வையால் வருடி விட்டு கடந்து சென்றதும் தன் கரத்தை அவனின் கரத்தில் மீது வைத்து பற்றிக் கொண்டவள் “போகலாம்” என்றாள்.
அது எப்படி அவனின் மனைவி நான் அருகில் நிற்கும் போது என்னவனைப் பார்ப்பது? நினைக்கவே பத்திக் கொண்டு வந்தது.
“என்ன புட் ஆர்டர் பண்ண?” என்று கேட்டான்.
அவள் இருக்கும் மனநிலையில் எங்கே உணவை சாப்பிடுவது?
சட்டென “பசிக்கல” என்றாள்.
“தென் சாப்ட் ட்ரிங்க்ஸ்?” என்றான் கேள்வியாக….
அதையாவது குடிக்கலாம் என்று நினைத்தவள் “ம்ம், மின்ட் ஜூஸ்” என்றாள்.
“ஓகே” என்று சொல்லிக் கொண்டே அவளோடு அறைக்குள் நுழைந்து இருந்தான்.
ரிசார்ட்டின் வெளித் தோற்றமே பிரம்மாண்டமாக இருக்க அறை மட்டும் சாதாரணமாக இருக்குமா என்ன?
உள்ளே நுழைந்த இருவரையும் வரவேற்றது என்னவோ கட்டிலில் ரோஜா இதழ்களைத் தூவி ‘ஹாப்பி ஹனிமூன்’ என்று எழுதப்பட்டிருந்த வாசகம் தான்.
குரலை செருமிக் கொண்டவனிடம் “ஷர்வீத், நான் உங்ககிட்ட பேசணும்” என்றாள் திக்கி திணறிய படி….
அவன் தான் அவள் என்ன சொல்லப் போகிறாள் என்று ஒரளவு ஊகித்து வைத்து இருந்தானே!
அவளுடன் க்ரூஸ் ஷிப்பிற்கு சென்று வந்த பின்னர் அவளுடனான வாழ்க்கையை தொடங்கலாம் என்று அவனும் நினைத்து இருக்க, அவளின் நிலையும் அவனுக்கு புரிந்து தான் இருந்தது.
ஆனால் இன்றே அவளின் அனுமதியுடன் தன் பெண்மையை தன்னவனிடன் இழக்கப் போகிறாள் என்று அவளும் அறியவில்லை அவனும் அறியவில்லை.
இவர்கள் ஒன்று நினைக்க, விதியின் சதியை அவர்களால் மாற்ற முடியாது அல்லவா!
அவனோ “ஹும் சொல்லு” என்க…
“கொஞ்ச நாள் போகட்டுமே நாம அப்புறமா லைஃப் அஹ் ஸ்டார்ட் பண்லாம்” என்று வரவழைத்த தைரியத்துடன் கூறி இருந்தாள் பாவை.
“ஓகே உன் இஷ்டம் இல்லாமல் நான் உன்ன தொட மாட்டேன் என்றவன் பட் என்று புருவத்தை வருடிக் கொண்டே சொன்னவன் எனக்கு தோணும் போது கிஸ் பண்ணுவேன்” என்றான் அவளின் இதழ்களைப் பார்த்துக் கொண்டே….
வேண்டாம் என்றால் கேட்கவா போகின்றான்?
‘ இழுத்து வச்சு அப்போ அப்போ என் லிப்ஸை கடிச்சு வைக்கிறது இப்போ நல்லவர் போல கதை. பொறுக்கி ‘ என்று நீண்ட நாட்களுக்கு பிறகு திட்டிக் கொண்டவளின் இதழ்களோ அவன் வசமானது.
அதிர்ந்து விழிகளை விரித்தவள் மெதுவாக விழிகளை மூடிக் கொண்டாள்.
எப்போதும் திமிறி விடுபட முனைபவள் இப்போது எவ்வித எதிர்வினையும் காட்டாது இருக்க, விடுவானா என்ன?
அவளின் இடையைப் பற்றி தன் உடலோடு மோத செய்தவன் அவளின் இதழ்களைப் பாரபட்சம் இன்றி கவ்வி சுவைத்தான்.
ஒரு கட்டத்தில் மூச்சுக்குத் தவித்தவளை கேசத்தை கோதிக் கொண்டே விட்டு விலகியவன் கண்டது என்னவோ அவளின் விலகிய ஆடையைத் தான்.
விழிகள் அதிர்ந்து விரிய இதழ் கு
வித்து ஊதிக் கொண்டே “உன் ட்ரெஸ் அஹ் அஜ்ஜஸ்ட் பண்ணுடி” என்றவன் மறு புறம் திரும்பிக் கொண்டான்.
அவனையும் மீறி, அவனது குரலோ கரகரத்து ஒலித்தது.

Nice dear 💕💕