Menu

இதயம் – 19

இதயம் – 19

அதி காலையில் எழுந்ததும் அவனின் கைவளைவிற்குள் தான் எழுந்தாள் காரிகையவள் .

விழிக்கும் போதே தலை விண்விண்ணென்று வலிக்க, தலையைப் பிடித்துக் கொண்டு தன்னை இறுக அணைத்துக் கொண்டு உறங்கும் ஷர்வீத்தைப் பார்த்து அதிர்ந்து போனாள்.

 

ஒரு கணம் ஒரே ஒரு கணம் என்ன ஆயிற்று என்று வாய் விட்டு கத்த வேண்டும் என்ற எண்ணம் வரும் போதே அவளின் பார்வையோ அவனின் கழுத்தில் பதிந்த தனது பற்களின் தடங்களில் பதிய, விதிர்விதிர்த்தவளுக்கு அப்போது தான் நேற்று நடந்தவைகளை யாவும் அச்சு பிசகாமல் அவளின் மனக் கண் முன் வந்தது.

 

மாறாக வெட்கம் வந்திருக்க வேண்டிய பெண்ணவளுக்கோ, தன்னை தானே நினைத்து அருவருத்து போனது.

 

அதனோடு சேர்ந்து அவனின் அணுகுமுறையை நினைத்து பிரம்மித்தாள்.

 

அவனையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தவள் விழிகளில் கண்ணீர் நிறைத்தது.

 

மௌனமாக கண்ணீர் வடித்தவள் தான் நேற்று நடந்து கொண்ட விதத்தை நினைத்து மனதில் மருகினாள்.

 

அவன் விழித்தால், நான் எப்படி எதிர்கொள்வது? என மனம் படபடத்தது.

தன்னால் அவன் முகத்தை ஏறிட்டு பார்த்து பேச முடியுமா என்ன? என்று தனக்குள் கேட்டு கொண்டு இருக்கும் போதே, விலகிப் படுத்திருந்தவளை மேலும் நெருங்கி வந்து அவளோடு ஒன்றிக் கொண்டவன் விழிகளைத் திறவாமலேயே “என்ன இந்த குட்டி மூளைக்குள்ள திங்க் பண்ணிட்டு இருக்க?” என்று அவன் வினவியதும் தான் தாமதம் அவனின் மார்பில் புதைந்தவள் விம்மி வெடித்து அழுதாள்.

மனம் முழுதும் அழுத்தமாக இருந்தது.

 

மேனியும் நடுக்கம் கொண்டது.

அவளால் அவளின் செயலை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.

அதற்கு மேல் அவனை கட்டாயப் படுத்தி விட்ட குற்ற உணர்வு அவளைக் கொள்ளாமல் கொன்றது.

 

அவள் அழவும் சட்டென விழிகளைத் திறந்தவன் “ஆதிரா அழாத டி” என்றவன் அவளின் முகத்தை நிமிர்த்தி பார்க்க முயன்றான்.

 

அவளோ “பிளீஸ் ஷர்வீத், என்னால உங்களை பார்க்க கூட முடியலை ஐ பீல் கில்டி என்று அழுகையோடு சொன்னவள் ரியலி சாரி” என்று விம்ம ஆரம்பித்து விட, அவனுக்கோ இதயம் வலித்தது.

 

அவள் அழுவதை அவனால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை.

எவ்வளவு அழகாக மலர வேண்டிய தாம்பத்தியம் அவளின் அழுகையோடு அல்லவா ஆரம்பித்தது.

 

அவளுக்காக தன்னை அவன் கொடுத்தாலும் அவளோடு முழு மனதாகவும் காதலாகவும் அல்லவா அவளைக் கையாண்டான்.

இப்போது அவள் குற்றவுணர்ச்சியில் தவிக்கும் போது அவளை பழைய நிலைக்கு கொண்டு வர வேண்டும் என்ற முனைப்பு அவனிடம்…

 

சட்டென மூளையில் மின்னல் வெட்ட, “பேபி டோண்ட் க்ரை, எப்ப இருந்தாலும் நான் உன்ன சம்பவம் பண்ண சொல்லி தான் இருப்பேன்” என்றவனின் பேச்சு அவனுக்கே இதழ்களில் வெட்கப் புன்னகை வர வைத்த அதேநேரம், அவளின் அழுகையோ அவனின் சீண்டும் பேச்சில் ஸ்விட்ச் போட்டதைப் போல நின்று போனது.

 

அவளின் அழுகை நின்றதும் அவனின் இதழ்கள் மேலும் விரிந்து கொள்ள, அவளின் முகத்தைத் தாங்கி தன்னை பார்க்க செய்தான்.

 

உடலின் இரத்தம் முழுதும் அவளின் முகத்திற்கு பாய்ந்து விட்டதைப் போல சிவந்து கிடக்க, தன் கீழ் இதழைக் கடித்து விடுவித்தவன் “ஆர் யூ ப்ளஷிங்?” என மந்தகாச புன்னகையுடன் கேட்க…

 

அவனின் பேச்சில் இவ்வளவு நேரமாக வெட்கம் என்றால் என்ன விலை என்று கேட்பதை போல தான் இருக்கும் நிலை மறந்து அவனின் மார்பில் புதைந்து அழுது கரைந்தவளுக்கு தானாக வெட்கம் வந்து ஒட்டிக் கொண்டதோ என்னவோ!

 

சட்டென எழுந்து கொள்ள முயன்றவளை தன்னை நோக்கி இழுத்தவன் “இப்படியேவா போக போற?” என்றவனின் பார்வை வஞ்சனை இல்லாமல் அவள் மேல் படிந்தது.

 

விழிகள் விரிய தன்னைக் குனிந்து பார்த்தவள் போர்வையை இழுத்து தன்னை மறைத்துக் கொண்டதும், நாவால் இதழை முட்டி சிரித்தவன் “நான் பார்க்காதது எதுவும் இருக்கா என்ன?” என புருவம் உயர்த்தி அவன் வினவ, “மாமா” என்றவள் வெட்கம் தாழ முடியாமல் அவனின் வாயை தன் கரத்தால் மூட, அவனோ அவளின் உள்ளங்கையில் இதழ் குவித்து முத்தம் பதிக்க, சட்டென கரத்தை தன்னை நோக்கி இழுத்துக் கொண்டவளுக்கு சற்று முன்னர் அவள் எதற்காக அழுது கரைந்தாள் என்ற சிந்தனையே அவனின் பேச்சும் சீண்டல்களும் மறக்க வைத்திருந்தது.

 

இல்லை இல்லை பொருந்த சொல்ல வேண்டும் என்றால் அவனே தன் பேச்சிலும் அவளின் சிந்தனையை திசை திருப்பியிருந்தான்.

 

அடுத்த சில மணி நேரத்தில் மார்பில் வெண்ணிற துவாலையுடன் வெட்கத்தில் நெளிந்துக் கொண்டே குளியலறைக்குள் இருந்து ஓடி வந்தவள் வேக வேகமாக தனதுடையை எடுத்து அணிய ஆரம்பித்து விட, அவளைப் பார்த்துக் கொண்டே சேசத்தை துடைத்த படி வந்தவன் “இதுக்கே ஷை ஆனா எப்படி?” என்றவனை கண நேரத்தில் நெருங்கியவள் பார்வையோ அவனின் இடப் புற மார்பில் இருந்த நட்சத்திர டாட்டூவில் படிந்தது.

அவளின் பார்வையை உணர்ந்தவன் “வன்ஸ் மோர்” என்று மேலும் நெருங்கிவனை இருவருக்குமிடையில் இருக்கும் அந் நூலளவு இடைவெளியில் கரத்தை வைத்து தடுத்தவள் “எதுக்காக இந்த ஸ்டார் டாட்டூ?” என்று கேட்க…

 

“அஹான்.. அப்போ மேடம்கு எதுக்குனு தெரியலையா? இல்லனா தெரியாத போல நடிக்குறீங்களா?” என்ற நேரடி கேள்வியில் அவனை முறைத்து பார்த்தவள் “என்னை பார்த்தா நடிக்கிற போலவா தெரியுது? யூ க்னோ அம் அ இன்னசெண்ட் ஹியூமன் பீங்” என்று அவள் பாவமாக கூற….

“சரி தான் நீ ஒரு பியூர் க்ரீன் சேண்ட்னு எனக்கு மட்டும் தானே தெரியும் என்றவன் இதழ்களில் புன்னகை விரிய, “ஹையோ ஷர்வீத்” என்று சிணுங்கியவள் “இப்படியே பேசிட்டு இருந்தால் அப்புறம் பழைய ஆதிராவை பேஸ் பண்ணுவீங்க” என்றவள் குரல் கூட கோபமாக ஒலிக்காமல் சிணுங்களாகவே அவனுக்கு கேட்க,

 

“ரெண்டுமே நீயாச்சே சோ ஐம் ரெடி டு பேஸ்” என்றிட…

 

அவனின் சீண்டலும் தீண்டலும் அவளை வேறு உலகிற்கு கூட்டிச் செல்ல, அவளுக்குத் தான் ஐயோடாவென்றானது.

 

மொத்தமாக அவளின் சிந்தையை அவனே ஆக்கிரமித்துக் கொண்டிருந்தான்.

 

அந்த அளவிற்கு அவளை வேறு எதனையும் சிந்திக்க வைக்காமல் அவளின் உடல் பொருள் ஆவி மொத்தமும் அவனே நிறைந்திருந்தான்.

 

மாலைத்தீவு, காலை நேரம் 10.20.

 

“அக்கா டோண்ட் க்ரை, இட்ஸ் ஹர்டிங்” என்றவன் அவனின் தமக்கையை தன் தோளில் சாய்த்துக் கொண்டான் கயன்.

 

“எப்படி கயன் அழாமல் இருக்க சொல்ற? என.. எனக்கு எதுவுமே தெரியாமல் இருந்திருக்கலாம்” என்று குரல் திணற சொல்லிக் கொண்டே அவன் தோளில் சாய்ந்து அழுது கரைந்தவளை வெறித்துப் பார்த்தவனோ “நான் அந்த ஆதிராவை கொல்லட்டுமா?” என்று கேட்டான் ஆவேசமாக…

 

“அவளுக்கு நாம யூஸ் பண்ற டிரக்ஸ் கொடுக்க வச்சிருக்கேன் பார்க்கலாம் என்று குற்றவுணர்ச்சி சிறிதும் இல்லாமல் சொன்னவள் ஆல்வேஸ் ஷர்வீத் இஸ் மைன்” என்று சொன்னவள் விழிகளில் அவனை அடைந்தே ஆக வேண்டும் என்ற வெறி தாண்டவம் ஆடிக் கொண்டிருந்தது.

 

“உனக்காக தான் அவனை வர வைக்க க்ரைம் ஸ்பாட் ல லைட்டரை விட்டு வச்சிட்டு வந்தேன் பட் இன்னும் வராமல் என்ன புடுங்கிட்டு இருக்கான்” என்றவனை முறைத்தவள் “கயன்” என்றாள் அழுத்தமாக…

“சாரி , இன்னுமே வர்லயே சோ நீ அவனுக்காக அழுது வடியிறதை ஐ ஜஸ்ட் கான்ட் டாலரேட்” என்க…

“ஹேய் நீ எதுவும் திங்க் பண்ணாத. அவன் ஒய்ஃப் வர்றால. வரட்டும் அவளை கூட்டிட்டு அவளை என் கையாலயே அவன் முன்னாடி கொல்லுவேன் என்று பல்லைக் கடித்தபடி சொன்னவள் ஜஸ்ட் த்ரீ டேஸ் டு கோ” என்று தொலை தூர வானத்தை வெறித்த படி கூற,

 

“ஓகே, பட் அழாத அக்கா” என்றவன் அவளை அணைத்து விடுவித்தவன் தூரத்தில் நின்றிருந்த இளம் பெண்ணை நாடி நகர்ந்திருந்தான்.

 

திருமணமானவன் என்றும் பாராது அடைய நினைக்கும் அவள் போன்ற அற்ப பிறவிகளும் உலகில் இருக்கத் தான் செய்கின்றனர்.

அவள் அடைய நினைக்கும் ஆணவன் சுட்டெரிக்கும் ஆதவனை போன்றவன் என்று அறியாது போனாள் அவள்.

இங்கோ, ஷர்வீத் வேங்கையை மிஞ்சிய ரௌத்திரத்தில் ரிசார்ட்டின் பின்னிருந்த பாழடைந்த கட்டடத்தில் வைத்து தன்னவளுக்கு போதையை கொடுத்தவனை புரட்டி எடுத்துக் கொண்டிருந்தான்.

 

“சார்… தெ…தெரியாமல் பண்ணிட்டேன் பிளீஸ் என்னை விட்டுருங்க “ என்று நெற்றி மற்றும் உதடு வெடித்து அழுதுக் கொண்டிருந்தவனை மன்னிக்கும் எண்ணமே அவனுக்கு இல்லை போலும்.

 

அவளின் குற்ற உணர்ச்சியும் அழுகையும் தன் முன் குளியலறையில் போதையில் நிதானமின்றி அவள் நிர்வாணமாக நின்ற கோலம் அவனை மனக் கண்ணில் தோன்றி வதைத்தது.

 

“சார் இனி அடிச்சீங்கனா செத்துருவான்” என்ற நரேனை ஷர்வீத் பார்த்த பார்வையிலேயே அவனின் வாயோ பசைப் போட்டதைப் போல ஒட்டிக் கொண்டது.

தனது அலைபேசியில் வந்த குறுஞ்செய்தியை வெறித்துப் பார்த்தவன் கழுத்தில் கையை வைத்து இருபுறமும் தலை அசைத்து நெட்டி முறித்தவன் வலக் கரத்தை உதறிக் கொண்டே, கீழே குற்றுயிரும் குலையுயிருமாக வீழ்ந்து கிடந்தவனை நோக்கி சொடக்கிட்டான்.

 

அவனை ஏறிட்டு பார்த்தவனோ, இதழைக் கூட அசைக்க முடியாமல் “ம்ம்” என்றான் உள்ளே போன குரலில்…

 

“கால் பண்ணுடா” என கர்ஜித்தான்.

“சா…சார் யாருக்கு?” என்று கேட்ட அடுத்த நொடி அவனின் கன்னத்தில் இடி போல இறங்கியது ஷர்வீத்தின் கரம்.

 

“நரேன்” என்று சீற்றத்தோடு அழைத்தவன் “எண்ணி டூ செக்கண்ட் ல இந்த டேஷ் அவளுக்கு கால் பண்ணனும்” என்று கட்டளையாக சொன்னவன் சற்று தள்ளி போய் தன்னவளுக்கு அழைப்பை எடுத்தான்.

 இரண்டு அழைப்பிலேயே அழைப்பினை ஏற்ற பெண்ணவளோ “ஹலோ” என்றாள் கோபமாக….

 

அவளின் குரலின் பேதத்தை அறிந்து கொண்டவனோ “பேபி வாட் ஹப்பெண்ட் ? வீட்டுக்கு போய்ட்ட தானே” என்று கேட்ட மறு நொடியே “ரக்ஷானா யாரு?” என்ற கேள்வி அவளிடம் தொக்கி நின்றது.

 

“ரக்ஷனாவா? யார்டி?” என்று கேட்டவனுக்கு உண்மையாகவே அவனின் கல்லூரி கால தோழியை சுத்தமாக மறந்தே இருந்தான்.

“நடிக்கதீங்க ஷர்வீத்” என்றவள் குரல் தழுதழுக்க…

‘ ஓஹ் கோட் ‘ என்று புருவத்தை வருடியவன் “ப்ரோமிஸா ஞாபகம் இல்ல பேபி ட்ரஸ்ட் மீ” என்றான்.

“யூ ஆர் அஹ் சீட்டர். நீங்க ஃப்ரெஷ் இல்லை” என்று தன் பாட்டுக்கு உளறி கொட்டியவள் “பை” என்று வைத்திருந்தாள்.

‘இவ வேற ஃப்ரெஷ்… ஹேர்ன்னு’ என்று முணுமுணுத்துக் கொண்டே தன் அலைபேசியை பாக்கெட்டில் போட்டு விட்டு நரேனை நெருங்கினான்.

 

“சார் கால் ரீச் ஆகலை” என்க.

 

அவனை முறைத்து விட்டு அலைபேசியை வாங்கிய ஷர்வீத் அழைப்பை எடுத்த அதே கணம் மறு முனையில் அழைப்பை ஏற்று இருந்தாள் மீரா.

 

👁️ 123 Views
5 3 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
⚠️ இத்தளத்தின் உள்ளடக்கங்கள் DMCA
பாதுகாப்பில் உள்ளது. Copy / Screenshot / PDF
உருவாக்குதல் தடை செய்யப்பட்டுள்ளது.