Menu

இதயம் – 9

இதயம் – 9

 

இருவரையும் நோக்கி வந்தவள் பார்வை ஷர்வீத்தில் படிந்து பின் தன் அன்னையில் படிய, “நான் மாமாவை கல்யாணம் பண்ணிகலாம்னு இருக்கேன் சோ ஏற்பாடு பண்ணிடுங்க மா” என்றவள் தான் வந்த வேலை முடிந்தது என்பதைப் போல எங்கோ செல்ல வெளியில் கிளம்பியவளிடம் “ஆதிரா, நில்லுடி” என்றார் பூர்ணிமா.

“என்ன மா” என்று சலித்த படி திரும்ப…

“நீயே வந்த. கல்யாணத்துக்கு ஓகே சொல்லிட்டு நேரா வெளில கிளம்புற? உன் மனசுல என்னடி நினைச்சிட்டு இருக்க?” என்று பூர்ணிமா அவளைக் கடிய…

“ப்ரெண்ட்ஸ் மீட்டிங் கேன்சல் ஆச்சுல சோ அதான் மீட் பண்ண கிளம்புறேன் மா என்றவள் ஹான்.. நீங்க எதிர் பார்த்த போல மேரேஜுக்கு ஓகே சொல்லிட்டேன் தானே அதுல என்ன டவுட்?” என்று கேட்க…

“நீ ஓகே சொல்றதே டவுட் தான்” என்ற படி இருக்கையில் இருந்து ஷர்வீத் எழ…

‘ஆத்தி, ஏதாச்சும் வம்பு இழுக்காம போக மாட்டானே’ என்று மனதில் சொல்லிக் கொண்டவள் “இதுல சந்தேகம் படுற போல என்ன இருக்கு ஒண்ணுமே இல்லையே என்றவள் திரும்பி பேச்சை மாற்றும் பொருட்டு ஓகே ஓகே நான் வெளில கிளம்புறேன் பை மா” என்றவள் வேகமாக வெளியில் செல்ல….

“வெயிட் ஆதிரா, போற வழில உன்னை ட்ராப் பண்ணிடுறேன்” என்றான் ஷர்வீத்.

“இல்ல பரவால்ல நான் ஸ்கூட்டில போறேன்” என்று உடனடியாக அவள் மறுக்க…

“அடம் பிடிக்காம அவன் கூட கிளம்பு” என்ற பூர்ணிமாவும் புறப்பட ஆயத்தம் ஆகினார்.

‘ஹையோ, இவன் கூடவா?’ என்று நினைத்தவளுக்கு காலையில் அவன் காதில் கூறிய வார்த்தைகள் தான் மீண்டும் மீண்டும் நினைவுக்கு வந்துக் கொண்டிருந்தன.

ஷர்வீத்தை முறைத்து விட்டு நேரே சென்று அவனது ஜீப்பில் ஏறிக் கொண்டாள்.

அவள் சென்று ஏறியதும் “ஓகே நானும் கிளம்புறேன்” என்று சொன்னவன் விரைந்து சென்று ஜீப்பைக் கிளப்பி இருந்தான்.

வண்டியை செலுத்திக் கொண்டே அவளின் அமைதியை புருவம் சுருக்கிப் பார்த்தவன் “இவ்வளவு சீக்கிரம் மேரேஜுக்கு ஓகே சொல்வனு ஐ டிட்ன்ட் எக்ஸ்பெக்ட்” என்று சொல்ல…

சட்டென அவனைப் பக்கவாட்டாகத் திரும்பி பார்த்தவள் “எனக்கு தேவை இருந்தது சோ அதுக்காக தான்” என்றாள்.

“சோ உன் தேவைக்காக மட்டும் தானா?” என்ற அவனது கேள்வியில் பல்லைக் கடித்தவள் “ உங்களை போல தான் எனக்கும் கற்பு இருக்கு ஐ மீன் நீங்க ஸ்டே பண்ணா பொண்டாட்டி கூட தான் ஸ்டே பண்ணுவீங்க. அதே போல தான் எனக்கும் என்னை என்று குரலை செருமிக் கொண்டு முன்னால் திரும்பியவள் பார்த்தா அது என் புருஷனா மட்டும் தான் இருக்கணும்” என்றவள் அமைதியாகி விட…

அவளின் பேச்சில் அவனுக்கு தான் வெட்கப் புன்னகை தோன்றியது.

இதழ்களுக்குள் புன்னகைத்துக் கொண்டான்.

“ஓகே அப்போ சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கலாம். என்றவன் உன்ன எங்க ட்ராப் பண்ணனும்?” என்று கேட்க…

“ ‘அவசரத்துக்கு பிறந்தவன்’ என்று மனதில் அவனை வைதவள் புட் மார்ட்ல ட்ராப் பண்ணிடுங்க” என்றவள் அமைதியாகி விட, “ம்ம், நெக்ஸ்ட் வீக் எந்த டேட்ல கிளம்ப போறோம்?” என்று கேட்டவனிடம் “என்னை விட நீங்க தான் ரொம்ப ஆர்வமா போக வெயிட் பண்ணிட்டு இருக்க போல தெரியுதே” என்று கேட்க…

“எஸ் ஒப்கோர்ஸ். இருக்காதா பின்ன? வேர்ல்ட்ல பிக்கெஸ்ட் ஷிப்ல டிராவல் பண்ண போறேன். அதுவும் என் பொண்டாட்டி கூட என்றவனை அவள் முறைக்க, நடக்க போறதை தானே சொல்லிட்டு இருக்கேன்” என்றான்.

அவளிடம் ஒரு பெரு மூச்சு.

“சோ நீ கேப்டன் உனக்கு சார்ஜ் பண்ண மாட்டாங்க எனக்கு…” என்று வேண்டுமென்று இழுவையாக சொன்னவனை “நானா பாடிகார்ட் கேட்டேன்? இல்லைல. சோ ஐ டோண்ட் கேர் அபவுட் இட் நீங்களே தான் உங்களோட சார்ஜஸ் பார்த்துக்கணும்” என்று சொல்லி விட்டு வெளியில் வெறித்தாள்.

“ரொம்ப ஹோட் ஆஹ் இருக்க்கீங்க, காஃபி சாப்பிடுறீங்களா மேடம்?” என்று கேட்க…

சட்டென “நோ நீட்” என்றாள்.

“தென் ஓகே, எனத் தோள்களை குலுக்கி கொண்டவன் டேட் கேட்டேன் சொல்லவே இல்லையே”

“லெவந்த்” என்றதும் “சோ இன்னும் டென் டேய்ஸ் தான் இருக்குல” என்றவன் இதழ்களில் புன்னகை விரிந்தது.

“ஓவரா கற்பனை பண்ணிக்காதீங்க ஷர்வீத். நான் இறங்க வேண்டிய இடம் வந்துறிச்சு சோ பிளீஸ் என்றதும் ஜீப்பை நிறுத்தியவன், இறங்கப் போனவளின் கையைப் பற்றி தன்னை நோக்கி இழுத்தவன் அவளின் அதிர்ந்து விரிந்த இரு நீள் விழிகளை ஆழ்ந்து பார்த்துக் கொண்டே “முன்ன போல என் கண்ணை பார்த்து பேசு ஓகே? என்றவன் தன் கன்னத்தை நாவால் வருடிய படி ஒரு மார்க்கமாக புன்னகைத்தவன் நான் உன்ன பார்த்துட்டேன்னு அதையே நினைச்சு பீல் பண்ணிட்டு இருக்காத பேபி. பிகாஸ் நீ பிறந்தப்போவே உன்னை ஃபர்ஸ்ட் கைல ஏந்தினது நான் தான்” என்றதும் அவளின் கன்னங்கள் சிவந்து போனது.

அவனது வெளிப்படையான பேச்சில் சிலிர்க்கும் தன் மேனியை நினைத்து நொந்து போனவள் அவன் கையில் இருந்த தன் கையை உருவி எடுத்தவள் பதிலேதும் சொல்லாமலேயே ஜீப்பிலிருந்து இறங்கி சென்றிருந்தாள்.

அவள் சென்று மறையும் வரை அங்கேயே காத்து இருந்தவன் அடுத்த கணமே உயர் வேகத்தில் காவல் நிலையத்தை நோக்கி வண்டியை செலுத்தி இருந்தான்.

அவனுள் ஆயிரம் சிந்தனைகள்.

அவன் கண்டு பிடித்த லைட்டரை வைத்து ‘ஐகான் ஆப் த சீஸ்’ என்ற கப்பலின் பெயரை கண்டு பிடித்து விட்டவனுக்கு கொலைகாரன் அக் கப்பலில் தான் இருப்பானா? இல்லை வேறெங்கேனும் சென்று இருப்பானா? என்ற எண்ணம் மூளையைக் குடைந்தது.

ஸ்டியரிங்கை அழுந்த பற்றியவன் அலைபேசி சிணுங்க, “ஷிட்” என்று சொல்லிக் கொண்டே ஒற்றைக் கையால் எட்டி டேஷ்போடிலிருந்த அலைபேசியை எடுத்து திரையை பார்த்தான்.

சேமித்து வைக்கப்படாத எண் என்று தெரிந்தது.

தாமதிக்காமல் அழைப்பை ஏற்றவன் “ஹலோ” என்றான் ஆளுமையாக…

 

அவனின் ஆளுமையான குரலைக் கேட்ட படி எதிர் முனையில் இருந்தவனோ “ஹலோ ஏஎஸ்பி ஷர்வீத்” என்றதும் வேகமாக வண்டியை செலுத்திக் கொண்டிருந்தவனோ சட்டென பிரேக்கினை அழுத்தி நிறுத்தி இருந்தான்.

“எதுக்கு இவ்வளவு ஷாக்? ஐ க்னோ நீ கண்டு பிடிச்சு இருப்ப பட் என்னை உன்னால எதுவும் செய்ய முடியாது என்ற படி எதிர் முனையில் சத்தமாக சிரித்தவன் நீ கண்டு பிடிச்சு எடுத்த லைட்டரை நான் சொல்ற அட்ரஸ்ல வந்து வச்சிட்டு போ” என்று மிரட்டினான்.

 

இவ்வளவு நேரமும் மூளையைக் குடைந்துக் கொண்டிருந்த விஷயம் இப்போது இவன் சொல்லிக் கொண்டிருக்கும் விடயத்தில் ஊர்ஜிதம் ஆக, இதழ் கடித்து சிரிப்பை அடக்கிக் கொண்டே “அஹான்… இந்த தவளை இருக்கில்லையா தவளை என்றவன் அடக்க முடியாமல் சத்தமாக சிரித்தவன் அது தன் வாயாலே கெடும்ன்னு சொல்லுவாங்க அது உன் விஷயத்துல அக்கியுரேட்டா இருக்கு” என்றதும் எதிர் முனையில் இருந்தவனோ பொறுமை இழந்து “நீ என் விஷயத்துல தலையிட்டா உன் லைஃப்ல எப்பவும் பேட் லக்கை தான் ஃபேஸ் பண்ணிட்டு இருப்ப” என சீறினான் அவன்.

வேறு யாராக இருக்க முடியும்? ஐகான் ஆப் த சீஸ் என்ற கப்பலின் உரிமையாளரான விக்ரமன் தான்.

“அம்… வெயிட்டிங்” என்றவன் அலைபேசியை துண்டிக்கப் போகும் சமயம், “உன்னால எனக்கு ப்ராப்ளம் வரும்னு தெரிஞ்ச பிறகும் உன்னை சும்மா விடுவேன்னு நினைச்சிட்டு இருக்க போல?” என்றவன் பேசிக் கொண்டு இருக்கும் போதே எதிரே உயர் வேகத்துடன் பார ஊர்தியொன்று தன்னை நோக்கி வருவதைக் கண்ட சர்வீத் வண்டியை நகர்த்த முடியாது என கண நேரத்தில் ஊகித்தவன் சட்டென டோரின் லாக்கை ரிலீஸ் செய்து நொடியில் வெளியே பாய்ந்த அதே நேரம், அப் பாரஊர்தி மோதியதில் அப்பளம் போல நொறுங்கி சிதறி இருந்தது அவனுடைய ஜீப்.

மயிரிழையில் உயிர் தப்பி இருந்தான்.

சிதறிக் கிடந்த வண்டியை வெறித்த படி அலைபேசியை காதில் வைக்க, “இது ஜஸ்ட் டெமோ தான். சோ நான் கேட்டதை கொடுத்தா உனக்கு நல்லது” என்றான்.

“முடியாது டா. உன்னால முடிஞ்சதை பார்த்துக்கோ டே****ஷ்” என கெட்ட வார்த்தைகளால் அர்ச்சித்து விட்டு அழைப்பை துண்டித்து இருந்தான்.

அவன் அழைப்பை துண்டித்ததும் சீற்றத்தில் பல்லைக் கடித்த விக்ரமன் தன் அருகில் நின்று இருந்த அவனது மகன் கயனை இழுத்து அறைந்தவன் “இடியட்… இடியட் உன்னால தான்டா. இவன்கிட்ட எல்லாம் கெஞ்ச வேண்டியதா இருக்கு ஷிட்” என்று கர்ஜித்த படி பல லட்சங்களை விழுங்கிய தனது அலைபேசியை அவ் ஆழ் கடலில் எறிந்து இருந்தான்.

****************************

இங்கோ, கீழே வீழ்ந்து கிடந்த ஷர்வீத் தன்னை சுதாரித்து துப்பாக்கியை எடுத்து ஜீப்பை நொறுக்கி விட்டு வேகமாக சென்றுக் கொண்டிருந்த பார ஊர்தியின் சில்லினை நோக்கி குறி வைத்து தொடர்ச்சியாக சுட ஆரம்பிக்கவும், அவன் வைத்த குறி தப்பாமல் தோட்டாக்களோ சில்லை கனகச்சிதமாக பதம் பார்த்திருந்தன.

சில்லில் நிரப்பப்பட்டு இருந்த காற்று கொஞ்சம் கொஞ்சமாக வெளியேற, வாகனமோ பாதையை விட்டு விலக ஆரம்பித்தது.

அப் பார ஊர்தியை ஓட்டிக் கொண்டு சென்ற சாரதியோ, பதற்றத்தில் சட்டென வெளியில் பாய்ந்து வேகமாக ஓடத் தொடங்க “ஓஹ் ஷிட்…” என்றபடி நரேனுக்கு அழைப்பினை எடுத்துக் கொண்டே துப்பாக்கியை முதுகில் சொருகியவன் அவனை நோக்கி வேகமாக ஓட ஆரம்பித்தான்.

மறு முனையில் அழைப்பை ஏற்ற நரேன் “ஹலோ சார்” என்றான்.

“நரேன் உனக்கு ஒரு நம்பர் சென்ட் பண்ணி இருக்கேன் ட்ரேஸ் இட்” என்றதும் முதலில் ஒன்றும் புரியாமல் விழித்தவன் ஃபோனில் மூச்சு வாங்க ஓடும் சத்தம் கேட்கவும் “சார் என்னாச்சு? எங்க இருக்கீங்க?” என்று தொடர்ச்சியான கேள்விகளை அவன் கேட்க…

“டூ வாட் ஐ சே…” என கர்ஜித்தவன் அவனை பிடிக்கும் தூரத்தில் நெருங்கி விட, பார ஊர்தியை ஒட்டி வந்தவனோ தான் போலீஸிடம் சிக்கி விட்டால் அடியாட்களிடம் சிக்கித் தவிக்கும் தன் குடும்பத்தை கொன்று விடுவார்கள் என்று நிதானித்தவனோ பாதையின் குறுக்கே வேகமாக வந்துக் கொண்டிருந்த லாரியில் பாய்ந்து இருக்க, அதுவோ அவனை அடித்து தூக்கி எறிந்திருந்தது.

கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்து முடிந்து இருந்தது.

நூலளவு இடைவெளியில் பற்றிப் பிடிக்க முன்னரே, அவன் செ

ய்த செயலில் ஷர்வீத்தின் உடலோ இறுகி விறைத்துப் போனது.

👁️ 370 Views
5 4 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
⚠️ இத்தளத்தின் உள்ளடக்கங்கள் DMCA
பாதுகாப்பில் உள்ளது. Copy / Screenshot / PDF
உருவாக்குதல் தடை செய்யப்பட்டுள்ளது.