Menu

இதயம் – 2

இதயம் – 2

 

காலை பத்து

மணி இருக்கும் அனைத்து வாகனங்களும் சமிக்ஞை விளக்கின் பச்சை நிற ஒளி மின்னும் வரை

காத்துக் கொண்டு இருந்த தருணம் அது.

 

ஒருவன் அந்த

டிராஃபிக்கிலும் கூட வாகன நெரிசலுக்குள் புகுந்து ஓடிக் கொண்டு இருந்தான்.

 

அவனைப் பின்

தொடர்ந்து துரத்திய வண்ணம் ஓடி வந்துக் கொண்டு இருந்தான் நம் கதையின் நாயகன்

ஷர்வீத்.

 

முன்னால் மூச்சு

வாங்க வாகன நெரிசல்களுக்குள் இடைப்புகுந்து ஓடுபவனை துரத்திக் கொண்டு வந்த நம்

கதையின் நாயகனோ ஒரு கணம் நின்று நெற்றியை நீவிய படி சுற்றிலும் பார்வையை சுழல

விட்டான்.

 

சுற்றிலும்

சாலையின் இருமருங்கிலும் வாகனங்கள் நின்றுக் கொண்டு இருந்தன.

 

பத்து

மணியாக இருந்தாலும் கூட வெயில் உச்சியைப் பிளந்துக் கொண்டு தான் இருந்தது.

 

இதழ்

குவித்து ஊதிக் கொண்டே தனது

துப்பாக்கியை எடுத்து அதனை லோட் செய்த படி

சட்டையின் பின் சொருகினான்.

 

என்னது

துப்பக்கியா?

 

ஆம், நம்

நாயகன் ஷர்வீத் போலீஸ் ஆச்சே துப்பாக்கி இருக்காதா பின்ன?

 

அவன்

ஷர்வீத் ஐ பீ எஸ்.

இன்று தான்

புதிதாக மாற்றலாகி வந்துள்ள அசிஸ்டன்ட் சுபெரின்டன்டென்ட் ஆப் போலீஸ் (ஏ எஸ் பி).

 

காக்கிச்

சீருடையில் ஆளுமையாகவும் ஆறடிக்கும் குறையாத உயரமும், கட்டுக் கோப்பான தேகமும்

நெற்றியில் புரளும் அடர்ந்த கேசமும் ஒற்றைக் காதில் சிறிய வெண்ணிற கடுக்கன் சகிதம்

அக்மார்க் ஆண் அழகனாக வீதியின் நடுவே தன் முன் ஓடும் அவனை வெறித்துப் பார்த்துக்

கொண்டு நின்று இருந்தவனை வீதியில் ஆங்காங்கே நடந்துக் கொண்டு இருப்பவர்களும் சரி, வாகனங்களில் இருப்பவர்களும் சரி, ‘ஐயோ போலீஸ்’ என்றுப் பார்த்துக் கொண்டு இருந்தார்கள் என்றால் சில பள்ளி மாணவிகளோ அவனின்

மேனரிசத்தை அப்பட்டமாக சைட் அடித்துக் கொண்டு இருந்தனர்.

 

வந்ததும்

தனது முதல் பணியை ஆரம்பித்தவனுக்கு கையில் சிக்கியது தான் இவன்.

 

கொலைக்

குற்றவாளியான ரமேஷ்.

 

விடுவானா

என்ன?

 

தன் இடக்

கையில் இருக்கும் ஐம்பொன் காப்பை இறக்கி விட்ட படி சாவதானமாக ஓடும் அவனை நோக்கி

நடக்கத் தொடங்கினான்.

 

அவ்வளவு

வேகமாக ஓடி வந்தவன் இப்போது நிதானமாக நடந்து செல்வதைப் பார்த்து சுற்றிலும் இருந்த

அனைவருக்குமே வியப்பு தான்.

 

நடந்து

வந்துக் கொண்டு இருப்பவனை இடை மறிக்கும் வகையில் ஒரு ஸ்கூட்டி முன் நிற்க,

அசால்டாக ஸ்கூட்டியின் மேலேறிப் பாய்ந்தவன் அதில் யார் இருந்தது எனக் கூடக் கண்டு

கொள்ளாமல் அவன் திரும்பியும் பாராமல் நடந்து சென்றான்.

 

அவன்

குதித்த வேகத்தில் ஸ்கூட்டியோ சரிய ஆரம்பிக்க… அதில்

இருந்த பெண்ணோ தானும் விழாமல் இருக்க, முயன்று நிலத்தில் அழுந்தக் காலூன்றி தட்டுத் தடுமாறி ஸ்கூட்டியை நிறுத்தி இருந்தாள்.

 

ஆம், அந்த

ஸ்கூட்டியில் இருந்தது வேறு யாரும் அல்ல. நம்

கதையின் நாயகி ஆதிரா தான்.

 

போகும் அவனை

அனல் பார்வைப் பார்த்துக் கொண்டு இருந்தாள்.

 

இப்படி

ஒருத்தி தன்னை முறைத்துக் கொண்டு இருக்கின்றாள் என்று அறியாமலேயே தனது அலைபேசியை

எடுத்து யாருக்கோ கட்டளை பிறப்பித்த படி நடந்து சென்றுக் கொண்டு இருந்தான்.

 

டிராபிக்

சிக்னலில் இன்னும் பச்சை விளக்கு மின்ன மூன்று வினாடிகளே இருந்த சமயம் அது.

 

தானாக அந்த

மூன்று வினாடிகளும் அப்படியே பிரீஸ் ஆகி எண்கள் குறையாமல்

நின்று விட்டு இருந்தது.

 

அனைவருக்கும்

அதிர்ச்சி ஒரு புறம் இருந்தாலும் இன்னொரு புறம் அவனின் தோரணையிலே அனைத்தும் அவனின்

வேலை தான் எனப் புரிந்தும் கொண்டார்கள்.

 

சாலையின்

மறு புறம் சென்றவன் மின்னல் வேகத்தில் தனது போலீஸ் ஜீப்பை ஸ்டார்ட் செய்து யூ

டர்ன் எடுத்து அவன் நடந்து வந்த வீதியின் சந்தியில் நிறுத்தி இருந்தான்.

 

தலை தெறிக்க

ஓடி வந்த ரமேஷிற்கோ தப்பிக்க வேறு வழியும் இல்லை.

 

ஒன்று

அவனிடம் சரணடைய வேண்டும் இல்லையென்றால் தப்பிக்க வேண்டும்.

 

சுற்றிலும்

உள்ள வாகன நெரிசல்களில் தப்பிக்க வாய்ப்பே இல்லையெனப் புரிந்துக் கொண்டவன்

அப்படியே நடு நடுங்கிப் போய் நின்று விட,

 

ஜீப்பிலிருந்து

பொறுமையாக இறங்கியவன் தனது துப்பாக்கியை எடுத்துக் கொண்டு இரு கரங்களையும்

மேலுயர்த்தி நெட்டி முறித்துக் கொண்டவன் அவனை நோக்கிக் குறி வைக்க, அந்த ரமேஷிற்கு

மட்டும் அல்ல சுற்றி இருந்த மக்களுக்குமே பயத்தில் வெடவெடக்கத் தொடங்கி இருந்தது.

 

அவனோ “சார் என்னை

விட்டுருங்க” எனக் கதற ஆரம்பிக்க, அவனை நோக்கிக் குறி வைத்து இருந்த துப்பாக்கியைக் கீழ்

இறக்கியவன் ஜீப்பின் பொனெட்டில் பாய்ந்து ஏறி அமர்ந்தான்.

 

அவனின்

தோரணையில் அப்படி ஒரு கம்பீரம்.

 

துப்பாக்கியினால்

நெற்றியைத் தேய்த்துக் கொண்டே அவனை நிமிர்ந்து பார்த்தவன் “இங்க வாடா” என அழைத்து

இருந்தான்.

 

அவனோ,

கால்கள் நடுங்க நெற்றியிலிருந்து வழிந்த வியர்வையை துடைத்து விட்ட படி மெதுவாக வர “அதான்

இவ்வளோ பயம் இருக்குல அப்புறம் ஏன்?” என்றவன் தன்

அருகில் வந்த ரமேஷின் நெற்றியிலிருந்து வழிந்த வியர்வையை சுண்டி விட்டான்.

 

“என் டைம்

மட்டும் இல்ல டா என்றவன் தொடர்ந்து துப்பாக்கி வைத்து இருக்கும் கையால் அனைவரையும்

சுட்டிக் காட்டி அவ்ளோ பேர் டைம் அஹ்யும் வேஸ்ட் பண்ணி இருக்க சோ உன்ன என்ன

பண்ணலாம்” என வெகு வெகு நிதானமாக ஜீப்பின் பொனெட்டில் அமர்ந்து சுவிங்கத்தை மென்று பலூன்

போல ஊதி உடைத்துக் கொண்டே கேட்டபடி அவனின் பதற்றமான முகத்தை வெறித்துக் கொண்டு

இருந்தவனுக்கு நேர் எதிரே சற்று முன்னர் அவன் யாரை கண்டுக் கொள்ளாமல் வந்தானோ அவளே

அதான் நம்ம கதையின் நாயகி ஆதிராவின் இதழ்களோ “பொறுக்கி” என

உச்சரித்து இருந்தன.

 

ரமேஷின்

தலையை விலக்கி விட்டு தலையை சரித்து அவளைப் பார்த்துக் கொண்டே காரின்

பொனெட்டிலிருந்து பாய்ந்து இறங்கினான்.

 

அவன்

குதித்த வேகத்தில் நடு நடுங்கிப் போன ரமேஷ் “சார் என்னை

மன்னிச்சுடுங்க நான் சரண்டர் ஆகிடுறேன். என்னை ஒன்னும் பண்ணிடாதீங்க” எனக் கதறி

அழுதபடி வீதி என்றும் பாராமல் ஷர்வீத்தின் காலிலேயே விழுந்து விட்டான்.

 

“ஓ மை கோட்” என

வெளிப்படையாக சொன்னவன் அவனின் ஷர்ட்டினைப் பற்றி எழ வைத்து அவளைப் பார்த்துக்

கொண்டே பளாரென இழுத்து அறைந்து இருந்தான் அவன்.

 

அவன் விட்ட அறையில் ரமேஷின் உதடு கிழிந்து உதிரம் வர ஆரம்பித்தும் இருக்க, அங்கு இருந்தவர்களின் விழிகளோ அவன் அறைந்த வேகத்தில் ஒரு கணம் மூடித் திறந்தன.

 

தன் கையை

உதறிக் கொண்டே ஐம்பொன் காப்பை இறக்கி விட்டவன் “டேய் உன்னால

டிராபிக் ரூல்ஸ் அஹ் நான் மீற வேண்டியதா போச்சு டா எனப் பல்லைக் கடித்துக் கொண்டு

சீறியவன் அவன் கேசத்தைக் கொத்தாகப் பற்றி சுற்றிலும்

அவன் முகத்தைத் திருப்பிக் காட்டி ஆட்டியவன் இதுவே எனக்கு எவ்வளவு ப்ராப்லம்ஸை

கிரியேட் பண்ணும்ன்னு உனக்கு எங்கடா அதெல்லாம் தெரிய போகுது?” என அடிக்

குரலில் சீறினான்.

 

அவன்

ஆக்ரோஷமாகக் கத்தியதில் பயந்து போன ரமேஷோ கன்னத்தைப் பிடித்துக் கொண்டே தலையைக்

குனிந்து கொள்ள, அவன் கையைப் பற்றி தர தரவென இழுத்துச் சென்று ஜீப்பின் உள்ளே

தள்ளி அவன் கைகளுக்கு விலங்கிட்டு ஜீப்பின் கதவை லாக் செய்தவன் நன்றாகத் திரும்பி

தலையை இரு புறமும் அசைத்துக் கழுத்தில் நெட்டி முறித்துக் கொண்டே நேராக நடந்து

சென்றது என்னவோ நம் நாயகி ஆதிராவின் ஸ்கூட்டியின் அருகே தான்.

 

ஆம், அவன்

ரமேஷை நடு வீதியில் அடித்துக் கொண்டு இருக்கும் காட்சியைத் தனது அலைபேசியில்

வீடியோ எடுக்கத் தொடங்கி இருந்தாள் பெண்ணவள்.

 

அவளோ, தன்னை

நோக்கி வரு

ம் அவனை எவ்வித பயமுமின்றி எதிர்க் கொள்ளத் தயாராக இருக்க, கூலர்சை பாக்கெட்டிலிருந்து எடுத்துப்

போட்டுக் கொண்டவன் வாயில் சுவிங்கத்தை மென்றுக் கொண்டே அவளை நெருங்கி இருந்தான்.

👁️ 573 Views
5 6 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
⚠️ இத்தளத்தின் உள்ளடக்கங்கள் DMCA
பாதுகாப்பில் உள்ளது. Copy / Screenshot / PDF
உருவாக்குதல் தடை செய்யப்பட்டுள்ளது.