Menu

இதயம் – 4

இதயம் – 4

 

அறைக்குள் வந்தவள் “சீக்கிரமா இங்க இருந்து கிளம்பனும் இல்லனா கடுப்பு ஏத்திட்டு இருப்பான்” என்று சொல்லிக் கொண்டே தொலைக்காட்சியைப் போட்டு விட்டுக் கட்டிலில் அமர்ந்தவள் அதில் ஒளிபரப்பாகிக் கொண்டு இருந்த செய்தியைப் பார்த்துத் திகைத்து விழித்தாள்.

 

அதிலோ, ஷர்வீத் சர்வ சாதாரணமாகப் பத்திரிகையாளர்களுக்குப் பதிலளித்துக் கொண்டு இருந்தான். 

 

“கொஞ்சம் கூட சீரியஸ்நஸ் இல்லாமல் பேசிட்டு இருக்கான்” என்று புலம்பிக் கொண்டே வேறொரு சேனலைப் போட்டவளுக்கோ தூக்கி வாரிப் போட்டது.

 

எரிக்கப்பட்டு கிடந்த உடலையும் நிழற்படமாகக் காட்ட, அதைப் பார்த்தவளுக்கோ குமட்டிக் கொண்டு வந்தது.

 

வாயை அழுந்தப் பொத்திக் கொண்டு குளியலறைக்குள் நுழைந்தவள் வீட்டின் அழைப்பு மணி ஒலிக்கும் சத்தத்தில் தண்ணீரால் முகத்தை அடித்துக் கழுவி விட்டு கீழிறங்கி வந்தவள் கதவைத் திறந்தாள்.

 

அங்கோ, தலையைக் கோதிக் கொண்டே ஷர்வீத் தான் நின்று இருந்தான்.

 

அவனைக் கண்டு முறைத்தவள் அவன் செல்வதற்கு வழி விடாமல் மார்புக்கு குறுக்கே கைகளைக் கட்டிய படி கதவில் சாய்ந்து நின்று இருந்தாள்.

 

அவளின் செயலில் அவனின் இரத்த அழுத்தம் ஏகத்துக்கும் எகிற, அவளைத் தாண்டி மறுபுறம் செல்ல எத்தனிக்க, அவளா விடுவாள்? மீண்டும் வழியை மறைத்தவள் அவனை உறுத்து விழித்த படி நிற்க, “எக்ஸ்கியூஸ் மீ கொஞ்சம் விலகி நில்லுங்க” என்றான் சற்றே மென்மையாக…

 

“முடியாது” என்றாள் திமிராக…

 

அவனுக்கோ, சிசிடிவி காணொளியிலும் கூட எந்த சாட்சியும் கிடைக்காமல் போக, அந்த எரிச்சலில் கோப்பொன்றை தேடுவதற்காக வீட்டிற்கு வந்தவன் அவளின் இச் செயலில் அவனின் பொறுமையோ காற்றில் தான் பறந்தது.

 

“சாவடிச்சிடுவேன் இடியட் ”என்று கர்ஜித்தவன் அவளின் அதிர்ந்த தோற்றத்தைக் கூடக் கண்டு கொள்ளாமல் உள்ளே சென்று விட,

அவளுக்கோ செருப்பால் அடித்தது போல இருந்தது.

 

உள்ளே சென்ற வேகத்தில் கோப்பினை எடுத்துக் கொண்டு வந்தவன் நின்ற நிலை மாறாமல் அதே இடத்திலேயே

அவள் நின்று கொண்டு இருப்பதை பார்த்து “ப்ச்… ஆதிரா சாரி கேஸ் டென்ஷன்ல…” என்று சொல்ல வந்தவனை கை நீட்டிப் பேசவிடாமல் தடுத்தவள் “இதே போல எரிச்சல் தான் எனக்கும் மெயின் ரோட்டில் வந்து இருக்கும் சோ இப்ப புரிஞ்சுதா சாருக்கு?” என்று சொல்லவும் “ஓஹோ… மேடம் அதை சொல்ல வர்றீங்களா? சரி தான் என்று கேசத்தை கோதிக் கொண்டே அதென்ன என்னவோ கமிஷ்னர் வரை போவேன்னு சொன்னீங்களே என்றவன் மேலும் இதழ்களை பிதுக்கி சோ சேட் இன்னும் எனக்கு சஸ்பென்ஷன் ஆர்டர் கூட வர்லயே” என்று கிண்டலாக சொல்ல…

 

அவனின் நக்கலான பார்வை அவளைத் தூண்ட “ரொம்ப ஆடாதீங்க மிஸ்டர் ஷர்வீத்.

சீக்கிரம் உங்களுக்கு சஸ்பென்ஷன் கிடைக்கும் ஆல் தி பெஸ்ட்” என்றாள்.

 

“இன் யுவர் ட்ரீம்ஸ்” என்றவன் புன்னகைக்க, “சப்போஸ் கிடைச்சா?” என்றவள் கேள்வியில் அவளை ஒரு மார்க்கமாகப் பார்த்தவன் ஒற்றை புருவத்தை ஏற்றி இறக்கி “இன்ரெஸ்டிங்… என்று தெற்றிப் பற்கள் தெரிய புன்னகைத்தவன் என்னோட சுண்டு விரல் கூட உன் மேல படாது” என்றவன் தனது கூலர்ஸ்ஸை போட்டுக் கொண்டே ஜீப்பில் ஏறிக் கிளம்பி இருந்தான்.

 

அவன் விளையாட்டிற்கு சொன்னது அவனுக்கே வினையாகப் போகின்றதெனப் பாவம் அவனே அறியவில்லை.

 

அவனின் வார்த்தைகளை ஜீரணித்துக் கொள்ளவே அவளுக்கு சில நிமிடங்கள் பிடித்தன.

 

“சுண்டு விரல் படாதா? என்று தனக்குள் சொல்லிக் கொண்டவளின் விழிகள் விரிய டேமிட் என்ன உலறிட்டு போறான்?” என்று உச்சகட்ட கோபத்தில் கறுவிக் கொண்டே மீண்டும் அவன் வருகைக்காக அவள் காத்து இருக்க, அவனோ அவளை நன்றாகக் குழப்பி விட்ட திருப்தியில் நேராக வந்தது என்னவோ காவல் துறை தலைமை அதிகாரியை சந்திக்கத் தான்.

 

கூலர்ஸ்ஸை கழட்டி விட்டுத் தலைமை அதிகாரியின் அறைக்குள் நுழைந்தவன் சல்யூட் அடித்து நிற்க, “வெல்கம்

மிஸ்டர் ஷர்வீத் எனக் கேட்ட ஆளுமையான குரலில் உள்ளுக்குள் மெச்சிக் கொண்டவன் அவர் எதற்காகப் பேச அழைத்திருக்கிறாரென ஊகித்துக் கொண்டே அவரை நேர் கொண்ட பார்வையுடன் எதிர் நோக்க, வெல், மேலிடத்துல இருந்து பிரஷர் அதிகமா இருக்கு என்றவர் தொடர்ந்து

இன்வெஸ்டிகேஷனை இன்னும் டீப் பண்ணுங்க” என்று சொல்ல…

 

“எஸ் மேம்” என்றவன் தான் கொண்டு வந்த கோப்பினை மேசையில் வைத்தவன் சல்யூட் அடித்து விட்டுத் திரும்பும் கணம் “ஷர்வா” என்ற குரலில் அவனின் நடையோ சட்டெனத் தடை பட, அவனின் அருகில் வந்து நின்ற அந்த உயர் அதிகாரி வேறு யாராக இருக்க முடியும்? அவனின் உயிருக்கு நிகரான உடன் பிறந்த

தமக்கை அல்லவா!

 

ஆம், மிஸஸ்

பூர்ணிமா.

 

சிறு

வயதிலேயே வாகன விபத்தில் தாய் தந்தையை இழந்தவர்கள் ஒருவருக்கு ஒருவர் துணையாக மாற,

கிடைத்த வேலையை செய்து தனது தம்பியைப் படிக்க வைக்க வேண்டும் என்ற முனைப்பில்

அவனைக் காவல் துறை அதிகாரியாக்கி அதில் வெற்றியும் கண்டார் அவனின் உயிருக்கு

நிகரான தமக்கை.

 

“மேம்…” என்ற அவனின்

குரலில் தன் சிந்தனையிலிருந்து மீண்டவர் அவனை முறைத்து விட்டு“ நான் தான்

உரிமையா கூப்பிடுறேன்ல பிறகு எதுக்குடா இந்த பார்மாலிடீஸ் எல்லாம்?” என்று

சலித்துக் கொண்டார் பூர்ணிமா.

 

“ஹலோ மேடம்

எங்க கொஞ்சம் முகத்தை பார்ப்போம் என கிண்டலாக சொன்னவன் நீங்க தானே நான் உங்களுக்கு

கீழ போஸ்ட்டிங் வர முதல் நாளே நமக்குள்ள அக்கா தம்பி பாண்ட் எல்லாம் வேணாம் இது

ஸ்டேஷன் பிளா பிளான்னு முழு நாள் கிளாஸ் எடுத்தீங்களே” என்று

சொன்னவன் தனது அக்காவின் முகம் வாடுவதைக் கண்டு நெற்றியை நீவிய படியே “ஹும் ஓகே

ஓகே என்ன சொல்ல வந்திங்க மேடம்” எனக் கேட்க…

 

இவன்

ஒன்றைப் பிடித்தால் அதிலே பிடிவாதமாக நிற்பான் எனப் புரிந்து வைத்து இருந்தவர் “எப்போ

என்னோட பொண்ணை கல்யாணம் பண்ணிக்க போற?” என்ற குண்டை

அவனின் தலையில் சத்தமே இல்லாமல் இறக்கினார்.

 

அவனுக்கோ

தண்ணீர் குடிக்காமேலேயே புரை ஏறி விட்டது.

 

இருமிக்

கொண்டே தலையைத் தட்டிக் கொண்டவன் “ஆர் யூ ஜோகிங்?” என்று

கேட்டே விட்டான்.

 

“இதுல நான்

காமெடி பண்ண என்ன இருக்கு?”

 

“அக்கா

அவளுக்கும் எனக்கும் பத்து வருஷ ஏஜ் டிஃபரண்ட் இருக்கு” என்றவனை இடை

மறித்தவர் “சோ வாட்?” என்று கேட்க…

 

“என்ன சோ

வாட் ஆஹ்? ஓஹ் கோட் எனப் புருவத்தை வருடிக் கொண்டே நானே அவளுக்கு வேற மாப்பிள்ளை

பார்க்குறேன்” என்றான்.

 

அவன்

மறுத்ததும் பூர்ணிமாவுக்கோ சட்டென உடல் இறுக, “மிஸ்டர்

ஷர்வீத் யூ மே லீவ் நவ்” என்று சொல்ல… “அக்கா” என்றான்.

 

“கால் மீ

மேம்” என்று பெண் சிங்கமாகக் கர்ஜிக்க, இதழ் குவித்து ஊதிக் கொண்டே மீண்டும் சல்யூட்

அடித்து விட்டு வெளியேறியவன் நேராகத் தனது காவல் நிலையத்தை நோக்கிக் கிளம்பி

இருந்தான்.

 

காவல் நிலைய

வாசலில் பதற்றமாக நின்ற நரேனை புருவம் சுருக்கி பார்த்தவன் “நரேன்

அட்டாப்ஸி ரிப்போர்ட் வந்துடுச்சா?” என்று

கேட்டுக் கொண்டே உள்ளே சென்றவன் தனது இருக்கையில் அமர, நரேனோ முன்னே இருந்த

மேசையின் மீது உடற்கூறு ஆய்வு அறிக்கையை வைத்துவிட்டு அனைத்தையும் ஒப்புவிக்க

ஆரம்பித்து இருந்தான்.

 

சாதாரணமாகக்

கேட்டுக் கொண்டு இருந்தவனுக்கோ நரேன் ஒவ்வொன்றாக விபரிக்கும் போதே இதில் ஏதோ மிகப்

பெரிய விடயம் அடங்கி உள்ளதென ஊகித்துக் கொண்டவன் “சோ இறந்தது

ஒரு பொண்ணு என்றவன் மார்க்கரை எடுத்து அடுத்தடுத்து சிலவற்றை தன் முன்னால் இருந்த

வெண் பலகையில் எழுதியவன் பொண்ணுங்க காணாமல் போய் இன்னும் சோல்வ் பண்ணாத பைல்ஸ்

தாங்க” என்றதும் சட்டென அதற்கான பைலை எடுத்து நீட்டியவன் “சார்

இதெல்லாம் சோல்வ் பண்ணின கேஸஸ் அண்ட் இந்த பைல்ல ரெண்டு கிழமை முன்னாடி ஒரு பொண்ணு

காணாமல் போய் இன்னும் சோல்வ் பண்ணாத கேஸ் இருக்கு” என்று இரு

வேறு கோப்புகளைப் பிரித்து வைத்து இருந்தான்.

 

சட்டெனத்

தனது சிந்தனையிலிருந்து வெளி வந்தவன் உடல் இறுக “இதெல்லாம்

சோல்வ் பண்ணாமல் என்னத்தை பிடுங்கிட்டு…” என இறுகிய

குரலில் பேச வந்தவன் அந்தக் கோப்பினைத் திறந்து பார்த்தான்.

 

முதலில்

வயதைப் பார்த்தான்.

இருபத்து

நான்கு வயது பெண். பெயர் வர்ஷா. அதுவும் கடத்தப் பட்டு இருக்கின்றாள் என்றிருக்க, “நரேன், தென்

இந்த பொண்ணோட பேரெண்ட்ஸ் எதாச்சும் ஆக்ஷன் எடுக்கலையா?” என்று

அதிர்ச்சியாகக் கேட்டான்.

 

இதை அவனால்

சாதாரணமாக எடுத்துக் கொள்ளவே முடியவில்லை.

 

ஒரு பெண்

கடத்தப்பட்டு இருக்கின்றாள் அவளைக் கண்டு பிடித்துக் கொடுக்காமல் எவ்வளவு

அஜாக்கிரதையாக இருந்திருக்கின்றனர் என்று நினைக்கும் போதே கழுத்து நரம்புகள்

புடைக்க, உடலோ இறுகிப் போனது.

 

நரேனோ,

தலையைக் குனிந்துக் கொண்டே “சார் அது” என்று இழுக்க, “நிதானமா கேட்குற அளவுக்கு என்கிட்ட பொறுமை இல்ல நரேன் சோ பிளீஸ்” என்று இறுகிய குரலில் அவன் பேசிக் கொண்டு இருக்கும் போதே “போன

வென்ஸ்டே வந்தாங்க சார். ரொம்பவே கலாட்டா பண்ணிட்டாங்க. ஏஎஸ்பி சார் தான் அவங்களை அடிக்காத குறையா வெளில…” என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போதே அந்தக் காவல் துறை அதிகாரி மீது கட்டுக்கடங்காமல் கோபம் பெருக, “எனக்கு அந்த பொண்ணோட பேரெண்ட்ஸ் அஹ் மீட் பண்ணனும் கிளம்பு” என்றவன் அடுத்த கணமே நரேனுடன் கிளம்பி இருந்தான்.

 

ஆம், அம் மூடி மறைக்கப்பட்ட வழக்கை மீள விசாரணை செய்ய முடிவெடுத்து விட்டான்.

 

வண்டியில் அமர்ந்தவாறே வெளியில் வெறித்த படி வந்துக் கொண்டு இருந்தவன் சட்டென “நரேன் ஸ்டாப் த ஜீப்” என்க.

 

அவன் சொன்ன வேகத்தில் அவனும் வண்டியை நிறுத்திய அடுத்த நொடியே வண்டியிலிருந்து வேகமாக இறங்கியவன் நேரே சென்றது என்னவோ சிகரெட்டை பற்ற வைத்து ஒரு கர்ப்பிணி பெண்ணின் அருகில் புகைப் பிடித்துக் கொண்டு இருந்தவனை நோக்கி தான்.

 

அவனின் செயலைப் பார்த்தவனுக்கோ ஆத்திரம் தலைக்கு ஏறியது.

 

காவல் அதிகாரியைக் கண்டதும் அவன் சிகரெட்டை மறைக்க முயல, பாய்ந்து அவனின் கையைப்

பிடித்து முறுக்கியவன் வலியில் கதறும் அவனைப் பொருட்படுத்தாமல் தாடையைப் பற்றித் திருப்பி மேலே எழுதித் தொங்க விடப் பட்டு இருந்த வாசகத்தைப் பார்க்கச் செய்தான்.

 

வலியில் உயிர் போக “சார் விடுங்க பிளீஸ்” என்று சொல்ல மேலும் அவனின் கையை முறுக்கியவன் “என்ன எழுதி இருக்கு?” என்று தனது ஆளுமையான குரலில் கேட்டான்.

 

“சார்” என்றான் ஈனக் குரலில்…

 

அவனா விடுவான்? 

 

“சோ அப்படியா எழுதி இருக்கு?” என நக்கலாக வந்தன அவனின் வார்த்தைகள்.

 

அவனோ, வலியில் துடித்து பிடியில் இருந்து திமிற ஆரம்பித்து விட, வந்த கோபத்தில் துப்பாக்கியை எடுத்து அவனின் வாயிற்குள் வைத்து அழுத்தினான்.

 

அவனுக்கோ, அவனின் செயலில் வியர்த்துப் போக “டூ நாட் ஸ்மோக்…. டூ நாட் ஸ்மோக்” என்று

இரண்டு முறை உயிர் பயத்தில் வேகமாகவும் சத்தமாகவும் வாசித்து இருந்தான்.

 

“அப்போ நீ

என்ன பண்ணிட்டு இருக்க?” என்றவனின் தொணியில் அரண்டு போனவன் “சாரி சார் இனிமேல் இப்படி பண்ண மாட்டேன்” என்று மன்றாட ஆரம்பித்து விட்டான்.

 

அவனின்

கையில் இருந்த சிகரெட்டையும் லைட்டரையும் வாங்கிக் கொண்டவன் “மறுபடி உன்ன

சிகரெட்டோட பார்த்தேன்னா சாவடிச்சிடுவேன்” என்று

நாவினை மடித்து எச்சரித்தவன் அவன் புகைத்ததின் விளைவாக இருமிக் கொண்டு இருந்த அந்த

நிறை மாத கர்ப்பிணியியை பார்த்துப் புன்னகைத்தவன் அவனை விழி எடுக்காமல்

அதிர்ந்துப் போய் பார்த்துக் கொண்டிருந்த நரேனை அழைத்தான்.

 

தன் அருகில்

வந்தவனிடம் பணத்தைக் கொடுத்து “இந்த பொண்ணை அவங்க சொல்ற இடத்தில

விட்டுட்டு ஸ்ரெய்ட்டா ஸ்டேஷன் போய்டு” என்றவன் தன்

வேலை முடிந்தது என்பது போல வண்டியில் ஏறிக் கொண்டவன் அப்போது தான் தன் கரங்களில்

இருந்த சிகரெட்டையும் லைட்டரையும் பார்த்தவன் சலிப்பாக அருகில் இருந்த குப்பைத் தொட்யை நோக்கி எறிந்திருந்தான்.

 

வீசிய பின்னரே சடுதியில் ஏதோ ஞாபகம் வந்தவனாய் வேகமாக இறங்கி குப்பை தொட்டியில் தான் எறிந்த லைட்டரை எடுத்துப் பார்த்தவன் மூளையில் அப்போது தான் பொறி தட்டியது.

 

 

👁️ 516 Views
5 5 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
⚠️ இத்தளத்தின் உள்ளடக்கங்கள் DMCA
பாதுகாப்பில் உள்ளது. Copy / Screenshot / PDF
உருவாக்குதல் தடை செய்யப்பட்டுள்ளது.