Menu

இதயம் – 8

இதயம் – 8

அவன் சென்று விட்டான் என உறுதி செய்து கொண்டவள் மேலங்கியை அணிந்துக் கொண்டு அப்படியே தொப்பென இருக்கையில் அமர்ந்தாள்.

என்ன இருந்தாலும் அவன் தன்னை திறந்த மேனியாக பார்த்து இருப்பானோ? என்று என்னும் போதே உடலில் மெல்லிய நடுக்கம் பரவியது.

நான் பார்க்கும் போது அவன் இங்கு இருக்கவில்லையே!

எங்கு இருந்து வந்தான்? நான் உடையை கழற்றும் வரை என்ன செய்து கொண்டு இருந்தான்? என்ற கேள்விகள் அணிவகுத்தன.

 

நினைக்கும் போதே வந்த கோபத்தை பல்லைக் கடித்து சமன் செய்தவள் ட்ரெட் மில்லில் ஏறி ஓட ஆரம்பித்தாள் .

அவன்மேல் பெருகிய கட்டுக்கடங்கா கோபத்தை கட்டுப்படுத்தும் வழி அறியாமல் ட்ரெட் மில்லின் வேகத்தை மேலும் அதிகரித்ததவள் அதற்கேற்ப வேகமாக ஓடினாள்.

அறையைத் திறந்துக் கொண்டு நிதானமாக அவளைப் பார்த்தபடி வந்தவன் அவளின் அருகிலேயே இருந்த மற்றைய ட்ரெட் மில்லில் ஓட ஆரம்பிக்க, சட்டென அவனைப் பார்த்து முறைத்து விட்டு முன்னால் திரும்பியவள் “நான் ட்ரெஸ் சேஞ்ச் பண்ண போறேன்னு தெரியுதுல சோ வாயை திறந்து முதல்லயே சொல்லி இருக்க கூடாதா?” என்றவளின் வார்த்தைகளில் அனல் பறந்தது.

“நான் மார்னிங் ஒன் தர்ட்டில இருந்து ஜிம்ல தான் இருக்கேன் அண்ட் கொஞ்சமா தூங்கிட்டேன்” என்றவனை “அப்போ எப்படி கரெக்ட்டா நான் ட்ரெஸ் சேஞ்ச் பண்றப்போ வந்தீங்க?” என்ற அவளின் கேள்வியில் பல்லைக் கடித்தான்.

தன்னை கேடு கேட்டவன் போல அவள் சித்தரிப்பதை அவனால் கொஞ்சமும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

“ஏதோ சத்தம் கேட்டுச்சு சோ நான் எழுந்து வரும் போதே…” என்று எச்சிலைக் கூட்டி விழுங்கிக் கொண்டவன் பார்வை அவளில் படிந்து மீள, “என்ன எழுந்து வரும் போதே..?” என்று மேலும் அவள் கேட்க…

இதழ் குவித்து ஊதிக் கொண்டே அவளை சலிப்பாக பார்த்தவன் “இப்போ என்னடி ஆமா பார்த்துட்டேன் போதுமா?” என்றவன் இறங்கி தன் முகத்தில் வழிந்த வியர்வையை துடைக்க, “பொறுக்கி” என்றாள் சத்தமாக…

சட்டென அவளை உறுத்து விழித்தவன் “நான் பார்க்கணும்னு தானே இங்க வந்து ட்ரெஸ் சேஞ்ச் பண்ண?” என்றவனை அடக்கப்பட்ட சினத்துடன் வெறித்தவள் “நீங்க இங்க இருப்பீங்கனு தெரிஞ்சா நான் எதுக்காக இங்க ட்ரெஸ் சேஞ்ச் பண்ணனும்? என்று கோபமாக கத்தியவள் பொறுக்கி” என்றாள் மீண்டும்…

அவனுக்கோ பொறுமை எல்லையைக் கடந்து விட,

ட்ரெட் மில்லில் ஓடிக் கொண்டிருந்தவளின் இடையைப் பற்றி தூக்கியவன் பக்கவாட்டு சுவரோடு சரித்து அவளை அசைய விடாமல் சிறை செய்தவன் “என்னடி நானும் பார்த்திட்டு இருக்கேன் ஓவரா எகிறிட்டு இருக்க” என்றவனிடம் “லீவ் மீ ஷர்வீத்” என்றாள் குரல் நடுங்க…

“ஐ காண்ட் என்றவன் அவளின் கலங்கிய விழிகளை பார்த்துக் கொண்டே நான் எதையும் பார்த்துற கூடாதுனு தான் உன்ன கூப்ட்டேன் தட்ஸ் ஆல் என்றவன் அவளின் விழிகளை ஆழ்ந்துப் பார்த்துக் கொண்டே சோ நான் பொறுக்கியா?” என்று நிறுத்தி நிதானமாகக் கேட்டான்.

அவனது தோரணையிலேயே அவன் எவ்வளவு கோபமாக இருக்கின்றான் என்று அவளால் உணர்ந்துக் கொள்ள முடிந்தது.

ஆனால் அவள் உணர்ந்து கொண்டு என்ன பயன்?

அவளும் அவனுக்கு சளைத்தவள் அல்லவே!

புருவங்கள் உயர, “நான் பொறுக்கினு தான் சொல்லுவேன் என்றவள் அவனின் சிவந்த விழிகளை பார்த்துக் கொண்டே ‘பொறுக்கி… பொறுக்கி… பொறுக்கி…’ ” என்று இடைவிடாது கூவியவளின் இதழ்கள் அவன் வசமாகி இருந்தன.

 

இருவருக்குமான முதல் இதழ் முத்தம்.

இதனை சற்றும் அவனிடமிருந்து எதிர் பாராதவள் அவனிடம் இருந்து திமிறி விடுபட போராட, அவனா விடுவான்? முதலில் சாதாரணமாக அவளின் இதழ்களை சிறை செய்தவன் அதிலேயே அமிழ்ந்து விடுவது போல கவ்வி சுவைக்க ஆரம்பித்தவன் அவளின் கண்ணீரின் சுவை உணர்ந்தே அவளில் இருந்து மின்னல் வேகத்தில் பிரிந்தான்.

அவளின் வெறித்த பார்வையில் தான் செய்த பிழையை உணர்ந்து கொண்டவன் கேசத்தை கோதியவாறு “சாரி” என்ற மறு நொடி அவனின் கன்னத்தில் ஓங்கி அறைந்து இருந்தாள் அவள்.

விழிகளை அழுந்த மூடித் திறந்தவன் பதில் எதுவும் சொல்லாமல் மேலும் இங்கு நின்றால் அவள் பேசும் பேச்சுக்கு அடித்து விடுவோமோ? என்ற அச்சம் கொண்டவன் கண்டு கொள்ளாமல் திரும்பி நடக்க, “இதுக்கு பெயர் தான் பொறுக்கி தனம்” என்றாள் பற்களை கடித்த படி…

அவனின் கை முஷ்டிகள் இறுகி விட்டன.

“ ஷிட்… அருவெறுப்பா இருக்கு என்று சொல்லிக் கொண்டே இதழ்களை புறங் கையால் துடைத்தவளை அழுத்தமாக பார்த்தவன் “இன்ட்ரஸ்டிங்… என்று சொல்லிக் கொண்டே மீண்டும் அவளை நெருங்கி வந்தவனை பார்த்து நடுங்கிப் போனவள் சுவற்றோடு ஒன்றி நிற்க, அவளை மீண்டும் நெருங்கியவன் என் பொண்டாட்டியாக போறவளை நான் கிஸ் பண்ணி இருக்கேன் இட்ஸ் நாட் ராங் பட் உனக்கு அதுவே அருவெறுப்பா இருக்குமா இருந்தால் சோ சாட் என்றவன் பாக்கெட்டில் இருந்த பப்பிள் கம்மை வாய்க்குள் போட்டு மென்ற படி இன்னொரு தடவை என்னை பொறுக்கினு இந்த லிப்ஸ் என்று அவளது இதழ்களை மென்மையாக வருடியவன் சொன்னால்?…” என்றவன் பார்வை அவளின் இதழ்களை ஊடுருவிய படி பார்க்க, மீண்டும் ‘பொறுக்கி’ என்று அவனைப் பேசத் துடித்த தன் நாவினை கடினப்பட்டு அடக்கியவள் அவன் கைகளை பட்டென தட்டி விட்டாள்.

புருவத்தை வருடிக் கொண்டே, “ஆல்ரைட், என்னை மேரேஜ் பண்ணிக்க ஓகே தானே?” என்று கேட்டவனை கேலியாக பார்த்து சிரித்தவள் “முடியாதுனு சொன்னால் என்ன பண்ணுவீங்க ஷர்வீத்?” என்று கேட்டாள்.

அவளின் கேலியில் சத்தமாக சிரித்தவன் “ ஐ டோண்ட் மைண்ட்” என்று தோள்களை குலுக்கி விட்டு திரும்பி நடந்தான்.

 

திரும்பி நடந்தவன் இதழ்களோ, புன்னகையில் விரிந்தன.

‘என்ன கொஞ்சம் கூட டென்ஷன் ஆகாமல் போறான்?’ என்று மனதுக்குள் கறுவிக் கொண்டவளுக்கு அப்போது தான் அவளின் நினைவடுக்கிலேயே அவன் தானே தன்னுடைய கார்டியன் என்ற நினைவு இப்போது வந்துத் தொலைக்க, நொடியில் அனைத்தையும் மறந்தவளாய் ஓடி சென்று அவன் முன்னால் நின்று மூச்சு வாங்கினாள்.

“ஹி ஹி ஹி… நான் சும்மா விளையாட்டுக்கு அடிச்சிட்டேன் மாமா என்று பற்கள் தெரிய புன்னகைத்தவள் நீங்க வேணும்னா என்னை அறைஞ்சிக்கோங்களே” என்று தன் வலக் கன்னத்தை அவனிடம் காட்ட, இதழ் கடித்து சிரிப்பை அடக்கிக் கொண்டே பார்த்தவன் “நான் எதுக்காக அறையனும்? உன் விருப்பமே இல்லாமல் உன் புருஷனே அத்து மீறினால் கூட நீ அடிக்கிறதுல தப்பே இல்லை” என்றான்.

‘ கேப் கிடைச்சா புருஷன் புருஷன்னு சொல்லி மைண்ட்ல ரெஜிஸ்டர் பண்ணிட்டே இருக்கான்’ என்றவள் மனம் எச்சரிக்க, அவனை ஆழ்ந்து பார்த்தவள் “ஓஹோ! அப்போ தப்பே இல்லன்னு சொன்னீங்களே ஷர்வீவீவீத் என்று சொல்ல வந்தவள் இழுவையாக மாமா” என்றாள்.

‘சரியான டிராமா குய்ன்’ என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டவன் “நான் பொண்டாட்டிய கிஸ் பண்றது தப்பு இல்லனு சொன்னேன் பட் உன் விருப்பம் இல்லாமல் நான் கிஸ் பண்ணது தப்பு இல்லைனு சொல்லவே இல்லையே என்று நன்றாக அவளைக் குழப்பி விட்டவன் அவளின் திகைத்த முகத்தை திருப்பி அவள் உடை மாற்றிய இடத்தை பார்க்கச் செய்தவன், அவளின் காதின் அருகே குனிந்து பேபி, இனிமேல் அந்த மிரர்கிட்ட ட்ரெஸ் சேஞ்ச் பண்ணாத” என்று சொல்லி விட்டு சன்னமாக விசில் அடித்த படி அவனின் அறைக்குள் நுழைந்து இருந்தான்.

 

விழிகள் விரிய அதிர்ந்து போனவள் “யூ… பொறுக்கி… ஹையோ… ஷர்வீவீவீத்” என்று அறையதிர கத்தியவளின் குரலைக் கேட்டுக் கொண்டே தன் அறையில் புன்னகைத் தவிழ ஆளுயரக் கண்ணாடியின் முன் நின்று இதழ்களை வருடிக் கொண்டவனுக்கு அவளை விரைவில் தன்னவளாக்க வேண்டும் என்ற எண்ணம் நொடிக்கு நொடி அதிகரித்தது.

அதனைத் தொடர்ந்து தன்னை சுத்தப் படுத்திக் கொண்டு காக்கி சீருடையுடன் கீழிறங்கி வந்து சோஃபாவில் அமர்ந்துக் கொண்டவனை “ஷர்வா, புளிக்குழம்பு வச்சு இருக்கேன் சாப்பிட்டு போடா” என்று பூர்ணிமா சமையலறைக்குள் இருந்து குரல் கொடுக்க, அவனது விழிகளோ ஆதிராவைத் தான் தேடின.

 இட்லியை எடுத்துக் கொண்டு வந்து மேசையில் வைத்த பூர்ணிமா “அவ முதல்லயே சாப்பிட்டா. நீ வந்து சாப்பிடு” என்றிட…

சட்டென திரும்பி அவரைப் பார்த்து முறைக்க முயன்று தோற்றவன் புன்னகைத்த படி எழுந்து வந்து டைனிங் டேபிளில் அமர்ந்தான்.

பூர்ணிமாவும் அவனோடு அமர்ந்து சாப்பிட ஆரம்பித்த படி “என் பொண்ணு என்ன சொல்றா ஓவரா பண்றாளா?”

“பண்ணலைனா தான் அதிசயம் என்று சொல்லிக் கொண்டே இடக் கையில் அலைபேசியை ஆராய்ந்துக் கொண்டே என்னை அப்பாயின்ட் பண்ண முதல் இன்சார்ஜ்ல இருந்த ஏஎஸ்பி யார்?” என்றவன் கேள்வியில் நிமிர்ந்த பூர்ணிமா “ ஜெயராம். ஹி இஸ் அ பென்ஷனர்” என்று சொல்ல…

“வாட்? பென்ஷனரா? ஷிட்” என்று சொல்லிக் கொண்டவன் தனக்கு போதும் என்பதைப் போல பாதி உணவில் எழுந்துக் கொள்ள “டேய், எதுக்குடா இவ்வளவு கோபப்படுற?”

“பின்ன கோபம் வராதா வயசு போன ஆள்ன்னு பார்க்குறேன் இல்லனா” என்றவன் கை முஷ்டிகள் இறுகின.

“ஜெயராம், உனக்கு என்னடா பண்ணார்?” என்று புரியாமல் கேட்ட பூர்ணிமாவை முறைத்தவன் “ஹலோ டிஜிபி மேடம், உங்களுக்கு தெரியுமா டூ வீக்ஸ் ஆஹ் ஒரு பொண்ணு காணாமல் போய் அத கண்டு பிடிக்காமலேயே ஃபைலை க்ளோஸ் பண்ணி இருக்கான் அந்த ஆளு. அந்த பொண்ணோட பேரெண்ட்ஸ் கூட ஆக்சிடென்ட்ல இறந்து போயிட்டாங்க அதுக்கு கூட ஆக்ஷன் எடுக்கல என்றவன் சீற்றத்தில் கையால் மேசையில் ஓங்கித் தட்ட, “ஷர்வா?” என்று அதிர்ந்து போய் கத்தி இருந்தார் பூர்ணிமா.

 

அப்போது தான் அவன் செய்த செயலை உணர்ந்து “சாரி” என்றான்.

“எனக்கு இந்த விஷயம் எதுவுமே வரல. அந்த பொண்ணை கண்டு பிடிச்சு கொடுத்துட்டதா ஜெயராம் ஃபைலை க்ளோஸ் பண்ண போறதா இன்பார்ம் பண்ணார் சோ எனக்கு எதுவும் தெரியாது டா. ஹி இஸ் அ சின்சியர் ஆபீசர் சோ எனக்கும் சந்தேகம் வரல” என்றவரை நோக்கி “எனக்கு இதுல பெரிய டவுட் இருக்கு சோ எனக்கு அந்த கேசை ரீஓபன் பண்ண பெர்மிஷன் வேணும்” என்றானே பார்க்கலாம்.

“டேய்… இப்போ இறந்த பொண்ணு கேஸே இழுத்தடிக்குது. ஆல்ரெடி மீடியா, சிஎம்ன்னு ஏகப்பட்ட பிரஷர். இதுல இழுத்து மூடுன கேஸை ரீஓபன் பண்ணி இன்னும் பிரஷரை கூட்டிடாத ஷர்வா” என்று பூர்ணிமா சொன்னது தான் தாமதம் அவனுக்கோ, தன் அக்காவா இப்படி பேசுகின்றார் என்ற அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றவன் “நீ உண்மையாவே போலீஸ் தானா?” என்று கேட்டே விட்டான்.

“ஷர்வா… முதல்ல இந்த கேஸை க்ளியர் பண்ணு. பிறகு அதை பார்க்கலாம்” என்றிட, “எதுக்கு நாளைக்கு அந்த பொண்ணும் பிணமா எரிஞ்சு கிடக்கவா?” என்று அந்த அறை அதிரக் கர்ஜித்தான்.

விழிகளை மூடித் திறந்தவர் “வெல், நீ இப்போ போயிட்டு இருக்க கேஸை சீக்கிரம் முடிச்சிடுவனு தெரியும் அண்ட் நீ அந்த கேஸை ரீ ஓபன் பண்ணு பட் அது சீக்ரெட் ஆஹ் இருக்கட்டும். இல்லைனா என்னால மீடியா கொடுக்குற பிரஷரை சமாளிக்க முடியாது” என்று சொல்லிக் கொண்டே அவனை அமர வைத்து தட்டில் இருக்கும் இட்லியை பிசைந்து ஊட்ட ஆரம்பித்தார்.

“தேங்க்ஸ்… பட் இனிமேல் இப்படி இர்ரெஸ்போன்சிபலா இருக்காதீங்க மேடம். எனக்கு செம்ம கோபம் வருது ” என்றிட, “டேய், என் பொசிஷன்ல வந்து அந்த சீட்ல உட்காந்து பார்டா. அப்புறமா புரியும் நான் ஏன் இப்படி பேசுறேன்னு” என்றவர் பார்வை படிகளில் அவசரமாக கீழிறங்கி வந்துக் கொண்டு

இருந்த ஆதிராவின் மேல் படிந்தது.

👁️ 329 Views
5 5 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
⚠️ இத்தளத்தின் உள்ளடக்கங்கள் DMCA
பாதுகாப்பில் உள்ளது. Copy / Screenshot / PDF
உருவாக்குதல் தடை செய்யப்பட்டுள்ளது.