நொடி – 20
எப்படி எல்லாம் ஆசைப்பட்ட வாழ்க்கை.
இப்போது அனைத்தும் தலைக் கீழாக மாறி போயிற்றே!
அவ் அறையை விட்டு வெளியில் வந்தவளுக்கு நெஞ்சே வெடித்து விடுமளவுக்கு அழுத்தம் அழுத்தம் அழுத்தம் மட்டுமே…
வலக் கரம் உயர்த்தி இடது மார்பை நீவி விட்ட படி விழிகள் மூடி பக்கவாட்டு சுவற்றோடு ஒன்றி நின்று கொண்டாள்.
இந்நிலையில் அதுவும் இந்நேரத்தில் தான் அன்னையின் பார்வையிலோ அல்லது அத்தையின் பார்வையிலோ பட்டு விட்டால்? என்ற பதட்டம் தொற்றிக் கொள்ள, பட்டென விழிகளை திறந்து சுற்றிலும் விழிகளால் சுற்று புறத்தை அலசினாள்.
வீடே இருள் சூழ்ந்து இருந்தது.
என்னவோ இனம் புரிய பயம் நெஞ்சைக் கவ்வியது.
மீண்டுக் அறைக்குள் போய்விடலாமா? என்று எண்ணியவளுக்கு அடுத்த கணமே அவனின் இதயத்தை குத்திக் கிழிக்கும் சொல் அம்புகள் ஞாபகத்துக்கு வந்து தொலைக்க, ஒன்றும் செய்வதறியாது அப்படியே சுவரோடு சுவராக சாய்ந்தவாறே நிலத்தில் மடிந்து அமர்ந்து விட்டாள் பேதை.
‘இதயமே வெடித்து விடாதே!’ என தனக்குள் சொல்லிக் கொண்டவளின் இதழ்களோ ஏகத்தும் நடுங்கிக் கொண்டிருந்தன.
இதில், ஒரு குண்டூசி வீழ்ந்தால் கூட சத்தம் கேட்கும் அளவுக்கு வீடே நிசப்தமாக இருந்தது.
சுற்றிலும் சூழ்ந்திருந்த இருளும், உயிருக்கும் மேலாக காதலித்தவன் தந்த வலியும் அவளை நொடிக்கு நொடி பலவீனமாக்குவதை தெள்ளத் தெளிவாக உணர்ந்து கொண்டிருந்தாள்.
மேனி வேறு முற்றிலுமாக வியர்வையில் குளித்து விட்டிருந்தது.
“நோ… யாழிசை… யூ…யூ கேன் அப்படியே கண்ணை மூடிக்கோ” என இதழ்களில் நடுக்கத்துடன் தனக்கு தானே சொல்லிக் கொண்டே சுவரோடு சாய்ந்தவாறே விழிகளை மூடிக் கொண்டவர்களுக்கு தொண்டைக் குழி ஏறி இறங்கியது.
அவன் காட்டிய வெறுப்பும் ஒதுக்கமும் அவளின் வேதனையை அதிகரித்ததோடு மட்டுமல்லாது மனதில் ஒருவித வெறுமையை உருவாக்கியிருந்தது.
” நம்ம உணர்வுகள் எவ்ளோ தூரத்தில இருந்தாலும் உங்களை எனக்கும் என்னை உங்களுக்கும் உணர வச்சிட்டு தானே இருந்துச்சு ஜிதன் பட் இப்போ நா…நான் உங்க மேல வச்ச அந்த காதலை கொ…கொஞ்சம் கூட உங்களால உணர முடியலையா ஜிதன்?” என இதழ்கள் நடுங்க சொல்லிக் கொண்டவள் விழிகள் எப்போதும் போல கண்ணீர் சுரந்து கொண்டே இருந்தது.
” என்.. என்னால முடியல ஜிதன்.. இந். இந்த வலியை என்னால தாங்க முடியல.. ப்..பிளீஸ் என்கிட்ட பழைய ஜிதனாவே வந்துடுங்க” என தனிமையில் புத்தி பேதலித்தவள் போல் அநாதரவான நிலையில் பிதற்றிக் கொண்டு இருந்தவளுக்கு தூக்கம் தூர போனது.
**********
பனித்துளிகள் மலர்களின் இதழ்களில் ஒட்டிக் கொண்டு,
விடியலின் ஒளியில் மின்னத் தயாராகி நின்ற அந்த அதிகாலை பொழுதில் எப்போதும் போல தூக்கம் களைந்து எழுந்தவனின் தலையோ சம்மட்டியால் அடித்ததை போல விண் விண்ணென்று வலிக்க ஆரம்பித்திருந்தது.
நெற்றியை அழுத்தி விட்ட படி எழுந்தவனுக்கு இரவில் என்ன நடந்தது என்பது கூட சிறிதும் பிசிறின்றி எண்ண ஓட்டத்தில் வந்து போக, சட்டென்று எழுந்து சென்று அறைக் கதவினை திறந்து வெளியில் விழிகளை சுழல விட்டவனுக்கு அதிர்ச்சியில் கண்கள் அகல விரிந்து கொண்டன.
அது மட்டுமா என்ன?
அவளின் நிலை கண்டு கண்மண் தெரியாத ஆத்திரம் சுள்ளென்று உச்சிக்கு ஏறியது.
” இவள…” என இதழ்களுக்குள் சொல்லிக் கொண்டே நிலத்தில் படுத்து இருந்தவள் முன் நின்று “ஏய்” என்றான் குரலில் கடினத்தை தேக்கி,
இரவு முழுதும் உறக்கமின்றி தவித்தவள் சற்று முன் தான் கண்ணயர்ந்து இருப்பாள்.
ஆனால், அதற்குள் அந்த கடவுளுக்கே பொறுக்க வில்லை போலும்,
அவனது குரல் உயர்ந்து ஒலிக்க, உடல் தூக்கி போட பட்டென்று விழிகளை திறந்தவளுக்கு தன் முன் நின்று தன்னை எரித்து விடுவதை போல் பார்த்துக் கொண்டிருந்தவனை பார்த்ததும் இதயமோ தாளம் தப்பி துடிக்க ஆரம்பித்து விட்டது.
சுவற்றை பற்றி மெல்ல எழுந்து நின்றாள்.
பதிலுக்கு அவனிடம் பேச கூட வார்த்தைகளும் வர வில்லை.
“என்ன வெளில படுத்து சீன் கிரியேட் பண்றியா?” என்று கேட்டானே பார்க்கலாம்.
அந் நொடி இரவில், அவளை நாயை துரத்துவது போல துரத்தி விட்டதை வசதியாக மறந்து விட்டான் போலும்,
இனியும் பதில் கூறா விட்டால் அவன் உமிழும் வார்த்தைகளால் மடிந்து போவாய் மனமே! என விம்மி தவித்த மனதினை உணர்ந்து “உ..உங்க ரூம்ல நான் எப்படி?” என வார்த்தைகளை கோர்க்க முடியாது திணறியவள் அவனது பார்வையின் வீச்சு தாளாமல் “ப… ப…பயமா இருந்துச்சு அது தான் இங்கயே…” என்றவளிடம்,
“லண்டன் போய் தனியா மேனேஜ் பண்ணிட்டு வந்திருக்க உனக்கு பயமா? நைஸ் ஜோக்…” என ஏளனமாக இதழ் பிரித்து புன்னகைத்தவனை அடிப்பட்ட பார்வை பார்த்தவள்,
“எனக்கு தனியா எப்படி மேனேஜ் பண்ணனும்னு கத்து கொடுத்ததே நீங்க தான் ஜிதன்” என்று விட்டாள் சட்டென்று,
“வாட் கம் அகைன்?” என்றான் நிலைக் குத்திய பார்வையுடன்,
சொல்லி விட்ட பின்பு தான் உயிர் பதற விழி விரித்து நின்றவள் “ஒன்னுமில்ல ஜிதன். சாரி இனிமேல் இங்க தூங்க மாட்டேன்” என வேகமாக சொன்னவள் அவனைத் தாண்டி மாடிப் படிகளில் இறங்க எத்தனிக்க,
” சொல்லிட்டு போ” என்ற படி அவளின் கரத்தை பற்றி இழுத்து சுவரோடு நிற்க வைத்தவன் அவளை நகர விடாது இரு புறமும் சுவரில் கைக்குற்றி நின்றான்.
அவனது கண நேர செயலில் விதிர்விதித்து போனாள் பெண்.
” என்னவோ சொன்னல ம்ம்… டெல் மீ ரைட் நவ்” என்றவனின் தோரணையில், அவளுக்கோ மூச்சே அடைத்து விட்டது.
” என்.. என்ன சொன்னேன்?” என்று அவனிடமே திருப்பி கேட்டவளின் கண்கள் கலங்கி போக, அவளை உறுத்து விழித்த படி நெருங்கி நின்றவன் என்ன நினைத்தானோ சட்டென்று விலகி, “போ” என்றான்.
அவ்வளவு தான். அதற்கு மேல் அங்கு நிற்க அவளுக்கு பைத்தியமா என்ன?
வேகமாக படிகளில் இறங்கி சென்று சமையலறைக்குள் சென்று மறைந்து கொண்டாள்.
போகும் அவளின் முதுகை வெறித்து நின்றவன் இதழ்களில் ஓர் கேலி புன்னகை.
திமிரும் ஆணவமும் அவனது மதியை மறைத்து இருக்க, அது முற்றிலும் அவன் சிந்தையை விட்டு அகலும் தருவாயில் அவன் நிலை என்னவாகும்? என்பதை எண்ணி அந்த விதியே அவனை எள்ளி நகையாடியது.
அதே சமயம், சமையலறைக்குள் ஓடி வந்த வேகத்தில் சுவரோடு சாய்ந்து நின்றவளுக்கு மூச்சு வாங்கியது.
அருகிலிருந்த நீர் போத்தலை திறந்து வாய்க்குள் சரித்தாள்.
“இசை என்னமா இவ்வளவு சீக்கிரமா எழுந்திட்ட கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கோ மா” என்ற படி சமையலறைக்குள் பால் பத்திரத்துடன் உள்ளே நுழைந்த ஷீலா கேட்டு விட,
சட்டென்று கேட்ட குரலில் திடுக்கிட்டு திரும்பியவள், ஓர் ஆசுவாச பெரு மூச்சுடன் “தூக்கம் வரல அத்தை”
தலை முடி களைந்து வாடிய தோற்றத்தில் நின்றிருந்தவளை அப்போது தான் கவனித்தவராக “என்னடா மா ஒரு மாதிரி இருக்க? உடம்புக்கு ஏதாவது பண்ணுதா?” என ஒருவித பரிதவிப்புடன் கேட்க,
அவளுக்கோ ஐயோடா என்றிருந்தது.
“அதெல்லாம் ஒன்னும் இல்ல. ஐ அம் ஓகே அத்தை” என்றவள் அவன் கிளம்பி செல்லும் வரை பக்கத்து அறையிலாவது அடைந்து கொள்வோம் என செல்லப் போனவள் நின்று நிதானித்து ” நான் ஃப்ரெஷ் ஆகிட்டு வரேன் அத்தை” என்று விட்டு விறு விறுவென மாடிப் படிகளில் ஏறினாள்.
என்னவோ சரி இல்லை என்று தோன்றியது. ஆனால் அடுத்த கணமே தன் எண்ணம் குறித்து திடுக்கிட்ட ஷீலா, எல்லாமே சரியாகிவிட வேண்டும் என மனதோடு பிரார்த்தனை செய்து கொண்டே ஒரு பெரு மூச்சுடன் வேலைகளை செய்ய ஆரம்பித்து இருந்தார்.
இங்கோ, ஆள்உயரக் கண்ணாடியின் முன் நின்று போட்டிருந்த கருப்பு நிற கோர்ட்டை சரி செய்த படி கேசத்தை ஜெல் வைத்து அடக்கியவன் தன் பிம்பத்தையே ஆழ்ந்து பார்த்து கொண்டு நின்று இருந்தான்.
எண்ண ஓட்டங்கள் எங்கெங்கோ தறிகெட்டு ஓட, நொடியில் அதிலிருந்து தன்னை மீட்டுக் கொண்டவன் முகத்தில் மீண்டும் கர்வம் வந்து ஒட்டிக் கொண்டிருந்தது.
பாக்கெட்டிலிருந்து அலைபேசியை எடுத்து தனது பீ ஏ விற்கு அழைப்பை எடுத்தான். மறு முனையில் அழைப்போ, ஒரே ரிங்கில் ஏற்கப்பட்டது.
“குணால், இம்மீடியேட்லி அரேஞ்ச் த மீட்டிங்” என்றவன் தொடர்ந்து பிறப்பித்த கட்டளைகளில் எதிர் முனையில் கேட்டுக் கொண்டிருந்த குணாலின் நிலை தான் படு மோசமாகி போனது.
“குணால் ஆர் யூ தேர்?”
“எஸ் சார்”
“ஓகே” என மேலும் பேச்சை தொடர்ந்தவன் ” அம்மாமாமா…” என்ற யாழிசையின் அலறல் சத்தத்தில் “ஐ
வில் கால் யூ பேக்” என்ற படி அழைப்பை துண்டித்து விட்டு மின்னல் வேகத்தில் அறைக் கதவை திறந்து கொண்டு வெளியேறியிருந்தான்.
