Menu

நொடி – 5

“காதல் சொன்ன கணமே

அது கடவுளைக் கண்ட கணமே

காற்றாய் பறக்குது மனமே ஓ

ஓ ஓ…” எனத் துள்ளி குதித்து பாடிய படி வந்தவளோ திறந்திருந்த அவனின் கேபினை பார்த்தாள்.

 

அவளுக்கோ, இவ்வளவு நேரமும் இருந்த துள்ளல் மனநிலை போய் இப்போதோ பதட்டம்  வந்து தொற்றிக் கொண்டது.

 

பற்களால் நகத்தை கடித்து துப்பிய படி கதவின் அருகே நின்றவளுக்கு இதயம் படபடத்துக் கொண்டு இருக்க, ‘அச்சோ என்ன சொல்ல போறார்னு தெரியலையே’ என்று இதழ்களுக்குள் முணுமுணுத்த படி மெல்ல தன் தலையை மட்டும் உள்ளே விட்டு எட்டி பார்த்தாள்.

 

அந்தோ பரிதாபம் அங்கோ வெற்று இருக்கை தான் இருந்தது.

 

சுற்றிலும் விழிகளை சுழல விட்டாள்.

 

ம்ஹும் அவனைக் காணாது இதழ்களை சுளித்தவள் கொஞ்சம் நகர்ந்து மீண்டும் பார்வையால் அவனை தேட, அவள் துள்ளிக் குளித்து ஆடிக் கொண்டு வரும் போதே அவளை ஜிதன் கண்டு விட்டான்.

 

இதழ் குவித்து ஊதிக் கொண்டவன், அவளை நெருங்கி வரும் முன்னரே அவள் தனது கேபின் முன் நின்று வெளியில் இருந்து கொண்டே உள்ளே எட்டிப் பார்த்துக் கொண்டிருப்பதை கண்டவனுக்கு இதழ்கள் புன்னகையில் தாராளமாக விரிந்து கொண்டன.

 

மெல்ல சத்தம் எழுப்பாது அவள் பின் வந்து நின்றவன், குரலை செரும,

 

அவளுக்கு  எங்கே அதெல்லாம் கேட்டது?

 

அவனைத் தேடுவதில் தீவிரமாக நின்றிருந்தாள் பெண்.

 

கேசத்தை கோதிக் கொண்டே மார்புக்கு குறுக்கே கைகளை கட்டிக் கொண்டே பக்கத்திலிருந்த தூணில் சாய்ந்து நின்றவன், “உள்ள என்ன தேடுறீங்க மேடம்?” என்றான் அமர்த்தலாக,

 

திடீரென கேட்ட அவளின் ஜிதனின் குரலில், விழிகள் இரண்டும் அதிர்ந்து விரிய பின்னால் திரும்பியவள் அவன் நின்றிருந்த தோரணையை ரசனையாக பார்த்துக் கொண்டே “என்னை வர சொன்னீங்களே… என்று சொன்னவள் ஒரு நொடி அமைதிக்கு பின்னர் சார்” என்றிருந்தாள்.

 

அவளையே கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தவன் இதழ்களில் தோன்றிய புன்னகையை அவளறியாமல் அழுத்தமான தன் இதழ்களுக்குள் மறைத்துக் கொண்டு 

“கம் இன்” என்று சொன்னவனோ கேபினிற்குள் நுழைந்து கொள்ள,

 

‘கொஞ்சம் சிரிச்சா தான் என்னவாம்’ மனதில் செல்லமாக கடிந்து கொண்டே அவன் பின்னோடு உள்ளே நுழைந்தாள். 

 

உள்ளே நுழைந்ததும் அவளது தண்ணீர் பாட்டிலில் வீசிய அவனது பிரத்தியேக பெர்ஃப்யூம் மணம் மூக்கைத் துளைத்தது. 

 

‘ ப்பாஹ் ஆள் மட்டும் இல்ல பெர்ஃப்யூம் கூட கட்டி இழுக்குது ‘ என மனதில் மதி மயங்கி பேசிக் கொண்டு இருந்தவள் “யாழிசை” என்ற அவனது அழுத்தமான அழைப்பில் தான் சுயம் அடைந்து திருதிருவென விழித்தாள். 

 

அவனது பார்வையோ ஒரு முறை சுற்றத்தை அலசி ஆராய்ந்து விட்டு இப்போது அவளில் வந்து தேங்க, அவளோ, அவனை ஆர்வமாக பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள்.

 

அவனுக்கு தன் காதல் தெரியாது என்றால் தானே பதட்டம் அடைய, அது தான் தெரிந்து விட்டதே என்ற நிதர்சனம் உரைக்க அவளுக்கு அவன் எதிரில் நிற்கவும் பேசவும் தயக்கமோ பயமோ எதுவும் இல்லாமல் இருந்தது என்னவோ உண்மை தான்.

 

அவளை ஒரு பெரு மூச்சுடன் பார்த்து விட்டு மேசையில் தன் முன்னிருந்த பேப்பர் வெயிட்டை சுழற்றிய படி அவளில் மீண்டும் பார்வையை பதித்தவன், “ஐ அட்மிட் இட். இந்த வயசுல வர்ற அட்ராக்ஷன், உனக்கு என்மேல வந்திருக்கலாம் சோ இது வரை நீ பண்ணதெல்லாம் மறந்துடுறேன் அண்ட் குட் ஸ்டூடன்ட்டா என அந்த வார்த்தைக்கு அழுத்தம் கொடுத்து கூறியவன் ஃபைனல் எக்சாம்ஸ்ல கான்ஸ்சென்ரேட் பண்ணு” என்க,

 

“இட்ஸ் நாட் ஜஸ்ட் அன் அட்ராக்ஷன் ஜிதன்”  என்றவள் அவனின் அழுத்தமான பார்வையில் சட்டென “சா… சார்” என்றவளின் வார்த்தை திணறி ஒலித்தது.

 

“இட்ஸ் ஓவர்” என்று இருக்கையை விட்டு எழுந்தவனுக்கு ஆத்திரம் தான் வந்தது.

 

இன்னும் சிறிது நேரம் அவள் நின்றாளே தான்  அவளிடம் காதலைக் கூறி விடுவோமோ என்று பயந்து போனவன் தன் நிலையை நினைத்து அரவே வெறுத்து போனான்.

 

“டுமோரோ உன் பேரன்ட்டை மீட் பண்ணி பேசிக்கிறேன். நவ் யூ மே லீவ்” என்றான் இறுகிய குரலில்,

 

“குட் டிசிஷன். எனக்கு அப்பா இல்ல. அம்மா மட்டும் தான். அவங்களுக்கு நம்ம கதையை சொல்லி தான் வச்சிருக்கேன். என்னை விட அவங்களுக்கு உங்களை ரொம்ப பிடிக்கும்” என்று கண்களை சிமிட்டியவளை இப்போது அவன் தான் அதிர்ந்து பார்த்தான்.

 

” அச்சோ ரொம்ப ஷாக் ஆக வேணா,  டுமோரோ அம்மா கூட வரேன்” என்று  சொல்லி விட்டு திரும்பியவளை “வெயிட் அ செக்” என்றவன் குரலில் அவளின் நடையோ தடை பட,

 

அவளின் முதுகை வெறித்துக் கொண்டே “உனக்கு பேரன்ட்னு சொல்லிக்க ஒருத்தர் இருக்காங்க பட் எனக்கு யாரும் இல்ல” என ஆழ்ந்த குரலில் சொன்னவனை தான் சட்டென திரும்பி பார்த்தாள்.

 

அவள் என்பதாலோ என்னவோ யாரிடமும் கலங்காதவன் முதன் முறையாக அவனவள் முன்னிலையில் கலங்கி நின்றான்.

 

அவனது கலங்கிய தோற்றத்தை கண்டவள் மனம் தாழ மாட்டாமல் வலிக்க ” நோ ஜிதன் உங்களுக்கு நான் இருக்கேன்… நான் இருக்கேன் அம்மு” என்றாள் பரிதவித்து போனவளாய்,

 

அவளின்  வார்த்தைகளில் அவள் வசம் மடிசாய துடித்த தனது உணர்வுகளைக் கட்டுக்குள் கொண்டு வந்தவன் “இதுக்கு மேல நான் பொறுமையா சொல்லிட்டு இருக்க மாட்டேன் யாழிசை. போனா போகுதேனு வார்ன் பண்ணேன் பட் உன் லிமிட் க்ராஸ் பண்ணனா நான் இந்த காலேஜ் விட்டு போய்டுவேன் மைண்ட் இட்” என்று சீறியவனுக்கு அவளிடம் இப்படி பேசிய தன்னை நினைத்தே மேலும் வெறுப்பு மேலிட்டது.

 

அவளுக்கோ சட்டென கண்கள் குளம் கட்டிவிட ” ஜி…” என அவனின் பெயரை உச்சரிக்க வந்த தன்னை நொந்தவள் குரலை செருமிக் கொண்டே “சாரி… சார் எனக்கு ஒண்ணு மட்டும் தெரிஞ்சுக்கணும். நீங்க என்னை ரிஜெக்ட் பண்ண ரீசன்?” என கேள்வியாக கேட்டவளுக்கு எங்கே தன்னை விட்டு வேறெங்கும் சென்று விடுவானோ என்ற பயம் தான் ஆட்கொண்டது.

 

அவன் இல்லாமல் தான் எப்படி? 

 

தூர இருந்து ரசித்து கொண்டு சரி இருந்து விடலாம் என்று நினைத்தவள் வார்த்தைகளை கவனமாக கோர்க்க முயன்றாள்.

 

கண நேர அமைதிக்கு பின் “அது தெரிஞ்சிட்டு நீ என்ன பண்ண போற?”

 

” ஹான், சோக கீதம் வாசிக்க போறேன்” என்று பல்லைக் கடித்தவள் ” நான் என் அம்மாவை நாளைக்கு கூட்டிட்டு வர மாட்டேன். என்கிட்ட பேசின போல அவங்க மனசை உடைச்சாலும் உடைச்சிடுவீங்க” என்று இதழ்களை சுளித்து பிதுக்கியவள் “நீங்க சொன்ன போல நான் உங்களை எந்த தொந்தரவும் பண்ண மாட்டேன். என் காதல் உண்மை. அது எனக்கு கிடைக்குமா இருந்தால் கண்டிப்பா நீங்க எனக்கு கிடைப்பீங்க” என்று சொன்னவளோ அவனின் பதிலையும் எதிர் பார்க்காது சென்றிருந்தாள். 

 

அதனைத் தொடர்ந்து அவள் செமினார் ஹாலுக்குள் நுழையும் போதே “என்ன பழைய பல்லவியா?” என நயா கேட்க,

 

அவளுக்கு பதில் சொல்லும் நிலையில் எல்லாம் அவள் இல்லை.

 

உண்மையை சொல்ல போனாள் அவள் என்ன கேட்டாள் என்று அவளிடம் கேட்டால் அது அவளுக்கே தெரியாத நிலை தான்.

 

அவன் காலேஜ் ஐ விட்டு சென்று விடுவேன் என்று சொன்னதே மீண்டும் மீண்டும் மனக்கண்ணில் ஓடிக் கொண்டே இருந்தது.

 

அப்படி என்ன அழுத்தம்?

 

தான் என்ன தவறு செய்து விட்டேன்?

 

காதலிப்பது தவறா? என்னவோ தன்னை காதலிக்க சொல்லி வற்புறுத்துகின்றேன் என்று நினைத்து விட்டானோ? எனவெல்லாம் பலவாறு நினைத்தவளுக்கு அடுத்தடுத்து நடந்த பாடங்கள் ஒன்றுமே மூளையில் பதியவே இல்லை.

 

அவளின் முகத்தை வைத்தே என்னவோ சரியில்லை என்று உணர்ந்த நயாவும் அதன் பின்னர் அவளை தொந்தரவு செய்யாமலிருக்க, அன்று மாலையே புத்தி பேதலித்த நிலையில் தான் வீட்டினை அடைந்திருந்தாள்.

 

“ஹேய் வா வா…அம்மா உனக்கு பிடிச்ச அல்வா பண்ணிருக்கேன்” என்று சொல்லிக் கொண்டே சமையலறைக்குள் நுழைய போன வாசுகி என்னவோ உறுத்த, அப்போது தான் மகளின் முகத்தை கூர்ந்து கவனித்தார்.

 

அவளின் முகமோ வாடி வதங்கி போய் இருந்தது.

 

“என்னடா ஆச்சு? ஜிதன் கூட பேசுனியா?” என்ற தனது தாயின் வார்த்தைகளில் அடக்கி வைத்திருந்த கண்ணீர் மொத்தமும் கன்னத்தில் பொலபொலவென வழிய, 

 

“ஆழாத டி என்னாச்சு?” என்று கேட்டுக் கொண்டே அவளின் கரத்தை பற்றி சோஃபாவில் அமர வைத்து அவளருகில் தானும் அமர்ந்து கொண்டு கண்ணீரை துடைத்து விட்டவர் ” இப்போ அழறதை நிறுத்திட்டு சொல்ல போறியா இல்லையா?” என்று கடிய,

 

“அம்மா” என்று சிணுங்கியவள் ஜிதன் தன்னை கண்டித்தது முதல் அனைத்தையும் ஒன்று விடாமல் கூற,

 

“சரியான லூசு டி நீ” என வாசுகி திட்ட,

 

அவளோ அழுகையை நிறுத்தி தன் தாயை முறைத்தாள்.

 

“பின்ன, ஒருத்தர் எனக்கு யாரும் இல்லனு பீல் பண்ணி யாரோ ஒரு பொண்ணு கிட்ட சொல்லுவாங்களா?” என தாய் கேட்ட கேள்வியில் என்னவோ புரிவதை போலிருக்க,  அவளுக்கோ முகம் செந்தாமரையாக மலர்ந்தது.

 

” ஆமால” என்று தாயின் கன்னத்தை வழித்து கிள்ளியவள் ” பாயிண்ட்டை பிச்சு பிச்சு வைக்கிறீங்க மா. நீங்க எல்லாம் லாயர் ஆகி இருக்கலாம்” என்று குறை பட,

 

“யாழு ஜிதன் கு எல்லாமா நாம இருக்கலாம்” என அவளின் தலையை வருடி விட்டவர் “நெக்ஸ்ட் வீக் வர போற ஃபைனல் இயர் எக்சாம்ஸ் அஹ் பின்னிஷ் பண்ணு. நானே ஜிதன் கூட பேசறேன்” என்றவரை கட்டி தழுவிக் கொண்டவள் “அவருக்கு நான் ஸ்டூடண்ட்டா இருக்கது தான் பிடிக்கலையோ” என்றவளிடம் “எக்சாம்ஸ் முடிச்ச பிறகு தான் காலேஜ் அவுட் ஆகிடுவ சோ அப்புறம் என்ன?” என்க,

 

” இன்னும் அதுக்கு ஒன் வீக் இருக்கே”  என்று முகம் வாட தலையை தாழ்த்திய படி அழுகைக்கு தயாரானாள் பெண்.

 

அவளின் முகத்தை நிமிர்த்தி தன்னை பார்க்கச் செய்தவர் ” நீ காதலிக்கிறனா அதுல ஸ்ட்ராங்கா இரு. நமக்கு ஒண்ணு கிடைக்கணும்னா அதுக்கு நாம தான் முழு எபெக்ட் போடணும். இடைல என்ன வேணாலும் நடக்கலாம் அதை எல்லாம் இப்படி அழுது வடியாம ஃபேஸ் பண்ணனும். எல்லா நேரமும் நான் உன்னோட இருக்க முடியாது” என்க,

 

” அச்சோ போதும் நிறுத்துங்க. நீங்க இல்லாம எங்க போறீங்க?” என்று கேட்டவளை வாசுகி முறைக்க,

 

“ஓகே ஓகே கூல், என்ன ஆனாலும் பார்த்துக்கலாம். ஐ வில் ஃபேஸ் இட் ஃபோர் ஷோர்” என்று சொன்னவள் அறியவில்லை தினமும் அவள் மரணத்திலும் கொடிய வலியை தினம் தினம் எதிர்காலத்தில் அனுபவிக்கப் போகின்றாள் என,

 

விதியின் கோர விளையாட்டு என்னவாக இருக்கும்?

👁️ 177 Views
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
⚠️ இத்தளத்தின் உள்ளடக்கங்கள் DMCA
பாதுகாப்பில் உள்ளது. Copy / Screenshot / PDF
உருவாக்குதல் தடை செய்யப்பட்டுள்ளது.