Menu

நொடி – 9

தனது குரலைக் கேட்டதும் அவளின் அதிர்ச்சியும் அதனைத் தொடர்ந்து அது நான் தான் என்று அவள் உறுதிப் படுத்திக் கொண்டு  சந்தோஷ ஆர்ப்பரிப்புடன் அவள் கத்தி ஆடிக் கொண்டு இருப்பது அவனால் நின்ற இடத்திலிருந்து உணர முடிந்தது. 

 

உணரும் நொடி அவளின் தன்னலமற்ற காதலில் மொத்தமாக கட்டுண்டு தான் போனான் அந்த ஆறடி ஆண்மகனும், 

 

“இசை” என்றான் மென்மையாக, 

 

ஆர்ப்பரித்து மெய் மறந்த நிலையில் ஆடிக் கொண்டு இருந்தவள் அப்போது தான் நிதர்சனம் உரைக்க, ‘ ஹையோ மானமே போச்சே ‘ என்று முணுமுணுத்துக் கொண்டே, 

 

“சாரி கொஞ்சம் எக்ஸ்சைட் ஆகிட்டேன்” என்றாள் மெல்லிய குரலில், 

 

“கொஞ்சமா?” என்று கேட்டவன் குரலில் இருந்த புன்னகையை அவளும் கண்டு கொண்டாள் போலும், அவளின் முகம் மொத்தமாக சிவந்து போக ஒற்றைக் கரத்தால் முகத்தை மூடிக் கொண்டே ” கால் எல்லாம் பண்ணி இருக்கீங்க. பைனலி என்னை புரிஞ்சிக்கிட்டீங்களா?” என்று அவள் கேட்டதும் தான் அவனுக்கு உணர்வே வந்து இருந்தது. 

 

என்ன நினைத்து கொண்டு அவளுக்கு அழைப்பை எடுத்தேன்? 

 

விழிகளை மூடி ஒரு கணம் ஆழமாக மூச்சை இழுத்து வெளிவிட்ட படி “நெக்ஸ்ட் வீக் ஃபைனல் எக்ஸாமை வச்சிட்டு, நான் கொடுத்த பேப்பர் ல என்ன எழுதி வச்சிருக்க இசை?” என்றவன் குரல் இப்போது வழமைக்கு திரும்பி இருக்க, 

 

“ஆன்சர் தெரியாத கேள்விக்கு தெரியாதுன்னு தானே எழுத முடியும் சார்?” என்றாள் இதழ்களுக்குள் சிரித்துக் கொண்டே, 

 

“ஓஹோ ரைட் , தெரியாது ஓகே பட் என் நேமை எதுக்கு எழுதி வச்சிருக்க?” 

 

“மைண்ட் புல்லா நீங்க இருக்கீங்க. அதான் என்கிட்ட வந்து சேர வேண்டிய பேப்பர் தானே ஒரு மெமரியா இருக்கட்டுமேனு… ” என்று அவள் சொல்லிக் கொண்டு இருக்கும் போதே அவளின் காஃபி கப்பை எடுக்க உள்ளே வந்த வாசுகி மகளின் முகத்திலிருந்த என்றுமில்லாத பூரிப்பை கண்டு வியந்து “யார் மா போன் ல” என்று கேட்டுக் கொண்டே அவளை அவர் நெருங்க, 

 

மறுமுனையில் பேசிக் கொண்டிருந்த ஜிதனுக்கு தான் ஐயோடா என்றிருந்தது. 

 

” மா உங்க சன் இன் லா தான்” என்று அவள் மறுமுனையில் கூற, 

 

அவனின் விழிகளோ, விட்டால் கீழே தெறித்து விழுந்து விடும் என்பதை போல விரிந்து கொள்ள, 

 

“ஜிதனா? எங்க இங்க கொடு” என்ற படியே அவர் போனை பறித்து எடுத்து “ஹலோ” என்றார்.

 

அந்த ஒரு அழைப்பிலேயே அவரின் குரலில் தொக்கி நின்ற  மகிழ்வை கண்டு கொண்டவனுக்கு அவளுடன் பேசுவதை போல கத்தரித்து பேச தோன்றவில்லை.

 

இயல்பாகவே அவரிடம் மதிப்பும் மரியாதையும் அக்கணம் முகிழ்த்திருந்தது.

 

“ஹலோ மேம்” என்றவன் குரலிலிருந்த அண்ணிய தன்மையில் என்ன நினைத்தாரோ “அத்தைனு கூப்பிடலனாலும் அம்மானு உரிமையா கூப்பிடலாம் தப்பில்ல” என்றவர் பேச்சில் அவன் தான் மறு வார்த்தை பேச முடியாது மௌனமானான்.

 

“நான் கம்பல் பண்ல பட் மேம்னு கூப்பிட வேணாமே ரொம்ப தள்ளி போன போல ஃபீல்” என்று சொல்ல,

 

இவ்வளவு தன்மையாக பேசும் அவரிடம் எப்படி எதிர்த்து பேச தோன்றும்?

 

தன் அனைத்து கட்டுப்பாடுகளும் அவளின் ஆர்பரிப்பிலும் இதோ அவளின் அன்னையின் உரிமையான பேச்சிலும் மொத்தமாக சரிந்து வீழ, “அம்மா” என்று இருந்தான் ஆத்மார்த்தமாக,

 

அவ் வார்த்தையை சொல்லும் போதே அவனுள் எழுந்த உணர்வு பிரவாகத்தை சொல்லில் வடிக்க முடியாது.

 

தனிமை எனும் மாயையிலிருந்து சட்டென விடுபட்ட உணர்வு.

 

இத்தனை நாட்களும் உறவு என யாரும் இல்லாது இருந்தவனுக்கு வாசுகியின் பேச்சு இதமாக இருக்க, தனது இருப்பை அவளின் அன்னையின் மனதில் ஆழ பதித்து விட்டாள் என அக் கணம் தெள்ளத் தெளிவாக புரிந்து கொண்டான் அவளின் ஜிதன்.

 

“போதும் போதும் அவர் அங்க அம்மா சொன்னதும் நீங்க ஸ்டக் ஆகுறதும், நீங்க அம்மா சொல்ல சொன்னதும் அவர் அங்க ஸ்டக்  ஆனதும் போதும். சீக்கிரம்  பேசி முடிச்சிட்டு போனை என்கிட்ட கொடுங்க” என்ற இசையின் குரலில் அவனின் இதழ்களில் தாராளமான புன்னகை தோன்றியது.

 

“சும்மா இரு யாழு. மாப்ள கூட பேசிட்டு தரேன்” என்று வாசுகி கூற,

 

மறுமுனையில் அதைக் கேட்டவனுக்கு அதற்கு எப்படி பதில் கூறுவதென்றே தெரியாது போனது.

 

தனது தனிமைக்குள் இதுவரை அவன் யாரையும் நுழைத்து கொண்டது இல்லை.

 

ஏன் நெருங்கிய நண்பர்கள் என்று கூட யாரும் இல்லை அவனுக்கு,

 

அவன். அவனது தனிமை. அவனது உலகம். என வாழ்ந்து விட்டவனுக்கு இது எல்லாம் புதிதாக இருந்தது.

 

சட்டென எதுவும் பேச முடியாது மனதில் திணற ஆரம்பித்தவனது மௌனத்தை கலைத்தது என்னவோ வாசுகி தான்.

 

” எனக்கு புரியுது ஜிதன். சட்டுன்னு உங்களால இதையெல்லாம் ஏத்துக்க முடியலனு பட் யாழு சொல்றப்போ உங்களை பார்க்கணும் பேசணும்னு  தோணும் பட் உங்களோட பேசின பிறகு கியூரியாசிடி இன்னுமே அதிகமானதே தவிர கொஞ்சம் கூட குறையல. அவளோட எக்ஸாம்ஸ் எல்லாம் பின்னிஷ் ஆன பிறகு உங்களை மீட் பண்ணலாமா ஜித… என அவனின் பெயரை கூற வந்தவர் மாப்ள” என்றிருக்க,

 

அவனோ குரலை செருமிக் கொண்டே “ஷோர் மீட் பண்ணலாம் மா. இசை எக்ஸாம் எல்லாம் க்ளியர் பண்ணனும். அவளுக்கான பியூச்சர் பெஸ்ட்டா இருக்கணும். அது தான் என் விருப்பமும்” என்றவனது பேச்சில் இருந்த தெளிவில் வாசுகியின் மனமோ வெகுவாக குளிர்ந்து போனது.

 

என்ன மனிதன் இவன்?

 

எப்போதுடா பெண்ணை அடையலாம் என காத்துக்கொண்டு இருக்கும் ஆண்களின் மத்தியில் அவனது  எண்ணம் மற்றும் நிறுத்தி நிதானமாக பேசும் வர்த்தகக் என அனைத்தும் அவரை வெகுவாக கவர்ந்திருந்தது.

 

” தேங்க்ஸ் பாஹ். சீக்கிரம் பேசலாம்” என்று சிறிது நேரம் அவனிடம் பேசி விட்டு  திடீரென ஞாபகம் வந்தவராய் திரும்பி விழி விரித்து ஆனந்த அதிர்ச்சியில் வாயடைத்து போய் நின்றிருந்த யாழிசையின் கரத்தில் அலைபேசியை திணித்து “பேசு டி” என்று கொடுத்து விட்டு சென்று விட, 

 

அவளோ “என் அம்மாகிட்ட ஓகே சொல்ல தோணுது என்கிட்ட சொல்ல தோணலையா ஜிதன்?” என்று அவள் தயக்கம் உடைத்து கேட்டு விட,

 

” நான் எப்போ ஓகே சொன்னேன்?” என்று அவள் தலையில் அவன் இடியை இறக்க,

 

” அப்போ அம்மானு கூப்பிட்டது. மீட் பண்ண பிளான் பண்ணது எல்லாம்?” என அவள் அதிர்ச்சியாக கேட்க, 

 

மறுமுனையில் அவளது அதிர்வை உள்வாங்கிக் கொண்டே இதழ் கடித்து சிரிப்பை அடக்கிக் கொண்டவன் “ஜஸ்ட் ஃபோர் கர்டசி. உன்ன ஹர்ட் பண்ற போல அவங்களை ஹர்ட் பண்ண முடியுமா? ”  என்க,

 

தவிப்புடன் ” சோ அம்மாகிட்ட என்னை ரிஜெக்ட் பண்ண போறீங்களா சார்? ” என்றாள் சோர்ந்த குரலில் , 

 

“ஃபர்ஸ்ட் ஆஃப் ஆல் நீ எக்ஸாம் எல்லாம் ஒழுங்கா க்ளியர் பண்ணு ஆஃப்டர் தட் நான் ஓகே சொல்லணுமா நோ சொல்லனுமானு நான் முடிவு பண்ணிகிறேன் சோ யூ டோண்ட் ஒர்ரி” என்றான் குரலில் கடுமையை காட்டி,

 

அவன் கடுமையாக பேசினாலும் இதழ்கள் என்னவோ அதற்கு எதிர் மாறாக புன்னகையில் துடித்துக் கொண்டு இருந்தன.

 

” ஓஹோ சார் அப்படி வர்றீங்களா? உங்க விருப்பம் எதுவோ அடியேனும் அவ்வழியே எக்ஸாம் க்ளியர் பண்றேன்” என்று சொன்னவள் முகத்தில் அத்தனை மகிழ்ச்சி.

 

மனதில் கொஞ்சமாக ஒட்டிக் கொண்டிருந்த சஞ்சலங்கள் அனைத்தும் ஒரு துளி கூட இல்லாமல் விலகிய உணர்வு.

 

“தட்ஸ் குட், போனை ஆஃப் பண்ணிட்டு டான்ஸ் பண்ணாம நோட்ஸ் எல்லாம் ரிஃபர் பண்ணு” என்றவன் பேச்சில் குரல்வளையை தாண்டி வெடிக்க முயன்ற சிரிப்பை ஒற்றைக் கரம் கொண்டு வாயை மூடி வர விடாமல் தடுத்தவளோ ” எப்படி சார் இவ்ளோ பெரிய இன்ப அதிர்ச்சியை கொடுத்துட்டு என்னால கூலா உட்காந்து படிக்க முடியும்?” என்று அவள் கூற,

 

‘அடங்கமாட்டா’ என மனதில் சொல்லிக் கொண்டவன் “அப்போ நான் ஓகே சொல்றதும் நடக்காத விஷயம்” என்றதும் முத்து பற்கள் தெரிய புன்னகைத்த படி அறைக்குள் குறுக்கும் நெடுக்குமாக துள்ளி குதித்த படி இருந்தவள் அவனது வார்த்தைகளில் அப்படியே அசையாது நின்றிருந்தாள்.

 

அவளின் திடீர் அமைதியை புரிந்து கொண்டவன் ” ஓகே சொல்லணும்னா யூ ஹேவ் டூ க்ரோ இன்டு நெஸ்ட் லெவல் இசை. நீ இன்னும் என் ஸ்டூடண்ட் தான் அதை மைண்ட் ல வச்சிட்டு படி” என்றவன் அவளின் பரீட்சைகள் முடியும் வரை தன்னைப் பற்றிய எண்ணம்  துளியேனும் அவளின் மனம் முழுதும் மிதமிஞ்சி ஆக்கிரமித்து விட கூடாது எனத் தெளிவாக இருந்தான்.

 

அவனே நினைத்தாலும் அவளது அவன் மீதான உணர்வுப் பூர்வமான எண்ணங்களை அழிக்க முடியாதென அவனுக்கு யார் சொல்வது?

 

”  ஓகே ஆல் தி பெஸ்ட் இசை. வில் மீட் நெக்ஸ்ட் வீக்” என்றவன் அவளின் பதிலுக்காக காத்திருக்க,

 

“இசை… வாவ் நீங்க சொல்றப்போ எவ்ளோ அழகா இருக்கு” என்று அவள் சிலாகிக்க,

 

இதழ் குவித்து ஊதிக் கொண்டே “கால் கட் பண்ண போறேன்” என்றான் அவளிடம் மேலும் பேசிக் கொண்டே இருக்க தோன்றிய உணர்வை முயன்று கட்டுப் படுத்திக் கொண்டு,

 

“ஒன்ஸ் மோர் ப்ளீஸ்” என்றாள் கெஞ்சலாக,

 

” வாட்?” 

 

” என் நேம் அஹ் சொல்லுங்க முதல் போல” என்றவளின் மெல்லிய குரலில் கட்டவிழ துடித்த நேசத்தை விழிகள் மூடி காற்றை ஆழ்ந்து சுவாசித்து விடுவித்து விழிகளை திறந்தவன் “இசை” என்றான் காதல் நிறைய,

 

அந்த குரலில் தான் எத்தனை மென்மை.

 

கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும் போல் இருந்தது பெண்ணவளுக்கு,

 

“தேங்க்ஸ் ஜிது பேபி. இப்போ நீங்க தாராளமா கால் கட் பண்ணிக்கலாம்” என்றவளது குழைந்த பேச்சில் விழிகள் விரித்தவன் ” ரெகார்ட் பண்ணிட்டியா?” என்று கேட்டவன் நெற்றியை நீவிக் கொண்டே, “அடங்கவே மாட்டியா நீ?” என்றவன் குரல் அவனையும் மீறி கரகரப்பாக ஒலிக்க,

 

“அடங்கி போகணுமா நோ வே! என் அன்கன்டிஷனல் லவ்வை யாராலயும் அசைக்கவே முடியாது” என்று சொன்னவளின் ஆழமான காதலே அவளை ஆட்டம் காண வைக்க போவதை அறியாது போனாள் பேதை பெண்.

 

👁️ 169 Views
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
⚠️ இத்தளத்தின் உள்ளடக்கங்கள் DMCA
பாதுகாப்பில் உள்ளது. Copy / Screenshot / PDF
உருவாக்குதல் தடை செய்யப்பட்டுள்ளது.