Menu

நொடி – 12

மும்பை விமான நிலையம் என்றும் போல இன்றும் பரபரப்பாக இயங்கிக் கொண்டு இருந்தது. 

இரண்டு வருடத்திற்கு முன்னர் இங்கிருந்து புறப்படும் போது இருந்த மனநிலை என்ன? இப்போதைய மனநிலை என்ன? என்று அவள் எண்ணாமல் இல்லை. 

தன்னவனைக் காண போகின்றோம் என்ற எண்ணமே அவளுக்கு ஒரு புத்துணர்வைக் கொடுத்து இருக்க, சட்டென்று நினைவு வந்தவளாய் பின்னால் திரும்பி “சார்ல்ஸ் வாட் அபௌட் யூ?” என்று சாதாரணமாக கேட்க,

டிராலியை தள்ளிக் கொண்டே அவளோடு இணைந்துக் கொண்டவன் ” ஜிதன் புகைப்படம் ஏதேனும் உண்டோ?” என்று கேட்டானே பார்க்கலாம்.

அதுவும் சுத்தமான தமிழில்,

அவளுக்கோ விழிகள் அதிர்ந்து விரிந்து கொண்டன.

பின்னே, தனது காதல் கதையை வாய் வலிக்க,  அவன் ஆங்கிலம் என்று தானே அனைத்தையும் ஆழ்ந்து ரசித்து ஆங்கிலத்திலேயே அரட்டிக் கொண்டு வந்திருந்தாள்.

அவள் கதையை கூற கூற அவன் “ம்ம்”  கொட்டிக் கொண்டு வர, அவளுக்கோ அவன் இடையில் எந்த வித கேள்வியும் கேட்காமல் இருப்பது எதுவும் சிந்தையில் பதியவே இல்லை. அவள் தான் அவளின் காதல் உலகத்தில் மிதந்துக் கொண்டு இருந்தாளே!  தன் கதையை முழுதாக கூறி முடித்த அதே நேரம் விமானமும் மும்பை விமான நிலையத்தில் தரையிறங்கி இருந்தது.

அதன் பின்னர் கேட்கவும் வேண்டுமா என்ன?

அதன் பின் விமானநிலையத்தை விட்டு வெளியில் வரும் வரை பரபரப்பு தான்.

இப்போதோ அவன் சுத்தத் தமிழில் பேசவும், ஒரு கணம் திகைத்து நின்றவள் கோபமாக அவனை முறைத்து விட்டு முன்னால் விறுவிறுவென நடக்க ஆரம்பித்து விட்டாள்.

“ஹேய் கேர்ள் நில்லு” என்று சொல்லிக் கொண்டே அவள் பின்னே வேக எட்டுக்கள் வைத்து நடந்தவன் “சாரி யாழிசை” என்றான்.

“எதுக்கு சாரி நான் தான் நீங்க இங்கிலீஷ்னு நினைச்சிட்டு எல்லாம் வாய் வலிக்க சொல்லிட்டு வந்தேன் ஒரு வார்த்தை நான் தமிழ் தான்னு சொல்லியிருந்தா இன்னுமே டீப்பா நான் ஜிதன் மேல வச்சிருக்க லவ்வை ஃபீல் பண்ணி இருக்கலாமே அண்ட் எனக்கும் ஒரு சாட்டிஷ்ஃபக்ஷனா இருந்திருக்கும்” என்க,

“வாட்? தமிழ்லயா இதுவே ஓவர்டோஸ் தான். இதுவே உன் நேடிவ் லங்குவேஜ்ல சொல்லியிருந்தா ஓஹ் காட்” என்றான் குறும்பு சிரிப்புடன்,

மென் புன்னகையுடன் அவனைப் பார்த்தவள் “ஆளுக்கும் லங்குவேஜ் ‘ கும் கொஞ்சம் கூட பொருத்தமே இல்லையே”  என அவனை மேலிருந்து கீழ் வரை ஒரு பார்வை பார்த்து விட்டு அவள் கூற,

“மாம் இந்தியா, அப்பா பிரிட்டிஷ் சோ ரெண்டுமே மிக்ஸ்ஸிங்” என்றவன் கேசத்தைக் கோதிக் கொண்டே “நான் கேட்டதை இன்னும் காட்டலயே” என்று கேட்க, 

” மும்பை ல தானே இருப்பீங்க போட்டோவை விட அவர் கூட நேர்ல வந்து மீட் பண்ணிட்டா போச்சு” என தோளை குலுக்கிக் கொண்டாள்.

” தென் ஜிது பேபி உன்ன ரிசீவ் பண்ண வர்லயா? என்று அவன் கேட்டதும் அவனை முறைக்க முயன்று தோற்றவள் ஒருவித வெட்கத்துடன் “நான் வர்றது ஜிதனுக்கு சர்ப்ரைஸ், அம்மா தான் வருவாங்க” என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போதே “யாழு” என்ற படி ஒருவித விரிந்த புன்னகையுடன் அவளை நோக்கி வந்துக் கொண்டு இருந்தார் வாசுகி.

தூரத்தில் இருந்தே ஒரு ஆடவனுடன் சிரித்து பேசிக் கொண்டு வரும் தன் மகளைப் பார்த்தவருக்கு சற்றே வியப்பு தான். இருந்தாலும் தன்னை நிதானித்துக் கொண்டே அவளை நெருங்கியவருக்கு இரண்டு வருடங்களின் பின்னர் மகளைப் பார்த்ததில் அவரது உள்ளமும் முகமும் ஒருங்கே பூரித்து போனது.

“அம்மா” என்று வாசுகியை இறுக அணைத்து விலகியவளாய் “ஜிதன் கிட்ட எதுவும் சொல்லலையே” என்று அவள் சந்தேகமாக கேட்டிட,

இன்னுமே அவளின் அவன் மீதான அதீத காதலை எண்ணி உள்ளுக்குள் மகிழ்ந்தாலும் மனதில் லேசான அதிர்வு உண்டாக தான் செய்தது.

அவள் அறியாமல் தன்னை நிலைப் படுத்திக் கொண்டே “தெரியாது மா” என்று சொல்லிக் கொண்டே அவளது டிராலியை தன் கரத்திற்கு இடம் மாற்றியவர் அவளருகில் அவரையே ஆராய்ச்சியாக பார்த்துக் கொண்டிருந்தவனை பார்த்து மெலிதாக புன்னகைத்தார்.

புன்னகைத்தார் தான் ஆனால் அவரின் புன்னகை  விழிகளுக்கு  எட்டவில்லையே!

ஆம், அடுத்து என்ன என்ன நடக்கவிருக்கிறதோ? என்ற பதட்டத்தில் இருந்தவருக்கு எப்படி மனதார புன்னகைக்க முடியும்?

உலகத்தில் அனைத்து மூலையிலும் தனது பிஸ்னஸ் மூலம் கால் பதித்து அதில் பல மனிதர்களை சந்திக்க நேர்ந்ததால் என்னவோ எதிரில் நிற்பவரின் முகத்தில் தெரியும் உணர்வுகளை கணித்து விடுவான் அவன்.

அவனுக்கோ வாசுகியை பார்த்த மாத்திரத்திலேயே என்னவோ  சரியில்லை என்று மட்டும் தெரிந்தது.

உறுதியாக எதுவும் தெரியாது என்ன செய்ய முடியும்? அமைதியாகி விட்டான்.

” என்ன சார்லஸ் என் அம்மாவை முறைச்சு பார்த்திட்டு இருக்கீங்க?” என கேட்ட யாழிசையை ஏறிட்டவன் “நான் ஏன் அவங்களை முறைக்க போறேன்?” என்றவனோ திரும்பி, வாசுகையை பார்த்து “ஹாய் ஆன்டி! அம் சார்லஸ். நைன் ஹவர்ஸ் பிஃபோர் தான் உங்க பொண்ணு கூட குளோஸ் ஃப்ரெண்ட் ஆனேன்” என சரளமாக பேசினான்.

அவன் தமிழில் பேசவும் அதிர்ந்து விழிகளை விரித்தவரை பார்த்து மெலிதாக சிரித்த யாழிசையோ  “இப்படி தான் நானும் ஜஸ்ட் நவ் ஷாக் ஆனேன் மா” என்று சொல்லிக் கொள்ள, அப்போது என பார்த்து அவனது அலைபேசியும் ஒலிக்க,

“எக்ஸ்கியூஸ்” என்று கேட்டுக் கொண்டு அவர்களை விட்டு சற்றே விலகி சென்றவனோ அழைப்பை ஏற்று கதைக்க ஆரம்பித்து விட,

அவனை ஒரு பெரு மூச்சுடன் பார்த்து விட்டு அவளைப் பார்த்தவர் “அந்த தப்பிக்கிட்ட சொல்லிட்டு வா நாம கிளம்பலாம்” என அவசரப் படுத்த,

” அச்சோ ஏன் இவ்ளோ அவரசம் நானே ரிலாக்ஸ் ஆஹ் தான் இருக்கேன் என்றவளோ சார்லஸ் கிட்ட கேட்போம் எங்க ஸ்டே பண்ண போறார்னு பாவம் ல இல்லனா நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு போலாம்” என்றிட,

வாசுகிக்கோ, இருக்கும் பதட்டத்தில் இது என்ன தேவையில்லாமல் என்று தான் ஆயாசமாக இருந்தது.

“யாழு நான் சொல்றதை ..” என்று அவர் என்னவோ சொல்ல வரும் முன்பே அழைப்பை துண்டித்து விட்டு யாழிசையை நெருங்கியவனோ ” எமர்ஜென்சி கால் மா. ஐ ஹேவ் டு கோ இம்மிடியேட்லி” என்று சொன்னவனோ தனது பர்சில் இருந்த பிஸ்னஸ் கார்ட்டை அவளிடம் நீட்டியவன் “இன்னும் ஒன் இயர் கு இங்க தான் பிசினஸ் டீலிங் இருக்கு. உனக்கு என்னை பார்க்கனும்னு ஓஹ் காட் நோ.. நோ என நெற்றியை நீவிக் கொண்டே  ஷோர் ஆஹ் ஜிதன் கூட உன்ன உன் மேரேஜ் ல பார்க்கணும். சூன் கால் மீ யாழிசை” என்று விட்டு அருகில் அவனையே விழி அகலாமல் பார்த்துக் கொண்டிருந்த வாசுகியிடம் “சீ யூ சூன் ஆன்டி” என திரும்பி நடக்க,

” என்ன அவசரம் வீட்டுக்கு வந்துட்டு போகலாமே” என்றவளிடம் ” உன் மேரேஜ் கு இன்வைட் பண்ணு வந்து ஸ்டே பண்ணிடுறேன்” என்று சொன்னவனோ மீண்டும் ஒலித்த  அலைபேசியை எடுத்து கதைத்தவாறே ஒரு தலையடைப்புடன் சென்றிருந்தான்.

செல்லும் அவன் மட்டும் அல்ல அவளும் அறியவில்லை  இன்னும் சில மணி நேரத்தில் அவளுக்கு திருமணம் ஆகப் போகின்றது எனவும், ஒருபோதும் அவளின் திருமணத்தை அவன் காணப் போவது இல்லை என்றும்,

“என்னடி இப்படியே நின்னுட்டு கிளம்பலாம்” என வாசுகி மீண்டும் அவசரப்படுத்த,

“மா நான் உங்ககிட்ட இருந்து இதை எதிர் பார்க்கல” என்று விட்டாள் பட்டென்று,

அவருக்கோ, தூக்கி வாரிப் போட்டது.

“என்..என்ன?” என்றார் அதிர்ந்து போய்,

குரலில் மட்டும் அல்ல அவரது உடல் மொழியில் கூட அத்தனை நடுக்கம்.

அவளுக்கு இருந்த கலைப்பில் அவரது பதட்டத்தையும் நடுக்கத்தை அவள் பெரிதாக எதனையும் உணரவில்லை என்றாலுமே அவரிடம் என்னவோ ஒரு மாற்றத்தை கண்டு கொள்ள முடிந்தது அவளால், 

இதழ் குவித்து ஊதிக் கொண்டே “வீட்டுக்கு வாங்கனு அழைக்கலனாலும் பரவல்ல, ஒரு கர்டெசிகாகவாச்சும் சார்லஸ் கூட ஒழுங்கா பேசி இருக்கலாமே… என்று குறைபட்டுக் கொண்டவள் உங்ககிட்ட என்னவோ சரி இல்லன்னு தோணுது என்னமா? நீங்க இப்படி இல்லையே” என்றாள் அவரின் கரத்தை பற்றிய படி,

” ஹான், எனக்கென்ன யாழு? உன்ன ரெண்டு வருஷத்துக்கு அப்புறமா நேர்ல பார்க்குறேன். எனக்கு அந்த சந்தோஷம் இருக்காதா டி? உன்ன இப்பவே கூட்டிட்டு போகணும் நிறைய பேசணும் இதெல்லாம் என் மைண்ட் ல ஓடிட்டு இருக்கு அதுல நான் எங்கடி அந்த தம்பி கூட பேச” என வெகு சிரமப்பட்டு உண்மை பாதி பொய் மீதியாக கூறுவதற்குள் தனது திணறலை காட்டாது மனதின் உள்ளே பலமுறை மரித்து மீண்டிருந்தார்.

“ஓகே ஓகே”  என்று சொல்லிக் கொண்டே தன் முன் நின்ற அன்னைக்காக ஆசையாக வாங்கிய காரில் முதல் முறையாக ஏறினாள்.

என்னவோ உள்ளே ஏறிக் கொண்டதும் தானாக அவளிதழ்களில் ஒரு கர்வப் புன்னகை.

ஆம், அவள் லண்டனுக்கு சென்ற ஓரிரண்டு நாட்களில் அவளுக்கான வேலை அங்கு தயாராக இருந்தது.

இரண்டு வருடங்கள் லண்டனில் மிக பிரசித்தி பெற்ற ” விஷுவல் ஆர்ட் டிசைனர்” என்ற பெயரில் அழைக்கப்படும் முதல் தர நிறுவனம், இந்த இளம் வயதில் அவளின் திறமையில் வியந்து அவளை உச்சாணிக் கொம்பில் தூக்கி நிறுத்தியது எனலாம்.

எல்லாமே அவளுக்கு புதுவித அனுபவமாக இருந்தது.

இரண்டு ஆண்டுகள் அவளுக்காக கொடுத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டாள் பெண்ணவள்.

தன்னை நம்பி இவ்வளவு தூரம் தன்னவன் அனுப்பி வைத்திருக்கின்றான்.

அவன் தன்னை வியந்து பார்க்க வேண்டும் என்ற உற்சாகம் அவளுள் தானாக தோன்றி இருக்க, அந்த வெறியில் அவள் தன் கவனம் மொத்தத்தையும் கலை திறமையில் காட்ட, விளைவு அவளது வருமானமும் மாதத்திற்கு மாதம் பன்மடங்காக  உயர்ந்தது.

அன்னையின் போக்குவரத்து வசதிக்காக ஜிதனிடம் கூறி அவளே வாங்க வைத்த கார் என்றாலும் அவளின் அனைத்திலும் அவனையே முன்னிறுத்தி அழகு பார்த்தாள்.

அவனுக்கு நான் இருக்கின்றேன் என்று நாளுக்கு நாள் அவள் உணர்த்திக் கொண்டு இருந்தாள்.

காரின் தரம் தொடக்கம் நிறம் வரை எல்லாமே அவனது தெரிவாக இருந்தால் சொல்லவா வேண்டும்?

சும்மாவே அவனது அனைத்தையும் பொத்தி பாதுகாப்பவள் இப்போது காரும் அவனது தெரிவு என்றால்?

விழிகளை மூடி மென் புன்னகையுடன் அனைத்தையும் அசைப் போட்டவள் இதமான மனநிலையுடன்  இருக்கையில் சாய்ந்து அமர்ந்தாள்.

என்னவோ அவனது பிரத்தியேக வாசத்தை நாசி நுகர வேண்டி சண்டித்தனம் செய்ய, அந்தோ பரிதாபம் அவள் விரும்பியே சுயம் தொலைக்கும் அந்த நறுமணத்தை நாசி உணரத் தான் மறுத்தது.

அவளையே வெறித்து பார்த்துக் கொண்டு இருந்த வாசுகியின் இதயமோ வேகமாக துடித்துக் கொண்டிருந்தது. 

வாசுகியோ, இன்னும் கொஞ்ச நேரமாவது அவள் நிம்மதியாக இருந்து விட்டு போகட்டும் என அவளது இதமான மனநிலையை குழப்ப விரும்பாது அடுத்து நடக்கப் போவதை எண்ணி பதைபதைப்புடன் ஏதோ அனலுக்குள் இருப்பதைப் போல தகித்து போய் இருக்கையில் பின்னோக்கி தலையை சாய்த்து விழிகளை மூடிக் கொண்டார்.

👁️ 193 Views
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
⚠️ இத்தளத்தின் உள்ளடக்கங்கள் DMCA
பாதுகாப்பில் உள்ளது. Copy / Screenshot / PDF
உருவாக்குதல் தடை செய்யப்பட்டுள்ளது.