Menu

நொடி – 15

தாலி கட்டி ஆயிற்று என்றதும் தன் வேலை முடிந்து விட்டது எனும் தோரணையில் அவன் மண மேடையிலிருந்து விருட்டென எழுந்து கொள்ள, அவனருகில் அமர்ந்திருந்த காரிகைக்கோ அவனின் செயலில் அழுகை முட்டிக் கொண்டு வந்தது.

 

அவனது வெறுப்பான பார்வை அவளை நிலைகுலைய வைத்தது.

 

தன்னை, தன் காதலை கொஞ்சம் கொஞ்சமாக அவனுக்கு உணர்த்தி விட்டு அதன் பின் திருமணம் செய்து இருக்கலாமோ? என காலம் தாழ்ந்த சிந்தனை வெகுவாக எழ, எச்சிலைக் கூட்டி விழுங்கிக் கொண்டே மெல்ல அவளும் எழ முற்பட்ட போது, “மேடைல இருந்து எழ கூடாது யாழிசை” என்ற படி  அவளிடம் அமருமாறு கண்களால் சைகை செய்து விட்டு, அவனருகில் பதறிய படி ஓடி வந்த ஷீலா சுற்றிலும் தங்களுக்குள் என்னவோ கிசுகிசுத்துக் கொண்டிருந்தவர்களை பார்த்து சமாளிப்பாக சிரித்து வைத்தவர் “தமிழ் பண்பாடு டா பாதில எந்திரிக்க கூடாது உட்கார்”  என பற்கள் தெரிய புன்னகைத்த படி அவனது தோளை அழுத்தி மீண்டும் அவளருகில் வலுக்கட்டாயமாக அமர வைத்தவர் ” இன்னும் ஆக வேண்டிய சடங்கு நிறைய இருக்கு” என குனிந்து மெல்ல அவன் காதில் முணுமுணுத்தவர் அவனருகிலேயே நின்று கொள்ள,

 

அவனால் எதுவும் செய்ய முடியாத நிலை தான்.

 

தலைக்கு மேல் அவனது பிஸ்னஸ் டீல்களும் வரிசைக் கட்டிக் கொண்டு இருக்க, இன்றே அது பற்றிய கலந்தாய்வு வேறு இருந்தது. 

 

அனைத்தையும் செய்தாக வேண்டிய கட்டாயம் அவனுக்கு,

 

தன் அன்னை மேல் தோன்றிய எரிச்சல் ஆத்திரம் அனைத்தும், இத் திருமணத்திற்கு சம்மதம் கூறி விட்டு தன்னருகில் அமர்ந்து தன்னையே வெறித்துக் கொண்டிருந்தவள் மேல் மொத்தமாக திரும்பியது.

 

அவனின் செயலில் வாசுகிக்கோ தன் மகளின் வாழ்க்கையை தானே கெடுத்து விட்டோமோ? என்ற எண்ணம் முதல் முறை துளிர் விட ஆரம்பித்திருக்க, செய்வதறியாது திகைத்து நின்றிருந்தார்.

 

“ப்ளடி ஷிட்” என்று இதழ்களுக்குள் முணுமுணுத்துக் கொண்டே வேண்டா வெறுப்பாய் அவனையே அதிர்ந்து போய் பார்த்துக் கொண்டிருந்த புரோகிதரிடம் “வாட் நெஸ்ட்?” என்று கேட்டவன் குரலோ இறுகி ஒலிக்க,

 

அவனின் இறுகிய முகப் பாவனை அவருக்கு கிலியை விளைவிக்கவும் “மாங்கல்யதுல குங்குமம் வச்சி விடுங்கோ தம்பி” என்றவர் குங்குமச் சிமிழை அவனை நோக்கி நீட்ட,

 

அவனோ, இதழ் குவித்து ஊதிக் கொண்டே குங்குமத்தை எடுத்து தாலியில் வைத்ததும் “நெத்திலயும் வச்சு விடுங்கோ” என்று சொன்னதும் அவனுக்கோ ஆத்திரமாக வந்தது.

 

மீண்டும் அவரை ஓர் எரிக்கும் பார்வை பார்த்தவன் சலிப்பாக அவளின் பிறை நுதலில் குங்குமத்தை வைத்து விட்டான்.

 

அவனது முகத்தில் வந்து போன எரிச்சலான உணர்வுகளை தனக்குள் உள்வாங்கிக் கொண்டு அப்படியே ஜடம் போல அமர்ந்திருந்தவள் அவனோடு பேசுவதற்கான சந்தர்பத்தை எதிர்நோக்கி காத்திருந்தாள்.

 

பாவம் அவளுக்கு அவனுடன் பேசும் சந்தர்ப்பம் இன்றைய நாளில் அவளுக்கு அமையப்போவதில்லை என அவள் தான் அறியாது போனாள் பேதையவள்.

 

புரோகிதரோ, அவனின் தோரணையில் அடுத்தடுத்து செய்ய வேண்டிய சம்பிரதாயங்களை குறைத்துக் கொண்டவர் ஒரு பெரு மூச்சுடன் அடுத்ததாக அவளின் பாதம் தொட்டு மெட்டியையும் அணிவிக்க கூறி விட,

 

அவனோ சட்டென பக்கவாட்டில் திரும்பி கைகளைப் பிசைந்த படி நின்றிருந்த தன் அன்னையை  எரிச்சலாக வெறித்து பார்க்க,

 

அவரோ கண்களை சுருக்கி சற்றே அவனருகில் குனிந்து “ப்ளீஸ் டா இது மட்டும் பண்ணிடு” என்றார் மெல்லிய குரலில்,

 

அது அங்கிருந்தவர்களுக்கு ஏதோ அன்னையும் மகனும் பேசிக் கொள்வது போல தெரிந்தாலும் அவனருகில் நெருங்கி அமர்ந்திருந்தவளுக்கு தான் ஷீலா அவனிடம் மன்றாடிக் கெஞ்சுவது தெள்ளத் தெளிவாக காதில் வந்து வீழ்ந்தது.

 

கீழ் இதழ் கடித்து குனிந்த தலை நிமிராமல் அமர்ந்து இருந்தவளுக்கு அவன் எழும் அரவம் உணரத் தான் செய்தது.

 

‘ ஓஹ்! அப்படியென்றால் மெட்டி அணிவிக்காமல் போகப் போகின்றானா?’ என்ற கேள்வி எழ,

 

தவிப்புடன் மெல்ல ஏறிட்டு அவனை பார்க்க, அவனோ அவளைத் தான் வெறித்துக் கொண்டு நின்றிருந்தான்.

 

என்ன பார்வை இது?

 

ஒற்றை பார்வையில் அதீத வெறுப்பை காட்டி விட முடியுமா என்ன?

 

இதோ எந்த விழிகளில் காதலைக் கண்டாளோ இன்று அதே விழிகளில் அதற்கு எதிர் மாறாக வெறுப்பு தான் கொட்டிக் கிடந்தன.

 

எதற்கு தன் மீது இத்தனை வெறுப்பு?

 

அவனைப் பொறுத்தமட்டில் இன்று தான் தன்னை பார்த்திருக்கக் கூடும்,

 

அதுவும் தான் அவனிடம் ஒற்றை வார்த்தை கூட பேசவில்லை எனும் போது ஏன் இத்தனை வெறுப்பு தன் மீது? என்ற கேள்வி அவளின் ஆழ் மனதில் உதித்தது.

 

“இங்க வந்து நில்லுங்கோ” என்ற புரோகிதரின் குரலில் சுயம் அடைந்தவள் மெல்ல எழுந்து அவர் கூறிய படி நின்றவளின் மென் பாதம் தொட்டு அவன் மெட்டி அணிவித்து விட, அவளுக்கோ அக் கணமே கலக்கம் அகன்று இரண்டாவது முறையாக அவன் ஸ்பரிசம் பட்டு மேனி முழுதும் ஒருவித சிலிர்ப்பு பரவியது.

 

அதனைத் தொடர்ந்த சம்பிரதாயங்களில் எல்லாம் அவன் பொறுத்துக் கொண்டு நின்றது எல்லாம் வெறும் அரை மணித்தியாலங்கள் மட்டுமே!

 

அடுத்த சில நிமிடங்களில் தனக்கும் இதற்கும் சம்பந்தமே இல்லை எனும் ரீதியில் அவனுக்காக கொடுக்க பட்டிருந்த அறையை நோக்கி அவன் சென்றிருந்தான்.

 

அவளோ மேடையில் தனித்து விடப்பட்டிருக்க, வாசுகி தான் பதறி விட்டார்.

 

தன் மகனின் செயலில் பல்லைக் கடித்த ஷீலா அவன் பின்னால் செல்ல முயல, ” வேணாம் அத்தை அவர் போகட்டும் அஜ்ஜஸ்ட் பண்ணிக்கலாம்” என்று சொன்னது என்னவோ யாழிசை தான்.

 

அவளையும் மீறி குரல் கூட நலிந்து ஒலிக்கத் தான் செய்தது.

 

“அது ஒன்னும் இல்லாமா அவனுக்கு பிஸ்னஸ் டென்ஷன்” என்றிட,

 

“பிஸ்னஸ் ஆஹ்? இல்ல புரியல என்ன அத்த சொல்றீங்க?” என்று அவள் அதிர்வுடன் கேட்க,

 

சட்டென சுதாரித்த ஷீலாவோ, “ஆக்சிடென்ட் கு அப்பறமா அவன் காலேஜ் போறது இல்ல மா. ஜாப் ரிசைன் பண்ணிட்டான் சோ எங்க ஃபேமிலி பிஸ்னஸ் ஃபுல்லா அவன் தான் பார்த்திட்டு இருக்கான்” என்று அவள் கேளாமலே மேலதிகமாக சொன்னவர் அவளின் தலையை மெலிதாக வருடி கொடுத்த படியே “இப்படி தான் பிஸ்னஸ் டென்ஷன் ல கொஞ்சம் சுட சுட உர்னு இருப்பான் நீ எதுவும் யோசிக்காத மா”  என அவளை சமாளிக்கும் விதமாக சொன்னவர் அவளின் முகம் யோசனையில் சுருங்கவும் சட்டென பேச்சை மாற்றும் பொருட்டு “ஹான், மேடம் கு இப்போ தான் என்னை அத்தைனு கூப்பிட தோணுதா என்ன?” என்று கேட்க,

 

அவளோ வலுக்கட்டாயமாக சிரித்துக் கொண்டே “எனக்கு ஒரு சில விஷயங்களை ஆழமா மைண்ட் ல அக்செப்ட் பண்ணிக்க லேட் ஆகும் அத்தை” என்றாள் உணர்வற்ற குரலில்,

 

” பட் என்னை நீ ஏர்லியாவே அக்செப்ட் பண்ணிட்ட யாழு” என்றார் இதழ்களில் தேங்கிய புன்னகையுடன்,

 

அவருக்கு பதில் புன்னகை சிந்தியவள் எண்ணம் மொத்தமும் தன்னவன் நினைவுகளில் மட்டுமே சிக்கிக் கொண்டது.

 

கொஞ்சம் கொஞ்சமாக திருமணத்திற்கு வந்தவர்களும் மதிய உணவுக்கென பிரத்தியேகமாக ஒழுங்கமைக்கப்பட்டிருந்த புஃபே முறையில் அடுக்கப்பட்டிருந்த இடத்திற்கு சென்றிருக்க, மீதம் உள்ளவர்கள் மேடையேறி வந்து வாழ்த்தி விட்டு”எங்க மாப்ள?” என்று கேட்கும் போது அவளுக்கோ அழுகைத் தான் வந்தது.

 

அருகில் இருந்த ஷீலாவுக்கு தான் தெரியுமே அவன் எதற்கு அறையை நோக்கி சென்றானென சட்டென குரலை செருமிக் கொண்டவரோ 

” டிரஸ் சேஞ்ச் பண்ண போயிருக்கான். இப்போ வந்துடுவேன்” என்று சமாளித்து வைக்க,

 

அவளுக்கு தான் காலையிலிருந்து தன் அன்னை உட்பட இவர் வரை நடந்து கொள்ளும் விதம்  விசித்திரமாக இருந்தது.

 

இத்தனைக்கும் அனைத்தையும் ஒரு பார்வையாளராக மட்டுமே அருகில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த வாசுகிக்கோ, அவளை நெருங்கி பேசவே பயமாக இருந்தது. எங்கே ஏதேனும் பேச போய் அவளின் மனதை மீண்டும் ரணமாக்கி விடுவோமோ? என்ற எண்ணம் மேலும் மேலும் குற்ற உணர்வை தூண்டிக் கொண்டிருந்த அதே நேரம்,

 

வழமையாக  கம்பீரமான ஆளுமை நிறைந்த தோற்றத்துடன் வெண்ணிற ஷர்ட் மற்றும் கருப்பு நிற பிளேசர் சகிதம் அலைபேசியில் பேசிக் கொண்டே தங்களை நோக்கி வந்துக் கொண்டிருந்தவனை தான் விழிகள் விரிய பார்த்திருந்தாள் பெண்ணவள்.

 

முதன் முறை அவனை இவ்வாறு உயர்தர ஆடைகள் அணிந்து பார்க்கிறாள் அவள்.

 

அவளின் ஜிதன் இவ்வாறு உடை அணிபவன் அல்லவே! இப்போது இருக்கும் ஜிதன் முற்றிலும் மாறுபட்டவனாக தான் தெரிந்தான்.

 

கூடுதலாக ஒற்றைக் காதில்  கடுக்கண் அணிந்து இருப்பான் போலும், அது கூட அவனின் வசீகரத்தை அதிகரித்து இருந்தது.

 

ஆண் அழகன் தான். அவன் அவளை அடைவதற்கு முன்னரே அவனைத் தலை முதல் கால் வரை தன் விழிகளால் அளந்து விட்டாள்.

 

சும்மாவே அவன் மீது காதல் பித்தாகி கிடப்பவள். இத்தனை கம்பீரத்துடன் வசீகரமாக ஆளுமை நிறைந்த அவனது தோரணை அவளை ஈர்த்து விட்டது என்னவோ உண்மை தான்.

 

அவளை நெருங்கியும் விட்டான் அவன்.

 

ஆனால் இன்னுமே அவள் தான் தன்னிலை அடையாமல் அப்படியே நின்றிருந்தாள்.

 

அவனுக்கோ தன்னை அவனின் சரிபாதி விழுங்குவது போல் பார்த்துக் கொண்டிருப்பது எல்லாம் ஒரு பொருட்டே இல்லை போலும், இதழ்களில் ஒரு கேலிப் புன்னகை.

 

ஷீலாவுக்கோ, அடுத்ததாக இவன் என்ன செய்யப் போகிறானோ? என்ற எண்ணம் அவரை ஒருவித பதட்டத்திலேயே வைத்திருக்க,

 

“பிஸ்னஸ் மீட்டிங் இருக்கு சோ ஐ ஹேவ் டு கோ மா. ” என்றவனின் அழுத்தம் திருத்தமான பேச்சில் அவனை மேலும் தடுத்து நிறுத்தும் வழியறியாது அவர் அதிர்ந்து பார்க்க,

 

அவன் அதையெல்லாம் கண்டுகொள்ளும் ரகமா என்ன? 

 

முடிவாக சொல்லி விட்டான்.  இனி அவர் தடுத்தாலும் இங்கு ஒரு நிமிடமாவது நிற்க கூடாது என உறுதியாக இருந்தான்.

 

மேடையின் கீழ் அவர்களையே பார்த்துக் கொண்டு நின்றிருந்த அவனது பீ ஏ குணாலை ஒரு பார்வை பார்த்திட, அந்த ஒற்றைப் பார்வைக்கே பதறிப் போனவனாய் அவன் முன் வந்து பவ்யமாக நின்றிருந்தான் அவன்.

 

” கம் டு மை கெஸ்ட் ஹவுஸ். அண்ட் என மணிக்கட்டை உயர்த்தி கைக் கடிகாரத்தில் மணியைப் பார்த்தவன் அட் த்ரீ பீ எம் போல மீட்டிங் அரேஞ்ச் பண்ணிடு” என்று கட்டளையை பிறப்பிக்கவும்,

 

அவனோ ஷீலாவின் விழியசைவில் எச்சிலைக் கூட்டி விழுங்கிக் கொண்டே “சா..சார்… போட்டோஷூட்” என்றான் வார்த்தைகள் தந்தியடிக்க,

 

ஒற்றை புருவம் உயர்த்தி அவனை பார்த்தவன் ” டூ வாட் ஐ சே” என்றவனின் இறுகிய குரலில்,

 

அதில் அருகில் நின்றவன் மட்டும் இல்லை அவனின் ஆளுமையில் மொத்தமாக ஈர்க்கப்பட்டு சிலைப் போல நின்றிருந்தவளுக்கும் கூட ஒரு கணம் அவனது கணீர் குரலில் உடலோ தூக்கி வாரிப் போட்டது.

 

“ஜிதன் என்னடா ஈவினிங் போல மீட்டிங் அரேஞ்ச் பண்ணிக்கலாமே” என ஒருவாறு கலக்கத்துடன் சொல்லிய ஷீலாவிடம் ” உங்களுக்கு பிடிச்ச பொண்ணை மேரேஜ் பண்ணிக்க சொன்னிங்க பண்ணிக்கிட்டேன் சோ இதுக்கு அப்புறமும் நீங்க என்னை ரூல் பண்ண அலோ பண்ண விட மாட்டேன். காட் இட்?” என அடக்கப்பட்ட சினத்துடன் கர்ஜித்தவன் திரும்பி அவனையே  கலங்கிய விழிகளுடன் பார்த்துக் கொண்டிருந்தவளை எரிச்சலாக பார்த்தவன் எதுவும் பேசாது அவளைக் கடந்து ஓரடி தான் எடுத்து வைத்திருப்பான் அதற்குள் அவளாகவே” சாப்பிட்டு போகலாமே ஜிதன்” என்ற முதல் வார்த்தையை உதிர்த்திருந்தாள்.

 

என்ன முயன்றும் அவளையும் மீறி குரலும் தழுதழுத்து ஒலித்திருந்தது.

 

அவனின் நடையோ, அவளிடமிருந்து வந்த ஜிதன் என்ற அழைப்பில் ஒரு கணம் தடைப்பட  இறுகிப் போனவனாய் ” மாஹ், ரைட் நவ் ஐ வாண்ட் டு டாக் வித் யூ”என திரும்பிப் பாரமலேயே சொன்னவன் வாயிலை நோக்கி வேக எட்டுக்களுடன் சென்றிருந்தான்.

 

நீர் நிறைந்த விழிகளால் போகும் அவனை வெறித்துக் கொண்டு நின்றவளை பார்த்த வாசுக்கிக்கோ மனம் பாரமாக கனக்க ஆரம்பித்து விட, மானசீகமாக தன் மகளின் வாழ்க்கை நன்றாக இருக்க வேண்டும் என்று பிராத்தனை செய்து கொள்ளத் தான் முடிந்தது.

 

“யாழு இங்கயே இரு மா நான் அவன்கிட்ட பேசிட்டு வந்துடுறேன்” என்ற ஷீலா வேக வேகமாக வாயிலை நோக்கி விரைய,

 

இங்கோ, மண மேடையில் தனித்து நின்று கொண்டிருந்தது என்னவோ யாழிசையும் வாசுகியின் தான்.

 

கேட்பதற்கு ஆயிரம் கேள்விகள் முட்டி மோதிக் கொண்டிருந்தன. ஆனால் இருக்கும் நிலையில் எங்கனம் கேட்பது?

 

கேட்டால் மட்டும் முழுதாகவா விடை கிடைத்து விடப் போகிறதா என்ன?

 

அவனிடம் ஆசையாக ஒரு வார்த்தையேனும் சாதாரணமாக பேசிட அவா கொண்டது மனம்.

 

ஆனால், அவள் நினைத்தும் பார்க்காத ஒன்று தான் அவனிடம் தன்மேல் தோன்றும் அதீத வெறுப்பு.

 

சோர்ந்து போனவளாய் மெல்ல மண மேடையை விட்டு கீழிறங்கி வாயிலை நோக்கி நடக்க ஆரம்பித்து விட்டாள்.

 

வாசுகியோ “யாழு எங்க போற?” என்ற படி அவளை நோக்கி விரைய,

 

சட்டெனத் திரும்பி ஓர் பார்வை தான் பார்த்திருப்பாள் அதற்குள் அவள் பின்னாலேயே ஓடி வந்தவர் அவளின் பார்வையின் வீச்சு தாழாமல் அப்படியே சிலை போல் நின்று விட்டார்.

 

அவளோ மீண்டும் தன் நடையை தொடர்ந்தவாளாய் வாயிலை அடைந்தவளுக்கு, அவன் என்னவோ ஷீலாவிடம் கோபமாக பேசிவிட்டு அதீத சீற்றத்துடன் காரில் ஏறுவது தெரிந்தது.

 

தன்னை அவனுக்கு அரவே பிடிக்கவில்லை என்ற நிதர்சனத்தை கொஞ்சம் கூட ஜீரணிக்க முடியாமல் கால்கள் நடுங்க நின்றிருந்தவள் கண்டது என்னவோ கலை இழந்த முகத்துடன் வாயிலை நோக்கி வந்து

கொண்டிருந்த ஷீலாவை தான்.

 

👁️ 201 Views
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
⚠️ இத்தளத்தின் உள்ளடக்கங்கள் DMCA
பாதுகாப்பில் உள்ளது. Copy / Screenshot / PDF
உருவாக்குதல் தடை செய்யப்பட்டுள்ளது.