ஆம், அவளையே ஆழ்ந்து பார்த்துக் கொண்டு நின்றவன் அவளின் நொடி நேர தள்ளாட்டத்தை புருவங்கள் இடுங்க பார்த்து கொண்டே சுதாரித்து செல்லும் முன்னரே அவளை விழ விடாமல் தாங்கிப் பிடித்திருந்தான் நகுல்.
அதைக் கண்டவன் கண்மணி, ஒரு நொடிக்கும் குறைவாக அதிர்ச்சியில் விரிந்து சுருங்கின.
“மேடம் என்னாச்சு?” என்று கேட்டுக் கொண்டே அவளை தோளோடு பிடித்து நிறுத்தியவனை பார்த்து மெலிதாக புன்னகைத்தவள் “அம் ஓகே நகுல்” என்றவள் என்ன நினைத்தாளோ ” தேங்க்ஸ்” என்றாள் நன்றி உணர்வுடன்,
” மேடம் எனக்குத் தேங்க்ஸ் எல்லாம் வேண்டாம். வாங்க மேடம் உள்ள போலாம்” என்றவன் அவளை கைதாங்களாக பிடித்துக் கொள்ள,
அவளோ, ” இட்ஸ் ஓகே நகுல் ஐ வில் மேனேஜ்” என்று சொன்னவள் தன்னை முயன்று நிலைப் படுத்திக் கொண்டு நிற்கவும் அவர்களை ஜிதன் நெருங்கவும் சரியாக இருந்தது.
இருவரையும் ஓர் ஆழ்ந்த பார்வையுடன் பார்த்துக் கொண்டு நின்றவனின் பார்வையில் தானாகவே யாழிசையை விட்டு விலகி நின்றிருந்தான் நகுல்.
” நீ இங்க என்ன பண்ற?” என்றான் நகுலை உறுத்து விழித்த படி,
அவனோ, ஜிதனின் பேச்சின் தொனியில் நடுங்கிப் போனான்.
சற்றே பதற்றத்துடன் “சார்… மேடம் மயங்கி விழப் போனதுனால தான்…” என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போதே,
ஜிதனோ ஓர் ஏளன புன்னகையுடன் ஒற்றை புருவத்தை வருடிக் கொண்டே யாழிசை மீது பார்வையை பதித்து ” ஆஃப்டர் ஆல் ஒரு டிரைவருக்கு உன்மேல இவ்வளவு கேர்? வாவ் இன்ட்ரெஸ்டிங்” என்க,
அவனது ஏளனப் பார்வையும் பேச்சின் வீரியமும் அவளின் அகம் தொட்டு விழிகளை கலங்கச் செய்தது.
அவனையே பார்த்துக் கொண்டு இருந்தவருக்கு சொல்லொணா ஒட்டுமொத்த வலியையும் தன் விழிகளில் தேக்கி ஏறிட்டவளின் பார்வை வீச்சை சளைக்காமல் எதிர் கொண்டவன் ” ஒரு செகண்ட் அவன் உன் மேல கை வைச்சதுக்கே இப்படி வீக் ஆகி நிக்கிற சோ வாட்ஸ் த சீக்ரெட் பிஹைண்ட் திஸ் கெமிஸ்ட்ரி ஹஹ்? என்றானே பார்க்கலாம்.
அவனது வார்த்தைகளை சற்றும் ஜீரணித்துக் கொள்ள முடியாத நகுலோ “சார்” என்றான் அதிர்ச்சியாக,
அவனது அழைப்பில் சினம் தலைக்கு ஏற, இறுக விழிகளை முடித் திறந்து அவன் புறம் திரும்பி அவனைப் பார்த்த பார்வையில் நகுலோ இதற்கு மேலும் அங்கு நிற்பது சரி இல்லை என்று ஊகித்து கொண்டவனோ தன்னால் அவர்களுக்குள் பிரச்சனை வந்து விட்டதோ என்ற ஒரு குற்ற உணர்வுடன் அங்கிருந்து சென்றிருந்தான்.
” தனக்கு முன்னால ஒருத்தர் விழ போறாங்கனா அவங்களை விழட்டும்னு அப்படியே பார்த்திட்டு நிக்காம வந்து தாங்கி பிடிக்கிற ஜஸ்ட் ஒரு ஹெல்ப் தான் ஜிதன்… பட் நீங்க…” என்று சொல்ல வந்தவளுக்கு அழுகை தொண்டையை அடைத்தது.
“இஸ் இட்?” என்றவனது கேள்வியில் இருந்த நக்கலை உணர்ந்தவள்
“உங்க கண்ணுக்கு இது ஹெல்ப்பா தெரியலையா ஜிதன்? என்று கேட்டவளுக்கு அவளையும் மீறி கன்னத்தில் வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டே ” ஹவ் கேன் யூ பீ சோ ஹார்ட்லஸ்? என் ஜிதன் இப்..இப்படி இல்லையே!” என்றாள் குரல் திணற,
” உன் ஜிதனா? வாட் யூ மீன்?” என்றவன் குரலில் அத்தனை இறுக்கம்,
சட்டென தன்னை சுதாரித்துக் கொண்டவள் “ஒன்னும் இல்லைங்க” என்று சொல்லி விட்டு வீட்டிற்குள் செல்ல போனவளின் கரத்தை அழுத்தமாக பற்றியவன் ” ஐ வான்ட் ஆன்சர்” என்றான் அழுத்தமாக,
‘ஜிதனுக்கு பழசை எல்லாம் ஞாபகப் படுத்துற போல நடந்துக்காத இசை’ என்று லீலா சொன்னது மனதில் வந்து போக தன்னைத் தானே நொந்து கொண்டவள் சமாளிக்கும் வழி அறியாது திணறி நிற்கும் போது அந்த அமைதியை கிழிக்கும் வண்ணம் அவனது அலைபேசியோ சத்தமாக ஒலிக்க,
அவளைப் பற்றி இருந்த கரத்தின் பிடியை தளர்த்தியவன் அலைபேசியை ஏற்றி காதில் வைக்க, மறு புறத்தில் என்ன சொல்லப் பட்டதோ “காங்ராட்ஸ் லியா” என்றிருந்தான் மென் புன்னகையுடன்,
“லியா” என்ற இன்னொரு பெண்ணின் பெயர் அவனிதழ்கள் உதிர்த்ததை விட அவனை பார்த்த நொடியிலிருந்து அழுத்தமான விஷம் தோய்ந்த வார்த்தைகளை மட்டும் கொட்டிக் கொண்டு இருக்கும் இதழ்கள் இப்போது புன்னகையில் விரிந்திருப்பதைக் கண்டவளுக்கு அதிர்ச்சியில் விழிகள் இரண்டும் பெரிதாக விரிந்து கொள்ள,
அவளது காதல் மனமோ நீண்ட வருடங்களுக்கு பிறகு அவனது வசீகர புன்னகையை தன் மனப் பெட்டகத்தில் சேமித்துக் கொண்டது.
அவனையே இமைக்க மறந்து வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தவளின் இதயத் துடிப்பு ஒரு கணம் நின்று நிதானித்தது.
வார்த்தைக்கு வார்த்தை லியா என்று சிரித்து பேசிக் கொண்டு இருந்தவனின் தொனியே அப்போது தான் பேதைக்கு உரைத்தது போலும்,
இவ்வளவு நேரமும் தன்னிடம் புயலாக சீறிப் பாய்ந்தவனா இவன்?
அவனது முகத்திலில் தோன்றிய அந்த வசீகர புன்னகையும் கனிவும் தனகானது இல்லை என்று புரிந்த கணம் உச்சி முதல் பாதம் வரை மெல்லிய நடுக்கம் பரவ ஆரம்பித்தது.
முதல் முறையாக மனதில் வெறுமையும் பயமும் ஒருங்கே ஆட்கொள்ள, உருவமில்லா பயப்பந்தொன்று நெஞ்சைக் கவ்வும் உணர்வு.
” ஓகே லியா ஐ வில் சீ யூ இன் டென் மினிட்ஸ்” என அழைப்பை துண்டித்தவனின் இதழ்களில் தேங்கிய புன்னகையை வெறித்துக் கொண்டே இருந்தவளை விசித்திரமாக பார்த்தவன், அவ் ஆழ்ந்த பார்வையில் எரிச்சலுற்றவன் அவளை சொடக்கிட்டு அழைத்தான்.
அவளோ, சட்டென திடுக்கிட்டு விழித்தவளாய் ” அ…அது யா…யார்?” என குரல் உடைய கேட்டாள் பெண்.
புருவங்கள் இடுங்க ” ஹூ ?” என அவளிடமே கேட்டான்.
“லியா” என்றாள் நா தழுதழுக்க,
” தட்ஸ் நன் ஆஃப் யூர் பிஸ்னஸ்” என்று எரிந்து வீழ்ந்தவனோ அவளைக் கிஞ்சித்தும் பொருட்படுத்தாமல் விறுவிறுவென காரினை புழுதி பரவ கிளப்பிக் கொண்டு சென்றிருந்தான்.
தன்னவன் எவளோ ஒருவளை காண செல்கின்றான் என்ற எண்ணமே அவளை நிலையில்லாமல் தவிக்க வைக்க, அதுவே தானாக அவளின் விழிகளில் இருந்து கண்ணீர் பொலபொலவென நில்லாமல் வழிய வைத்திருந்தது.
“யாழிசை…. யாழிசை….” என்று சத்தமாக அழைத்துக் கொண்டே வந்த தன் அன்னையின் குரல் பின்னால் கேட்கவும், கண நேரத்தில் முகத்தை அழுந்தத் துடைத்துக் கொண்டே திரும்பியவள் முகமோ ஒருவித இறுக்கத்துடனேயே இருந்தது.
அவளின் முகத்தை ஏறிட்டு பார்த்தவருக்கு அவளின் விழிகளே அவள் அழுதிருக்கின்றாள் என்று காட்டிக் கொடுக்க,
” ஏன் இசை உன்ன நீயே காயப்படுத்துகிற? கண்டதையும் யோசிக்காம உன் வாழ்க்கையை வாழ பாரு மா” என்றவரை உறுத்து விழித்தவள், “வாழ்க்கையை வாழப் பாருனு இவ்வளவு சாதாரணமா சொல்லிட்டீங்களே மா… ஆனா என்னோட ஜிதனை என்கிட்ட இருந்து மொத்தமா மறைச்சுட்டு, இப்போ எதை வச்சு என்னை வாழச் சொல்றீங்க?” என்று அவள் கேட்ட கேள்வியில் வாசுகி ஒரு கணம் அதிர்ந்து போனார்.
“என்.. என்ன சொல்ற மறைச்சேனா?” என்று குரல் திணற பதட்டத்துடன் கேட்டவரின் உடல் மொழியை அப்போது கவனித்து இருந்தாலே பின் நாளில் அவள் அனுபவிக்கப் போகும் மரண வேதனையை தடுத்திருக்கலாமோ என்னவோ!
“ஜிதனுக்கு ஆக்சிடென்ட் ஆகி அவருக்கு மெமரி லாஸ்-ங்கிற விஷயத்தை என்கிட்ட மறைச்சீங்களே… அப்போ ஒரு நிமிஷமாவது என் நிலைமை என்ன ஆகும்னு யோசிச்சீங்களா? எனக்கு புரியுது நான் கஷ்டபட கூடாது ன்னு மறைச்சிங்கன்னு பட் ஜிதன் என்னை மொத்தமா மறந்துட்டு இருக்கார் – ங்கிற உண்மையை விட, அந்த உண்மையை நீங்க எல்லாரும் சேர்ந்து என்கிட்ட இருந்து மறைச்சீங்களே, அந்தத் துரோகம் தான் இப்போ என்னை இவ்வளவு காயப்படுத்து மா ” என்றவளின் கலங்கிய பேச்சில் அவளை ஏறிட்டு பார்க்க கூட திராணியற்று குற்ற உணர்வில் மனமோ தவியாய் தவிக்க ஆரம்பித்து இருந்தது.
“அப்போவே சொல்லி இருந்தால் கூட நான் அவர் கூடவே இருந்திருப்பேன் ல பட் இப்போ…?” என கேள்வியாக நிறுத்தி வாசுகியை ஏறிட்டவள்,
“பேசுங்கம்மா… ஏன் அமைதியா இருக்கீங்க?…. இன்னைக்கு அவர் எவளோ ஒருத்துகிட்ட சிரிச்சுப் பேசிட்டு, என்னை ஒரு டிரைவர் கூடச் சேர்த்து வச்சு அசிங்கமா ஏசிட்டு போறார் என… எனக்கு அவ்வளவு வலிக்குது மா, என்னவோ நான் உயிரோட இருந்துட்டே செத்து போன பீல் கொடுக்குது” என விம்மி வெடித்து அழுதவளின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் ஈட்டியாய் அவர் நெஞ்சைத் தைத்தது. தன் மகளின் நிலையைப் பார்த்து மருகியவர், “அழாத டி. எல்லாமே சரி ஆகிடும் பொறுமையா இரு” என்றவர் அவளை வாரி அணைத்துக் கொண்டு முதுகை நீவி கொடுத்தார்.
“வா உள்ள போகலாம் மா” என்றபடி அவளை அணைத்த படி உள்ளே அழைத்து சென்று சோபாவில் அமர வைத்தவர் அவளின் நலுங்கிய தோற்றத்தைக் கண்டு மனம் வெதும்ப ” நைட்ல இருந்து வெறும் வைத்தோட இருக்க, சாப்பிடு மா…” என்றார் ஆதுரமாக,
” எனக்கு பசிக்கலை” என்றாள் சட்டென்று,
” என்ன விளையாடுறியா இசை? நைட் சாப்பிடாம இப்போ மயங்கி விழ போற அளவுக்கு உன்னோட ஹெல்த் கண்டிஷன் மோசமா இருக்கு. சொல்றதை கேளுமா?”
” முடியாது” என்று விடாப்பிடியாக சொன்னவளிடம், ” நகுல் எல்லாம் சொன்னான்” என்றவரின் ஆழ்ந்த குரலில்,
எரிச்சலாக ” சோ வாட்? ” என அலட்சியமாக திருப்பிக் கேட்டாள் யாழிசை.
” சாப்பிடுன்னு அர்த்தம்” என்றார் அவளுக்கு சளைக்காமல்,
” ஐயோ எனக்கு தான் பிடிக்கலைன்னு சொல்றேன் ல அப்பறம் ஏன் என்னை கம்பல் பண்றீங்க?” என்றவளின் குரல் உயர, வாசுகிக்கோ இருந்த பொறுமை மொத்தமும் காற்றில் பறக்க,
“இப்போ என்ன? ஆமா நான் உன்கிட்ட மறைச்சது தப்பு தான். அதுக்கு உன் கால்ல விழணுமா?” என்ற படி அவள் சுதாரிக்கும் முன்னரே குனிந்து அவளின் பாதத்தினை பிடித்திருக்க,
அவளுக்கோ, தூக்கி வாரிப் போட்டது.
“அம்மா என்ன பண்றீங்க?” என்ற படி அவரை தூக்கி விட்டவள் “என் மனநிலை தெரிஞ்சும் கூட நீங்க என் கால்ல விழுந்து என்னை ஹர்ட் பண்ணிட்டு இருக்கீங்க மா” என குரல் தழுதழுக்க சொன்னவள் முகத்தை அழுந்த துடைத்துக் கொண்டு, ” ஓகே பைன் இப்போ என்ன? நான் சாப்பிடணும் அவ்ளோ தானே” என்றவளோ தன் முன்னால் மேசையில் வைக்கப்பட்டிருந்த உணவு தட்டை வெறித்து விட்டு வாசுகியை ஓர் ஆழ்ந்த பார்வை பார்த்தவள் “ஊட்டி விடுங்க மா” என்றாள்.
அவளின் வார்த்தைகளில் ஆனந்தமாக அதிர்ந்தார்.
அது போதுமே அவருக்கு,
” இதோ மா..” என விழிகள் ஆனந்தத்தில் கலங்க சொன்னவர் அவளுக்கு உணவை பிசைந்து முதல் கவலத்தை ஊட்டி விட,
வீணாக அன்னை மேல் கொண்டிருந்த கோபம், அவரின் கரிசனத்தின் முன் பாகாக கரைந்து போனது.
சிறிது நேரத்திலேயே தட்டும் காலியாக, ” இப்போ ஓகேவா மா?” என கேட்டவளின் இதழ்களில் தவழ்ந்த புன்னகை அவரையும் தொற்றிக் கொள்ள,
” இது போதும் இசை… உன் உடம்பை நீயே வருத்திக்காம இருந்தாலே அதுவே எனக்கு பெரிய நிம்மதி தான்” என்றார் வாசுகி, தட்டை எடுத்துக்கொண்டு எழுந்தபடி,
வாசுகி சென்றதும் யாழிசையின் முகம் மீண்டும் பாறையாக இறுகியது.
மெல்ல எழுந்து மாடிப் படிகளில் சென்றவளின் எண்ணம் என்னவோ ” லியா யார்?” என்ற கேள்வியில் தேங்கி நிற்க, இதே சமயம் நகரத்தின் மத்தியில் அமைந்திருந்த உயர் ரக கேளிக்கை விடுதியில் லியாவின் முன் மதுக் கோப்பையுடன் அமர்ந்திருந்தான் ஜிதன்.
