Menu

நொடி – 2

“யாழிசை இட்ஸ் ஓவர் இதோட நம்ம பிரண்ட்ஷிப்பை டிவொர்ஸ் பண்ணிக்கலாம்” என்று கோபமாக சொன்ன நயா விறுவிறுவென வகுப்பறையை நோக்கி நடக்க, அவளின் பின்னாலேயே வேக வேகமாக ஓடிவந்த யாழிசையோ “சாரி டி ப்ளீஸ் ப்ளீஸ் மன்னிச்சிக்கோ” என காலில் விழாத குறையாக கெஞ்ச,

“இரிடேட் பண்ணாம போய்டு, வர்ற வெறில உன்ன என்ன பண்ணுவேன்னு தெரியாது” என தன் கோபத்தை மிகவும் கடினப்பட்டு அடக்கிய படி கூறியவளின் வார்த்தைகளை அவள் புரிந்து கொள்வாளா என்ன?

மீண்டும் “அதான் சாரி சொல்றேன்ல” என்று அவளுக்கும் குறையாத சீற்றத்துடன் யாழிசை சீறவும், இப்போது நின்று பின்னால் திரும்பி அவளைத் தீயாக முறைத்த நயா, “என்னடி மண்ணாங்கட்டி சாரி, ச்சே மானமே போச்சு” என்று தலையை பிடித்துக் கொண்டு   பெஞ்சில் அமர்ந்தவளை கவலையாக பார்த்தவள் “ என்ன தான் பண்ண சொல்ற? டான்ஸ் பண்றபோ எனக்கு நீ அவரை போல தெரிஞ்ச சோ உன்ன” என்று சொல்ல வந்தவளை தனது புத்தகப் பையை வைத்து எதிரே நின்றவளை அடி வெளுக்க,

“ஆஹ்ஹ்ஹ்ஹ் வலிக்குது அடிக்காத டி, ஹையோ அதான் பர்போமன்ஸ் முடியிறப்போ ஸ்டேஜ் க்ளோஸ் பண்ணிடாங்கல அப்போ நான் உன்ன கிஸ் பண்ணதை யாரும் பார்த்திருக்க மாட்டாங்க”என்று கத்தியவளை எட்டி வாயை மூடியவள் “ யார் பார்க்க கூடாதோ அவங்க பார்த்திட்டாங்க மிஸ் யாழிசை என ஒவ்வொரு வார்த்தைகளையும் தெளிவாக கூறியவள் பூனை கண்ணை மூடிக்கிட்டா போல உலகம் இருண்டுடாது” என்க,

அதிர்ச்சியாக அவளை ஏறிட்டு பார்த்தவள் தனது இதழ்களை மூடியிருந்த அவளின் கையை பிரித்து எடுத்து விட்டு “ என்ன சொல்ற?” என அதிர்ச்சியாக கேட்க,

“எஸ் கர்டின் க்ளோஸ் ஆகுற சின்ன கேப்ல என் லிப்ஸ்ல இருக்க கற்பும் போச்சு அதே நேரம் நம்ம மானமும் கப்பலேரி போச்சு” என்று சொன்ன நயா மேசையில் தலை வைத்து படுத்துக் கொள்ள,

“நான் தான் அறிவு கெட்டு போய் கிஸ் பண்றேன்ல நீ தள்ளி விட்டு இருக்கலாமே” என்றவளை “சாவடிச்சிவேன் , நீ லிப்லாக் பண்ண ஷாக்ல ஐ ஜஸ்ட் ஷாக்ட்” என்றிட,

“ஹையோ! இனி நான் எப்படி ஜிதனை பேஸ் பண்ணுவேன்? ஓஹ் கோட்” என்று சொல்லிக் கொண்டே மேசையில் கிடந்த தனது பையில் முகத்தை புதைத்துக் கொண்டவளை பாவமாக பார்த்திருந்தாள் நயா.

“இப்போ பீல் பண்ணி எந்த யூஸும் இல்ல. கர்டன் க்ளோஸ் பண்ற அந்த சின்ன கேப்ல உன் வாத்தியோட கண்ணு ஷாக்ல விரிஞ்சதை பார்த்து தான் எனக்கே சுயம் வந்துச்சு” என்று சொல்ல,

“ஹையோ ப்ளீஸ் அதையே சொல்லிட்டு இருக்காத செம்ம டென்ஷன் ஆகுது” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே சில மாணவர்களும் நிகழ்வுகள் முடிந்து தங்கள் உடைகளை மாற்றிவிட்டு வகுப்பறைக்குள் வரவும், சற்றே நிமிர்ந்து அனைவரையும் குறுகுறுவென  பார்த்தாள்.

அவள் பார்ப்பதை பார்த்த நயாவோ “டோண்ட் வொர்ரி உன் வாத்தியை தவிர வேற யாரும் உன் லீலையை பார்க்கலை” என்று சொல்ல,

பொறுமை இழந்த பெண்ணவளோ சட்டென பையை எடுத்துக் கொண்டு எழுந்து வகுப்பறையை விட்டு வெளியேறி விட,

சட்டென எழுந்து அவள் பின்னாலேயே சென்ற நயா “எங்கடி போற?”  என்று கேட்டுக் கொண்டு வந்தவளிடம் “நான் தப்பானவ இல்லன்னு சொல்ல போறேன்” என்று கூறியவளை “பைத்தியமாடி உனக்கு? சார் சார் என் ப்ரெண்ட் உங்கள போல தெரிஞ்சா அதான் ஸ்டேஜ் ல வச்சு லிப்லாக் பண்ணிட்டேன்னு சொல்ல போறியா?” என கேட்டவள் விழிகள் விரிய அதிர்ச்சியாக நின்றிருந்தாள்.

அவளுக்கு தகுந்த பதில் கூறலாம் என இதழ்களை பிரித்து வார்த்தைகளை கோர்க்கும் முன்னரே, விடாமல் தன்னைக் கடிந்த படி நின்றிருந்தவளின் அதிர்ந்த  தோற்றத்தை  ஓர் மார்க்கமாக பார்த்து விட்டு, அவளின் பார்வை செல்லும் திசையை பார்த்த யாழிசைக்கோ மயக்கம் வராத குறை தான்.

ஆம், அவளின் ஜிதன் தான் அவளின் பின்னால் வந்து நின்றிருந்தான்.

இருவரையும் உணர்ச்சியற்று வெறித்து பார்த்தவனோ “ ஹியர் லுக்…” என்று சொல்லும் போதே எங்கிருந்து தான் அவ்வளவு தைரியம் வந்ததோ “ஐ லவ் யூ ஜிதன்” என்றிருந்தாள் யாழிசை.

நயாவுக்கோ, யாழிசையின் செயலில் அதிர்ச்சியானவளுக்கு  நெஞ்சில் நீர் வற்றி போனது.

அவள் காதலை கூறியதும் அவன் அதிரவெல்லாம் இல்லை.

இது அவன் எதிர் பார்த்தது தான் என்பதை போல நின்றிருந்தவன் “நீ இவ்ளோ சீக்கிரம் சொல்வனு ஐ டிட் நாட் எக்ஸ்பெக்ட்” என்று சொன்னவனோ “ஐ க்னோ நீ என்னை லாஸ்ட் ஒன் மந்தா பாலோ பண்றனு பட் சாரி மிஸ் யாழிசை எனக்கு இந்த லவ்  ல எல்லாம் இன்ட்ரெஸ்ட் சுத்தமா இல்ல சோ…” என்றவன் குரலை செருமிக் கொண்டே “ஃபைனல் எக்சாம்ஸ் ல கான்ஸ்சென்ரேட் பண்ணுங்க” என்று அழுத்தம் திருத்தமாக சொல்லி விட்டு திரும்பி நடக்க ஆரம்பித்தவன் முகம் என்னவோ உணர்வுகளை துடைத்திருந்தது.

என்ன இவன்? எதிர் பார்க்காத நேரமென எதிரே வந்தான்? என் காதல் அவனின் உயிர் தீண்டும் முன்னரே  கொஞ்சம் கூட யோசிக்காமல் மறுத்து விட்டு என்னென்னவோ பேசிவிட்டு செல்கிறான்? என்று கண்மண் தெரியாத ஆத்திரம் வந்தது.

மீண்டும் அவன் பின்னோடு போக துணிந்த யாழிசையின் கரத்தை பற்றிய நயா “ இப்படி சொல்லிட்டு போற சார்கிட்ட இன்னும் எடக்கு மடக்கா பேசி ப்ராப்ளம்ஸ் கிரியேட் பண்ணிக்காத டி. கொஞ்சம் அமைதியா இரு பார்த்துக்கலாம்” என்றவளை “நான் ஒன்னும் சின்ன பிள்ள இல்ல, தத்து பித்துன்னு லவ் பண்ண, என் டீப் லவ் பத்தி இன்னும் ஜிதன் என்ன? என் ப்ரெண்ட் நீ கூட புரிஞ்சிகல” என ஆழ்ந்த குரலில் கூறியவளை,

“அச்சோ! உன்னை நம்பலனாலும், உன் டீடீடீடீப் லவ்வை  என்று இழுவையாக சொன்னவள் நம்புறேன் பிகாஸ் வாத்திக்கு  தெரியிற போலவே உன் வாட்டர்பால்ஸை திறந்து விட்டுட்டு இருந்திருக்க அது தான் ஹைலைட்”என்று அடைக்கப்பட்ட சிரிப்புடன் கூற,

இவ்வளவு நேரமும் அவனின் நிராகரிப்பில் கலங்கிப் போய் நின்றிருந்தவள் அவளின் பேச்சில் செங்காந்தள் மலர் போல் சிவந்தவள் “ கியூட் ரிஜெக்ஷன்” என இதழ்களுக்குள் சிலாகித்து கொண்டவளோ “அதான் வாத்திக்கே தெரிஞ்சி போச்சுல இனிமேல் ஓபன் ஆஹ் விடாமல் ப்ரொபோஸ் பண்ணி டாச்சர் பண்ண போறேன்” என்று அவன் சென்ற திசையை பார்த்துக் கொண்டு நின்றவள் குரலில் அத்தனை உறுதி இருந்தது.

“என்னவோ ப்ராப்ல்ம்ஸ் வராத போல பார்த்துக்கோ…”  என்று சொன்ன நயாவோ “பட்  என் லிப்ஸ்ல உன்னால கற்பு  போச்சு அதான் ஜீரணிக்கவே முடியல” என்று வராத கண்ணீரை துடைத்தவளை “ இட்ஸ் ஓகே, பியூச்சர்ல உன்ன கல்யாணம் பண்ணிக்க போறவர் கிட்ட நான் வேணும்னா எடுத்து சொல்றேன்” என்றவளை “அடிங்க…” என்று அடிக்க முயன்றவளின் கையில் அகப்படாமல் ஓடியிருந்தாள் யாழிசை.

👁️ 239 Views
1 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
⚠️ இத்தளத்தின் உள்ளடக்கங்கள் DMCA
பாதுகாப்பில் உள்ளது. Copy / Screenshot / PDF
உருவாக்குதல் தடை செய்யப்பட்டுள்ளது.