“வர வர ஓவரா பண்ற நயா” என்று கறுவியவளை மென் புன்னகையுடன் பார்த்தவள் “திங்க் பண்றேன் ல டோண்ட் டிஸ்டர்ப் மீ” என்றவளை கொலைவெறியுடன் முறைத்தாள் யாழிசை.
“அவ்ளோ பாசமா எல்லாம் பார்க்காத மா. எனக்கு வயிறு வலிக்க போகுது” என்க,
” பின்ன இதோட ஐஞ்சாவது ஐஸ் க்ரீம் உள்ள போயிட்டு இருக்குல வலிக்கதா பின்ன?” என்றவள் சலித்துக் கொண்டே” ஏர்லியா வந்ததுக்கு அட்லீஸ்ட் ஒரு ஐடியா கொடுத்தியா?” என ஆற்றாமையாக கேட்டவளை ” ஒண்ணு தோணிச்சு பட் நீ என்னை திட்டுறல” என்றாள் உறையில் படிந்திருந்த ஐஸ் க்ரீமை பார்த்துக் கொண்டே,
அவளின் எண்ணம் போகும் திசையை அறிந்தவளோ நெற்றியை நீவிக் கொண்டே சுற்றும் முற்றும் பார்த்து விட்டு “யாரும் பார்க்கல…” என்று சொல்லிக் கொண்டு நயாவின் புறம் திரும்பியவளுக்கு ஐயோடா என்றிருந்தது.
பின்ன அவள் சொல்வதற்குள் உறையில் படிந்திருந்த ஐஸ் க்ரீமை நாவால் துடைத்து ரசித்து விழுங்க ஆரம்பித்து இருந்தாள்.
“எனக்குனு வந்து வாச்சிருக்க” என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போதே செமினார் ஹாலுக்குள் மிக நேர்த்தியாக உள் நுழைந்திருந்தான் அவளின் ஜிதன்.
‘ஹை மை ஜிது டார்லிங்’ என உள்ளே ஆர்ப்பரித்த மனதை முயன்று அடக்கியவளுக்கு அதன் பின் விழிகள் இரண்டும் வேறெங்கும் நோக்கவேயில்லை.
அவனை மட்டுமே ஆழ்ந்து நோக்கிக் கொண்டிருந்தது.
இனி இடியே வீழ்ந்தாலும் உணர மாட்டாள் என புரிந்து கொண்ட நயா சற்றே சரிந்து மெல்லிய குரலில் “இப்போ சொல்லவா?” என்று கேட்க,
” நோ தேங்க்ஸ்” என ஹஸ்கி குரலில் கூறியவள் அவனை விழுங்குவது போல பார்க்க ஆரம்பித்து விட்டாள்.
பாடம் நடத்த ஆரம்பித்தவன் அவளின் ஆளை விழுங்கும் பார்வையை கண்டு கொண்டான்.
அதில் ஒரே ஒரு கணம் தடுமாறியவன் அதன் பின் அவள் புறம் திரும்பக் கூட இல்லை.
“வீணா ஸ்டான்ட் அப்” என்றான் சட்டென,
அவன் வீணா என பெயர் கூறியதும் என்னவோ மாய வலையிலிருந்து விடுபட்டு உணர்வுக்கு வந்தவள் அவன் அழைத்த அப் பெண்ணை திரும்பி பார்த்தாள்.
அவளோ வெளிறிய முகத்துடன் எழுந்து நிற்க,
“படிச்சு கொடுத்துட்டு இருக்கப்போ என்ன பண்ணிட்டு இருக்கீங்க வீணா?” என்றவன் குரலில் இருந்த அழுத்தத்தில் ஹாலில் ஊசி வீழ்ந்தால் கூட சத்தம் கேட்கும் அளவுக்கு நிசப்தமானது.
“சார்… ஃபோன் ல…” என்ற வார்த்தைகளை முடிக்க முடியாமல் அழுகை தொண்டையை அடைத்து அப் பெண்ணின் விழிகளும் கலங்கி விட்டன.
” ஹியர் லிசன் என் பீரியட் ல யாரும் மொபைல் யூஸ் பண்ண கூடாது காட் இட்?” என்றவன் முகமோ இறுகிப் போய் இருந்தது.
அவனின் இறுகிய தோற்றத்தை பார்த்த யாழிசைக்கோ அவனைப் பார்க்கவே பயமாகத் தான் இருந்தது.
‘வாத்திக்கு இவ்ளோ கோவம் வருமா?’ என மனதுக்குள் கேட்டுக் கொண்டவள் நயாவினை பார்க்க, அவளோ நடப்பவற்றை பேய் அறைந்ததைப் போல பார்த்துக் கொண்டிருந்தாள்.
“என் ஆளை நீ ஏன் வச்ச கண்ணை வாங்காம பார்க்குற?” என்ற யாழிசையின் கேள்வியில்,
” ஆமா எனக்கு வேண்டுதல் பாரு” என்று சொல்லவும் ” கெட் அவுட் ஃப்ரம் மை கிளாஸ்” என அவன் சீறவும் சரியாக இருந்தது.
திடுக்கிட்டு விழித்த இருவரும் அப்போது தான் அவன் எங்கே என சுற்றும் முற்றும் பார்க்க,
இருவரும் அமர்ந்திருந்த வரிசையின் முன் வந்து நின்றவன் “எக்ஸ்கியூஸ் மீ” என சொடக்கிட்டு அழைத்தான்.
விழிகள் பெரிதாக விரிய இருவரும் முன்னே திரும்ப, “ஸ்டான்ட் அப்” என்றான்.
“ரெண்டு பேரும் என்ன பேசிட்டு இருந்தீங்க?” என இருவரையும் உறுத்து விழித்த படி கேட்க,
“மேனேஜ்மெண்ட் ரிலேடட் ஆஹ்” என்று நயா சொல்லிக் கொண்டிருக்கும் போதே யாழிசையோ மெலிதாக ஹஸ்கி குரலில் “நீங்க என் ஆள் னு சொன்னேன்” என கண்களை சிமிட்டிக் கொண்டதும், பக்கத்தில் நின்றிருந்த நயா அதிர்ந்தாளோ இல்லையோ எதிரே நின்றவன் விழிகள் தான் உச்சகட்ட அதிர்ச்சியில் அதிர்ந்து விரிந்து கொண்டன.
ஓரிரு விநாடிகளில் தன்னை மீட்டுக் கொண்டவன் அவளை தீயாக முறைத்து விட்டு நகர முற்பட்ட போது இருவரும் இருக்கையில் அமர தயாராக “உங்களை நான் இருக்க சொன்னதா ஞாபகம் இல்லையே” என்றவன் குரல் இறுகி ஒலிக்க,
” சாரி சார்” என இருவரும் ஒருங்கே சொல்லி விட்டு அப்படியே தலை தாழ்த்தி நின்றிருக்க,
இருவரையும் கடந்து சென்று பாடத்தை நடத்த ஆரம்பித்தவன் அவளை அதன் பின் ஒரு பொருட்டாக கூட கண்டு கொள்ளவில்லை.
அவள் மேல் என்ன தான் ஓர் ஈர்ப்பு இருந்தாலும் அனைவரும் இருக்கும் போது அதுவும் செயலமர்வு அறையில் அவனிடம் ரகசிய குரலில் அவள் சொன்ன விடயம் என்று நினைக்கும் போதே ஆத்திரம் தான் வந்தது.
யாரேனும் அவளின் நடத்தையை கண்டால் ? படித்துக் கொண்டிருக்கும் போதே தன்னை வைத்து அவளுடன் இணைத்து பேசி அவளின் படிப்பு கெட்டு விடக் கூடாது என அதி கவனமாக இருந்தான் அவன்.
“ஓகே தென், டுமோரோ எக்ஸாம்’கு ப்ரீபேர் பண்ணிட்டு வாங்க” என்று சொன்னவனோ நிமிர்ந்து “யாழிசை கம் டு மை கேபின்” என்று விட்டு ஹாலில் இருந்து வெளியேறிருக்க,
இங்கோ யாழிசைக்கு நிலை கொள்ள முடியவே இல்லை.
முகம் விகர்சிக்க மின்னல் வேகத்தில் எழுந்தாள்.
அவள் எழுந்த வேகத்தில் மேசையிலிருந்த அவளின் பிளாஸ்டிக்கினாலான தண்ணீர் பாட்டிலோ பெருத்த சத்தத்துடன் கீழே விழுந்தது.
அவளுக்கு அதுவெல்லாம் ஒரு பொருட்டே இல்லை.
“நயு பேபி சமத்தா என் பாட்டில எடுத்து வை. நான் சாரை மீட் பண்ணிட்டு வரேன்” என பற்கள் தெரிய புன்னகைத்தவள் அவளின் அதிர்ந்த முகத்தை பார்த்து விட்டு திரும்பியவள் விழிகள் கூட அதிர்ச்சியில் விரிந்து கொண்டன.
ஜிதன் தன் அலைபேசியை எடுக்க மீண்டும் ஹாலை நோக்கி வந்துக் கொண்டிருக்கும் போதே ஹாலிற்குள் இருந்து சத்தம் கேட்க,
விரைந்து உள்ளே நுழைந்தவன் கண்டது என்னவோ, சுற்றம் உணராது முதல் வரிசையிலேயே அமர்ந்த படி நயாவிடம் கதைத்துக் கொண்டிருந்த யாழிசையை தான்.
அவளையும் கீழே கிடந்த பாட்டிலையும் ஒரு பார்வை பார்த்து விட்டு எட்டி மேசை மீதிருந்த அலைபேசியை எடுத்தவன் என்ன நினைத்தானோ குனிந்து அந்த பாட்டிலையும் எடுத்து அவள் முன் வைத்து விட்டு விறுவிறுவென சென்றவனை தான் அனைவரும் ஆவென பார்த்திருந்தனர்.
இனி அவளை கேட்கவும் கேட்கும் வேண்டுமா என்ன?
அவன் வைத்து விட்டு போன தனது தண்ணீர் பாட்டிலை இன்று தான் புதிதாக பார்ப்பதை போல பார்த்து வைக்க, “போதும் டி பாட்டில்’ கு ப்ரொபோஸ் பண்ணிடாத” என்றாள் நயா மெல்லிய குரலில்,
அவளுக்கு அவளின் குரல் எல்லாம் கேட்கவே இல்லை.
அவனின் பெர்ஃப்யூம் வாசம் அவளின் தண்ணீர் பாட்டிலில் இருந்து வருவதை போல உணர்ந்தாள்.
அப் பாட்டிலில் பார்வையை பதித்துக் கொண்டே தனது பையை திறந்து
அவன் பிடித்த இடத்தில் தன் கரம் படாது, பாட்டிலின் கீழ் பகுதி பிடித்து உயர்த்தி தனது பைக்குள் பத்திரப் படுத்திக் கொண்டாள்.
அவளை விசித்திரமாக பார்த்த நயாவோ, “அம்மாடியோ ஹேய் போதும்டி பாட்டில்க்கு வலிச்சிட போகுது” என்றவளிடம் “நல்ல வேளை உள்ள அவ்ளோ வாட்டர் இல்ல” என்று பெரு மூச்சை விட்டுக் கொண்டாள் யாழிசை.
“வர வர பைத்தியம் போல பண்ற டி” என்க,
“ஹி ஹி ஹி… நயு, பார்த்தியா நீ ஐடியா கொடுக்காமயே எல்லாமே தானா நடக்குது” என்று பழிப்பு காட்ட,
“ஆமா, நடக்குது நடக்குது… போ கேபின் ல போய் மீட் பண்ணிட்டு வா” என்றாள் கிண்டலாக,
“ஆமால” என்று மீண்டும் அதே வேகத்துடன் எழ போனவளின் கரத்தை பற்றி மெல்ல எழுப்பி விட்டவள் “போதும் நீ எந்திரிக்கிற வேகத்துல டேபிலை தள்ளி, வாத்தி வந்து தூக்கி வைக்கவும், பிறகு அதை நீ பத்திரம் பண்ணி, உன் வீட்டுக்கு கொண்டு போக காலேஜ் மேனேஜ்மெண்ட் விடாது மேடம்” என்று அவள் சொன்ன வேகத்தில் இதழ் பிரித்து சிரித்தவள் “போடி லூசு” என்று சொல்லிவிட்டு அவனின் கேபினை நோக்கி விரைந்திருந்தாள் யாழிசை.
