Menu

நொடி – 6

அவள் உறுதியாக கூறினாலும் அவளின் மென்மையான மனம் பற்றி அறிந்த வாசுகி “தட்ஸ் குட்” என மென் புன்னகையுடன் எழுந்து சென்று அவளுக்கென செய்து வைத்திருந்த அல்வாவை எடுத்து வந்து அவளுக்கு ஊட்டியவர் “எப்படி இருக்கு?” என புருவம் உயர்த்த,

 

“மா சூப்பர், வழமை போல செம்மையா இருக்கு” என்று சப்பு கொட்டி சாப்பிட்டவளை உளமாற கண்டு ரசித்தவர் “எப்பவும் ஹாப்பியா இருக்கணும்” என்று சொன்னவர் அறிந்திருக்கவில்லை அவளின் அதீத மனஅழுத்ததிற்கும் வெறுப்புக்கும் காரணமாகப் போகின்றார் என, 

 

“ம்ம்… போதும் போதும்” என்றவளோ பையை எடுத்துக் கொண்டு எழுந்தவள் “செம்ம டயர்ட் ஆஹ் இருக்கு ரெஃப்ரஷ் ஆகிட்டு வந்து கன்டினியூ பண்றேன். எடுத்து வைங்க மா” என்று விட்டு வேகமாக தன் அறையை நோக்கி விரைந்திருந்தாள். 

 

மெலிதாக புன்னகைத்துக் கொண்டே அவளுக்காக அனைத்தையும் எடுத்து வைத்து விட்டு சமையலறைக்குள் நுழைந்து கொண்டார் அவர். 

 

************************

 

அனைத்திற்கும் சுத்தம் நேர்த்தி என பார்ப்பவள், காலேஜிலிருந்து வந்ததும் தனது உடையை களைந்து குளித்து விட்டே  அடுத்த வேலைகளை  பார்ப்பவளுக்கு இன்று அந்த சுத்தம் எங்கே போனது என்றே தெரியவில்லை.

 

தன் அறைக்குள் புகுந்து கதவை சாற்றி விட்டு தனது பையை அந்த பையிற்கே வலித்து விடுமோ எனும் ரீதியில் கழற்றி மேசை மீது மெல்ல வைத்தவள், அதனை பார்த்துக் கொண்டே”ஜிதன் பேபி, மூச்சு முட்டுதா? டோண்ட் ஒர்ரி மா” என தன் பையோடு பேசியவள் மெல்ல சிப்பை திறந்து தன்னவன் தொட்ட தன் தண்ணீர் பாட்டிலை எப்படி பைக்குள் வைத்தாளோ அதே போல வெளியில் எடுத்து மேசையில் வைத்தவளுக்கு இன்னுமே அவனின் வாசம் அந்த தண்ணீர் பாட்டிலில் இருந்து வருவதை போல உணர்ந்தாள். 

 

“இனிமேல் உனக்கு ஜித்து பேபி தான் நேம்” என சொல்லிக் கொண்டே அதற்குள் கொஞ்சமே கொஞ்சமாக இருந்த நீரை பார்த்து விட்டு, 

 

“ஹையோ! இதை ஊத்தி தான் ஆகணுமா?” என தனக்குள் கேட்டுக் கொண்டவளுக்கு அந்த தண்ணீரை வெளியில் ஊற்றும் எண்ணமெல்லாம் அரவே இல்லை. 

 

அவளின் மனசாட்சியோ ‘ஆமா நீ சாகுற வரையும் வச்சிருப்ப அது வரையும் உள்ள இருக்க தண்ணி தாங்குமா? நாறி உன் ஜிதன் ஸ்மெல் போய்டும்’ என்று எச்சரிக்க,

 

“வெல் உருப்படியா ஒரு அட்வைஸ் கொடுத்திருக்க” என தன் மனதை மெச்சியவள் மனமே இல்லாமல் பாட்டிலை எடுத்துக் கொண்டு பால்கனிக்கு சென்றாள்.

 

வெளியில் ஊற்றி விடலாம் என்று எண்ணி வந்தவளுக்கு சட்டென ஓர் எண்ணம் தோன்ற, போன வாரம் சென்று ஆசையாக வாங்கி வந்த ரோஜா செடியின் ஞாபகம் வந்தது.

 

“பெர்பெக்ட் ஐடியா” என இதழ்களுக்குள் சொல்லிக் கொண்டவள் இன்னுமே துளிர் விடாது இருந்த செடியின் அருகே நெருங்கியவள் ” இது ஜிது ரோஸ் பேபிகாக” என்று சொன்னவளோ பாட்டிலை திறந்து நீரை செடியில் ஊற்றினாள். 

 

“இனி சமத்தா வளரணும்” என்ற படி செடியினை வருடியவள் அறைக்குள் சென்று மீண்டும் மேசை மீது பாட்டிலை வைத்து விட்டு டிராயரை திறந்து சிவப்பு நிறத்திலான ரிபனை எடுத்து பாட்டிலினை சுத்தி முடிச்சிட்டவள் ” இன் பியூச்சர் ல இந்த ஸ்வீட் மெமரிஸ் எல்லாமே என் ஜிதன் பார்த்தா எப்படி ரியாக்ட் பண்ணுவார்?” என்று தனக்குள் எண்ணிப் பார்த்துக் கொண்டவளுக்கு அந்த நினைவே முகத்தை சிவக்க செய்திருந்தது.



இதழ் குவித்து ஊதிக் கொண்டே அடுத்த டிராயரை திறந்து அதற்குள் பாட்டிலை வைத்து மூடியவளுக்கு அந்தோ பரிதாபம் மூட முடியாமல் அதுவோ சதி செய்தது.

 

பின்னே, அதற்குள் அவளவன் சாப்பிட்டு விட்டு வீசிய சாக்லேட் பேப்பர், துடைத்து விட்டு வீசிய டிஷு முதல் சாக் பீஸ் வரை அனைத்தும் அதில் அடைத்து வைத்திருந்தால் எங்கனம் இடமிருக்கும்?

 

“புது மெம்பரை உள்ள சேர்த்துக்க வலிக்குதா?” என்று கறுவிக் கொண்டே மேலுள்ள டிராயரைத் திறந்து அதற்குள் வைத்து மூடிய கணம், அவளின் அலைபேசியோ சத்தமாக ஒலித்தது.

 

பைக்குள் துளாவி அலைபேசியை எடுத்தவள் திரையை பார்க்காமலேயே “சொல்லு டி” என்றாள்.

 

“என்ன மேடம் நீங்க மூட் அவுட் ஆகி என் கூட ஏன் பேசல?” என்று கேட்க,

 

“ஐடியா சொல்றேன்னு சொல்லல தானே அதான்” என்றாள் யாழிசை.

 

அவள் துடுக்காக சொன்னாலும் மாறாக அவளின் இதழ்கள் என்னவோ புன்னகையில் தான் விரிந்திருந்தன.

 

“ஓகே ஓகே, நாளைக்கு சொல்றேன் அது போல பண்ணு” என்றிட,

 

“போடிங், இனி மழை வந்தா என்ன வராட்டி என்ன?” என சலித்து கொள்ள,

 

“என்னமா இப்படி சலிச்சிட்டு சொல்ற? உன்ன நம்ப முடியலையே” என்க,

 

உஃப்ப்… என்று இதழ் குவித்து ஊதிக் கொண்டவள் ஜிதன் தன்னிடம் கூறியவை அனைத்தையும் கூற,

 

“ஆத்தி, இவ்ளோ ஆச்சா? என்று பதறியவளோ ” டோண்ட் ஒர்ரி உனக்கு இன்னொரு ஐடியா தரேன் இதையே நினைச்சிட்டு அப்செட்டாகாம தூங்கு” என்க,

 

“வாட் தூங்கணுமா? நெக்ஸ்ட் வீக் நமக்கு ஃபைனல் எக்ஸாம் இருக்கு மறந்து போச்சா என்ன?” 

 

” ஆமால, ஹி ஹி ஹி…” என மறுமுனையில் நயா சிரித்து வைக்க,

 

“வர வர உன் மர தான் கழண்டு போகுது” என்று வாரியவள் கணநேர அமைதிக்கு பின் “எல்லாம் ஓகே நீ என்னவோ வேற ஐடியா கொடுக்க போறனு சொன்ன, அது என்னனு சொன்னா அதுக்கு ஏத்த போல ப்ரீபேர் பண்ணிட்டு வருவேன் ல” என்று யாழிசை கூற,

 

“லூசு லூசு நீ நினைக்கிற போல இதுக்கெல்லாம் நீ எந்த எபெக்ட்டும் போட தேவையில்ல” என்று புதிர் போட,

 

அவள் என்ன கூற போகின்றாள் என ஆர்வமாக கூர்ந்து கேட்டுக் கொண்டு இருந்தவளுக்கு அவள் கூறியதை கேட்டு கோபம் தான் வந்தது.

 

“என்னடி விளையாடுயா? எதுவும் பண்ணாம எப்படி?” என்று சீற,

 

” அறிவு கெட்டவளே! சார் என்ன சொன்னார் அவரை டிஸ்டர்ப் பண்ண வேணாம்னு தானே? எஸ் அதை தான் பண்ண வேணானு சொல்றேன்”

 

” ஐயோ! நயா ப்ளீஸ் புரியிற போல சொல்லி தொலை” 

 

” ஒருத்தர் பின்னாடி நாம போனா அவங்களுக்கு நம்ம வேல்யூ தெரியாது சோ மொத்தமா அவாய்ட் பண்ணிடு” என்றிட,

 

” வாட்?” என அதிர்ந்தவளுக்கு அவள் சொன்ன விடயத்தில் மேலும் மேலும் ஆத்திரம் தான் பெருகியது.

 

” டு வாட் ஐ சே , வாத்தி உன்ன லவ் பண்றார். அவருக்கு யாரும் இல்ல அண்ட் மோர் ஓவர் நீ அவரோட ஸ்டூடன்ட் இது ரெண்டும் தான் அவரை உன்கிட்ட இருந்து தள்ளி நிறுத்த ரீசனா இருக்கணும்” என்று சொல்ல,

 

“எப்படி மேடம் இவ்ளோ காண்பிடென்ட்டா சொல்றீங்க?” என்ற யாழிசையிடம் “சார் உன்கூட பேசுன கான்வோ வச்சி யோசிச்சேன் மே பீ அது தான் ரீசனா இருக்கணும் என்றவளோ தொடர்ந்து ஃப்ரம் டுமாரோ நீ வாத்தியை கண்டுக்காத. ஏன்! வாத்தி இருக்க திசை பக்கம் கூட திரும்பாத” என்று அவள் தலையில் இடியை இறக்கி இருந்தாள்.

 

” அவருக்கு என்மேல பீலிங்ஸ் லைட் ஆஹ் இருக்குன்னு புரியுது டி பட் என்னால அவரை பார்க்காம சீண்டாம இருக்க முடியுமா?” என கலங்கிய படி யாழிசை கேட்க,

 

மறுமுனையில் கடுப்பான நயா “அப்போ வாத்தியை மறந்துடு” என்றிட,

 

” நோ, ஐ காண்ட்” என்றாள் சட்டென,

 

” தென் அவாய்ட் பண்ணு. நீ கண்டுகலனு சார் உணரணும் சோ உன் கான்சென்ட்ரேட் மொத்தமும் ஸ்டடீஸ் ல தான் இருக்கணும் ஹான் அப்புறம் மெயின் ஆஹ் ஐ டு ஐ கான்டாக்ட் வச்சுக்காத” என்க,



” நான் கூட உன்ன என்னவோ நினைச்சேன் பட் பரவல்ல நயு உனக்கும் அறிவு இருக்கு” என்றாள் மென் புன்னகையுடன்,

 

” அது இல்லனா உன் கூட குப்பை கொட்ட முடியுமா?” என்று சலித்து கொண்டாள்.

 

” கொஞ்சம் கேப் கிடைச்சா என்னை பங்கம் பண்ற. உன் பியூச்சர் பார்ட்னரோட பியூச்சர் இப்பவே எனக்கு வெளிச்சமா தெரியுது” என்றாள் சத்தமாக சிரித்துக் கொண்டே,

 

” போதும் வாய் சுளுக்கிட போகுது”  என நொடித்து கொண்டவளிடம் , “எல்லாம் ஓகே நாளைக்கு வேறென்னாவோ ஐடியா சொல்றேன்னு சொன்னல இந்த ஐடியா கொடுக்க முதல்ல… அது என்ன?” என்று ஆர்வமாக யாழிசை கேட்க,



” அதுக்கு நோ யூஸ் மா அண்ட் அதெல்லாம் உனக்கும் தெரிஞ்ச சீன் தான்” என்றிட,

 

” சீனா? என்ன சொல்லு பேபி ப்ளீஸ்”

 

மறுமுனையில் ‘விடமாட்டா’ என இதழ்களுக்குள் முனகிய நயா ” லேசா லேசா மூவி ல நம்ம சாக்கி பாய் கு த்ரிஷா லவ் யூ’ னு” என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போதே ” வாவ் செம்ம பேபி என்றவளோ இதை மட்டும் நாளைக்கு ட்ரை பண்ணிட்டு நாளான்றைக்கு அவாய்ட் பண்ணட்டுமா?” என்று ஆர்ப்பரித்த படி கேட்டவளிடம்,

 

” நீ இப்படியே பண்ணிட்டு இரு, வாத்தி டாட்டா காட்டிட்டு உன்ன அனுப்பி வைப்பார்” என்று கோபமாக திட்டி விட்டவள் ” நான் சொல்றதை சொல்லிட்டேன். இனி ஐடியா அது இதுன்னு வந்து நிக்காத குட் நைட்” என்று சொல்ல,

 

” இன்னும் நைட் ஆகல டி” என்று கிண்டலாக கூறியவளிடம்,

“ஆமா, இதுல எல்லாம் தெளிவா இரு மத்ததுல சொதப்பி வை” என்றவளோ ” ஆன்டி ஸ்பெஷல் ஸ்வீட் ஏதும் பண்ணி இருந்தால் எடுத்திட்டு வா” என அழைப்பை அணைக்க முயன்றவளிடம், ” அது எப்படி டி கரெக்ட்டா மோப்பம் பிடிக்கிற?” என அதிர்ச்சியாக கேட்க,

 

” ஆன்டி பத்தி எனக்கு தெரியாதா என்ன? எல்லாத்தையும் நீயே கொட்டிக்காம கொண்டு வா. பை” என்று அழைப்பைத் துண்டித்திருந்தாள் நயா.



அலைபேசியை வைத்து விட்டு கட்டிலில் அமர்ந்தவளுக்கு மனம் என்னவோ அமைதி கொள்ள தான் மறுத்தது.

 

தன்னால் அவனை கண்டு கொள்ளாமல் இருக்க முடியுமா? அதுவும் நொடிக்கு ஒரு முறையேனும் தன் பார்வை கட்டுபடுத்த முடியாமல் அவனை வருடுமே! 

 

“எபெக்ட் போட தேவை இல்லன்னு சொன்னா பட் இதுவே எனக்கு கஷ்டமான டாஸ்க் ஆச்சே” என தனக்கு தானே பேசிக் கொண்டு இருந்தவளுக்கு இது சரி வருமா? என்ற கேள்வி தான் மனதில் ஓடிக் கொண்டிருந்தது.

 

அவளின் எண்ணத்தின் நாயகனோ, அவளுடன் பேசிய வார்த்தைகளை எண்ணி தனக்குள் நொந்த படி நின்றிருந்தான்.

 

“யாழு, ரியலி சாரி, ஐ க்னோ உன்ன ஹர்ட் பண்ணிட்டேன். என்னை போல ஒரு அனாதை கூட நீ எப்படி சந்தோஷமா வாழ முடியும்?”. என தொலைதூர நிலவை வெறித்த படி பேசியவனின் ஏறி இறங்கிய தொண்டைக் குழியோ மனதை அழுத்திய வலியை விழுங்கி இருந்தது.

 

அதனைத் தொடர்ந்து அன்று இரவு,  பசிக்கவில்லை என்றாலும் தன் அன்னைக்காக முகத்தை சிரித்த படு வைத்துக் கொண்டே பெயருக்கு என உண்டு முடித்து விட்டு “குட் நைட் மா” என்று கூறி விட்டு உறங்கச் சென்ற மகளின் கண்களை எட்டாத புன்னகையை எண்ணி அவர் மனம் வெதும்பி போய் நின்றிருந்தார்.

 

அவளை மீண்டும் தூண்டி துருவ விருப்பமில்லை.

 

கூடிய விரைவில் ஜிதனை பார்த்து பேச வேண்டும் என்று தனக்குள் முடிவெடுத்து கொண்டவராய் உறங்கச் சென்று இருந்தார்.

 

வாசுகியின் எண்ணம் ஈடேறுமா?

👁️ 170 Views
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
⚠️ இத்தளத்தின் உள்ளடக்கங்கள் DMCA
பாதுகாப்பில் உள்ளது. Copy / Screenshot / PDF
உருவாக்குதல் தடை செய்யப்பட்டுள்ளது.