Menu

நொடி – 7

வழக்கம் போல முதல் வரிசையில் தனதருகே அமர்ந்து உளறிக் கொண்டு இருந்த தனது ஆருயிர் நண்பி யாழிசையை தான் இமைக்காது வெறித்திருந்தாள் நயா.

 

“நயு பேபி நம்ம பிளான் ஒர்கவுட் ஆகுமா?” என்று இதோடு பத்து முறைக்கும் மேலாக கேட்டுக் கொண்டு இருந்தவளை சலிப்பு தட்ட பார்த்தவளோ, “இங்க பார் யாழிசை இது உன் லைஃப். நீ சோககீதம் வாசிக்கறதை பொறுக்க முடியாம ஒரு பெஸ்டியா ஐடியா கொடுத்தேன். இதுக்கும் மேல உன்னால முடியலனா வேணாம். நீ உன் பீலிங்ஸ் அஹ் கொன்னு தான் இதை பண்ணனும்னு எந்த அவசியமும் இல்ல” என்றாள் கனிவாக,

 

“பண்றதுல ஒன்னும் இல்ல டி. நான் கண்டுக்காம விட்டு ஜிதனும் அப்பாடா தொல்லை ஒழிஞ்சதுனு மறந்துட்டா என்ன பண்ண?” என கலங்கிய படி கேட்டவளின் நிலையை புரிந்து கொண்டவளாய் “ஹேய் யாழிசை! உனக்கான ஒன்னுனா கண்டிப்பா எப்படியாவது உனக்கு கிடைச்சிடும் அது பொருளா இருந்தாலும் சரி உயிருள்ள மனுஷனா இருந்தாலும் சரி” என்று கூற,

 

“தத்துவம் சொல்ல இனிக்கும் ஆனா” என இழுவையாக சொன்னவள் நயா பார்த்த பார்வையில் கப்பென்று தான் இதழ்களை மூடிக் கொள்ள,

 

“இப்படியே மூடிட்டு மெயின்டெய்ன் பண்ணு” என்று சொன்னவள் புத்தகங்களை மேசையில் எடுத்து வைத்துக் கொண்டு இருக்கும் போதே,  புயலென ஹாலிற்குள் நுழைந்திருந்தான் ஜிதன்.

 

அவன் நுழையும் போதே மொத்த ஹாலும் ஒரு குண்டூசி வீழ்ந்தால் சத்தம் கேட்டு விடும் எனும் அளவில் நிசப்தமாகி விட, அந்த அமைதியை கிழிக்கும் வண்ணம் அவனது அழுத்தமான குரலோ அனைவரின் செவிகளையும் தீண்டியது.

 

ஆம், உள்ளே வந்தவனோ எதனையும் கண்டு கொள்ளாது “கெட் ரெடி ஃபோர் த எக்ஸாம்” என ஆளுமையான குரலில் சொன்னவன் பாக்கெட்டில் இரு  கைகளையும் விட்ட படி தோரணையாக மேசையில் சாய்ந்து நின்று அந்த ஹாலில் பார்வையை சுழல விட்டான்.

 

அனைவரும் தயாராக வந்திருக்க, அங்கே விழி பிதுங்கி திரு திருவென விழித்துக் கொண்டு இருந்தது வேறு யாருமல்ல யாழிசையும் நயாவும் தான். 

 

அப்போது தான் முதல் நாள் வகுப்பில் பரீட்சை என அவன் சொன்னது அழையா விருந்தாளியாக ஞாபகத்துக்கு வந்து தொலைக்க, இருவரின் முகமும் ஒருங்கே வெளிறி போனது.

 

அவனது பார்வையோ இறுதியாக யாழிசை மேல் படிய, அவளோ தன்னை நொடியில் மீட்டுக் கொண்டு பார்வையை வேறு பக்கம் திருப்பிக் கொள்ள, அவனுக்கோ ஆச்சர்யமாக இருந்தது. 

 

பின்னே தான் பார்த்தும் எந்தவித கூச்சமும் இன்றி விழிகளை சிமிட்டி தன்னை சீண்டும் இவளா மௌனமாக இருக்கின்றாள்? 

 

தன்னை அவள் கண்டு கொள்ளவில்லை என்றதும் ஏனென்று தெரியாத கோபம் தாறுமாறாக பெருகியது. 

 

அவ்வளவு தானா? நான் சொன்னதும் விலக முடிவெடுத்து விட்டாளா? என்று எண்ணியவனுக்கு தன் எண்ணப்போக்கை எண்ணி கழிவிரக்கமாக இருக்க, தன் உணர்வுகளை முயன்று கட்டுப் படுத்திக் கொண்டான் அவன்.

 

இதழ் குவித்து ஊதிக் கொண்டே பக்கவாட்டிலிருந்த  வினாதாள்களை எடுத்தவன் ” வீணா, பிரதாப் அண்ட் நயா ஸ்டான்ட் அப்” என்றான் கணீர் குரலில்,

 

அவனின் கணீர் குரலில் சட்டென எழுந்து நின்றவர்களை நெருங்கி பரீட்சை தாள்களை மூன்று பகுதிகளாக பிரித்து கொடுத்தவனோ “ஷேர் திஸ்” என்று விட்டு அனைவரின் கரங்களுக்கும் வினாத்தாள்கள் சென்றடையும் வரை அப்படியே அசையாது நின்றிருந்தான்.

 

இங்கோ அவனை பார்க்காதே என மனதை முயன்று அடக்கி வைத்திருந்தவளுக்கு சவால் விடும் விதமாக அவளுக்கு நேர் எதிரே அவன் நின்று கொண்டிருக்க,

 

அவளுக்கோ மூச்சே அடைத்து விட்ட உணர்வு.

 

‘பகவானே! என்னை பெர்ஃபார்ம் பண்ண விடேன்’ என மானசீகமாக வேண்டிக் கொண்டு தவிப்பாய் தன் பார்வையை அவன் மேல் படிய விடாது பார்வையை தாழ்த்தி கொண்டவளுக்கு அவனின் அருகாமையில் இதயம் படபடத்தது.

 

அவளது நாசியோ அவளையும் மீறி அவனின் பிரத்தியேக வாசத்தை நிரப்பிக் கொண்டிருக்க, மூளை மந்தித்த நிலையில் அமர்ந்து இருந்தவளுக்கு தன் கரத்தை வந்தடைந்த வினாத்தாளைக் கூட பார்க்க தோன்றவில்லை.

 

அதனைத் தொடர்ந்து வீணா, பிரதாப் மற்றும் நயா என மூவரும் வந்து தத்தமது இருக்கையில் அமர்ந்து விட,  

 

” ஆல் த பெஸ்ட் போர் ஆல்” என மென் புன்னகையுடன் சொன்னவன் பக்கவாட்டு சுவரிலிருந்த கடிகாரத்தை பார்த்து விட்டு திரும்பி அனைவரிலும் தன் பார்வையை பதித்தவாறே ” த டைம் ஸ்டார்ட்ஸ் நவ்” என்றான்.

 

அவனோ அங்கேயே நின்று மேசையில் முன்பு போல அதே தோரணையில் சற்றே சாய்ந்து நின்றிருக்க, அங்கு இருந்தவர்களுக்கோ தலையை கூட அசைக்க முடியாத நிலை.

 

அவனின் அழுத்தமான பார்வையும் குரலும், எதிரே அமர்ந்து இருந்தவர்களுக்கு பயத்தை  ஏற்படுத்தி இருந்தது என்னவோ உண்மை தான்.

 

வினாத்தாளை முன்னும் பின்னும் திருப்பி பார்த்த யாழிசைக்கோ தலையை சுற்றிக் கொண்டு வந்தது.

 

அதில் பாதி கேள்விகள் வந்திருக்கும் பகுதியை இன்னும் அவள் படிக்கவே இல்லை.

 

தலையை திருப்பி நயாவின் புறம் பார்க்கவும் பயமாக இருந்தது.

 

எங்கே தன்னை பார்த்துக் கொண்டு இருக்கிறானோ என்ற உள்ளுணர்வு அவளை உறுத்திக் கொண்டிருக்க, மிக கடினப்பட்டு தனது கடைக் கண்ணால் நயாவினை பார்க்க, அவளோ என்னவோ எழுதிக் கொண்டிருப்பது தெரிந்தது.

 

‘ கிராதகி மனசாட்சியே இல்லாம எழுதுறா கொஞ்சம் பேப்பரை காட்டி தொலைச்சா என்னவாம்’ என மனதில் கறுவிக் கொண்டே தனக்கு தெரிந்தவற்றிற்கு முதலில் பதில் எழுத தயாரானாள்.

 

அவளையே கூர்ந்து கவனித்துக் கொண்டு இருந்தவனுக்கு அவளின் நிலை நொடியில் புரிய, ஏனோ கோபத்திற்கு பதிலாக சிரிப்பு தான் வந்தது.

 

‘படிக்க வந்தா சைட் அடிக்கிறது. இப்போ என்ஜாய் பண்ணு’ என மனதில் சொல்லிக் கொண்டவன் முகத்தை என்னவோ சாதாரணமாக தான் வைத்திருந்தான்.

 

அது மட்டுமா என்ன? என்றும் போல  தன் அழுத்தமான இதழ்களுக்குள் புன்னகையையும் மறைத்துக் கொண்டான்.

 

நேரமும் மின்னல் வேகத்தில் நகர, பரீட்சை நேரம் முடிவடைய ஐந்து நிமிடங்களுக்கு முன்னரே வினாத்தாளை எழுதி முடித்த யாழிசையோ, வினாத்தாளை எடுத்து பத்திரப்படுத்தியவள், எழுந்து சென்று அவளின் ஜிதன் முன் நீட்டி இருந்தாள்.

 

இத்தனைக்கும் அவள் அவனின் பார்வையை சந்திக்க கூட இல்லை.

 

கவனமாக அவனின் பார்வையை தவிர்த்து உள்ளே அவள் தவித்துக் கொண்டிருந்தாள்.

 

குரலை செருமிக் கொண்டே தன் முன்னே தலை தாழ்த்தி நின்றவளை ஒரு ஆழ்ந்த பார்வை பார்த்தவன் “வெயிட் அண்டில் த ஃபினிஷிங் டைம்” என்றான்.

 

அவளோ உள்ளே அதிர்ந்தாலும் வெளியில் எதுவும் காட்டிக் கொள்ளாது “ஓகே சார்” என்று விட்டு சற்றே தள்ளி நின்று கொண்டவள் நிமிர்ந்து அனைவரிலும் பார்வையை பதித்தவள் மறந்தும் அவன் புறம் திரும்பவே இல்லை.

 

‘ என்னை அனுப்பினா என்னவாம்?நான் போய் பென்ஞ்ச் ல உட்கார்ற கேப் ல தான் எல்லாத்தையும் டிஸ்டர்ப் பண்ணிட போறேனா?’ என தனக்குள் நினைத்து பல்லை கடித்தவள் ‘இந்த வாத்தி ஓவரா தான் பண்றார் ‘ என மனதில் தாறு மாறாக வறுத்தெடுத்து கொண்டு நின்று இருந்தாள் பெண்.

 

மிக சிரமப்பட்டு நின்று இருந்தவள் மணியோசை ஒலிக்கவும் ஒரு பெரு மூச்சுடன் நகர முற்பட,

 

“ஒன் செக் மிஸ்…” என்றான் இழுவையாக,

 

‘கேடி வாத்தி’ என மனதில் வைதவள், அவனுக்கு பதில் கூறும் விதமாக “யாழிசை” என்றாள் அழுத்தம் திருத்தமாக,

 

“வெல் யாழிசை” என அவளை பார்த்து சொன்னவன் இப்போது அனைவரையும் பார்த்துக் கொண்டே “லிஸ்டின் ஆல்”  என்றவனின் குரலில் அனைவரின் கவனமும் அவன் ஒருவன் மேல் படிய,

 

” இங்க ஏர்லியா எக்ஸாம் பிஃனிஷ் பண்ணவங்களாம் ரைஸ் தி ஹான்ஸ்” என்றிட,

 

அங்கு இருந்தவர்களில் மூவர் கரத்தினை உயர்த்த, அவர்களை பார்த்து விட்டு யாழிசையை அவன் பார்க்க, 

 

அவனின் செயலிலேயே அவனை புரியாது பார்த்து கொண்டு இருந்தவருக்கு இப்போது அவன் தன்னை அழுத்தமாக பார்க்கவும் அவளோ கேள்வியாக அவனை நோக்க,

 

” ஏர்லியா ஃபினிஷ் பண்ணிங்க தானே யாழிசை? ” என்று அவன் கேட்ட தோரணையில், 

 

” ஆம் ” என்று தலையை மேலும் கீழுமாக அசைத்தவள் என்னவோ புரிய அவனின் கேள்வி ஞாபகம் வந்து சட்டென கரத்தினை மேலே உயர்த்தினாள். 

 

நயவோ ‘நல்லா சொதப்புறா’ என நொந்து கொண்டு அவளை பார்க்க,

 

அவளோ, நா வறண்டு போய் திருதிருத்த படி நின்று இருந்தாள். 

 

“ஏர்லியா ஃபினிஷ் பண்ணிட்டா வெயிட் பண்ணி ஆன்சர்ஸ் செக் பண்ணலாம். எழுந்து வந்து அப்போவே தரணும்னு இல்ல பேசிகலி டைம் முடிஞ்ச பிறகு தான் பேப்பர்ஸ் கலெக்ட் பண்ணுவேன்” என்றான் அழுத்தமாக,

 

அவளுக்கு தெரியும் இது அவளுக்கு சொன்னது என, இதை அனைவரின் முன்னிலையிலும் சொல்ல வேண்டுமா என்று தோன்றியே விட்டது அவளுக்கு,

 

‘இப்ப என்னவாம் தெரியாம வந்து கொடுத்துட்டேன். தப்பா என்ன?’ என்று மனதில் புலம்பிக் கொண்டு இருந்தவருக்கு அனைவரும் முன்னிலையிலும் அவன் சொன்னது ஒரு மாதிரி ஆகி விட்டது.

 

அவளின் அமைதியை கண்டு நெற்றியை நீவிக் கொண்டே 

“ஓகே இட்ஸ் நாட் அ ப்ராப்ளம் பட் யூ ஆல் வான்ட் டு க்னோ” என்று சொன்னவனோ “வீணா பிரதாப் அண்ட் நயா பேப்பர்ஸ் கலெக்ட் பண்ணி எடுங்க” என்றவனோ இவ்வளவு நேரமும் எதுவும் நடக்கவில்லை என்பது போல சென்று இருக்கையில் அமர்ந்து கொள்ள, அவளுக்கு தான் ஆத்திரம் வந்தது.

 

‘வாத்தி! நான் கோவம். இனி கொஞ்சம் கூட பார்க்க மாட்டேன் உங்களை என்கூட பேச வைக்கிற போல சிட்டுவேஷன் கூட கிரியேட் பண்ண மாட்டேன்’ என மனதில் கறுவிக் கொண்டு தனது இருக்கையில் சென்று இறுகிய முகத்துடன் அமர்ந்தவளுக்கு தெரியவில்லை தன்னவனை விரைவில் ருத்ரமூர்த்தியாக  மாற்ற 

போகின்றோம் என, 

 

அனைத்து வினாதாள்களையும் ஒன்று சேர்த்து எடுத்துக் கொண்டே எழுந்தவன் ” ஹேப்பி ஹாலிடே”  என மென் புன்னகையுடன் அனைவரையும் பார்த்து சொல்ல, 

 

“இந்த ஹாலிடேஸ் எங்களுக்கு ஹேப்பியா? ஏன் சார் கலாய்க்குறீங்க?” என பிரதாப் கேட்க, 

 

“இல்லையா பின்ன, ஃபைனல் இயர் ஸ்டூடண்ட்ஸ், காலேஜ் அவுட்  ஆகவும் போறீங்க சோ என்ஜாய் பண்ண வேணாமா? ” என்றான் ஒற்றை புருவம் உயர்த்தி,

 

‘ மண்ணாங்கட்டி ஹேப்பி’ என மனதில் சொல்லிக் கொண்டவள் வெறுமனே தனக்கு முன்னே இருந்த மேசையை தான் வெறித்து கொண்டு இருந்தாள்.

 

“அதை ஏன் சார் இப்போ ஞாபக படுத்துறீங்க?” என வீணா கேட்க,

 

அங்கு உள்ளவர்கள் அனைவரின் முகமும் ஒருங்கே சோகத்தை தத்தெடுத்திருந்தது.

 

“ஹேய்! கூல் கைய்ஸ், ஸ்டடி லீவ் ல ஹேப்பியா என்ஜாய் பண்ணி படிங்க. ஓவரா ஸ்ட்ரெஸ் பண்ணிக்க வேணாம்.  அனிவே, நெக்ஸ்ட் வீக் மீட் பண்ணலாம்” என்று அனைவரையும் பார்த்து தாராளமாக புன்னகைத்தவனை அவள் ஒருவளைத் தவிர மற்ற அனைவரும் விழி விரித்து பார்க்க,

 

ஜிதனோ “என்ன இவ்ளோ ஷாக் ஆகுறீங்க?” என நெற்றியை நீவிக் கொண்டே கேட்க,

 

அதற்கு அனைவரும் ஒருங்கே” வீ ஆல் மிஸ் யூ சார்” என்று கூற, ” ஐ டூ பேட்லி மிஸ் திஸ் பேட்ச்” என்று சொன்னவனின் பார்வை அவனை அறியாமலேயே யாழிசையின் மீது படிந்து மீண்டது.

 

நயாவோ, ஜிதனின் பார்வையை உணர்ந்து யாழிசையின் கரத்தை தன் கரத்தால் மெல்ல உரச, அவளோ அதை எல்லாம் கண்டு கொள்ளாது இறுகிய முகத்துடன்  நிலத்தில் பார்வையை பதித்து இருந்தாள்.

 

அதனைத் தொடர்ந்து அனைவரிடமும் இன்முகமாக பேசி விட்டு அவனும் ஹாலினை விட்டு வெளியேறியிருக்க, அவன் வெளியேறும் வரை அடக்கப்பட்ட சினத்துடன் அமர்ந்து இருந்தவள்

அவன் சென்று விட்டான் என தெரிந்ததும் இதழ் குவித்து ஊதிக் கொண்டே ஓர் ஆழ்ந்த பெரு மூச்சுடன் பக்கவாட்டாக திரும்பிய யாழிசை, நயாவை பார்த்து கொலைவெறியுடன் முறைத்தாள்.

 

“செல்லமே! ஏன்மா இவ்ளோ பாசமா பார்க்குற?” என்று நயா கேட்டது தான் தாமதம் அடுத்த கணமே தனது பையை வைத்து அவளை அடிக்க வெளுக்க ஆரம்பித்திருந்தாள்.

👁️ 174 Views
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
⚠️ இத்தளத்தின் உள்ளடக்கங்கள் DMCA
பாதுகாப்பில் உள்ளது. Copy / Screenshot / PDF
உருவாக்குதல் தடை செய்யப்பட்டுள்ளது.