Menu

நொடி – 10

நாட்களும் அதன் போக்கில் நகர, அவளது இறுதி தேர்வுக்கான நாளும் இனிதே விடிந்தது.

 

இதுவே அவளின் காதல் கை சேரவிருக்கும் நாள் என எண்ணும் போதே மேனியில் ஒரு சிலிர்ப்பு.

 

அதி காலையிலேயே எழுந்து கல்லூரிக்கு செல்ல ஆயத்தமானவளுக்கு அவன் எண்ணம் தான்.

 

என்னவோ மனதில் ஓரிடத்தில் ஏனென்றே தெரியாத தவிப்பாகவும் இருந்தது.

 

அனைத்தையும் சரி பார்த்து எடுத்து வைத்துக் கொண்டே அறையை விட்டு வரவேற்பு அறைக்குள் வந்தவள் அங்கு அரக்க பறக்க வேலைகளை இழுத்து போட்டு செய்துக் கொண்டிருந்த வாசுகியை பார்த்து மென் புன்னகை சிந்தியவள் “மா நானே டென்ஷன் ல இருக்கேன். நீங்க என்னை கண்டுக்காம கேஷுவலா இருக்கீங்க” என்று சலித்து கொண்டவளிடம் “ஐ க்னோ நீ எக்ஸாம் ல நல்லா ஸ்கோர் பண்ணுவனு சோ நான் எதுக்காக டென்ஷன் ஆகணும்?” என்று சொல்லிக் கொண்டே சுவாமி அறைக்குள் நுழைந்து “யாழு இங்க வா” என்றழைத்தார்.

 

“ஓவர் காண்பிடென்ட் தான் பட் அதுல பாதியை எனக்கு தாங்க மா”  என்று சொல்லிக் கொண்டே தவிப்பாக அவரைக் இறுக கட்டி அணைத்துக் கொண்டாள்.

 

” ஏன் இவ்ளோ டென்ஷன் உனக்கு? நீ நல்லா…” என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போதே “அது இல்லமா… இது வேற என்னவோ, என்னன்னே சொல்ல தெரியல. ஏதோ நடக்க போற போல ஃபீல் தருது” என தன் அலைபாயும் எண்ணங்களின் மொத்த தவிப்பையும் அன்னைக்கு கடத்த முயன்றாள்.

 

” ஹேய் ஏன் இப்படி திங்க் பண்ற? ஒன் வீக் கு பிறகு காலேஜ் போற அண்ட் இதுக்கு பிறகு உன் காலேஜ் டேஸ் முடிஞ்சிடும் அதுக்கான கவலையா இருக்கும் டி சும்மா மனசை போட்டு குழப்பிக்காத எல்லாமே நல்லதா நடக்கும்” என அவளின் தலையை ஆதூரமாக வருடி அவளின் பிறைநுதலில் திருநீறை வைத்து விட்டு ” தேவையில்லாத நெகடிவ் தாட்ஸ் வேண்டாம். ஜஸ்ட் கோ வித் த ப்ளோ” என்றார் வாசுகி.

 

” தேங்க்ஸ் மா” என்றவள் புன்னகை முகத்துடன் அன்னையின் கன்னம் கிள்ளி அதில் அழுத்தமாக முத்தம் பதித்து விட்டு ” டைம் ஆச்சு பை மா” என சற்றே தன் சஞ்சலத்தை மறைத்து புன்னகைத்தவள் அன்னையிடம் விடைபெற்று கல்லூரிக்கு கிளம்பியிருந்தாள்.

 

மன எண்ணங்களின் ஓட்டமே பின் நாளில் நிஜமாக நடக்கவிருக்கிறது என பாவம் பாவம் அவளுக்கு இப்போது தெரியவில்லை.

 

*******************

 

கிட்டதட்ட நான்கு மணி நேரங்களில் தனக்கான தேர்வை எழுதி விட்டு வெளியில் வந்தவள் விழிகள் தேடியது என்னவோ அவளவனை தான்.

 

” எங்க போனார்?” என இதழ்களுக்குள் முணுமுணுத்த படி ஹாலினை விட்டு வெளியேறி நடக்க ஆரம்பித்தவளின் விழிகள் என்னவோ சுற்றுப்புறத்தை அலசி ஆராய்ந்து கொண்டு இருக்க, அவளது தேடலைக் கலைக்கும் விதமாக அவளின் பின்னால் அவளை யாரோ அழைக்கும் அரவம் கேட்டு சட்டென நின்றாள்.

 

பரீட்சையமான ஆண் குரல் போல இருக்க, சலிப்புடன் பின்னால் திரும்பி பார்த்தாள்.

 

அவள் முன்னால் இதழ் நிறைந்த புன்னகையுடன் நின்று கொண்டிருந்தது அவளை ஒரு தலையாக காதலித்துக் கொண்டு இருக்கும் நிதிஷ்  தான்.

 

அவனை கண்டு ஒரு கணம் திடுக்கிட்டாலும் முகத்தை சாதாரணமாக வைத்துக் கொண்டே “சொல்லுங்க நிதிஷ்” என்றாள் கேள்வியாக,

 

அவனோ குரலை செருமிக் கொண்டே தரையில் முழந்தாள் இட்டமர்ந்து, இவ்வளவு நேரமும் பின்னால் மறைத்து வைத்திருந்த பூஞ்செண்டினை அவள் விழிகளை நோக்கிய படி முன் நீட்டியவன் ” ஐ லவ் யூ லாட் யாழிசை” என்று தனது காதலைக் கூறியவனோ அவளின் பதிலுக்காக காத்திருக்க,

 

அவன் தன்னை காதலிக்கிறான் என்று நண்பர்கள் சொல்லி கேள்வி பட்டு இருந்தாலும் அவனாக தன்னிடம் வந்து கேட்காதவிடத்து அவனிடம் மறுத்து பேச முடியாதே!

 

சுருங்க சொல்லபோனால் அதை அவள் பெரிதாக எடுத்துக் கொள்ளவும் இல்லை ஏன் ஞாபகத்தில் கூட இருந்தது இல்லை.

 

ஆனால் இப்போதோ, முன்னரே அவனுடன் பேசி இருக்க வேண்டுமோ என்ற எண்ணம் அவளில் எழுந்திருந்தது.

 

அதுவும் கல்லூரியின் இறுதி நாளன்று அவன் தன் காதலை கூறுவான் என்று சற்றும் அவள் எதிர் பார்க்கவே இல்லை.

 

கிட்டத்தட்ட அவளை போல தானே அவனும் ஒருதலையாக காதலிக்கிறான்.

 

சட்டென அவனை முகத்தில் அடித்தாற் போல பேசவும் முடியவில்லை.

 

எப்படி மறுப்பது என்ற கேள்வி பூதாகரமாக எழ, சட்டென சுற்றம் உணர்ந்து சுற்றும் முற்றும் பார்த்தவளுக்கோ தூக்கி வாரி போட்டது.

 

அவளுக்கு நேர் எதிரே இருந்த மர நிழலின் கீழ், அவளையே உறுத்து விழித்த படி பார்த்துக் கொண்டு நின்றிருந்தான் ஜிதன். 

 

விழிகள் இரண்டும் பெரிதாக விரிய அப்படியே தன் பார்வையை நிதிஷின் மேல் பதித்தவள் “நிதிஷ் ப்ளீஸ் ஸ்டான்ட் அப். எனக்கு அக்வார்ட்டா இருக்கு” என்று சங்கடமாக சொல்லவும், அதில் சற்றே முகம் வாட்டம் கொண்டாலும் மெல்ல எழுந்து அவள் முகத்தை கேள்வியாக அவன் பார்த்துக் கொண்டிருக்க,

 

இதழ் கடித்து தன்னை தானே நிதானித்து கொண்டே அவனை ஏறிட்டவள் “கிட்டதட்ட என் போல தான் நிதிஷ் நீங்களும். உங்களை எனக்கு ஹர்ட் பண்ணனும்னு எந்த தாட்’ டும் இல்ல பட் கண்டிப்பா நான் இதை சொல்லியே ஆகணும். நான் வேற ஒருத்தரை ஒன் சைட் ஆஹ் லவ் பண்றேன் நிதிஷ்” என்றதும் அவனது முகம் எப்போதும் போல புன்னகையை சிந்தி “அது நம்ம பேட்ச் கே தெரியுமே நீ ஜிதன் சாரை ட்ரை பண்றனு பட் அவர் உன்னை லவ் பண்ற போல தெரியலையே சோ என்னை…” என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போதே,

 

“ஷட் அப் நிதிஷ்” என்றாள் ஆத்திரமாக,

 

அவனோ அதிர்ந்து அவளைப் பார்க்க, “என்னால யாரும் ஹர்ட் ஆக கூடாதுன்னு தான் உங்ககிட்ட பொறுமையா எடுத்து சொல்லிட்டு இருக்கேன் நிதிஷ்.  மைண்ட் யூர் வேர்ட்ஸ்” என்றாள் துளியும் ஆத்திரம் குறையாது,

 

“ஹே! கூல் இப்போ வொய் இவ்ளோ கோபம்?” என்ற நிதிஷிடம்,

 

” ஜிதன் என்னை லவ் பண்றாரோ பண்ணலையோ ஐ டோண்ட் மைண்ட் தட். நான் அவரை லவ் பண்றேன் அது உண்மை சோ இன்னொரு லவ் சாத்தியமே இல்ல அது ரொம்ப கஷ்டம் நிதிஷ் என ஒரு பெரு மூச்சுடன் விழிகளை மூடித் திறந்தவளோ ” உங்களை மட்டுமே  லவ் பண்ற நல்ல பொண்ணு கிடைப்பா நிதிஷ்” என இதழ்களில் புன்னகையுடன் சொன்னவள் பார்வை அவளையே விழி அகலாமல் பார்த்துக் கொண்டிருந்த ஜிதன் மேல் படிந்து மீண்டது.

 

அவள் நிராகரிப்பாள் என அவனுக்கு முன்பே தெரிந்தமையால் அதற்கும் சற்று மனதை திட படுத்திக் கொண்டு வந்தாலும் மனதின் ஓரத்தில் அவள் தனக்கு கிடைத்து விடுவாள் என்ற துளி நம்பிக்கை கூட அவனது வலியாக மாறிப் போனது.

 

முதல் காதல் அவள் மீது.

 

எங்கனம் மறப்பது? அவள் வேண்டும் என்பதை விட அவளின் விருப்பு முதன்மையாக பட்டது அவனுக்கு,

 

தன் எதிரே நின்றவளின் இதழ் நிறைத்த புன்னகையை ஆழ்ந்து தன்னில் நிரப்பிக் கொண்டவன் “வில் சீ யாழிசை. ஐ க்னோ நீ என்னை ரிஜெக்ட் பண்ணுவனு பட் என்னவோ நீ ஓகே சொல்லுவன்னு கொஞ்சமே கொஞ்சம் நம்பிக்கை இங்க என தன் இடது மார்பை சுட்டிக் காட்டியவன் வலிக்கலனு உனக்காக பொய் சொல்ல மாட்டேன் இட்ஸ் டூ ஹர்டிங் யாழிசை” என்றவன் குரலோ உடைந்து ஒலித்தது.

 

“சாரி நிதிஷ்” என்றவளுக்குமே ஒரு மாதிரி ஆகிவிட, 

 

“பீல் பண்ணாத யாழிசை. காதல் இல்லாத ஒரு இடத்துல என்னை லவ் பண்ணுன்னு வற்புறுத்தி வர்றதுக்கு பேர் காதல் இல்ல சோ உன்னோட மனசுல ஜிதன் சார் ஆழமா இருக்கார்னு புரிஞ்சிகிட்டேன் ஹி இஸ் வெரி லகி. உன்ன போல என்னை டீப்பா லவ் பண்ற பொண்ணு கிடைச்சா பார்க்கலாம். அனிவே ஆல் த பெஸ்ட் ஃபார் யூர் பியூச்சர்” என்றவன் அங்கிருந்து கிளம்பி இருந்தான். 

 

போகும் அவனை ஓர் ஆசுவாச பெரு மூச்சுடன் பார்த்தவள் ஜிதன் இருக்கும் திசையை நோக்கி வேகமாக நடக்கத் தொடங்கினாள்.

 

அவள் வருவதையே பார்த்துக் கொண்டு இருந்தவன் தன் பார்வையை அவள் மீது அழுத்தமாக பதித்து நின்றிருந்தான்.

 

வேகமாக அவனை நோக்கி வந்தவளுக்கு மூச்சு வாங்க, “எக்ஸாம்  முடிச்சிட்டேன்” என்றாள் மேல்மூச்சு கீழ் மூச்சு வாங்க,

 

அவனுக்கான அவளின் மொத்த காதலும் அவளின் விழிகளில் தொக்கி நின்றது.

 

“சோ வாட்?” என்றான் அவளையே கூர்ந்து பார்த்த படி,

 

அதிர்ந்து விட்டாள் அவள்.

 

ஏனோ மேனியில் மெல்லிய நடுக்கம் பரவுவதை அவளால் உணர முடிந்தது.

 

அவனது குரலில் தெரிந்த ஒட்டா தன்னைமையை உணர்ந்து அதிர்ந்து போனவள் சட்டென ஞாபகம் வந்தவளாய் “நிதிஷ் என்னவோ உளறிட்டு போறான். அவன் எனக்கு நயா போல ஜஸ்ட் ப்ரெண்ட் தான்” என்று சொல்லிக் கொண்டே போக,

 

அவனுக்கு அவளைப் பற்றி தெரியாதா என்ன?

 

தன்னைப் பார்த்து அவள் பேசும் விதமே அவளின் மீது அவளுக்கேயான அளப்பறியா நேசத்தை தோற்றுவித்து இருந்தது.

 

“இதெல்லாம் என்கிட்ட ஏன் சொல்ற?” என்று அவன் கேட்க, 

 

 இப்போதோ, அவன் பேச்சில் அவளுக்கு கடுப்பாகி விட்டது.

 

“என்ன சார் லந்தா? போன வீக் என்ன சொன்னிங்கனு மறந்து போச்சா என்ன? இல்லனா சொல்லுங்க ஞாபக படுத்துறேன்?” என்க,

 

“ப்ச், டோண்ட் டாக் லைக் திஸ் அனிவே காங்க்ராஜுலேஷன்ஸ் யாழிசை” என்றான் சாதாரணமாக,

 

அவளுக்கோ ஒன்றுமே புரியவில்லை.

 

நன்றாக தானே பேசினான். நேற்று வரை குறுஞ்செய்திகள் கூட வந்த வண்ணம் தானே இருந்தது இப்போது என்னவாயிற்று? வேற்று மனிதன் போலல்லவா பேசிக் கொண்டு இருக்கின்றான்.

 

“ஏன் என்னவோ போல பேசுறீங்க இட்ஸ் ஹர்டிங் ஜிதன்” என்றவள் குரல் திணறியது.

 

”  யாழிசை” என்றான் அழுத்தமாக,

 

” கால் மீ இசை ஜிதன்” என்று சொல்லும் போதே தொண்டையை கவ்வி பிடித்த அழுகை வந்து விடும் போலிருந்தது அவளுக்கு,

 

இதழ் குவித்து ஊதிக் கொண்டே “யூ காட் செலெக்டட் அண்டர் தி லண்டன் 

இன்டர்நேஷனல் விஷுவல் ஆர்ட் டிசைனர் கம்பெனி சோ மை ஹார்ட்டியஸ்ட் காங்கிரஸ் டு யூ” என்றான் இதழ்களில் புன்னகையுடன்,

 

ஆம் ஒரு மாதத்திற்கு முன்பே ஆன்லைனில் வந்த விளம்பரத்தை பார்த்து விட்டு விளையாட்டுக்காக அவள் செய்து வைத்த வேலை இப்போது அவளுக்கே வினையாக வந்து இருக்கின்றது.

 

அவளால் கொஞ்சம் கூட இதை நம்ப முடியவே இல்லை.

 

“எ…என்ன ஜிதன்? புரியல” என்றாள் மலங்க மலங்க விழித்த படி,

 

” எக்ஸாம் ஹாலுக்கு போ உனக்கே புரியும்” என்றவன் அவளை தாண்டி செல்ல முயல,

 

எட்டி அவனின் கரத்தை பற்றியே விட்டாள் பெண்.

 

அதிர்ந்து விழிகளை விரித்தவன், சட்டென அவள் பிடியிலிருந்து தன் கரத்தை விலக்கிக் கொண்டே சுற்றும் முற்றும் பார்த்தவன் ” ஆர் யூ மேட்? ஸ்டில் யூ ஆர் அ ஸ்டூடன்ட் யாழிசை. யாராவது பார்த்தா எவ்ளோ ப்ராப்ளம்ஸ் கிரியேட் பண்ணும்னு தெரியாதா இல்ல எல்லாம் தெரிஞ்சும் நடிக்கிறியா?” என அவள் காயப்படுவாள் என்று தெரிந்து கொண்டே தன் வார்த்தைகளை கடித்து துப்பினான் அவன்.

👁️ 166 Views
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
⚠️ இத்தளத்தின் உள்ளடக்கங்கள் DMCA
பாதுகாப்பில் உள்ளது. Copy / Screenshot / PDF
உருவாக்குதல் தடை செய்யப்பட்டுள்ளது.