Menu

நொடி – 11

“காங்கிராட்ஸ் யாழிசை. அம் ரியலி ஹேப்பி ஃபோர் யூ” என்ற படி அக் கல்லூரியின் அதிபர், திகைத்து நின்று இருந்தவளின் கரத்தில் கடிதம் ஒன்றினை ஒப்படைக்க, 

 

அதைத் தன் நடுங்கும் கரங்களால்  வாங்கியவளுக்கு என்ன மாதிரி உணர்வதென்றே தெரியவில்லை. 

 

இப்படி ஒரு வாய்ப்பை அவள் கனவிலும் நினைத்து பார்த்தது இல்லையே! 

 

தான் விரும்பி படிக்கும் துறை வேறு என்றாலும் அவளின் ரசனைக்கு ஏற்ப அடிக்கடி சித்திரங்கள் வரைவதிலும் ஆர்வத்தை காட்டியவள்  இணையவழி வந்த விளம்பரத்தை பார்த்து விட்டு அசட்டையாக தலைப்புக்கு ஏற்ற போல தத்ரூபமாக வரைந்து அனுப்பியவள் தான் அதில் தேர்ந்தெடுக்கப்படுவோம் என்று கிஞ்சித்தும் எதிர்பார்க்கவில்லை. 

 

காகிதத்தில் தெரிந்த எழுத்துகளை நீர் நிறைந்த கலங்கிய விழிகளுடன் வெறித்தவளுக்கு, சுற்றி வர அனைவரும் கூறிய வாழ்த்து செய்திகள் எல்லாம் அவள் மூளையில் பதியவே இல்லை. 

 

அவளின் சித்தம் முழுதும் அவன் ஒருவனே நிறைந்து இருந்தான்.

 

எப்படி அனைவரையும் கடந்து கால் போன போக்கில் வெளியேறி வந்தாள் என்று கேட்டால் அவளுக்கே தெரியாத நிலை தான்.

 

என்னவோ ஒரு சிந்தனை சுழலில் சிக்கிக் கொண்டவளின் கவனத்தை திருப்பி இருந்தாள் அவளின் தோழி.

 

தன் கரத்தை பிடித்து சந்தோஷ ஆர்ப்பரிப்புடன் குலுக்கிய நயாவை பார்த்தவளுக்கு அழுகை ஏனோ தொண்டையை அடைத்தது. 

 

“ஹேய் என்னடி இன்னும் ஷாக் ல இருந்து வெளிவர்லயா?” என்ற நயாவை வெறித்தவள் “ஜிதன் எங்க?” என்றாள் சோர்ந்த குரலில், 

 

அவளை வெட்டவா குத்தவா என முறைத்து வைத்தவள் ” லெக்ச்சரர்ஸ் பக்கத்துல நின்னுட்டு இருந்த சாரை நீ கவனிக்கல, அதை நான் நம்பனும்” என்று கேட்டவளை ஓர் அதிர்வுடன் ஏறிட்டவள் ” நிஜமா என்னால எதையும் யோசிக்க முடியல நயு” என ஓய்ந்து போய் அருகிலிருந்த பெஞ்சில் அமர்ந்து விட்டாள் பாவை. 

 

“என்னடி சொல்ற எனக்கு புரியல” என்றபடி அவளருகில் அமர்ந்து அவளின் கரத்தை அழுத்தி கொடுக்க,

 

“எ…என் ஜிதனை விட்டு ரெண்டு வருஷம் எப்படி பிரிஞ்சு இருப்பேன் அதுவும் கடல் கடந்து” என குரல் கமர கேட்டவளை வியப்பாக பார்த்தவள் “இப்படி ஒரு சான்ஸ்  கிடைக்கலையேனு ஏங்கிட்டு இருக்கவங்க மத்தில நீ மட்டும் தான் உன் லவ் முக்கியம்னு யோசிக்கிற” என்றவளுக்கு அவளின் காதலின் ஆழத்தை எண்ணி  திகைத்து தான் போனாள்.

 

அவளை கலக்கமாக ஏறிட்டவளை தோளோடு அணைத்துக் கொண்டே 

“நீ நினைக்கிற போல பீல் பண்ண என்ன இருக்கு? இது உன் பியூச்சர். கண் இமைக்கிறதுக்குள்ள அடுத்த ரெண்டு வருஷமும் ஓடி போய்டும். லைஃப் ல ஒரு டர்னிங் பாயிண்ட் வேணாமா? சார் எங்க போயிட போறார். உனக்காக வெயிட் பண்ணிட்டு இருப்பார் சோ உன்னை நீயே தேவையில்லாமல் எதுவும் நினைச்சி குழப்பிக்காத” என்றாள் தெளிவாக,

 

“நீ சொல்றது புரியுது டி பட் என் உள்ளுணர்வு வேணாம்னு தடுக்குது நான் என்ன தான் பண்ணட்டும்?” என்று கேட்டுக் கொண்டு இருக்கும் போதே அவளின் அலைபேசி ஒலித்தது.

 

‘ ப்ச்ச இது வேற” என்ற முணுமுணுப்புடன் திரையை பார்த்தவளுக்கு ஒரு நொடி முகம் விகர்சித்தாலும் மனமோ, மறு நொடியே அவன் வேண்டுமென்றே தன்னைக் காயப்படுத்த பேசிய வார்த்தைகளை எண்ணி மருகித் தவித்தது.

 

“இப்போ நான் என்ன சொன்னாலும் அதை கேக்குற மனநிலை ல நீ இல்ல சோ காலை அட்டன் பண்ணி பேசு. சார் கூட பேசி ஒரு முடிவுக்கு வா” என்றவள் அவளுக்கு தனிமை கொடுத்து விட்டு நகர்ந்து இருக்க,

 

போகும் அவளை ஒரு பார்வை பார்த்து விட்டு அழைப்பை ஏற்று காதில் வைத்தாள்.

 

இருவரிடமும் மௌனம்.

 

அதை அவள் களைய நினையாமல் அப்படியே இருக்க, மறுமுனையிலிருந்த ஜிதன் தான் அவர்களிடையே நிலவிய மௌனத் திரையை உடைத்திருந்தான்.

 

” அட் த்ரீ பீஎம் கு பக்கத்துல இருக்க காஃபி ஷாப் வா பேசலாம்” என்றான் அவளின் மௌனம் அறிந்தவனாய்,

 

” இப்போ கூட நான் உங்க ஸ்டூடண்ட் தான்” என்றாள் உணர்ச்சியற்ற குரலில்,

 

“ஐ செட் கம்” என்றான் மறு முனையில் அழுத்தம் திருத்தமாக,

 

மணிக்கட்டை திருப்பி மணியை பார்த்தாள்.

 

இப்போதே இரண்டு ஐம்பது என்று மணியைக் காட்டிக் கொண்டு இருந்தது.

 

” இப்போவே வரேன்” என்று சொல்லிக் கொண்டே எழுந்து நின்றவளிடம் ” ஷார்ப் அட் த்ரீ பீஎம் வந்தா போதும்” என்றவன் அழைப்பை துண்டித்து இருக்க, 

 

அவன் நடந்து கொண்டு இருக்கும் நடவடிக்கையே விசித்திரமாக இருந்தது.

 

‘ ஆஆஆஆ….. ‘ வென தலையை பற்றுக் கொண்டு சத்தமாக கத்த வேண்டும் போலிருந்தது.

 

தலைவேறு விண் விண்ணென்று வலிக்க நெற்றியை அழுத்தி விட்டுக் கொண்டே அமர்ந்து இருந்தவள் பார்வை மொத்தமும் கடிகார முட்களில் தான் நிலைத்து இருந்தது.

 

அவளை வா என்று சொல்லி விட்டு காஃபி ஷாப்பின் பால்கனியில் நின்று இருந்தான் ஜிதன்.

 

இன்று தன் காதலை அவளிடம் கூறி விடலாம் என்று இருந்தவனுக்கு தடை போடும் விதமாக வந்தது தான் அவளின் கலை திறமைக்கு கிடைத்த வாய்ப்பு.

 

அவளின் காதல் நானாக இருக்கும் பட்சத்தை தவிர்த்து ஒரு ஆசிரியனாக  அவளின் எதிர்கால வாழ்க்கையையும் யோசித்து பார்த்தவனுக்கு கிடைத்த பதில், அவள் கவனம் சிதறாமல் இருக்க வேண்டும் என்றால் நான் விலகி நிற்க வேண்டும் என்பது தான்.

 

அவனும் அவள் தன்மேல் வைத்திருந்த தன்னலமற்ற காதலில் கரைந்து தான் போனான். அவளை ஒரு கணப் பொழுது கூட அவனால் பிரிந்து இருக்க முடியாது என்பது தான் நிதர்சனம்.

 

ஆனால், கற்பாறையென இறுகிக் கிடந்த மனதை இப்போது உருகி விடாமல் இருப்பதற்கு, தன் அவள் மீதான உணர்வுகளை அடக்க பெரும்பாடு பட்டு போனான் அவன்.

 

இறுகி விறைத்து போய் நின்றவனது எண்ணத்தை அவனது அலைபேசி சிணுங்கி களைத்திட, திரையை பார்த்து விட்டு இதழ் குவித்து ஊதிக் கொண்டே அழைப்பை ஏற்றவன் “பால்கனி வா. டேபிள் நம்பர் சிக்ஸ்” என்றவன் அப்படியே அழைப்பில் காத்திருக்க, மறுமுனையில் அவள் தான் பட்டென அழைப்பைத் துண்டித்து இருந்தாள்.

 

விழிகளை அழுந்த முடித் திறந்தவன் அலைபேசியை பக்கவாட்டு மேசையில் வைத்து விட்டு அப்படியே மார்புக்கு குறுக்காக கரங்களை கட்டிக் கொண்டு நின்று இருந்தான்.

 

அங்கு நிலவிக் கொண்டு இருந்த இனிய வானிலையை ஏன் அந்த இடத்தைக் கூட ரசிக்கும் மனநிலை கொஞ்சமும் அவனிடத்தில் இல்லை.

 

மனம் முழுதும் அத்தனை தவிப்பு.

 

அவள் தன்னிடமிருந்து விலக வேண்டும் என்று தான் கல்லூரியில் வைத்து கூட அவள் தன் கரத்தை முதன் முறையாக தீண்டிய போதும் கூட ஆர்ப்பரித்த மனதை அடக்கி அவளை நோக்கி வார்த்தைகளை விட்டு இருந்தான்.

 

இப்போது அவளை எப்படி அணுக வேண்டும் என மனதில் உரு போட்டு கொண்டு இருந்தவனுக்கு அவளை இன்னொரு முறை கஷ்டபடுத்த துளியேனும் எண்ணம் இருக்க வில்லை.

 

அவன் பின்னால் கேட்ட “ஜிதன்” என்ற அந்த ஒற்றை உயிரை உருக்கும் அழைப்பில் அந்தோ பரிதாபம் அவன் இவ்வளவு நேரமும் கடினப்பட்டு அடக்கி வைத்திருந்த உணர்வுகள் யாவும் கட்டவிழ்ந்தன.

 

ஒற்றை அழைப்பு உயிரை ஊடுருவுமா என்ன?

 

தன் பெயரை அவன் அவ்வளவு எல்லாம் ரசித்தது கிடையாது.

 

இதோ அவளின் அந்த உயிரை உருக்கும் அழைப்பில் அவன் ஜீவன் அவள் காலடியில் வீழ்திட சித்தம் கொண்டது.

 

“என்ன எல்லாம் பிளான் பண்ணி முடிச்சாச்சா?” என்றாள் அவனை ஆழ்ந்து பார்த்துக் கொண்டே,

 

அதில் ஒரு கணம் அதிர்ந்தாலும் தன்னை நிதானித்து கொண்டவன் “என்ன பிளான்?” என்று எதுவும் தெரியாதது போல வெகு வெகு சாதாரணமாக பேசினான்.

 

“ஓஹ் அப்போ சார் எதுக்கு மீட் பண்ண கூப்பிட்டீங்களாம் என்னை கழட்டி விட தானே” என்றவள் பேச்சில் இறுக்கம் குறைந்து சிரிப்பு தான் வந்தது.

 

கீழ் இதழ் கடித்து மெலிதாக புன்னகைத்தவன் ” எஸ் ஆப்கார்ஸ் கழட்டி விட தான் பிளான்” என்றான் நெற்றியை நீவிக் கொண்டே,

 

அவளுக்கோ பொறுமை போய் விட்டது.

 

சுற்றும் முற்றுக் தன் விழிகளை சுழல விட்டாள்.

 

மாலைவேளை என்பதால் ஆங்காங்கே ஆட்களும் வந்த வண்ணம் இருக்க, மெல்ல இருக்கையை இழுத்து போட்டு கொண்டு அமர்ந்தவள் தன் விழிகளாலே அவனை அமருமாறு பணித்தாள்.

 

அவளின் விழியசைவில் தன்னை சுகமாய் தொலைத்தவன் அவளுக்கு எதிரே இருந்த இருக்கையை இழுத்து போட்டுக் கொண்டு அதில் அமர்ந்து கொண்டவன் அவளை இமைக்காது பார்த்திருந்தான்.

 

அவனையும் அறியாமல் அவன் கட்டுப்பாட்டையும் உடைத்துக் கொண்டு மடை திறந்த வெள்ளமென அவனது சொல்லாத காதலை அவனது விழி வழி அவளுக்கு கடத்திக் கொண்டு இருந்தான் அந்த ஆறடி ஆண்மகம்.

 

” எனக்கு புரியல..” என கன்னம் தட்டி யோசிப்பது போல பாவனை செய்தவள் “அது எப்படி சார்?… என்ற வார்த்தைக்கு அழுத்தம் கொடுத்தவளாய் உங்க கண்ணுல மட்டும் லவ் மேக்னட் வச்சிட்டு வாய்க்குள்ள இரும்பு ராடை வச்சிட்டு பிஹேவ் பண்றது? என தீவிரமாக அவள் கேட்ட கேள்வியில் ஒரு கணம் புரியாமல் விழித்தவன் அடுத்த கணம் முத்து பற்கள் பளீரிட சத்தமாக சிரித்தான். 

 

அவன் புன்னகைத்து பார்த்து இருக்கின்றாள். அதுவும் அத்தி பூத்தாற் போல தான் நிகழும்.

 

ஆனால் இன்று தான் வெண் பற்கள் பளிச்சிட சிரிப்பதையே விழி அகலாமல் பார்த்திருந்தாள். 

 

சட்டென எழுந்து சென்று அவனின் பற்களுக்கு முத்தம் ஒன்றை வைத்து விடலாமா? என்று தோன்றிய விபரீத ஆசையை முயன்று அடக்கிக் கொண்டாள்.

 

அவளின் இமைக்காத பார்வையை ஆழ்ந்து பார்த்துக் கொண்டே ” சாரி ” என்றான்.

 

” எதுக்கு?” என்றவள் பார்வை அவனை விட்டு வேறெங்கும் விலகவே இல்லை.

 

“உன்ன காலேஜ் ல திட்டுனதுக்கு…” என்க,

 

“ஹான், எதுக்காக அவ்வளவு கோபம் சிரிக்காம அயன் ராடை விழுங்குன போல இருந்தீங்க” என்றாள் இதழ் சுளித்து, அவள் பேசிக் கொண்டு இருக்கும் போதே மெனுவை பார்த்து விட்டு அவளுக்கு காஃபியையும் ஆர்டர் செய்திருந்தான்.

 

“இப்போ நான் காஃபி குடிக்கிற மூட் ல இல்லை. சே எஸ் ஓர் நோ” 

 

“ஃபர்ஸ்ட் டைம் வெளில மீட் பண்றோம் சோ ஒரு காஃபி ல ஸ்டார்ட் பண்ணலாமே” என புருவம் உயர்த்த,

 

“ஸ்டார்டிங் நல்லா தான் இருக்கு பட் சார் தான் என்டிங் அஹ் வேற மாதிரி முடிக்க பார்க்குறீங்க” என்றவள் தன் முன் வைத்து விட்டு சென்ற காஃபியை சிப் சிப்பாக அருந்திய படி கேட்டாள்.

 

“சோ நான் என்ன திங்க் பண்றேன்னு உனக்கு தெரியும் ரைட்?” என்றவனது பார்வையில் இப்போது கூர்மை,

 

“ஃபைனல் எக்ஸாம் இருக்கு, க்ளியர் பண்ணு என் முடிவை சொல்றேன்னு சொன்னீங்க; சரி ஓகேனு அந்த நாள் வர்ற வரை வெயிட் பண்ணிட்டு இருந்து அந்த நாள் அதான் இன்னைக்கு ஆசையா பார்க்கா வந்தா அடுத்ததா இப்படி ஒண்ணு வந்து நிக்கிது சோ சார் அதுக்காக தான் என்னை விலக்கி நிறுத்த ட்ரை பண்றீங்க” என்று அவள் கூற,

 

” பிரில்லியன்ட்” என்றான் மென் புன்னகையுடன்,

 

” இதோ பாருங்க சார், என்னை யாரும் போர்ஸ் பண்ண முடியாது. நான் எங்கேயும் போக போறது இல்ல. இங்க தான் உங்களை லவ் பண்ணிட்டு இருக்க போறேன்” என்றிட,

 

அவனுக்கு தான் இவ்வளவு நேரமும் இருந்த இலகுத் தன்மை மொத்தமாக சென்றிருந்தது.

 

” நான் உன்ன லவ் பண்றேன்னு சொல்லவே இல்லையே” என்றான் உணர்ச்சியற்ற குரலில்,

 

” ஓஹ் சார் லவ் பண்லயா இட்ஸ் ஓகே  வாழ்நாள் முழுக்க உங்களை நான் லவ் பண்ணிட்டு இருந்திட்டு போறேன்” என்றாள் காஃபியை ரசித்து குடித்த படி,

 

அவளின் உறுதியான வார்த்தைகளில் அவனுக்கு தான் இதயம் ஆட்டம் கண்டது.

 

” சோ உன் சான்ஸ். உன் கேரியர் இதை பத்தி நீ கொஞ்சமும் திங்க் பண்ற ஐடியா இல்லையா?” 

 

“என்ன கேரியர்? பிஸ்னஸ் மேனேஜ்மென்ட் படிச்சு இருக்கேன் என்னால நான் இருக்க சிட்டில இருந்து என்னவேனாலும் பண்ண முடியும்” என்றாள் விடாது,

 

இதழ் குவித்து ஊதிக் கொண்டே அவளை வெறித்து பார்த்தவன் ” இட்ஸ் வெரி பிக் ஆபர்டூனிடி இசை சொன்னா கேளு யூ வான்ட் டூ கோ” என்றான் குரல் தாழ்த்தி பொறுமையாக,

 

” நோ, உங்களை விட்டுட்டு என்னால எங்கேயும் போக முடியாது ஜிதன். ஐ காண்ட்” என்றாள் இதழ்கள் நடுங்க,

 

” ஓகே வெல் என கேசத்தை கோதிக் கொண்டே சற்றே முன்னோக்கி உடல் சரித்து நீ போயிட்டு வா நாம மேரேஜ் பண்ணிக்கலாம்” என்றான் அழுத்தமாக,

 

” முடியாது ஜிதன் போக வேணாம்னு என் உள் மனசு சொல்லிட்டே இருக்கு சோ நான் போக மாட்டேன். எங்க உங்களை இழந்துடுவேனோனு பயமா இருக்கு” என்றாள் பரிதவிப்புடன்,

 

” சோ என் மேல உனக்கு நம்பிக்கை இல்ல ரைட்?” என்றவனின் இறுகிய குரலில், 

 

” ஐயோ அப்படி இல்ல ஜிதன் என அவசரமாக மறுத்தவள் இது வேற என்னவோ போல. எனக்கு சொல்ல தெரியல. மனசு ஒரு மாதிரி தவிச்சிட்டே இருக்கு” என்றிட,

 

” ஓ மேடம்’ கு ஆஃப்டர் டூ இயர்ஸ் அப்புறமா நடக்க போறது இப்பவே என்னன்னு விளங்குதா என்ன?  நைஸ் ஜோக்” என்றான் இதழ் பிரித்து சிரித்த படி,

 

அவளுக்கோ இயலாமையில் ஆத்திரமாக வந்தது.

 

சட்டென இருக்கையிலிருந்து எழுந்தவளோ “உங்களுக்கு இது ஜோக்கா இருக்கலாம் பட்..” என்று என்னவோ சொல்ல வந்தவளுக்கு அழுகை தொண்டையை அடைத்தது.

 

அனைவரின் பார்வையும் அவள் மேல் படிய, ” ஹே இசை சிட். எல்லாரும் பார்க்கிறாங்க” என்றான் மெல்லிய குரலில்,

 

அழுந்த விழிகளை மூடித் திறந்தவளோ மீண்டும் இருக்கையில் தொய்ந்து போய் அமர்ந்தாள்.

 

நன்றாக அவனின் தலையில் கொட்ட வேண்டும் போல இருந்தது.

 

எங்கே அவனை நெருங்கினால் தன்னை மீண்டும் காயப்படுத்தி பேசி விடுவானோ என்ற பயம் அவளுள்,

 

அடக்கிக் கொண்டாள் பெண்ணவள்.

 

” கம் வித் மீ” என எழுந்தவன் அவளை நோக்கி தன் கரத்தினை நீட்டி இருக்க,

 

அவனையும், அவன் நீட்டிய கரத்தினையும் நம்ப முடியாது மாறி மாறி பார்த்தவள் மெல்ல தன் வலக் கரத்தை உயர்த்தி அவனது கரத்தில் வைத்தாள்.

 

கல்லூரியில் வைத்து அவசரமாக அவசரமாக அவன் கரத்தினை பிடித்தாள் தான் ஆனால் அப்போது உணர முடியாத அவனது ஸ்பரிசம் இப்போது முதல் முறையாக உணர்ந்து கொண்டாள் பாவை.

 

எப்போதும் போல அவளின் மேனியில் ஒரு சிலிர்ப்பு.

 

அவனின் கரத்துடன் பிணைந்திருந்த தன் கரத்தை விட்டு பார்வையை அகற்றாமல் எழுந்து அவனது இழுவைக்கு நடந்தவள் வந்து நின்றது என்னவோ பால்கனியின் பக்கவாட்டாக மேல் நோக்கி அமைக்கப்பட்டிருந்த படிகளில் தான்.

 

அவளுக்கு சுற்றம் எல்லாம் ஒரு பொருட்டே இல்லை.

 

அவனின் அருகாமை. அவனின் ஸ்பரிசம். அவளை ஒரு நிலையில் வைத்திருக்கவில்லை.

 

என்னவோ மந்திரிக்கப்பட்ட நிலையில் அவன் என்ன சொன்னாலும் ‘ம்ம்’ என்று சொல்லும் நிலையில் சுயமிழந்து நின்றிருக்க,

 

அவளை பற்றி அவன் அறியாததா என்ன?

 

இது போல தானே கல்லூரியிலும் தன்னை மறந்த நிலையில் தன் மீது பித்தாகி இருப்பாள் என எண்ணும் போது அவனுள்ளும் அவளின் தன் மீதான அலாதியான காதல் மேல் அளப்பறிய நேசம் உண்டானது.

 

அவளையே இமைக்காது பார்த்திருந்தவன் தன் கரத்தில் பிணைந்திருந்த அவளின் கரத்தினை மெல்ல உயர்த்தி தன் சிரம் மீது வைத்தவனோ ” யூ ஹேவ் டூ கோ லண்டன் இசை” என்று சொன்னவனது வார்த்தைகளை அவள் கிரகிக்கும் முன்னரே “பண்ணுன ப்ரோமிஸ மீற மாட்டன்னு நினைக்கிறேன்” என்று சொல்லி முடித்த அடுத்த கணம் விழிகள் இரண்டும் கலங்க அவனை விட்டு இரு அடிகள் பின்னால் வைத்திருந்தாள்.

 

அவன் என்று வந்தால் முற்றிலும் மறக்கும் தன் அறியாமையை எண்ணி முதல் முறை கலங்கிப் போனாள்.

 

நெஞ்சமெல்லாம் கனத்து விட்டது.

 

தன்னை மறந்து அவனிடம் லயித்து நின்றிருந்த நிலையை அவன் தனக்கு சாதகமாக்கிக் கொண்டதை அவளால் கொஞ்சமும் ஜீரணிக்க முடியவில்லை.

 

இதழ்கள் நடுங்க “ஏன் ஜிதன் இப்படி பண்ணீங்க?” என உடைந்து கேட்டவள் குரல் ஈனமாக ஒலித்தது.

 

“இசை” என அவளது கரத்தை எட்டி பிடிக்கப் போனவனை விட்டு விலகும் பொருட்டு மேலும் இரண்டடி வைத்து பின்னால் நகர்ந்தவள் மேலிருந்து நிலை தடுமாறி கீழ் நோக்கி விழ எத்தனித்த கணம், எதிரே நின்ற அவனுக்கோ இதயம் தாளம் தப்பி துடித்தது.

 

” அம்மூமூமூமூ….” என பதறி துடித்தவன் அவளைக் கீழே விழ விடாது ஒற்றைக் கரம் கொண்டு கண நேரத்தில் அவளது கரத்தை அழுத்தமாக பிடித்து கொண்டான்.

 

ஒரு நூலிழை இடைவெளியில் கொஞ்சம் தாமதித்து இருந்தாலும் மொத்தமாக  அவள் கீழே விழுந்து இருப்பாள்.

 

கரணம் தப்பினால் மரணம் எனும் நிலை தான்.

 

அதே நிலையில் இருந்து கொண்டே மெல்ல தலை திருப்பி கீழே எட்டிப் பார்த்தவளுக்கு விழிகளோ இருட்டிக் கொண்டு வர, மேனி முழுதும் கணப்பொழுதில் வியர்த்து வடிந்தது.

 

மெல்ல தனது அடிகளை முன்னோக்கி நகர்த்தியவன் மறு கரத்தால் அவளது இடைப் பற்றி தன்னை நோக்கி வேகமாக இழுத்திருந்தான்.

 

இழுத்த வேகத்தில்  அவன் மார்பில் வந்து அவள் மோத, அவனோ அப்படியே சுவரில் சாயவும் சரியாக இருந்தது.

 

இருவரின் இதயங்களும் வெளியில் கேட்குமளவு படு வேகமாக துடித்துக் கொண்டிருந்தது.

 

அவளை இறுக அணைத்துக் கொண்டவனுக்கு அவளை தன்னுள் புதைத்துக் கொள்பவனை போல இறுக அணைத்து அவளின் இருப்பை தனக்குத் தானே உணர்த்திக் கொண்டானோ என்னவோ சட்டென கேட்ட “ஜிதன்” என்ற அவளின் அழைப்பில் தன்னை முழுதாக மீட்டுக் கொண்டவன் “சாரி” என சட்டென அவளை விட்டு விலக முயன்றான்.

 

அந்தோ பரிதாபம் அவனை விலக விடாமல் அவள் இறுக அணைத்திருக்க, “இதுக்கு மேல நான் உங்ககிட்ட எஸ் ஓர் நோ கேக்குறதுல எந்த அர்த்தமும் இருக்காது ஜிதன். ஐ க்னோ யூ லவ் மீ. அந்த மூணு வார்த்தைக்குள்ள தான் நம்ம காதலை அடக்க முடியுமா என்ன?என சற்றே அமைதியாக அவனது இதயத் துடிப்பை கேட்டுக் கொண்டே இப்போ என்ன நான் லண்டன் போகணும் அவ்ளோ தானே போறேன் உங்களுக்காக” என்றவள் எம்பி அவனிதழில் இதழ் பதிக்க முயல, அவளின் இதழ்களுக்கும் தன் இதழ்களுக்கும் இடையே தன் கரம் வைத்து தடுத்தவன் ” ஆஃப்டர் டூ இயர்ஸ் அப்புறமா என்னையே எடுத்துக்கோ நோ ஒப்ஜெக்ஷன்” என்றவன் இதழ்கள் மட்டும் அல்ல அவனது விழிகளும் அந்நொடி அடைந்த பேரின்ப சந்தோஷ ஆர்பரிப்பை வெளிப்படுத்திக் கொண்டிருந்தன.

 

“எனக்கு அடிக்கடி கால் பண்ணனும்” 

 

“நோ, என்னை பத்தியே தாட் இருந்தா உன்னால கான்சென்ரேட் பண்ண முடியாது சோ வீக்லி ஒன்ஸ் பேசலாம்” என்று தன் அணைப்பில் வைத்துக் கொண்டே பேசினான் அவளின் அவனாக,

 

” ஹான், இல்லனா மட்டும் உங்களை நினைக்க மாட்டேனாக்கும்” என கேலியாக சொன்னவள் நீங்க பேசலனா நான் போக மாட்டேன்” என தீவிரமாக கூறியவளை மென் புன்னகையுடன் பார்த்தவன் “ப்ரோமிஸ் பண்ணிட்டு மீறினால் அப்போ நான்…” என அவன் வார்த்தைகளை முடிப்பதற்குள் அவன் என்ன சொல்ல வருகின்றான் என மூளை கட்டளையிட இதயம் பதைபதைக்க அந்த சொல்லைக் கூட கேட்க திராணியற்று நெஞ்சை அடைத்த வலியை தாங்க முடியாதவளாய் தன் கரம் உயர்த்தி அவனது இதழ்களை மூடி வேண்டாம் என்பதை போல விழிகளில் நீர் நிறைய, துடித்து போனவளாய் இருபுறமும் தலை அசைத்திருந்தாள் பெண்ணவள்.

 

அவளது பரிதவிப்பை அருகிலிருந்து மொத்தமாக உள்ளவாங்கிக் கொண்டவன் மீண்டும் மீண்டும் அவளது கரை காணா காதலில் தன் ஆண் என்ற கர்வம் மொத்தமும் தொலைத்தான்.

 

” வீட்டுக்கு போற ஐடியா இல்லையா?” என மெல்ல அந்த கனமான மௌனத்தின் திரை விலக்கிட பேச்சின் திசையை அவன் மாற்ற,

 

எச்சிலைக் கூட்டி விழுங்கிக் கொண்டே அவனை ஏறிட்டு பார்த்தவள் ” எதுவா இருந்தாலும் பார்த்து பேசுங்க ஜிதன். உங்களுக்கு வேணும்னா நீங்க சொல்ல வந்த வார்த்தை ஜஸ்ட் ஒரு வேர்ட்டா இருக்கலாம் பட் எனக்கு…” என்றவளுக்கு வார்த்தைகள் வர மறுத்து  தொண்டைக் குழி ஏறி இறங்கியது.

 

வலியை தனக்குள்ளேயே அடக்கிக் கொள்கின்றாள் என புரிய, ” ஹியர் ஆஃப்டர் பார்த்து நிதானமா பேசறேன் ஓகேவா” என மெலிதாக புன்னகைத்தவன் “உன்ன உன் வீட்ல ட்ரா பண்றேன். அண்ட் டுமாரோ லண்டன் போற ப்ராசெஸ்ஸ ஸ்டார்ட் பண்ணிடலாம்” என்றிட,

 

அவனை முறைத்து வைத்தவள் “என்னை அங்க அனுப்பிட்டு பேசாம மட்டும் இருந்து பாருங்களேன் அப்புறம் இருக்கு” என்க,

 

” ஐ க்னோ பண்ணுன ப்ராமிஸ்காக நீ வர மாட்டனு” என்றான் அவளில் இருந்து விலகியவனாய்,

 

“சோ பேச மாட்டிங்க ஸ்ரிக்ட் வாத்தியா உங்க ரோலை மெயின்டெய்ன் பண்ண போறீங்களா என்ன?” என புருவம் உயர்த்தி கேட்டவளை இழுத்து அவளின் இதழ்களில் இதழ் பதிக்க தோன்றிய ஆசையை கடிவாளமிட்டு அடக்கிக் கொண்டவன் “இனிமேலும் உன்கூட பேசாம என்னால இருந்திட முடியுமா?” என ஆழ்ந்த குரலில் கேட்டவனை விழி விரித்து பார்க்க, ” இப்படி கண்ணை விரிச்சு பார்க்காதடி என்னவோ பண்ணுது” என தன் இடது மார்பை நீவிக் கொண்டவன் இதழ் குவித்து ஊதிக் கொண்டே காற்றில் அசைந்தாடிய கேசத்தை கோத, அவனையே காதல் கலந்த ரசனை மீதூர பார்த்திருந்தாள் ஜிதனின் இசையாக,

 

” மரணத்தை விட கொடியது

உன் மௌனமும் – உன்னை

பார்க்க முடியாமல் தவிக்கும் நீயில்லா நொடிகளும்! ” 

 

***********************

இதோ நாட்களும் மின்னல் வேகத்தில் நகர, அனைத்தையும் வேகமாக அவளின் எதிர்காலம் சிறக்க வேண்டும் என அவனே கூட இருந்து நடத்தி முடித்திருந்தான் ஜிதன்.

 

வாசுகி கூட அவனது கண்ணியமான  அணுகுமுறையில் நெக்குருகி போனார்.

 

இதோ மும்பை விமான நிலையத்தில் சுற்றம் கருதி அவளை இறுக  அணைக்கும் ஆர்ப்பரிப்பு மனதில் இருந்தும் அணைக்காது தன் உணர்வுகளைக் கட்டுப் படுத்திக் கொண்டு உறுதியாய் அவளின் முகம் பார்த்து நின்றிருந்தான் அவன்.

 

வாசுகியை அணைத்து கொஞ்சி முடித்தவள் அடுத்து ஜிதனை நெருங்கி அவனது பார்வையை காதலாக ஏறிட்டாள்.

 

அன்னையை பிரிந்து செல்லப் போகின்றோம் என்ற போது கூட வராத கண்ணீர் அவனது ஆழ்ந்த பார்வையை கண்டதும் விழிகளை நிறைத்தது கண்ணீர்.

 

அப்போதும் கூட அவன் உருவத்தை மறைத்த தன் கண்ணீரை சபித்தவள், சட்டென  கண்ணீரை அழுந்த துடைத்தவளாய் “டெய்லி பேசுங்க ஜிதன். ஐ வில் மிஸ் யூ” என குரல் தழுதழுக்க சொன்னவள் பாய்ந்து அவனை இறுக கட்டி அணைத்துக் கொண்டாள்.

 

மனம் முழுதும் ஏனென்று சொல்லத் தெரியாத அத்தனை தவிப்பு.

 

“என்னை இருனு ஒரு வார்த்தை சொன்னால் கூட இருந்துடுவேன் ஜிதன்” என குரல் உடைய சொன்னவள் இன்னும் அணைப்பை இறுக்கினாள்.

 

அவளின் வலியை போக்கி தன்னுடன் வைத்துக் கொள்ளலாமா? என்ற எண்ணம் கூட கணப் பொழுதில் அவனுக்கு தோன்ற, தன்னை நிதானித்துக் கொண்டான் ஆணவன்.

 

இனி ஒரு கணம் நீடித்தாலும் தான் அவளை செல்ல விட மாட்டேன் என அவனுக்கே ஐயம் திரிபுர தெரிந்து போக, “ரிலாஸ் ஏன் இவ்ளோ எமோஷனல் ஆகுற? டோண்ட் ஒர்ரி ஜஸ்ட் டூ இயர்ஸ். கடந்து போய்டும் இசை. யூ ஹேவ் டு பி பிரேவ். இனிமேல் தான் நீ ஃபேஸ் பண்ண போற விஷயம் நிறைய இருக்கு சோ எதையும் ஒரு செல்ஃப் காண்பிடென்ஸ்ஸோட மீட் பண்ணனும் புரியுதா?” என்றான் அவளை தன்னிலிருந்து   பிரித்தெடுத்த படி,

 

என்ன நினைத்து அவன் சொன்னானோ? அது அங்கு இருக்கும் யாருக்கும் தெரியாமல் போனது தான் விந்தை.

 

அவன் மேல் அவள் கொண்ட அதீத காதலுக்காக இனிமேல் தான் அவள் எதிர் நோக்க வேண்டியவைகள் ஏராளம்.

 

அவனை ஏறிட்டு பார்த்தவள் “ஷோர் ஜிதன், ஐ வில் வின் ஃபோர் மை செல்ஃப்” என திடத்துடன் சொன்னவள் அருகில் நின்ற நயாவையும் அணைத்து விடுவித்து சிறிது நேரம் பேசி விட்டு லண்டனை நோக்கி தன் பயணத்தை தொடர்ந்திருந்தாள் யாழிசை.

 

👁️ 176 Views
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
⚠️ இத்தளத்தின் உள்ளடக்கங்கள் DMCA
பாதுகாப்பில் உள்ளது. Copy / Screenshot / PDF
உருவாக்குதல் தடை செய்யப்பட்டுள்ளது.