இதயம் – 1
ஆடை ஆங்காங்கே முற்றாகக் கிழிக்கப்பட்ட நிலையில் தனது பெண்மையைக் காத்துக் கொள்ள கிட்டத்தட்ட தன்னைத் துரத்திக் கொண்டு வருபவர்களிடமிருந்து தப்பித்து ஓடி வந்தவளோ, தனது மூச்சை இழுத்துப் பிடித்துக் கொண்டு அப் பரந்த கடலில் குதித்து இருந்தாள் அவள்.
என்ன? கடலில் குதித்து விட்டாளா?
ஆம், இறப்பதற்காக அல்ல தன் பெண்மையைக் காப்பாற்றிக் கொள்ளவே ஆகும்.
அவள் மித்ரா. இந்தியாவின் புகழ் பெற்ற நீச்சல் வீராங்கனை.
மூச்சை இழுத்துப் பிடித்துக் கொண்டு குதித்த வேகத்தில் கடலின் குறிப்பிட்ட அடி ஆழம் வரை சென்றவள் தனது நீச்சல் திறமையில் பத்து நிமிடங்களில் தட்டுத் தடுமாறி மேலே வந்தவளுக்கோ உவர் நீர் கண்களில் பட்டு எரிய ஆரம்பித்து விடச் சோர்ந்து விடாமல் போராடி நீந்தியவளின் நல்ல நேரத்திற்கு சற்று தள்ளி ஒரு பாய்மரப் படகு நிற்க, அதைக் கண்டவளுக்கோ எப்படி தான் அவ்வளவு பலம் வந்ததோ வேகமாக நீந்தியவள் “சேவ் மீ…” என்று சத்தமாகக் கத்தினாள்.
அந்தோ பரிதாபம் கடல் நீரின் அடர்த்தியும் அளவும் அவளின் மெல்லிய தேகத்தை மறைத்து இருக்க, அவ்வாழ்கடலின் ஆர்ப்பரிப்பில் கிஞ்சித்தும் அவள் கத்தியது அப் படகினை செலுத்திக் கொண்டிருந்த நபருக்குச் சென்றடையவே இல்லை.
சோர்ந்துப் போனாள் அந்தப் பேதைப் பெண்.
அவளும் சாதாரணப் பெண் தானே.
கயவர்கள் கூட்டத்திலிருந்து தப்பித்து வரப் படாது பாடு பட்டவளுக்கோ உள்ளமும் உடலும் வெகுவாகச் சோர்ந்தது. இருந்தும் தன்னை நிதானித்தவள் தன் ஒட்டு மொத்த பலத்தையும் திரட்டி நீந்திக் கொண்டே “சேவ் மீமீமீமீ…” என்று மீண்டும் சத்தமாகக் கத்தினாள்.
அளவில் சிறியதாக இருந்ததனால் என்னவோ அப் படகில் இருந்த நபரோ தூரத்தில் கேட்ட பெண்ணின் குரலில் தூக்கி வாரிப் போடச் சுற்றும் முற்றும் தன் கண்களைச் சுழல விட்டார்.
அங்கோ தூரத்தில் பெண் ஒருவள் சிரமப்பட்டு நீந்திக் கொண்டு வருவதைக் கண்டவர் சற்றும் தாமதிக்காமல் அவள் வரும் திசையை நோக்கிப் படகை வேகமாகச் செலுத்தி இருந்தார்.
அவளுக்கு உதவிக்கு வந்த படகில் அவள் தட்டுத் தடுமாறி ஏறும் போதே அதற்குள் அந்தக் கடவுளுக்கே கருணை இல்லை போலும்
அவள் தப்ப வழி காட்டிய கடவுள் யார்க் கண்களிலிருந்து உயிரைப் பிடித்துக் கொண்டு தப்பித்து வந்தாளோ அவன் கண்களிலேயேயே தொக்காக அகப்பட வைத்து விட்டு இருந்தார்.
தூரத்திலிருந்து அவளை வெறித்துப் பார்த்துக் கொண்டே இருந்தவனோ அப் படகில் எழுதி இருந்த பெயரைப் படித்தவன் இதழ்களோ “இந்தியன் யாட்ச்” என்று சொல்லிக் கொண்டவன் குரூரமாகப் புன்னகைத்த அதே கணம் அப் படகின் புகைப்படத்தை மொத்த இந்தியாவில் அவனின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் ரகசிய கும்பலுக்குப் புலனம் மூலம் அனுப்பி வைத்தவன் “ரவுண்ட் அப் ஹேர்” என்று குறுஞ்செய்தி மூலம் கட்டளையைப் பிறப்பித்து விட்டுத் தூரமாகச் சென்றுக் கொண்டு இருந்த அப் படகை பார்த்த வண்ணம் நின்று இருந்தான் அந்த அரக்கன்.
ஆம், அவன் மனித ரூபத்தில் இருக்கும் அரக்கன் என்றே சொல்லலாம்.
தப்பித்து வந்து விட்டோம் என்ற நிம்மதியில் மூச்சை வேகமாக விட்டுக் கொண்டே படகில் அமர்ந்து இருந்தாள் மித்ரா.
எப்படியாவது இங்கிருந்து தப்பி விட வேண்டும் என்ற முனைப்பில் அவளின் ஆடைகள் ஆங்காங்கே கிழிக்கபட்டு கிட்டத்தட்ட அரை நிர்வாணமாக இருப்பதைக் கூட அவள் உணரத் தவறினாள் என்றே சொல்லலாம்.
தலையை அழுத்திப் பிடித்துக் கொண்டு அமர்ந்து இரு இருந்தவள் முன்னே “எக்ஸ்கியூஸ் மீ” என்று அனுமதி கேட்டுக் கொண்டே தனது ஷர்ட்டினை கழட்டிக் கொடுத்து இருந்தார் அந்த நடுத்தர வயதான நபர்.
சட்டெனக் கேட்ட ஆண் குரலில் ஸ்தம்பித்து போனவள் திடுக்கிட்டுப் பின்னால் சரிய, அவரோ “ஹே…கூல் மித்ராமா” என்றவரை அவள் அதிர்ந்து பார்த்துக் கொண்டே தன்னை மறைக்க நீட்டிய ஷர்ட்டினை வாங்கிப் போட்டுக் கொண்டாள்.
அதைப் போட்டுக் கொண்டே “தேங்க்ஸ் என்றவள் என்னை என்று ஆரம்பித்தவள் ப்ச்… என்று சலித்துக் கொண்டே விச் சிட்டி இஸ் திஸ் யாச் கோயிங் டூ?”என்று ஆங்கிலத்தில் அவள் வினவ…
லேசாக சிரித்தவரோ “சென்னை தான்” என்றார்.
அவரின் பதிலில் அவளுக்கோ பெருத்த அதிர்ச்சி.
அவர் தமிழில் பேசியது ஓர் அதிர்ச்சி என்றால் அப்படகு சென்னைக்கு தான் செல்கின்றது என்கவும் அதுவோ பெரும் அதிர்வு கலந்த சந்தோஷத்தைக் கொடுத்து இருந்தது.
“சார்…” என்றவளை “நீங்க இங்க என்ன பண்றீங்க மித்ரா?” என்ற அவரது கேள்வியில் அவளுக்கோ இப்போதைக்கு எதனையும் வெளியில் சொல்வது சரியெனப் படவில்லை.
தன்னை தானே நிதானித்துக் கொண்டவள் “தவறி விழுந்திட்டேன் சார்” என்றவளை அவரின் பார்வையே நம்ப வில்லை என்று அவளுக்கு உணர்த்த, அவளோ அதனை எல்லாம் கண்டு கொள்ளும் நிலையிலேயே இல்லை.
அமைதியாக அப் பரந்து விரிந்த ஆழ் கடலை வெறிக்க ஆரம்பித்து விட, அதற்கு மேல் அவரும் அவளைத் தூண்டித் துருவாமல் மாலை ஆகுவதற்குள் அப் பெண்ணைக் கரை சேர்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் முடிந்தளவு படகின் வேகத்தை அதிகரித்து இருந்தார்.
கடலை வெறிக்க வெறிக்கப் பார்த்துக் கொண்டு இருந்தவளின் விழிகள் தூக்கத்தில் சொருக, பக்கத்தில் இருந்த நிலையில் சரிந்து விழிகளை மூடிக் கொண்டாள்.
அவளைக் கட்டம் கட்டி தூக்க காத்து இருக்கும் அக் கயவனோ ஒரு பெண்ணைத் துடிக்கத் துடிக்கச் சீரழித்துக் கொண்டு இருந்தான்.
அப் பெண்ணின் கதறல் அதிகமாக அதிகமாக அவனின் இதழ்களில் எள்ளல் புன்னகை தவழ்ந்தது.
“பிளீஸ் என்னை விட்டுரு” என்று மன்றாடிக் கெஞ்சியவளை பார்த்து கொடூரமாக சிரித்தவன் “இதுக்கே எப்படி மா இன்னும் ஃபைவ் மோர் கஸ்டமர்ஸ் இருக்காங்க” என்று சொல்லிக் கொண்டே அவன் அவளின் அதிர்ச்சி கலந்த பார்வையை பார்த்து விட்டுக் குரூர புன்னகை முகத்தில் தவிழ விலகிக் கொண்டான்.
அதனைத் தொடர்ந்து வந்த கயவர்களில் ஓர் ஐம்பத்து நான்கு வயது மதிக்கத் தக்க பணம் பலம் உள்ள ஒருவனும் அடக்கம் என்பதே பரிதாபத்துக்கு உரிய விடயம் ஆகும்.
விழிகளிலிருந்து நீர் வழிய தன் கற்பை மாறி மாறி கொடூரமாக சூறையாடிக் கொண்டு இருக்கும் அவர்களின் பிடியிலிருந்து தன் உயிரையாவது காத்துக் கொள்ள வெகுவாகப் போராடியவள் விழிகள் மயக்கத்தில் சொருக அப்போதும் கூட விடாமல் அவ் அரக்கர்கள் செய்த செயலில் வீறிட்டு கதறியவளின் உயிர் கொஞ்சம் கொஞ்சமாகப் பிரிந்தது.
“ஆஆஆஹ்ஹ்ஹ்” என்று தூக்கத்தில் அலறிய படி தன் தலையைப் பற்றிக் கொண்டு கதறியவளை உலுக்கியவர் “மித்ராமா ஆர் யூ ஓகே?” என்று அவளின் சிவந்து இருந்த முகத்தில் நீரினை தெளித்தார்.
சட்டென விழித்தவளுக்கு உடலோ நடுக்கத்தைக் கொடுத்தது.
அவளுக்குத் தன் நினைவில் தோன்றிய விடயத்தை ஜீரணித்துக் கொள்ளவே முடியவில்லை.
மேனியில் ஒருவித நடுக்கம் பரவுவதை அவளால் உணர முடிந்தது.
விழிகளிலிருந்து நில்லாமல் வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டே சுற்றிலும் தான் இருந்த இடத்தைப் பார்த்தவளுக்கு அப்போதும் கூட மனது அமைதி அடையவில்லை.
தன்னை பார்த்துக் கொண்டு இருந்தவரிடம் “தே…தேங்க்ஸ் சார் என்று இதழ்கள் நடுங்க சொன்னவள் எச்சிலைக் கூட்டி விழுங்கிய படி சென்…சென்னை போக இன்னும் எவ்வளவு நேரமாகும்?” என்று திணறியவாறு கேட்டவளிடம் “இன்னும் ஹால்ப் அன் ஹவர் இருக்கு மா என்றவர் தொடர்ந்து உன்னோட வீட்டுக்கு எப்படிமா போவ?” என்று கேட்டவளிடம் ‘ஹான்’ என்று விழித்தவள் சற்று தயங்கியவாறே “எனக்கு கொஞ்சம் பணம் தாங்க சார். நான் வீட்டுக்கு போனதும் திருப்பி உங்களுக்கு கொடுத்துடுவேன்” என்றாள் உலகின் முதல் இடம் பெற்ற நீச்சல் வீராங்கனையும் பல மில்லியன் சொத்துக்களுக்கு அதிபதியான அவள்.
“திருப்பி கொடுக்க வேண்டாம் மா என்றவர் தனது அலைபேசியில் நீச்சல் உடையில் இருந்த அவரின் ஒன்பது வயதேயான மகளின் புகைப் படத்தைக் காட்டி, இவ என்னோட பொண்ணு. ஸ்விம்மிங்னா அவளுக்கு ரொம்பவே இஷ்டம். அது மட்டும் இல்லை உங்களோட தீவிர ஃபேன் அவ என்றவர் சாரி மா நான் கேக்குறேன்னு தப்பா நினைக்காதீங்க…” என்று அவர் சொல்லிக் கொண்டு இருக்கும் போதே… அவளோ, “ஆட்டோகிராஃப் வேணுமா சார்?” என்று கேட்டாள் மென் புன்னகையுடன்….
அவரோ தயங்கிய படி நிற்க…
“இதுல என்ன இருக்கு? என்றவள் எனக்கு ஒரு பேப்பரும் பென்னும் தாங்க” என்றாள்.
அவளின் கேள்வியில் சந்தோஷம் தாழாமல் தேட ஆரம்பித்தார்.
மீன் பிடிக்க வந்த அவரின் படகில் எங்கனம் காகிதமும் பேனையும் கிடைக்கும் என்பதை அவரின் சிந்தை யோசிக்கத் தவறி இருந்தது.
அவரின் அவசரத்திற்கு ஒன்றும் கிடைக்காமல் போக, இப்போது ஏமாற்றமாக அவளைப் பார்க்க… “இட்ஸ் ஓகே என்றவள் உங்க போனை தாங்க என்றவள் அவரிடம் இருந்த அலைபேசியை வாங்கியவள் உங்க பொண்ணோட நேம் என்ன சார்?” என்றுக் கேட்டுக் கொண்டே வீடியோவை ஒன் செய்தாள்.
“மித்ரா” என்று சொல்ல…
“வாவ் என்னோட நேம் வச்சு இருக்கா என்றவள் கண்டிப்பா அவ டாப் சுவிமெர் ஆஹ் வருவா… என்னோட சார்பா வாழ்த்துக்கள்” என்றவளிடம் “அவளுக்கு நாங்க வைச்ச பெயர் நந்தினி. எப்போ உங்களோட ஃபேன் ஆனாளோ அப்போல இருந்து உங்களோட பெயரை வைக்கணும்னு பிடிவாதம் பிடிச்சு மாத்திகிட்டா மா” என்று மெல்லிய புன்னகையுடன் அவர் சொல்ல…
“சோ ஸ்வீட் என்னோட லைஃப்ல இப்படி ஒரு தீவிர ரசிகையை மீட் பண்ணது இல்லை. கண்டிப்பா ஒருநாள் நேர்ல அவளுக்கு சர்ப்ரைஸ் கொடுக்குறேன்” என்று சொல்லிக் கொண்டே அச் சிறு பெண்ணின் பெயரைக் கூறி காணொலியில் கதைக்க ஆரம்பித்து இருந்தவளின் உயிர் இன்னும் சிறிது நேரத்தில் பிரியப் போகின்றதென அவள் கொஞ்சமும் அறியவில்லை.
அதனைத் தொடர்ந்து அவள் சென்னையை அடையும் போது மாலை ஆறு மணியைக் கடந்து இருக்க, அம் மனிதரின் சொந்த வேலையை விடுத்து தன்னைக் காப்பாற்றி இவ்வளவு தூரம் கூட்டி வந்து சேர்த்ததிற்கு பல நன்றிகளைக் கூறி விட்டு ஓர் ஆசுவாசப் பெரு மூச்சுடன் சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டே அந்த ஆள் அரவமற்ற கடற்கரையில் தனியாக நடந்து வந்தவள் தன் முன் திடீரெனத் தெரிந்த வெளிச்சத்தில் விழிகள் இரண்டும் கூச, உன்னிப்பாகப் பார்க்க முயன்றாள்.
அங்கோ, மூன்று உயர் ரக ஜீப்களிலிருந்து அடுத்தடுத்து இறங்கிய ஆஜானுபாகுவான ஆடவர்களை கண்டு மீண்டும் உடல் நடுக்கம் கொள்ள… அடுத்த கணமே வந்த வழியே ஓட எத்தனித்தவள் ஓர் உருவம் மீது மோதிக் கீழே விழுந்து இருந்தாள்.
அத் திடகாத்திரமான மேனியில் மோதிக் கீழே வீழ்ந்தவளுக்கோ விழுந்த வேகத்தில் கையிலும் முகத்திலும் பலத்த அடி வேறு… ‘ஸ்ஸ்’ என்ற முனகலுடன் வலித்த தலையைப் பற்றிக் கொண்டு ஏறிட்டு பார்த்தவளுக்கோ உயர் அழுத்த மின்சாரம் தாக்கியதைப் போல அதிர்ந்து போனவள் முதலில் உதிர்த்த வார்த்தை என்னவோ “நீயா?” என்று தான்.
“ப்ச்… சோ சேட் நீ மறுபடியும் என்கிட்டயே வந்து சிக்குவனு எக்ஸ்பெக்ட் பண்ணிருக்க மாட்டல மிஸ் என்று இழுவையாக சொன்னவன் நெற்றியை நீவிக் கொண்டவன் ஹான் மித்ரா” என்றான் எள்ளலாக…
“என்னை விட்டுரு” என்றவள் தன் வலியை மறந்து கை கூப்பினாள்.
“உன்னை விட்டு வைக்கவா மால்தீவ்ஸ்ல இருந்து டிரெக்ட்டா இங்க வந்து இருக்கேன்” என்று சிகரெட்டை பிடித்துக் கொண்டு அவன் வினவ…
முகம் வெளிறிப் போக எச்சிலைக் கூட்டி விழுங்கியவள் “நான் வெளில போனால் எதுவும் உன்… உன்னை பத்தி சொல்ல மாட்டேன் பிளீஸ் என்னை விட்டுரு” என்று திக்கித் திணறிக் கூறியவள் எழ முயல, கண நேரத்தில் அவளைக் காலால் எட்டி உதைத்து இருந்தான் அந்த அரக்கன்.
“அம்மாமாமாமா…” என்ற கதறலோடு மீண்டும் வீசுபட்டு கீழே விழுந்தவள் பின்னால் வந்து நின்ற ஒருவனோ, அவளின் கைகளை இறுக கட்டி விட்டு வாயிலும் தடிமனான பிளாஸ்டரினை ஒட்டி விட, இப்போது அவளுக்கோ தனக்காக அவனிடம் கெஞ்ச முடியாத நிலை.
எப்படியும் தன்னை விட்டு வைக்க மாட்டான் என்று அவன் நின்ற தோரணையிலேயே திண்ணமாக, தன் உயிர் போனாலும் பரவாயில்லை, தனது கற்பை இந்த கயவர்களிடம் இருந்து எப்படிக் காத்துக் கொள்வது என சிந்திக்க ஆரம்பித்தாள்.
தன்னையும் மீறி கண்ணீர் வழிந்தது. தன்னை நெருங்கும் அவனை வியர்த்து வழிய பார்த்துக் கொண்டே முயன்று மெதுவாகப் பின்னால் நகர்ந்தாள்.
அவளை பார்த்து சத்தமாக சிரித்தவனோ “நாட் பேட் நீயும் செம்ம செக்ஸியா தான் இருக்க” என்றவனின் ஊடுருவும் பார்வை அவளை அறுவருக்கச் செய்ய முகத்தைத் திருப்பிக் கொண்டவள் சுற்றும் முற்றும் பார்த்தாள். அந்தோ பரிதாபம் என்றும் போல் இல்லாமல் இன்றோ ஆள் அரவமற்ற அக் கடற்கரையை வெறித்தவள் தன் நிலையை நினைத்து அரவே வெறுத்து போனாள் பேதையவள்.
அப்போது எனப் பார்த்து அவனின் அலைபேசி அலற, ‘ப்ச்’ என்று சலித்த படி அழைப்பை ஏற்றவனுக்கு மறுபுறம் என்ன சொல்லப் பட்டதோ “ஓகே” என்றவன் அழைப்பைத் துண்டித்து விட்டு அருகில் நின்று இருந்தவனிடம் என்ன சொன்னானோ அடுத்த சில நிமிடங்களில் அவளின் மேனியில் பெற்றோல் ஊற்றப் பட்டது.
தன் மரணம் உறுதி என்று தெள்ளத் தெளிவாகப் புரிந்து போக, ஒரு கசந்த புன்னகையுடன் தனது மணிக்கட்டில் அணிந்து இருந்த பிரேஸ்லெட்டினை தன் வலக் கையினை முயன்று அசைத்துத் தன் நீள விரல்களைக் கொண்டு கழற்ற முயன்றாள்.
அதற்குள் அந்த அரக்கனோ, “உன்னை ஆசை தீர அனுபவிக்கலாம்ன்னு நினைச்சேன் பட் எனக்கு கொடுத்து வைக்கல என்றவன் அவளின் ஏளன புன்னகையில் வெறி ஏற சாவு டி” என்று லைட்டரினை பற்ற வைத்தவன் அவளின் மேல் எறிந்து இருந்தான் அந்த அரக்கன்.
பெற்றோல் ஊற்றபட்ட அவளின் மேனி கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்தது.
தரையில் புழுவைப் போல நெளிந்தாள்… அழுதாள்… துடித்தாள்… உருண்டு பிரண்டாள் அந்தப் பேதை பெண்.
அவளின் வாயில் ஒட்டப்பட்ட பிளாஸ்டரானது எரிந்து போகும் சமயம் அவளது குரலோடு முனகலாக வெளிவர அதே சமயம் கொஞ்சம் கொஞ்சமாக அவளின் உயிரோ உடலை விட்டு பிரிந்து இருந்தது.
அவள் துடி துடித்து இறப்பதை காணொளி பதிவாக உரிய நபருக்கு அவன் அனுப்பி வைக்க,
அடுத்த நொடியே அந்த நபரிடம் இருந்து “லீவ் ப்ரோம் தெய்ர்” என்ற குறுஞ்செய்தி வர, அடுத்த கணமே அங்கிருந்து கிளம்பி இருந்தான் அவன்.
