Menu

இதயம் – 5

இதயம் – 5

இதை எப்படி மறந்தோம் என்ற எண்ணம் மனதை அரிக்க, ஒரு முடிவை எடுத்தவனாய் காணாமல் போன ‘வர்ஷா’ என்ற பெண்ணின் பெற்றோர் வசிக்கும் வீட்டை நோக்கிக் கிளம்பி இருந்தான்.

 

கிட்டத்தட்ட இரண்டு மணி நேரத்திலேயே அவர்கள் வசிக்கும் குடியிருப்புப் பகுதியை அடைந்தவனுக்கு அங்கு காத்திருந்ததோ பெருத்த அதிர்ச்சி தான்.

ஆம், அப் பெண்ணின் பெற்றோர்கள் வாகன விபத்தில் இறந்து விட்டதாக கூற, அவனுக்கோ தூக்கி வாரிப் போட்டது.

அவர்கள் தங்கி இருந்த வீட்டின் எதிர் வீட்டில் கதவைத் தட்டினான்.

கதவு தட்டப்படும் ஓசையில் கதவைத் திறந்த பெண்மணி, போலீஸ் நிற்கவும் சற்று விதிர் விதிர்த்து தான் போய்விட்டார்.

திகைத்து நின்றிருந்தவரை புருவம் சுருக்கி பார்த்தவன் “எக்ஸ்கியூஸ் மீ உள்ள வரலாமா?” என்று கேட்டான்.

“ஹான்… என்று விழித்தவர் உள்ள வாங்க சார்” என்று அழைக்க, வீட்டினுள் வந்தவன் சுற்றுப்புறத்தை விழிகளால் அளந்த படியே இருக்கையில் அமர்ந்தவன் அப் பெண்மணியிடம் “உங்க பேர்?” என்று கேட்டான்.

“வள்ளி” என்றார் அப் பெண்மணி.

“வீட்டுல நீங்க மட்டும் தானா இருக்கீங்க?” என்ற அவனது அடுத்த கேள்வியில் “பசங்க எல்லாம் வெளியூர்ல” என்று சொல்ல…

“உங்களோட ஹஸ்பன்ட்?”

“அவர் இறந்து ரெண்டு வருஷம் ஆச்சு சார்” என்றார் வருத்தமாக, “சாரி என்றவன் அவரை துளைத்தெடுக்கும் பார்வை பார்த்துக் கொண்டே “பக்கத்து வீட்ல உள்ளவங்களை தெரியும் தானே?” என்று கேட்டதும் அடுத்த நொடியே “எஸ் சார் தெரியும் ஆக்சிடென்ட்ல அவங்க இறந்திட்டாங்க” என்று பதில் கூறி இருந்தார்.

போலீஸ் என்றால் அனைவரையும் சந்தேகக் கண்ணோடு தானே பார்க்க வேண்டும்.

அவனின் கூரிய பார்வையில் எதிரே நின்று இருந்த அப் பெண்மணியின் முகப் பாவனையும் பேச்சின் தொனியும் அவன் எதிர்ப் பார்த்தது போல ஏதும் மறைப்பது போலுமில்லை என்று பார்த்த மாத்திரத்திலேயே புரிந்தும் கொண்டான்.

 

“தென் போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுக்கலையா?” என்றவனிடன் “ஆக்சிடென்ட் பண்ணவங்கள போலீசால கண்டுபிடிக்க முடியல சார்” என்றதும் அவனுக்கே ஏதோ போல தான் இருந்தது.

தான் வரும் முன்னர் பணியில் இருந்த வீணாய் போனவன் என்ன செய்தானோ? அவன் மட்டும் கையில் கிடைத்தால் கொல்லும் வெறியே வந்தது அவனுக்கு…

தலையோ விண் விண்ணென்று வலித்தது.

 

தோண்டத் தோண்ட ஒவ்வொரு விடயங்களாக வெளிவந்து கொண்டிருக்க, அவனுக்கோ நாம் சரியான பாதையில் தான் சென்று கொண்டிருக்கிறோமா? என்ற சந்தேகம் கூட ஒரு கணம் தோன்றி மறைந்திருந்தது.

நெற்றியை அழுத்தி விட்டபடி படி அவரைக் கூர்ந்து பார்த்தவன் “வெல் இறந்து போனவங்களோட பொண்ணு வர்ஷாவை தெரியுமா?” என்று அவன் கேட்டதும் நொடியில் அவரின் முகமோ வருத்தத்தை பிரதிபலிக்க, “ஓஹ் தெரியும் சார் ரொம்ப நல்ல பொண்ணு. நல்லா பழகுவா? அவளை காணும்னு இரண்டு கிழமையா ரொம்பவே போலீஸ் ஸ்டேஷன் அங்க இங்கனு ரொம்பவே அலைச்சல் அவங்களுக்கு. வர்ஷாவோட அம்மா தான் ரொம்பவே உடைஞ்சி போயிட்டாங்க” என்றார் வருத்தமாக…

அனைத்தையும் உன்னிப்பாக கேட்டுக் கொண்டிருந்தவன் “தென் கடைசியா அந்த பொண்ண எப்போ பார்த்தீங்க?” என்று அவன் கேட்க…

“டூ வீக்ஸ் முன்னாடி தான் சார்”

“ வெல் என்றவன் இருக்கையில் இருந்து எழுந்துக் கொண்டவன் நியூஸ் பார்த்திருப்பீங்கன்னு நினைக்கிறேன் இப் யூ டோன்ட் மைண்ட் இறந்து போனது அந்த பொண்ணா இருக்கும் சந்தேகமா இருக்கு சோ டெட் பாடிய பார்த்து எனக்கு அடையாளம் காட்ட முடியுமா? என்று கேட்கவும் அப் பெண்மணியோ பதறியே விட்டார்.  

“என்ன சொல்றீங்க சார்?”

 

“ஜஸ்ட் அந்த பொண்ணானு கிளரிஃபிகேஷனுக்கு தான் மா” என்றதும் சற்று நேரம் தயங்கியவர் “வரேன் சார்” என்றவர் அவனோடு கிளம்பி இருந்தார்.

ஜீப்பினை செலுத்திக் கொண்டே பக்கவாட்டாகத் திரும்பி அப் பெண்மணியை பார்த்தவன் “கடைசியா அந்த பொண்ணு உங்க கூட என்ன ஷேர் பண்ணா ?” என அடுத்த கேள்வியை அவரை நோக்கி தொடுத்திருந்தான்.

சிறிது நேரம் யோசித்தவரோ ஞாபகம் வந்தவராய் அவள் தன்னிடம் பகிர்ந்தவற்றை கூற ஆரம்பித்து விட, அவர் கூறி முடிக்கும் போதே அவனின் இதழ்களில் மர்மப் புன்னகை தவழ்ந்தது.

    

அடுத்த சில மணி நேரத்தில் அப் பெண்மணியை பிணவறைக்கு கூட்டி வந்தவன் எரிக்கப்பட்டு சிதைந்த நிலையில் இருந்த பெண்ணின் உடலின் மீது போர்த்திருந்த போர்வையை லேசாக விலக்கினான்.

அதைக் கண்ட அப் பெண்மணிக்கோ குமட்டிக் கொண்டு வர, அதே நேரம் சிதைந்து போன முகத்தினை பார்த்து அதிர்ச்சியில் மயங்கி சரிந்தே விட்டார்.

“ஓஹ் ஷிட் என்று சொல்லிக் கொண்டே அவரை பிடித்துக் கொண்டவன் டாக்டர்… டாக்டர்…” என சத்தமாக அழைத்தான்.

அவனின் குரல் கேட்டு அவசரமாக அங்கு ஓடி வந்த வைத்தியரோ, மயங்கி இருந்த பெண்மணியை பரிசோதித்தவர் ஸ்ட்ரெச்சரின் உதவியுடன் வார்ட்டிற்கு மாற்றல் செய்ய, அங்கேயே அப் பெண்மணியும் கண் விழிக்கும் வரை அமர்ந்து இருந்தான் ஷர்வீத்.

இறந்து போன பெண் வர்ஷாவா? என்று அவனுக்குத் தெரிய வேண்டும்.

அதற்குள் அப் பெண்மணியும் அதிர்ச்சியில் கீழே வீழ்ந்து விட அவனுக்கோ ஆயாசமாக இருந்தது.

விழிகளை மூடி இருக்கையில் நன்றாக சாய்ந்து அமர்ந்தவன் அப் பெண்மணி கூறிய விடயங்களை அசை போட ஆரம்பித்தான்.

 

ஆரம்பத்தில் இருந்தே எல்லாவற்றையும் யோசித்த படி அமர்ந்திருந்தவன் வைத்தியரின் அழைப்பில் தான் விழிகளைத் திறந்தான்.

 

“டாக்டர், இஸ் ஷி ஓகே?” என்று கேட்டவனிடம் “நவ் ஷி இஸ் ஓகே. அவங்க ஷாக் ஆகி இருக்காங்க என்றவர் நிறுத்தி அகெயின் ஐடெண்டிட்டி பண்ண அவங்களை அழைச்சிட்டு போகாதீங்க மிஸ்டர் ஷர்வீத்” என்றவர் சென்று விட, இதழ் குவித்து ஊதிக் கொண்டே சிறிது நேரம் வெளியில் நின்று இருந்தவன், அப் பெண்மணியைப் பார்க்க அறைக்குள் நுழைந்தான்.

விழிகளை மூடி படுத்திருந்தவர் யாரோ வரும் அரவம் கேட்கவும் சட்டென விழிகளைத் திறந்தவர் நிமிர்ந்து அமர முயற்சிக்க, “நோ.. நோ ட்ரெயின் பண்ணிக்காதீங்க மா” என்றவன் அவரின் அருகிலேயே இருக்கையை இழுத்துப் போட்டுக் கொண்டு அமர்ந்தான்.

அவரின் உடல் நிலையைக் கருத்தில் கொண்டவன் சட்டென்று கேட்க நினைத்த கேள்வியை கேட்காது அப்படியே அமர்ந்து இருக்க, அந்தப் பெண்மணியோ “அந்த பொண்ணு வர்ஷா இல்ல சார்” என்றார் உறுதியான குரலில்…

“ஆர் யூ ஷோர்?”

“ஹன்றெட் பெர்செண்டேஜ் ஷோர் சார் அந்த பொண்ணுக்கு மைக்ரோஷியா இருக்கு அதுனால தான் சார் நிச்சயமா சொல்றேன்” என்று சொல்லவும் அவனுக்கோ மேலும் குழப்பம் அதிகரித்தது.

அப்படியென்றால் இறந்த பெண் யாராக இருக்கும்?

வர்ஷா எங்கே? என்று பல கேள்விகள் அவனைக் குடைந்தாலும் சிலவற்றை ஊகித்துக் கொண்டே இருக்கையில் இருந்து அவசரமாக எழுந்துக் கொண்டான்.

“சார் என்னாச்சு?” என்றார் அப் பெண்மணி.

“நத்திங் மா அண்ட் தேங்க் யூ ஃபார் யுவர் கோபரேஷன் என்றவன் பெர்சிலிருந்து பணத்தை எடுத்து அப் பெண்மணி மறுக்க மறுக்க அவரின் கையில் திணித்தவன் கேஸ் விஷயமா தேவைப் படும் போது வரேன் மா டேக் கேர்” என்றவன் அங்கிருந்து அவசரமாக காவல் நிலையத்திற்கு கிளம்பி இருந்தான்.

அன்று மாலை அவன் வீட்டுக்கு வரும் போதே இரவு 7 மணியைக் கடந்து இருந்தது.

உள்ளே வந்தவனை “என்னடா இவ்வளவு லேட்டா வர்ற?” என்று கேட்ட தனது அக்காவை முறைத்தவன் பதில் எதுவும் கூறாமல் தன்பாட்டில் மாடிப் படிகளில் ஏறி செல்ல முயன்றவனிற்கு கேட்குமாறு “மரியாதை தெரியாதவங்க கிட்ட ஏன்மா பேச்சு கொடுக்குறீங்க?” என்று விளங்கும் படி சத்தமாக சொன்ன ஆதிரா சாப்பிட ஆரம்பிக்க, அவளின் பேச்சில் அவனின் நடையோ ஒரு கணம் தடைப்பட்டு மீண்டும் தொடர, “ஷர்வீத் நில்லு” என்ற பூர்ணிமா அவனைத் தடுக்க முயன்றார்.

“ரெப்ரஷ் ஆகிட்டு வரேன்” என்றவன் வேகமாகச் சென்று தனது அறைக்குள் நுழைந்து கொண்டான்.

போகும் அவனின் முகம் குழப்பமாக இருப்பதை உணர்ந்து கொண்டவர் இப்போது திரும்பி ஆதிராவின் தலையில் நன்கு கொட்டி விட்டு “அவனே கேஸ் டென்ஷன்ல டையர்ட்டா வந்திருக்கான். சும்மா ஒரண்டை இழுத்துட்டு இருக்காத” என்று கடுமையாக சொல்ல….

தலையை தேய்த்துக் கொண்டவள் “எப்போ பார்த்தாலும் என்னையே திட்டுங்க உங்க தம்பியை…” என்று சொல்ல வந்தவள் பூர்ணிமா முறைக்கவும் அதற்கு மேல் எதுவும் பேசாமல் அமைதியாக சாப்பிட ஆரம்பித்து இருந்தாள்.

இங்கோ அறைக்குள் வந்தவன் அவனின் பாக்கெட்டில் வைத்து இருந்த பொலித்தீன் உறையினை மேசையில் வைத்து விட்டு குளியலறைக்குள் புகுந்துக் கொண்டான்.

சில்லென்ற நீர் மேனியில் பட்டாலும் அவனின் சிந்தனைகள் முழுவதும் கேஸை நினைத்து மாத்திரமே சுழன்றுக் கொண்டிருந்தன.

பல்வேறு கோணங்களில் சிந்தித்தான்.

நீண்ட நேரம் சிந்தித்தவனுக்கு கடைசியில் கிடைத்த பதில் ஒன்று தான்.

இறந்து போன பெண்ணும் சரி காணாமல் போன வர்ஷாவும் சரி இருவரின் விடயத்தில் சம்மந்தப் பட்ட ஒன்று என்றால் அது கடல் தான்.

ஆம், வர்ஷா என்ற பெண் காணாமல் போன அன்றே கடற்கரையில் வைத்து தான் பெற்றோர்கள் இருக்கும் போதே கடத்தப் பட்டு இருக்கின்றாள் என்று அவ் வள்ளி என்ற பெண்மணி கூறி இருக்க, அவனுக்கோ பெரும் அதிர்ச்சி தான்.

அப் பெண்ணின் தகவல்களின் அடிப்படையில் வர்ஷா என்ற பெண் காணாமல் போன அன்று பதிவான சிசிடிவி காணொளியிலும் கூட எதுவும் பதியாமல் போக, விறைத்து போய் அமர்ந்து இருந்தவனுக்கு இப்போதே நெற்றிப் பொட்டில் அடித்தது போல துணுக்கு கிடைத்து இருந்தது.

தன்னை சுத்தப் படுத்திக் கொண்டு இடையில் வெண்ணிற டவலுடன் வெளியில் வந்தவன் மேசையின் அருகே சென்றான்.

அவசரமாக டிராயரைத் திறந்து கையுறையை எடுத்துப் போட்டுக் கொண்டவன் மேசையில் இருந்த பொலித்தீன் உறையைப் பிரித்தான்.

கரங்கள் நடுங்க உறையினுள் இருந்த லைட்டரை எடுத்து வைத்து சில நிமிடங்கள் உன்னிப்பாக அதையே வெறித்துக் கொண்டு இருந்தான்.

 

ஆம், அது இறந்த பெண்ணின் சடலத்தின் அருகே கருகிய நிலையில் கிடந்த லைட்டரை மீட்டெடுத்து அப்போதே பத்திரப்படுத்தி வைத்திருந்தான்.

 

காலையில் இருந்து மீடியாக்களின் கொடைச்சலின் எரிச்சலில் இதைப் பற்றி சுத்தமாக மறந்து போனவன் கேஸ் விஷயமாக வெளியில் செல்லும் போது சிகரெட் பிடித்துக் கொண்டு இருந்தவனிடம் இருந்து கைப்பற்றிய லைட்டரைக் கண்டவனுக்கோ அப்போது தான் மூளையில் மின்னல் வெட்டியது.

அவன் கண்டு பிடித்து எடுத்தது ஒன்றும் சாதாரண லைட்டர் அல்லவே!

ஆம், உல்லாசக் கப்பல்களில் பண பலம் படைத்த மேல்தட்டு பயணிகள் உபயோகிக்கவென பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டும் கப்பல் போன்ற அமைப்பில் இருக்கும் லைட்டர் ஆயிற்றே!

லைட்டரில் பாதியாக எரிந்த நிலையில் இருந்த பெயரைப் பார்த்தான்.

அப் பெயரோ ‘ஐகான்’ என்று பாதியாக தெரிய, லைட்டரின் கப்பல் போன்ற அமைப்பை வெறித்தவன் தன் மறு கரத்தில் இருந்த வாகன சில்லின் புகைப் படப் பிரதியை இனி தனக்கு அது தேவையே இல்லை என்பதைப் போல கசக்கி எறிந்தவன் இதழ்களில் கர்வப் புன்னகை தோன்றி மறைந்தது.

கிட்டத்தட்ட இலக்கை அடைந்து விட்டான் அல்லவா!

கொலைகாரன் எதற்காக ஆதாரத்தை அப்பட்டமாக தெரியும் படி விட்டு, விட்டுப் போனான் என்ற கேள்வி எழுந்தாலும் அவனைக் கையும் களவுமாகப் பிடித்து நையப்புடைக்க வேண்டும் என்ற வெறியே எழுந்த அதே கணம், 2.5 டொன் எடையும் 1200 அடி நீளமும் கொண்ட‘மிதக்கும் சொர்க்கம்’ என்று அழைக்கப்படும் “ஐகான் ஆப் த சீஸ்”எனும் உல்லாசக் கப்பலின் இருபதாவது மாடியில் இருந்து அப் பரந்த அத்திலாந்திக் சமுத்திரத்தின் அழகை வெறித்த படி நின்று இருந்தவன் இ

தழ்களோ “வெயிட்டிங் ஃபார் யூ ஷர்வீத்” என்று உச்சரித்து இருந்தன.

 

👁️ 420 Views
4.5 4 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
⚠️ இத்தளத்தின் உள்ளடக்கங்கள் DMCA
பாதுகாப்பில் உள்ளது. Copy / Screenshot / PDF
உருவாக்குதல் தடை செய்யப்பட்டுள்ளது.