இதயம் – 6
லைட்டரை எடுத்துப் பத்திரப் படுத்தி வைத்து விட்டு அவசரமாக உடையை அணிந்துக் கொண்டவன் தன் கேசத்தை கோதியவாறு மாடிப் படிகளில் கீழறங்கி வந்தவனை வாயைப் பிளந்து பார்த்துக் கொண்டு நின்று இருந்தார் பூர்ணிமா.
பின்னே, வியக்காமல் இருக்க முடியுமா?
சற்று முன்னர் குழப்பமாக இருந்த அவனது முகம் இப்போது பிரகாசமாக அல்லவா மின்னிக் கொண்டிருந்தது.
“இதோ வந்துட்டான்” என்று மனதிற்குள் சொல்லிக் கொண்ட ஆதிராவோ எழுந்து சோஃபாவில் அமரப் போக, “ஆதிரா என்ன பழக்கம் இது டைனிங் டேபிலுக்கு வா” என்று பூர்ணிமா கடிய…
‘இவன் முன்னாடியா?’ என்ற கேள்வி மனதுக்குள் எழுந்தாலும் அடக்கிக் கொண்டே அமைதியாக ஷர்வீத்தின் அருகே வந்தமர்ந்தாள்.
அவனுக்கு பிடிக்குமே என்று தோசையை வார்த்துக் கொண்டு வந்த பூர்ணிமா அவனுக்கு கொடுக்க, குனிந்த தலை நிமிராமல் அமைதியாக சாப்பிட்டுக் கொண்டு இருந்தவள் தன் அன்னை தனக்கு கொடுக்காமல் அவனுக்கு தோசையை வைக்கவும் “அம்மா இவ்வளவு பெருசா நான் உட்காந்து இருக்கேன் அது தெரியலையா?” என்று கோபமாக கேட்டவளிடம் “ ஒன் ஹவரா சாப்பிட்டுட்டு இருக்கடி அதுவும் பத்து தோசை உள்ள போயிருக்கு சோ என் தம்பிக்கு எதை கொடுக்குறதாம்?” என்று பூர்ணிமா கேட்க…
“உலகத்துலேயே பெத்த பிள்ளை சாப்பிடுறதை கண்ணு வைக்கிற அம்மா நீங்களா தான் இருப்பீங்க” என்று நொடித்துக் கொண்டவள் ஷர்வீத்தின் கேலி புன்னகையில் இதழ்களை சுளித்து விட்டு திரும்பியவளின் அலைபேசியில் மின்னஞ்சல் வந்ததன் அடையாளமாக திரையோ மின்னி மறைந்தது.
இடது கையால் அலைபேசியின் திரையை இரு முறை தட்டி மின்னஞ்சலை திறந்தவளுக்கோ விழிகள் இரண்டும் பெரிதாக விரிந்துக் கொண்டன.
அதில் வந்திருந்த மின்னஞ்சலை பார்த்தவளுக்கோ, முதலில் தான் காண்பது கனவா என உறுதிப் படுத்திக் கொள்ள நினைத்தவள் இடது கையால் தன் கன்னத்தை தட்டி பரிசோதித்து பார்த்துக் கொண்டவளுக்கோ, கன்னத்தில் உண்டான லேசான உணர்வே அது கனவல்ல நிஜம் தான் என்று கட்டியம் கூறியது.
அவளின் செயலை புருவம் சுருக்கி பார்த்தவன் எட்டி அவளின் அலைபேசியின் திரையை பார்த்தான்.
அதற்குள் அலைபேசியை மறைத்துக் கொண்டவள் “அம்மாமா…” என்றழைத்துக் கொண்டே இருக்கையில் இருந்து எழுந்து சமையலறைக்குள் ஓடினாள்.
போகும் அவளை வெறித்தவன் இதழ்களோ “ஐகான் ஆப் த சீஸ்” என்று சொல்லிக் கொண்ட அதே நொடி “நோ ஆதிரா நீ போகாதே” என்று பூர்ணிமா சொல்ல… “அம்மா இது எவ்வளவோ பெரிய சான்ஸ் தெரியுமா? அதுவும் வேர்ல்ட்ல பிக்கெஸ்ட் க்ரூஸ் ஷிப்புக்கு என்னை கேப்டன் ஆஹ் செலக்ட் பண்ணி இருக்காங்க அண்ட் இட்ஸ் பிக் திங் ஃபார் மீ” என்று பூர்ணிமாவுடன் வாதிட்டு கொண்டு இருந்தாள் ஆதிரா.
“எனக்கு புரியுது மா பட் எனக்கு என்னவோ பயமா இருக்கு போகாத அவ்வளவு தான்” என்று பூர்ணிமா சொல்ல “மா, நீங்க உண்மையாவே போலீஸ் தானா?” என்று கேட்டவளிடம் “வை நாட் போலீஸ்னா பயம் வரக் கூடாதா என்ன அதுவும் ஃபேமிலின்னு வந்தால் ரொம்பவே இருக்கும் என்றார்” கடுமையாக…
“இப்போ எதுக்காக இவ்வளவு பயப்படுறீங்க மா?”
“இப்போ தான் ட்ரெய்னிங் முடிச்சிட்டு வந்து இருக்க அதுக்குள்ள இவ்வளவு பெரிய ஆஃபர் எனக்கு சரின்னு படல” என்று பூர்ணிமா சொல்ல “ஓஹ் கோட், என்று சொல்லிக் கொண்டே அம்மா” என்றாள் ராகமாக… பூர்ணிமாவும் முறைத்துக் கொண்டு திரும்பி நின்று இருக்க, இருவரின் வாக்குவாதத்தையும் சமையலறைக் கட்டில் சாய்ந்து நின்ற படி பார்த்துக் கொண்டு இருந்தவனோ “ லீவ் ஹேர் எதுக்காக இந்த வாய்ப்பை விடணும்?” என்று பூர்ணிமாவை பார்த்து கேட்டு இருந்தான் ஷர்வீத்.
அவனது கேள்வியில் தலையில் கை வைத்துக் கொண்டு நின்று இருந்தவள் சட்டென அவனை ஏறிட்டு பார்த்தாள்.
ஆனால், அவனது பார்வையோ பூர்ணிமாவில் தான் நிலைத்து இருந்தது.
“என்னவோ தெரியல டா மனசுக்கு பயமா இருக்கு” என்றார்.
“டோண்ட் வொர்ரி. ஆதிரா மேனேஜ் பண்ணிப்பா” என்று சொல்ல…
தனக்காக அவன் பேசுவதை வியப்பாக பார்த்தவள் “இந்த நல்லதையாவது பண்ணுங்க மிஸ்டர்” என்று அவனுக்கு மட்டும் கேட்குமாறு சொன்னவள் பூர்ணிமாவை பார்த்து முறைத்து விட்டு தனது அறையை நோக்கி சென்று இருந்தாள்.
“இன்ரஸ்டிங், என்று இதழ்களுக்குள் முணுமுணுத்துக் கொண்டவன், நான் ஆதிராவை மேரேஜ் பண்ணிகட்டுமா?” என்று கேட்டே விட்டான்.
பாத்திரங்களை கழுவி வைத்துக் கொண்டு இருந்த பூர்ணிமாவோ அவன் சம்மதித்து விட்ட அதிர்ச்சி கலந்த சந்தோஷத்தில் அவன் புறம் திரும்பி “என்னடா திடீர்னு சொல்ற?” என்று கேட்க…
“உங்களுக்காக தான். அவளை மேரேஜ் பண்ணிட்டு ஜஸ்ட் அவளுக்கு கார்டியனா போறேன்” என்றானே பார்க்கலாம்.
“சோ உனக்கு இன்னுமே அவளை கல்யாணம் பண்ணிக்க இஷ்டம் இல்லை. எனக்காக தான் பண்ணிக்கிற ரைட்?” என்றவர் அவனை உறுத்து விழித்த படி கேட்க…
“ஒப்கோர்ஸ் உங்களுக்காக தான் மேடம்” என்றான் இழுவையாக…
“அப்போ ஏன் நான் ஆபீஸ்ல வச்சு கேட்டப்போ நீ சம்மதிக்கல?”
இந்த வழக்கைப் பற்றி இப்போதைக்கு யாரிடமும் கசிய விடக் கூடாது என்று நினைத்தவனோ “அப்போ தோணல இப்போ அவளோட சேப்டின்னு திங்க் பண்ணா ஐ ஜஸ்ட் வான்ட் டு புரோடெக்ட் ஹேர்” என்று தீவிரமாக சொன்னவனை “நீ அவ கூட போறதுனா ஓகே தான்” என்று உடனடியாக சம்மதத்தைக் கூறியவர் ஞாபகம் வந்தவராய் அட்டாப்ஸி ரிப்போர்ட் வந்துடுச்சா?” என்று கேட்டார் பூர்ணிமா.
“இறந்தது ஒரு பொண்ணு தான். அண்ட் ஆல்சோ என்று இழுத்து பெரு மூச்சை விட்டவன் எந்த எவிடென்ஸ்ஸும் கிடைக்கல” என்று முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல கூறி இருந்தான்.
“வெல்… என்று வருத்தம் தோய்ந்த குரலில் சொன்னவர் இதெல்லாம் பார்க்குறப்போ தான்டா அவளை எங்கேயும் விட கூடாதுன்னு தோணுது என்று சொன்னவர் அவனின் முறைப்பில் நீயே அவளை ஹண்டில் பண்ணிக்கோ என்று அறைக்கு செல்லப் போனவர் திரும்பி அண்ட் வன்மோர் திங் அடாப்ஸி ரிபோர்ட் காண்பிடென்ஷல்லா இருக்கட்டும் ஷர்வா. மீடியாவுக்கு கொடுத்திடாதே” என்று சொல்ல…
“ஷோர் என்னை மீறி வெளில போகாது” என்றான் உறுதியாக….
“தட்ஸ் குட் பட் நீ ஆதிரா கூட டிராவல் பண்றதுக்கு முதல் இந்த கேசை சோல்வ் பண்றது ரொம்ப கஷ்டம் சோ சிபிஐக்கு சேஞ்ச் பண்ணிடலாம்” என்க.
“என் மேல அவ்வளவு தான் நம்பிக்கையா மேடம்?”
“டேய் ஷர்வா, முதல்ல இந்த மேடம்ன்னு கூப்பிடுறதை நிறுத்து டா. சகிக்கல என்றவர் தொடர்ந்து நெக்ஸ்ட் வீக் அவ கிளம்பனும் சோ இந்த ஷார்ட் பீரியட்ல கிரிடிகலான கேசை எப்படிடா முடிக்க போற? ஈவன் இறந்து போன அந்த பொண்ணு யார்னு கூட அடையாளம் தெரியலை”
“டோண்ட் வொர்ரி அக்கா. கல்பிரிட்டை நெருங்கிட்டேன் சோ ஈசியா கண்டு பிடிச்சிடலாம்” என்றான் கண்கள் மின்ன…
அவனை வியப்பாகப் பார்த்தவர் “எவிடென்ஸ் எதுவும் கிடைக்கலன்னு சொன்ன சோ எந்த நம்பிக்கைல பேசிட்டு இருக்க?”
“என்னோட கெஸ்ஸிங் தான் சோ இப்போதைக்கு என்கிட்ட எதுவும் கேட்க வேண்டாம் கூடவே என்கூட நரேனையும் கூட்டிட்டு போக அரேஞ்ச் பண்ணா மட்டும் போதும் என்றவன் அவரின் திகைத்த தோற்றத்தில் மென் புன்னகை சிந்தியவன் ஜஸ்ட் வெயிட் அண்ட் வாட்ச்” என்று தோள்களை குலுக்கிக் கொண்டான்.
“என்னவோ பண்ண போறன்னு தெரியுது பட் கேர்ஃபுல் ஷர்வா. செக்யூரிட்டி டிட் பண்ண அரேஞ்ச் பண்றேன்” என்றவர் நேரே அறைக்குள் சென்று விட, இதழ் குவித்து ஊதிக் கொண்டே தனது அறையை நோக்கிச் சென்றவன் என்ன நினைத்தானோ ஆதிரா மொட்டை மாடியில் தான் இருப்பாள் என்று தெரிந்து வைத்து இருந்தவன் கால்கள் அவளிருக்கும் இடத்தை நோக்கி விரைந்தன.
மேலே வந்தவன் கண்டது என்னவோ வானத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டு நின்று இருந்தவளை தான்.
சத்தம் எழுப்பாமல் அமைதியாக அவளின் அருகில் சென்று நின்றவன் “சோ இப்படியே எவ்வளவு நேரம் நிற்கிறதா ஐடியா?” என்ற அவனின் கேள்வியில் சட்டென பக்கவாட்டாக திரும்பி அவனை பார்த்தவள் ‘நமக்கு இருக்க தலைவலில இவன் வேற’ என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டவள் அவனைக் கண்டு கொள்ளாமல் செல்ல எத்தனிக்க, “நான் கேக்குறதுக்கு பதில் சொல்லலைனா சுத்தமா எனக்கு பிடிக்காது” என்றவனை பார்த்தவள் “உங்களுக்கு பதில் சொல்லனும்னு எனக்கு எந்த அவசியமும் இல்லை மிஸ்டர் ஷர்வீத்” என்று சொல்ல….
அவளறியாமல் இதழ்களுக்குள் புன்னகைத்துக் கொண்டவன் “இஸ் இட்?” என்று கேட்ட மறு நொடியே “ஒப்கார்ஸ்” என்று கூறி இருந்தாள்.
“ஐ டோண்ட் மைண்ட், பட் உன்னோட ஐகான் ஆப் த சீஸ்ல டிராவல் பண்ற கனவு சுவாகா தான்” என்று அவன் சொன்னது தான் தாமதம் “ ஓஹ் மை கோட்… ஓஹ் மை கோட், அம்மா என்ன சொன்னாங்க?” என்று ஆர்வமாக வந்து கேட்டவளை ஒரு மார்க்கமாகப் பார்த்தவன் நாவால் கன்னத்தை வருடிக் கொண்டே வேறெங்கோ பார்த்து நிற்க…
“ஹே… கம் ஒன் ஷர்வீத் ஸ்பீக் அவுட்” என்றாள்.
“உனக்கு பதில் சொல்லனும்னு எனக்கு எந்த அவசியமும் இல்ல மிஸ் ஆதிரா” என்றான் அழுத்தமாக…
அவளுக்கோ பொறுமை பறந்து போனது.
“சாரி சாரி தெரியாம வாயை விட்டுட்டேன் என்றவள் வராத சிரிப்பை வரவழைத்த படி சொல்லுங்க மாமா” என்றாள் பற்கள் தெரிய…
அவளின் ‘மாமா’ என்ற அழைப்பில் புருவங்கள் உயர அவளை ஏறிட்டுப் பார்த்தவன் “சரியா கேட்கல” என்று காதில் இருந்த ப்ளூ டூத் ஸ்பீக்கரை எடுத்து அவளுக்கு காட்டினான்.
இவ்வளவு நேரம் தனக்கு பதில் கொடுத்தவனுக்கு நான் இப்போது பேசியது மட்டும் எவ்வாறு கேட்காமல் இருக்கும்? ‘சரியான கேடி போலீஸ்’ என்று மனதில் நன்றாக அவனை வறுத்தெடுதவள் தன் இல்லாத பொறுமையை இழுத்து பிடித்தவள் “ சாரி மாமா, அம்மா என்ன சொன்னாங்க?” என்ற ஒவ்வொரு வார்த்தைகளையும் அழுத்தம் கொடுத்து கேட்டு இருந்தாள்.
மேலும் அவளை சோதிக்க விரும்பாதவனோ “வெல், என்று சொல்லிக் கொண்டே பக்கவாட்டு சுவற்றில் சாய்ந்து நின்ற படி உன்னை ஒரு கார்டியன் கூட தான் அனுப்புவாங்களாம்” என்று சொல்ல…
“வாட் கார்டியனா? ஹையோ! என்று தலையில் கையை வைத்தவள் சிறிது யோசித்து விட்டு ஓகே பைன் போலீஸ்ல யாரையும் அப்பாயின்ட் பண்ண போறீங்களா?” என்று கேட்டவளிடம் “எஸ்” என்றான் ஒரு மார்க்கமாக…
“ஏதோ சம்மதிச்ச வரையும் போதும்” என்று சொன்னவள் “தேங்க்ஸ் ஃபார் தி இன்போர்மேஷன்” என்று விட்டு படிகளில் இறங்கி செல்லப் போனவளின் நடையோ அவனின் குரலில் சட்டென தடைப்பட்டது.
*********************************************
“வாட்? கம் அகைன்?” எனக் கேட்டுக் கொண்டே அதிர்ச்சியாக திரும்பினாள்.
இதழ் குவித்து ஊதிக் கொண்டே “அதுக்கு நான் மனசு வைக்கணும்ன்னு சொன்னேன்” என்றான் மார்புக்கு குறுக்கே கைகளைக் கட்டிய படி…
‘கடுப்பை கிளப்பிட்டு இருக்கானே’ என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டே கொஞ்சம் புரியிற போல சொல்றீங்களா?”
அவளை அழுத்தமாக பார்த்தவன் அப்படியே நின்று இருக்க, அவனின் பார்வையில் திணறியவள் “சொல்லுங்க மாமா” என்றாள் மீண்டும் பற்கள் தெரிய….
“உன்கூட கார்டியனா வரப் போறதே நான் தான்” என்று சத்தமே இல்லாமல் அவளின் தலையில் இடியை இறக்கினான்.
“இம்ப்போஸ்ஸிபல் வேற யாரையாவது…” என்று கூற வந்தவளை இடை மறித்தவன் நேரடியாகவே “என்னை மேரேஜ் பண்ணிக்கோ” என்று கேட்டே விட்டான்.
