Menu

இதயம் – 7

இதயம் – 7

அவன் தன்னைத் திருமணம் செய்து கொள்ளத் தான் கேட்கின்றானா? என்று தன் காதில் விழுந்த வார்த்தைகளை நம்ப முடியாமல் மலங்க மலங்க விழித்தவள் “என்ன உளறிட்டு இருக்கீங்க?” என்று கேட்டவளை கண நேரத்தில் இழுத்து தன் கை வளைவிற்குள் கொண்டு வந்தவன் “நான் எதுக்காக உளறனும் பேபி?” என்றானே பார்க்கலாம்.

“எதே, பேபியா?” என்று அதிர்ச்சியாகக் கேட்டுக் கொண்டே அவனின் பிடியில் இருந்து விலக முற்பட்டவளை மேலும் தன்னோடு இறுக அணைத்துக் கொண்டவன் “வை நாட் நீ எனக்கு பேபி தான்” என்று நிதானமாக சொன்னவனைப் பார்த்து “ஹலோ! என்ன மேன் குடிச்சு இருக்கீங்களா?” என்று கேட்க…

“நான் தெளிவா தான் பேசிட்டு இருக்கேன்” என்றான்.

‘உஷார் ஆதிரா உஷார்’ என தனக்குள் சொல்லிக் கொண்டவள் “ரைட் விடுங்க நான் விஷயத்துக்கு வரேன் என்றவள் ஒரு பெரு மூச்சுடன் அவனை ஏறிட்டு பார்த்தவள் எனக்கு இந்த மேரேஜ்ல இஷ்டம் இல்லை பட் நீங்க எனக்கு கார்டியனா மட்டும் என்ற வார்த்தைக்கு அழுத்தம் கொடுத்து சொன்னவள் வர்றதுல எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல” என்றவளைப் பார்த்து தன் தெற்றிப் பற்கள் தெரிய புன்னகைத்தவன் “ என் நெத்தில இளிச்ச வாயன்னு ஒட்டி இருக்கா என்ன?” என்று நக்கலாக கேட்டவனை முறைத்தவள் “ஒட்டி இருந்தால் தான் தெரியனுமா என்ன?” என்றவளை சட்டென விலக்கி நிறுத்தியவன் “ஓகே தென் நான் வரல” என்று சொன்னவன் தன் பேச்சு முடிந்தது என்பது போல திரும்பி நடக்க…

 

கோபம் தலைக்கு ஏற, அவனை போக விடாமல் இடை மறித்த போல முன்னே போய் நின்றவள் “ நீங்க வர்லனா என்னை எப்படி அம்மா விடுவாங்க?” என்றாள் சிணுங்கலாக…

“தட்ஸ் நன் ஆப் மை பிஸ்னஸ்” என்றான் தோள்களை குலுக்கி…

“ஓஹ் கோட்… கல்யாணம் பண்ணிக்க வேண்டாம் என்கூட வந்தா மட்டும் போதும் மாமா” என்றாள் நிறுத்தி நிதானமாக…

“ஒருவேளை நான் கார்டியனா வந்தால் உன்கூட தான் டுவென்டி ஃபார் ஹவர்ஸ்ஸா சுத்திட்டு இருக்கணும் என்றவனை பார்த்து பற்களை கடித்தவள் “வை நாட் ஒரு கார்டியனுக்கு வேலையே அதானே” என்றவளை பார்த்து இதழ் குவித்து ஊதிக் கொண்டே “இதோ பார் ஆதிரா உன் கூடயே இருக்கது மீன்ஸ் நைட் டைம்ல கூட தான். புரியும் படி சொல்லனுமா இருந்தால் உன் காட்டேஜ்லயும் கூட தான்” என்றான்.

“வாட்? அதெல்லாம் முடியாது எனக்கென்ன ஆபத்து வரப் போகுது? ஏதோ அம்மா நீங்க இல்லைனா போக விட மாட்டாங்கனு தான் உங்களை என்னோட அழைச்சிட்டு போறேன். அதுக்காக என்னோட கேப்டன் காட்டேஜ் உள்ள எல்லாம் உங்களை விட முடியாது எனக்கு ப்ரைவசி வேணும் ஷர்வீத்”

“இப்பவும் சொல்றேன் எனக்கு உன் கூட வர இஷ்டம் இல்லை என் அக்காவுக்காக…” என்று பேச வந்தவனை “அப்போ எதுக்காக மேரேஜ் பண்ணிக்க கேட்டீங்க?”

“எனக்கு சில கட்டுப்பாடுகள் இருக்கு மிஸ் ஆதிரா என்று இழுத்து பெரு மூச்சை விட்டவன் நான் ஒருத்தி கூட ஸ்டே பண்றேனா அது என் பொண்டாட்டி கூட மட்டுமா தான் இருக்கணும்”

 

அதிர்ந்து போனாள் அவள்.

என்னவோ ஒன்று அவனிடம் அவளை உந்த, அக் கேள்வியை கேட்டு விட வேண்டும் என்ற முனைப்பில், அவனை ஆழ்ந்து பார்த்துக் கொண்டே “சோ நீங்க வேற யாருக்காவது கார்டியனா போக ஒப்பச்சூர்நிட்டி கிடைச்சா அவளை மேரேஜ் பண்ணிப்பீங்களா என்ன?” என்றாள் அவனை உறுத்து விழித்த படி…

 

“எல்லாரும் ஆதிரா ஆகிட முடியாது பேபி” என்ற ஒரே வார்த்தையில் அவளை வாயடைக்க வைத்தவன் விலகி தன் அறையை நோக்கி சென்று இருந்தான்.

அவனின் வார்த்தைகளில் தன்னையே அறியாமல் சிலிர்த்து போனாள் பெண்ணவள்.

சில நிமிடங்கள் அகலிகை போல கல்லாய் சமைந்து நின்று இருந்தவள் மேனியை சில்லென்ற தென்றல் தழுவிச் செல்ல, சற்று முன்னர் அவன் பிடியில் இருந்த தனது மேனியில் அவனது ஸ்பரிசம் மேலும் ஒட்டி இருப்பதைப் போல் உணர்ந்தவள் தனக்கு என்ன ஆயிற்று? என அதிர்ந்து போனவள் தலையை உலுக்கி சமன் செய்தவள் ஒரு முடிவை எடுத்தவளாய் தன் அறையை நோக்கிச் சென்று இருந்தாள்.

அதே கணம், “ ‘கயன்’ என்ற கர்ஜனையுடன் எதுக்காக லைட்டரை தொலைச்சுட்டு வந்திருக்க?” என்று கேட்ட விக்ரமன் இழுத்து விட்ட அறையில் அவனோ சுருண்டு கீழே விழுந்து இருந்தான்.

உதடு கிழிந்து இரத்தம் சொட்ட, அதனை புறங் கையால் துடைத்துக் கொண்டவன் “டேட்” என்றான் ஈனக் குரலில்…

“இரெஸ்பொன்சிபல் இடியட் என்று திட்டியவர் போலீஸ் ஈசியா கண்டு பிடிக்க வாய்ப்பை விட்டு வச்சுட்டு வந்து இருக்க முட்டாள். உன் அம்மாவுக்கு தெரிஞ்சா சாவடிச்சிடுவா” என்று திட்டிக் கொண்டு இருக்கும் போதே விக்ரமனின் அலைபேசி சத்தமாக அலறியது.

 

விழிகள் இரண்டும் அதிர்ச்சியில் விரிய, அலைபேசியை எடுத்துப் பார்த்தார்.

‘மதி’ என்ற பெயர் திரையில் மின்னிக் கொண்டு இருக்க, கீழே வீழ்ந்து கிடந்தவனை வெறித்தவர் “யுவர் மாம் இஸ் காலிங்” என்றவர் அந்த உல்லாசக் கப்பலின் அகன்ற பகுதியான பாலத்தை நோக்கி சென்றவர் அழைப்பை ஏற்றார்.

மறு முனையில் இருந்த அப் பெண்மணியோ “டார்லிங்” என்றாள் குழைவாக…

அவளுக்கு தெரிந்து விட்டதோ என்று ஒரு கணம் ஒரே ஒரு கணம் அச்சம் கொண்ட விக்ரமன் மதியின் குழைவான குரலில் தான் இவ்வளவு நேரமும் இழுத்துப் பிடித்து இருந்த மூச்சை வெளிவிட்டவர் “மதி, ஆர் யூ ஓகே?” என்று கேட்க…

“பைன் விக்ரம், சீக்கிரம் உங்களை மீட் பண்ண வந்துடுவேன் என்றவர் தொடர்ந்து நாம எரிச்சு கொன்ன பொண்ணு அதான் அவ பேர் கூட என்று சற்று யோசித்த மதி ஹான்… ‘மித்ரா’. நம்ம பிஸ்னஸ் பத்தின சீக்ரெட்ஸ் இருக்க எதையும் அவளோட ரூம்ல கூட விட்டு வைக்க வேண்டாம் அண்ட் மோர் ஓவர் அந்த பொண்ணை யாரும் தேடி வந்தால் நாங்க ஆக்ஷன் எடுக்குறோம்னு சொல்லி எதையாச்சும் சமாளிங்க மீதியை நான் வந்து பார்த்துக்கிறேன் என்றவர் இப்போதைக்கு எந்த பொண்ணு மேலயும் கயனை கை வைக்க வேண்டாம்னு சொல்லுங்க” என்று பேசிக் கொண்டே சென்ற மதி, இவ்வளவு நேரமும் விக்ரமனிடம் இருந்து பதில் எதுவும் இல்லாது போக “விக்ரம்” என அழைக்க,

“எஸ் பேப்”

“ஏன் உங்க வாய்ஸ் டல்லா இருக்கு?”

“நத்திங் மதி, அம் ஓகே என்றவர் நெக்ஸ்ட் வீக் நம்ம ஷிப் மால்தீவ்ஸ் டூ இங்லேண்ட் டிராவல் பண்ண இருக்கு, சோ நம்மளோட டீலிங்க்கு பெரிய வீஐபீஸ் வர்றாங்க சோ போலீஸ் மோப்பம் பிடிச்சிடாமல் இருந்தால் ஓகே. அது தான் ஐ பீல் டென்ஷன் பேப்”

“டோண்ட் வொர்ரி விக்ரம் நான் எதுக்காக இருக்கேன் ஐ வில் டீல் இட் என்றவர் அந்த கேப்டன் விஷயம் என்னாச்சு?”

“நம்ம விஷயம் தெரிஞ்ச ஒருத்தனையும் சும்மா விடலை கொன்னு கடல்ல போட்டாச்சு அண்ட் நெக்ஸ்ட் வீக்கு புதுசா இந்தியால பெஸ்ட் ஆஹ் ட்ரைனிங்ல ஸ்கோர் பண்ண பொண்ணை அப்பாயின்ட் பண்ண மெயில் சென்ட் பண்ணி இருக்கேன் அண்ட் அவளோட பயோ கூட ஓகே தான் என்று குரலை செருமியவர் அந்த பொண்ணை கூட நம்மளோட பிஸ்னஸுக்கு யூஸ் பண்ணிக்கலாம் பேப்”

“எல்லாம் ஓகே தான். நம்ம மிஷன் சக்சஸ் ஆகி இங்லேண்ட் ரீச் ஆகுறப்போ பார்த்துக்கலாம் அதுவரை அந்த பொண்ணுக்கு சந்தேகம் வராத போல நடந்துக்கோங்க” என்று சொல்ல…

“ஓகே பேப்… டேக் கேர் ஆப் யுவர் செல்ப்” என்றவர் அழைப்பை துண்டித்து இருந்தார்.

இத்தனைக்கும் அவளால் தான் இருவருக்கும் அழிவு மட்டுமல்ல அவர்களிடம் சிறைப் பட்டு சிக்கித் தவிக்கும் பெண்களுக்கும் விடுதலை என பாவம் அவர்கள் அறியவில்லை.

விதியின் கோரத் தாண்டவத்தை அவளின் அவன் மூலம் இறைவன் நடத்த தயாராக இருந்தார்.

அடுத்த நாள் அதி காலையிலேயே விழிப்பு தட்ட தூக்கம் வராமல் எழுந்து அமர்ந்தாள் ஆதிரா.

அவளுள் பல யோசனைகள் வலம் வந்துக் கொண்டிருந்தன.

வாழ்க்கையில் முதல் முறையாக முடிவை எடுத்து விட்டு, அதை எண்ணி தடுமாறுகின்றாள்.

“இப்படியே இருந்தால் மூளை மழுங்கி பைத்தியம் பிடிச்சிடும்” என்று தனக்கு தானே சொல்லிக் கொண்டவள் மணியைப் பார்த்தாள்.

அதுவோ, காலை நான்கு மணி என்று காட்ட “வில்லங்கம் வர்றதுக்குள்ள போய் வொர்க் அவுட் பண்ணிட்டு வந்துடலாம்” என்று சொல்லிக் கொண்டே எழுந்தவள் ஹேங்கரை பார்த்தவளுக்கோ தூக்கி வாரிப் போட்டது.

“ஹையோ! இது வேறயா எப்படி மறந்தேன்?” என்று புலம்பிய படி இருவரின் அறையோடு ஒட்டிய பிரத்தியேக உடற்பயிற்சி அறையைத் திறந்துக் கொண்டு உள்ளே நுழைந்தாள்.

நேராக சென்று பெஞ்சில் இருந்த தனது உடையை எடுத்துக் கொண்டவளுக்கு என்ன தோன்றியதோ, அவன் தான் இப்போது வர மாட்டானே என்ற எண்ணத்தில் திரும்பி அவன் அறைக்கான கதவு இருக்கும் திசையை பார்த்தவளுக்கோ அதுவோ, பூட்டப்பட்டு இருப்பது தெரிந்தது.

ஒரு பெரு மூச்சுடன் தன்னைக் குனிந்து பார்த்தாள்.

இறுக்கிப் பிடித்த ஃபிட்னெஸ் பேண்ட் தான் அணிந்து இருந்தாள்.

தன் கையில் இருக்கும் பேண்ட்டை எட்டி அங்கிருக்கும் ஹாண்டில் பாரில் போட்டவள் மீண்டும் சுற்றிலும் தன் பார்வையை சுழல விட்டவள் தனது டீ ஷர்ட்டை கழட்டி விட்டு கையிலிருக்கும் கருப்பு நிற மேலங்கியை அணியும் சமயம் “நான் எதுவும் பார்க்கல” என்ற அவனின் குரல் அவளின் பின் இருந்து ஒலித்தது.

 

அதிர்ச்சியில் தூக்கி வாரிப் போட நின்றவள் கையில் இருந்த மேலங்கி நழுவி கீழே விழுந்தே விட்டது.

“ஷர்வீவீவீவீத்” என்று சத்தமாக கத்தினாள்.

“ஹேய்… எதுக்குடி இப்போ கத்துற?” என்றவாறு அவளை நெருங்கியவனை “ஹே கிட்ட வராதீங்க” என்று அவன் புறம் திரும்பாமலேயே மார்பில் கையை வைத்து மறைத்த படி முன் இருக்கும் சுவரில் அவள் ஒன்ற…

வேறெங்கோ பார்த்துக் கொண்டு வந்தவன் குனிந்து அவளது மேலங்கியை எடுத்தவன் பின்னால் இருந்து கொண்டே “டேக் இட்” என்று அவள் முன்னால் கொடுக்க, அவனிடம் இருந்து பறித்தெடுத்தவள் அந்த அறையே அதிரும் வண்ணம் “கெட் அவுட்” என்று சீறினாள்.

விழிகளில் இருந்து கண்ணீர் நில்லாமல் வழிந்தது.

அவனுக்கோ சுர்ரென்று கோபம் ஏறியது.

என்ன இவள்? தான் ஏதோ அவளிடம் அத்துமீறியதைப் போல் அல்லவா கத்துகிறாள்.

“ஆதிரா, பிளீஸ் லிசின் டு மீ”

“வெளில போங்ககக…” என்றவாறு கத்தி அழுதாள்.

பற்களை கடித்து வந்த கோபத்தை கட்டுப் படுத்திக் கொண்டவன் திரும்பி தன்

அறைக்குள் சென்று கதவை அறைந்து சாற்றினான்.

👁️ 418 Views
4.7 3 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
⚠️ இத்தளத்தின் உள்ளடக்கங்கள் DMCA
பாதுகாப்பில் உள்ளது. Copy / Screenshot / PDF
உருவாக்குதல் தடை செய்யப்பட்டுள்ளது.