Menu

இதயம் – 10

இதயம் – 10

கையிலும் நெற்றியிலும் கட்டுடுடன் தன் முன் நின்றவனை கடிய மனமில்லாமல் அவனையே வெறித்துப் பார்த்துக் கொண்டு அமர்ந்து இருந்தார் பூர்ணிமா.

அவனை பிடிப்பதற்குள் அவன் லாரியில் பாய்ந்து உயிரை மாய்த்துக் கொள்வான் என்று நான் என்ன கனவா கண்டேன்?

இருந்தாலும் அவனை பிடிக்கத் தவறிய தன் மீதே ஆத்திரம் பெருகியது.

உடல் இறுக சிந்தனையில் நின்று இருந்தவன் பூர்ணிமாவின் குரலில் அவரை கேள்வியாக நோக்கினான்.

“ஷர்வா நீ மெடிகல் லீவ் எடுத்துக்கோ” என்றார் பூர்ணிமா.

“நோ நீட் மேம், அம் பெர்பெக்ட்லி ஆல்ரைட் என்றவன் தொடர்ந்து கால் ட்ரேஸ் பண்ணதுல எக்ஸாக்ட் லொகேஷன் காட்டல பட் அவன் என் மூவ்ஸ் எல்லாம் வாட்ச் பண்ண டிரக்கல மினி கேமரா செட் பண்ணி இருக்கான்” என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போதே கோபத்தில் கழுத்து நரம்புகள் புடைத்துக் கிளம்பின.

“வெல் ஷர்வா, இறந்து போனவனை ஆக்சிடென்ட் பண்ண லாரி டிரைவர்கிட்ட எதாச்சும் எவிடென்ஸ் கலெக்ட் பண்ணியா?”

“நோ, இட்ஸ் ஜஸ்ட் அன் ஆக்சிடென்ட் தான். அவன் ஹைவேல நார்மல் ஸ்பீட்ல தான் டிரைவ் பண்ணி இருக்கான் இவன் தான் இடைல ‘ஃப்***’ ” என்று சொல்ல வந்தவனை “ஷர்வா மைண்ட் யுவர் வேர்ட்ஸ் இது உன் வீடு கிடையாது” என்ற கண்டிப்பான குரல் பூர்ணிமாவிடம் இருந்து வர, “சாரி மேம்” என்றவன் தன் ஆத்திரத்தை அடக்கிக் கொண்டான்.

அவனின் உடல்மொழியிலேயே அவனின் அடக்கப்பட்ட ஆத்திரத்தை உணர்ந்துக் கொண்டவர் “நான் இப்போ உன் அக்காவா பேசல அஸ் அ டிஜிபியா உங்ககிட்ட ஒரு கேள்வி கேட்க விரும்புறேன் மிஸ்டர் ஷர்வீத்” என்றவர் குரலில் அவனுக்கும் குறையாத சீற்றம் அடங்கி இருந்தது.

அவர் என்ன கேட்கப் போகின்றார் என ஊகித்துக் கொண்டவன் “கேட்கலாம் மேம், இட்ஸ் மை ப்லஷர்” என்றவனிடம், அவனைத் துளைத்தெடுக்கும் பார்வை பார்த்துக் கொண்டே “கால் ரெக்கார்டிங் கேட்டேன் ஷர்வீத். இந்த கேஸ்ல எவிடென்ஸ் கிடைக்கலைன்னு சொன்ன நீங்க எதுக்காக க்ரைம் சீன்ல லைட்டர் கிடைச்ச விஷயத்தை என்கிட்ட இருந்து மறைக்கணும்?” என்று கேட்க…

இதழ் குவித்து ஊதிக் கொண்டே “எல்லாமே கண்டு பிடிச்ச பிறகு சொல்லலாம்னு நினைச்சேன் மேம்” என்றான். அதை சொல்லும் போதே அவனுக்கே தெரிந்தது அவனது பதில் அவ்வளவு உவப்பானது அல்ல என்று…

“உங்க வீட்ல பேசிட்டு இருக்க போல என்கிட்ட பேசுறீங்க ஷர்வீத். அஸ் அ டிஜிபி, ஐ ஹேவ் டு க்னோ எவ்ரிதிங் சோ நீங்க பண்ணது தப்பு” என்க…

“சாரி மேம்” என்றான்.

பல்லைக் கடித்து வந்த கோபத்தை கட்டுப் படுத்திக் கொண்ட பூர்ணிமா “உங்க இஷ்டம் போல நடந்துக்க இது ஒன்னும் உங்க வீடு இல்லை. இதுபோல நடந்துக்குறது இதுவே லாஸ்ட்டா இருக்கட்டும் அண்ட் கல்பிரிட் உங்களை டார்கட் பண்ணி இருக்கான் சோ எப்ப வேணாலும் உங்களோட உயிருக்கு ஆபத்து வரலாம் என அதிகாரத் தோரணையில் சொன்ன பூர்ணிமா சீக்கிரம் இந்த கேஸை சோல்வ் பண்ணுங்க என்றவர் கோப்பொன்றில் கையெழுத்திட்டு விட்டு அவனிடம் நீட்டியவர் யூ மே லீவ் நவ்” என்க…

 

சல்யூட் அடித்து விட்டு வேகமாக அங்கிருந்து வெளியேறியவன் நேரே வந்து நின்றது என்னவோ எங்கே இந்த வழக்கு ஆரம்பம் ஆனதோ அதே தொடக்கப் புள்ளியில் தான்.

ஆம், சடலம் கண்டெடுக்கப்பட்ட கடற்கரையில் வந்து நின்றவன் ஓர் இலக்கே இல்லாமல் ஆர்ப்பரித்துக் கொண்டிருக்கும் ஆழியை வெறித்தான்.

எங்கெங்கோ சுற்றி மீண்டும் பழைய நிலைக்கு வந்தது போலொரு எண்ணம்.

ஆனால், தான் எங்கோ தவறி விட்டோம் என்ற சிந்தனை மனதை அரிக்க, மெதுவாக நடந்து அப் பெண் இறந்து கிடந்த இடத்தைப் பார்த்தான்.

வானத்தில் இருள் சூழ, நேரமோ மாலை ஐந்தைக் கடந்து இருந்தது.

சம்பவ இடத்திலேயே மண்டியிட்டு அமர்ந்தவன் மனதில் அழுத்தம் கூடிப் போனது.

“ஷிட்” என்று சொல்லிக் கொண்டே ஏற்கனவே ரணமான தன் கையை ஓங்கி தரையில் குத்தினான்.

அவன் தரையை ஓங்கி குத்திய வேகத்தில் மணல் துகள்கள் அவனின் கையின் தோலை மேலும் சிராய்க்க, தனது நொடி நேர கவனயீனம் நினைவில் வந்து சீற்றம் தாளாமல் தொடர்ச்சியாக தன் கையை தரையில் ஓங்கி குத்தியவன் தோளில் என்னவோ கூர்மையாக உராய்ந்தது.

சாதாரணமான மணற்துகளின் கூர்மைக்கும் இப்போது அவன் உணர்ந்த ஏதோ ஒன்றின் கூர்மைக்கும் வித்தியாசம் உணர்ந்தவன் வேகமாக மணலை இரு கைகளாலும் தோண்ட ஆரம்பித்தான்.

அதன் பயனாக அவனின் கையில் கிக்கியது என்னவோ தங்கத்தாலான பிரேஸ்லெட் தான்.

ஆம், அன்று மித்ரா இறக்கும் முன்னரே தன் கையில் இருந்த பிரேஸ்லெட்டை தன் கூர்மையான நகத்தினால் கழட்டி குழிவாக இருந்த மணல் பொந்தில் விரல்களால் நகர்த்தித் தள்ளி இருந்தாள்.

அதுவோ, இன்று தான் ஷர்வீத் கையில் அகப்பட்டு இருந்தது.

கரங்கள் நடுங்க அதனை எடுத்துப் பார்த்தான்.

அதுவோ, சாதாரண பிரேஸ்லெட்டை விட தடிமனாகவும் வித்தியாசமாகவும் காப்பு போல வடிவமைக்கப்பட்டு இருந்த அதனைக் கூர்ந்து அவதானித்தவன் ஓர் ஊகத்தில் அதன் திறக்கும் முனையில் விரலை வைத்து அழுத்த, அம் முனையின் அழுத்தத்தில் அதனுள் இருந்து சிறிய மெமரி சிப்பொன்று வெளியே வந்து அவன் மடியில் வீழ்ந்தது.

அவனுக்கோ விழிகள் அதிர்ந்து விரிந்துக் கொண்டன.

எச்சிலைக் கூட்டி விழுங்கிக் கொண்டவன் இதழ்கள் புன்னகையில் விரிய, கொஞ்சமும் தாமதிக்காமல் அங்கிருந்து வீட்டினை நோக்கிக் கிளம்பி இருந்தான்.

********************************

தொலைக்காட்சியை பார்த்துக் கொண்டு இருந்த ஆதிராவோ வீட்டினுள், தலையிலும் கையிலும் கட்டுடன் நுழைபவனைக் கண்டு அதிர்ந்துப் போனாள்.

அவள் ஒருத்தி அங்கு இருக்கின்றாள் என்று கண்டு கொள்ளாமல் தன் அறைக்குள் சென்று அடைந்துக் கொண்டவனை யோசனையாகப் பார்த்தவள் ‘ஆளே சரி இல்லையே என்னவா இருக்கும்?’ என்று தனக்குள் சொல்லிக் கொண்டவள் கீழ வரட்டும் என்னனு கேட்டுக்கலாம்” என்ற எண்ணத்தில் தொலைக் காட்சியை பார்க்க ஆரம்பித்து விட்டாள்.

அதனைத் தொடர்ந்து அவன் வீட்டை அடைந்த ஒரு சில மணித்தியாலத்திலேயே ஆத்திரமாக வீட்டிற்குள் வந்த பூர்ணிமா “ஷர்வா எங்கடி? என்று கேட்க…

தனது அன்னையின் கோபத்தை வியப்பாக பார்த்தவள் ‘ ஆஹா… அருமையான சண்டை காட்சி இருக்கும் போலயே’ என மனதில் குத்தாட்டம் போட்டவள் “ரூம்ல” என்று சொன்ன மறு நொடி வேகமாக அவனின் அறையினை நோக்கி சென்று இருந்தார் பூர்ணிமா.

 

அவனின் அறையைத் திறந்துக் கொண்டு உள்ளே சென்றவர் பால்கனியில் நின்று வெளியில் வெறித்துக் கொண்டு நின்று இருந்தவனை பார்த்து “எதுக்காக இப்போ உனக்கு சஸ்பென்ஷன் கேட்குற ஷர்வா ஆர் யூ மேட்?” என்று சீற்றமாக வந்தன பூர்ணிமாவின் வார்த்தைகள்.

“லீகலி எவிடென்ஸ் அஹ் உங்ககிட்ட சொல்லாமல் மறைச்ச குற்றத்துக்காக” என்று சர்வ சாதாரணமாக தோள்களை குலுக்கிக் கொண்டான்.

“டேய்… இட்ஸ் ஓகே” என்று பூர்ணிமா சொல்ல…

“உங்க இடத்தில வேற டிஜிபி இருந்திருந்தால் எனக்கு சிக்ஸ் மந்ஸ் சஸ்பென்ஷன் கிடைச்சு இருக்கும் தானே மேடம் பட் அதை ஏன் நீங்க எனக்கு தராமல் இருக்கணும்?” என்று கேட்க…

“நீ என் தம்…” என்று கூற வந்தவரை இடை மறித்து அவனே “பிளீஸ் மேடம் லீகலி புரோசிட் பண்ணுங்க” என்றான் புன்னகைத்த படி…

“என்னடா சிரிக்கிற ஆர் யூ ஷோர்?” என்று கேட்க…

“எஸ், ஐ வான்ட் சஸ்பென்ஷன் அப்புறம் சீக்கிரமா என் கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணிடுங்க” என்று சொல்ல…

“கொஞ்சம் கூட பொறுப்பே இல்லாமல் பேசுற? அப்போ இந்த கேஸை யார் டீல் பண்றது?” என்று கேட்க…

“ஐம் லாக்ட், சோ சிபிஐக்கு சேஞ்ச் பண்ணிடுங்க” என்றவன் அறிவான் அவர்களால் கூட தீர்க்க முடியாது என…

“உன்னை ஒரு போலீஸ் ஆக்குனதுக்கு என்னை…” என்று பல்லைக் கடித்த பூர்ணிமா அறையை விட்டு வெளியேற, “உங்க பொண்ணை சீக்கிரம் கட்டி வைங்க. என்னை வச்சு அவ தான் காப்பாத்தணும்” என்று சத்தமாக சொல்ல…

கோபமாக வெளியில் வந்தவருக்கே புன்னகை தோன்ற “நாளைக்கே கல்யாண ஏற்பாட்டை ஆரம்பிச்சிடலாம் பட் நீ ஒழுங்கா யோசிச்சு முடிவெடுத்து சொல்லு”

“திஸ் இஸ் மை லாஸ்ட் டிசிஷன்” என்றான் அழுத்தம் திருத்தமாக…

“என்னவோ பண்ணு” என்று சொல்லிக் கொண்டே அவர் சென்று விட…

பூர்ணிமா சென்றதும் தன் கையில் இருந்த மெமரி சிப்பினை எடுத்துப் பார்த்தவனுக்கு கர்வப் புன்னகை தோன்றி மறைந்தது.

ஆம், கண்டு பிடித்து விட்டான்.

இந்த வழக்கின் பின் இருப்பவர்கள் மட்டும் அல்ல அவன் ஊகித்தது போல ஐகான் ஆப் த சீ்ஸ் என்ற கப்பலை மையமாகக் கொண்டு கப்பலில் வைத்தே அவர்கள் செய்யும் கொடூரமான கொலைகள் மற்றும் பெண்களை கற்பழித்து உள்ளுறுப்புகளை விற்பது முதல் அந்த வழக்கின் ஆணிவேரையே அந்த சிறிய சிப்பின் உதவியுடன் கண்டு பிடித்து விட்டான்.

விழிகளை மூடி பால்கனி சுவற்றில் சாய்ந்து நின்றிருந்தவனுக்கு இன்னுமே நிலைகொள்ள முடியவில்லை.

அவன் அந்த மெல்லிய சிப்பில் கண்டது ஒன்றும் சாதாரண காட்சி அல்லவே.

ஒரு பெண்ணை ஆறு கயவர்கள் கற்பழிக்கும் காட்சியே! அது மட்டும் அல்ல வயதான ஒருவன் கூட அப் பெண்ணை பலவந்தப் படுத்த, அதைப் பார்த்த ஷர்வீத்தின் உடலோ இறுகி விறைத்துப் போனது.

அதற்கு மேல் பார்க்கும் பொறுமை அற்று பாதியோடு எழுந்து வந்து பால்கனியில் நின்று வானத்தை வெறித்துக் கொண்டு இருந்தவனின் கை முஷ்டிகள் இறுகி விட்டன.

இழுத்து பெரு மூச்சை விட்டுக் கொண்டே ஒரு முடிவை எடுத்தவனாய் தன் அலைபேசியை எடுத்தான்.

அவன் அறிவானே!

காக்கி உடையில் தான் இருக்கும் வரை அதற்கு ஏற்ப சட்ட திட்டங்களை மதிக்க வேண்டும் என்று…

சில விடயங்களை மீறி செயற்பட வேண்டும் என்றால் அதற்கு தடையாக இருக்கும் இந்த காவல் உடையைத் தான் கழற்ற வேண்டும் என்ற முடிவை அதிரடியாக எடுத்திருந்தான்.

அவனை பொறுத்தவரை அப் பெண்ணை சீரழித்தவர்களை சிறைச்சாலைக்கு அனுப்பும் நோக்கம் எல்லாம் கொஞ்சமும் இல்லை. அவர்களை கடுமையாக தண்டனைக் கொடுத்து தனது கரத்தாலேயே கொல்ல வேண்டும் என்ற வெறி அவனுள் நொடிக்கு நொடி அதிகரித்தது.

அதனையடுத்தே தற்காலிகமாக பணியில் இருந்து நீக்கிவிடுமாறு மின்னஞ்சல் மூலம் பூர்ணிமாவிற்கு குறுஞ்செய்தி அனுப்பியும் இருந்தான்.

அனைத்தையும் நினைத்த படி திறந்தவன் விழிகளோ சிவந்திருக்க, போலீஸாக தான் பார்த்தவற்றை மீண்டும் மீண்டும் அனைத்தையும் மீட்டிப் பார்த்தவனுக்கு சட்டென பொறி தட்ட நகர மறுத்த தன் கால்களை நகர்த்தி மீண்டும் கணனியின் அருகே சென்று இருக்கையை இழுத்துப் போட்டுக் கொண்டு அமர்ந்தவன், மூடி வைத்த கணணியை மீண்டும் திறந்தவன் பா

ர்வை திரையில் தெரிந்த உருவத்தில் நிலைக்குத்தி நின்றது.

👁️ 373 Views
5 3 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
⚠️ இத்தளத்தின் உள்ளடக்கங்கள் DMCA
பாதுகாப்பில் உள்ளது. Copy / Screenshot / PDF
உருவாக்குதல் தடை செய்யப்பட்டுள்ளது.