Menu

இதயம் – 12

இதயம் – 12

கையில் கிடைத்த சுடிதார் ஒன்றை அணிந்துக் கொண்டு வந்தவளை பார்த்து “நாட் பேட்” என்று ஷர்வீத் சொல்ல…

இதழ்களை சுளித்தவள் பார்வையோ பட்டன்கள் திறந்து விடப் பட்டு இருந்த அவனது ஷர்ட்டில் படிந்து மீள, குரலை செருமிக் கொண்டே ஷர்ட்டின் பட்டன்களை பூட்டிக் கொண்டே காரில் ஏறிக் கொண்டான்.

அதனைத் தொடர்ந்து அவள் பின்னால் ஏறப் போக, “கண்டிஷன் நம்பர் த்ரீ பியூச்சர் பொண்டாட்டி என் பக்கத்து ஷீட்ல வந்திருக்கணும்” என்று சத்தமாக சொல்ல…

‘ ஹையோ மால் வரையும் இவன் கூடவா முன்னாடி உட்கார போற ஆதிரா? அச்சோ கிழிஞ்சது‘ என்று மனதில் சொல்லிக் கொண்டே முன்னால் வந்தமர்ந்தாள்.

கடைக் கண்ணால் அவளை பார்த்தவன் “எந்த ஷாப் போகணும்?” என்று கேட்க…

“போத்தீஸ்” என்றாள்.

“ஓகே” என்றவன் வேகமாக வண்டியை செலுத்த, அவளின் கடைக் கண் பார்வையோ கொஞ்சம் கொஞ்சமாக அவனின் புறம் திரும்பியது.

அவன் நிறத்திற்கு கருப்பு நிற ஷர்ட் அணிந்து ஆளுமையாக தெரிந்தவனது காதில் இருந்த வெண்ணிற கடுக்கன் அவளை ஈர்க்க, ‘பரவால்ல அழகா தான் இருக்கான் ‘ என்று மனதில் சொல்லிக் கொண்டே இதழ் குவித்து ஊதியவள் “நீங்க உண்மையாவே போலீஸ் தானா?” என்று அவளிடம் இருந்து திடீரென கேள்வி வர,

“அதுல என்ன சந்தேகம்?” என்று கேட்டான்.

 

“ரூல்ஸ் படி பார்த்தா காதுல கடுக்கன் எல்லாம் போட கூடாதே” என்க.

“எஸ், பட் நீ டிரண்டிங் ஆஹ் மாறும் போது நான் இருக்க கூடாதா என்ன?” என்று அவன் கேட்க…

“ரூல்ஸ் ப்ரேக்ன்னு உங்களை மாட்டி விடணும்” என்று கறுவினாள்.

“அஹான், யார்கிட்ட மாட்டுவ” என்று மென் புன்னகையுடன் கேட்டவனை முறைத்து விட்டு முன்னால் திரும்பிக் கொண்டே “முதல்ல என் அம்மாவை டிஜிபி போஸ்ட்ல இருந்து தூக்கணும் அப்புறம் தான் சிலர்க்கு உரைக்கும்” என சொல்லிக் கொண்டு இருக்கும் போதே காரை நிறுத்தியவன் கண நேரத்தில் அவளின் இதழ்களை உரசும் தூரத்தில் நெருங்கி இருந்தான்.

அவன் நெருங்கியதும் சற்றே பின்னால் சரிந்து தன் இதழைக் கரத்தால் மறைத்துக் கொண்டவள் அதிர்ந்து விழி விரித்து பார்க்க, அவளின் கண நேர செயலில் இதழ் கடித்து சிரிப்பை அடக்கியவன் அவளின் விழிகளை பார்த்துக் கொண்டே அவளது ஷீட் பெல்ட்டை விடுவித்தவன் “இந்த சின்ன மூளைக்குள்ள ஓவரா திங்க் பண்ணாத பேபி” என்றவன் விலகி காரிலிருந்து இறங்கிக் கொண்டான்.

அவன் இறங்கியதும் தன் அதிகப் பிரசங்கி தனமான கற்பனை செயலை நினைத்து வெட்கி போனவள் விழிகளை அழுந்த மூடி நாவை கடித்து ‘மானமே போச்சு ஹையோயோ’ என்று புலம்பியவள் முகத்தை விறைப்பாக வைத்துக் கொண்டு வெளியில் இறங்கினாள்.

அவனோ, கூலர்சை எடுத்துப் போட்டுக் கொண்டு அந்த பிரம்மாண்ட ஆடையகத்தினுள் நுழைய, ‘ இப்போ இந்த கிளாஸ் அஹ் மாட்டி சீன் போடலைனா என்னவாம் ‘ என்று சலித்துக் கொண்டே அவன் பின்னால் கடைக்குள் நுழைந்தாள்.

 சுற்றுப் புறத்தை விழிகளால் அளந்த படியே முன்னே சென்றவன் திரும்பி அவளைப் பார்க்க, அவனையே பார்த்துக் கொண்டு வந்தவள் அவன் தன்னைப் பார்த்ததும் சட்டென தன் பார்வையை வேறெங்கோ திருப்பிக் கொள்ள “சைட் அடிக்கலாம் தப்பில்ல” என்றான் அவன்.

“நான் உங்களை சைட் அடிக்கவே இல்லையே” என்றாள் சட்டென…

“நீ என்னை சைட் அடிக்கிறனு நான் மீன் பண்ணவே இல்லையே என்றதும் ‘நாசமாபோச்சு இன்னைக்கு ரெண்டாவது சொதப்பல்’ என மனதில் நொந்து கொண்டவள் “நீங்க ஓவரா திங்க் பண்ண வாய்ப்பு இருக்கு தானே சோ அதான் நானே சொல்லிட்டேன்” என்று விட, “சரி தான், என்ன பிடிக்குமோ அதை பெர்ச்சஸ் பண்ணிட்டு வா வெயிட் பண்றேன்” என்றவன் அப் பிரம்மாண்ட வரவேற்பு பகுதியில் அமர்ந்திருக்க போடப்பட்டு இருந்த சோஃபாவில் அமர்ந்துக் கொண்டான்.

அவனை முறைத்தவள் “கண்டிஷன் நம்பர் ஃபைவ் என் பியூச்சர் ஹபி நான் ஷாப்பிங் பண்றப்போ பக்கத்துல நிற்கணும்” என்று மார்புக்கு குறுக்கே கைகளைக் கட்டிய படி அவள் கூற,

சட்டென அவளை ஏறிட்டு பார்த்தவன் இதழ் குவித்து ஊதிக் கொண்டே எழுந்து முன்னால் செல்ல, அவன் அறியாமல் இதழ்களுக்குள் மெலிதாக புன்னகைத்துக் கொண்டவள் அவனைப் பின் தொடர்ந்து சென்றாள்.

இருவரும் லிஃப்ட்டில் ஏறிக் கொண்ட அதே சமயம் இரண்டு பெண்கள் அவர்கள் ஏறிய லிஃப்டினுள் நுழைந்துக் கொண்டனர்.

அவர்கள் உள்ளே வரும் போதே ஷர்வீத்தை பார்த்த பார்வையில் அவ் இருவரையும் ஆழ்ந்து பார்த்து விட்டு லிஃப்ட்டில் உள்ள எண்ணைக் குனிந்து அழுத்தினாள்.

அப் பெண்களும் அதே தளத்திற்கு தான் செல்ல வேண்டும் போலும் அவர்களோ தங்களுக்குள் கிசுகிசுத்த படி ஷர்வீத்தை பார்வையால் வருட, இதனையெல்லாம் அறியாமல் அவனோ அலைபேசியை நோண்டிக் கொண்டிருந்தான்.

ஆதிராவோ, லிஃப்ட் செல்லும் தளத்தைப் பார்த்தாள்.

அதுவோ ஐந்து என்று காட்டியது.

அவர்கள் செல்ல வேண்டியதோ பன்னிரண்டாவது தளத்திற்கு, ஆனால் அவர்களின் பார்வையில் அவளின் பொறுமை கொஞ்சம் கொஞ்சமாக போக, “ஷர்வீத்” என்று அடிக் குரலில் சீறினாள்.

அவனோ, அலைபேசியில் இருந்து பார்வையை அகற்றாமலேயே “ம்ம்” என்றான்.

“ஓவர் ஆக்டிங் பண்ணாதீங்க” என்று அவள் சொல்ல…

புரியாமல் விழித்தவன் அவளை கேள்வியாக நோக்க, அவளோ அவனை அனல் பார்வை பார்த்து விட்டு எட்டி அவனின் கூலர்சை கழட்டி விட, அவனுக்கோ பொறுமை போய் விட்டது.

“என்னடி” என அவன் குரல் உயர்த்த…

“நத்திங், நீங்க ப்ரெஷ் இல்லை ஷர்வீத் நாம கல்யாணத்தை…” என்று அவள் சொல்லிக் கொண்டு இருக்கும் போதே “அடிச்சு சாவடிச்சிடுவேன் என்று சீறியவன் கேசத்தைக் கோதிக் கொண்டே அவள் விழிகளைப் பார்த்து சற்றே தணிந்த குரலில் இப்போ என்னாச்சு?” என்று கேட்டான்.

“தெரியாத போல நடிக்க தேவை இல்லை” என்று இதழ்களை சுளித்தாள்.

 

“சார், அவங்க போனா என்ன நாங்க இருக்கோம்” என்று அவனின் பக்கவாட்டில் இருந்து குரல் கேட்க…

அவனை முறைத்து விட்டு விலகி நின்ற ஆதிராவின் முகம் கோபத்தில் சிவப்பதை பார்த்தவன் ‘நாசமாபோச்சு’ என்று இதழ்களுக்குள் முணுமுணுத்துக் கொண்டவன் திரும்பி அப் பெண்களை வெறித்துப் பார்த்தவன் “சிஸ்டர்ஸ், உங்களுக்கு பப்ளிக்ல எப்படி பிஹேவ் பண்றதுன்னு தெரியாதா? இப்படி தான் யார்னு தெரியாதவங்களை கூப்பிடுவீங்களா?” என்று முகத்திற்கு நேரே கேட்டே விட்டான்.

அப் பெண்களோ அவனின் அடக்கப்பட்ட ஆத்திரத்தில் அரண்டு போனவர்கள் “சாரி சார்” என்று ஒருங்கே சொல்ல…

“ஹும், என் இடத்தில வேற யாராவது இருந்தால் நீங்க கூப்டதும் வந்து இருப்பான் சோ பார்த்து பேசுங்க” என்றவன் ஆதிராவின் கையை பற்ற, அவளோ லிஃப்ட் திறந்ததும் அவனின் கையை உதறி விட்டு வேகமாக வெளியில் சென்றாள்.

அப் பெண்களோ “சார் நாங்க அவங்ககிட்ட பேசட்டுமா?” என்று கேட்க….

“இட்ஸ் ஓகே, ஐ வில் மேனேஜ்” என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போதே “ஷர்வீத்” என்ற குரல் ஆதிராவிடம் இருந்து வர, இதழ்களில் குறுஞ் சிரிப்புடன் அவளை நெருங்கினான்.

 

தன் அருகே வந்தவனிடம் “அது தான் சொல்லிட்டீங்கல அப்புறம் என்ன பேச்சு அங்க?”

“உன் கூட அவங்க பேசணும்னு சொன்னாங்க சோ நான் நோ நீட்னு சொல்லிட்டு வந்தேன்” என்று தோள்களை குலுக்கி கொண்டவன் முன் செல்ல…

தூரத்தில் நின்று இவர்களையே பார்த்துக் கொண்டு நின்று இருந்த அப் பெண்களை பார்த்து முறைத்து வைத்தவள் அவன் என்னவன் என்பதை போல கையால் சைகை செய்து காட்டியவள் கழுத்தில் விரலால் கோடு இழுப்பதை போல பல்லை கடித்தவள் “சீவிடுவேன்” என்றாள்.

அப் பெண்களோ அவளின் செய்கையில் மறு புறம் திரும்பிக் கொள்ள, ‘இதுக்காவே வர்றாளுங்க’ என சலித்த படி திரும்பியவள் புடவைகளை எடுத்து அவனுக்கு காட்டிக் கொண்டு இருக்கும் பெண்ணின் பார்வையும் அவன் மேல் படிந்து மீண்டுக் கொண்டிருந்தைப் பார்த்து அவளுக்கே ஐயோடா என்றாகி விட்டது.

 

அவனருகில் வந்தவள் “நானே செலக்ட் பண்றேன் சோ நீங்க அங்க வெயிட் பண்ணுங்க” என்று இருக்கையை காட்ட…

“அப்போ கண்டிஷன் நம்பர் ஃபைவ்?” என்று அடக்கப்பட்ட சிரிப்புடன் அவன் கேட்க…

‘படுத்துறானே’ என்று மனதில் கறுவிய படி பற்கள் தெரிய புன்னகைத்தவள் “டீல்ல விட்டாச்சு சோ கொஞ்சம் அங்க வெயிட் பண்றீங்களா மாமா” என்றாள் இழுவையாக…

“ஓகே, என்றவன் குனிந்து அந்த மெஜெண்டா கலர் லெஹெங்கா உனக்கு அப்ட்டா இருக்கும் பேபி” என்று ஹஸ்கி குரலில் சொல்ல “எனக்கு அந்த கலர் பிடிக்காது” என்றாள் சட்டென…

“தென் லீவ் இட்” என்றவன் சென்று இருக்கையில் அமர்ந்துக் கொண்டான்.

 ஒரு பெரு மூச்சுடன் திரும்பியவள் அப் பெண்ணின் பார்வை அவனை தொடர்ந்து கொண்டு இருப்பதை பார்த்து உள்ளே கழன்று கொண்டு வர, அவளின் முகத்திற்கு முன்னே சொடக்கிட்டவள் “அங்க என்ன லுக், உங்க வேலை என்னவோ அதை பண்றீங்களா” என்றதும் அப் பெண்ணோ அவளின் அதிகாரத் தோரணையில் வாய் அடைக்க, அவள் தெரிவு செய்யும் புடவைகளை எடுத்து வைக்க ஆரம்பித்து இருந்தாள்.

தனக்கான புடவையை தெரிவு செய்து கொண்டவள் அவளையும் மீறி அவன் காட்டிய மெஜெண்டா நிற லெஹெங்காவை தேடியது.

ஆனால், அதுவோ அவன் காட்டிய இடத்தில் இருக்கவில்லை.

மனம் பிசைந்தது. அவசரப்பட்டு வாயை விடாமல் எடுத்து இருக்கலாமோ என்று எண்ணிக் கொண்டே முகம் வாட, அவனுக்காக உடை எடுப்பதற்காக ஆண்கள் பிரிவிற்குள் அவனுடன் நுழைந்தாள்.

அவளும் தன்னோடு வருவதைப் பார்த்து புருவம் சுருக்கியவன் சென்றது என்னவோ அண்டர் வெயார் செக்ஷனுக்கு தான்.

“ச்சீசீ…” என்றவள் முகம் அஷ்டகோணலாக மாறியது.

“கண்டிஷன் நம்பர் சிக்ஸ் ஆப்ட்டர் மேரேஜ் என் ட்ரெஸ் எல்லாம் நீ தான் கழுவனும்” என அவன் சொல்ல…

“வாஷிங் மெஷின் இருக்கு சோ நோ ப்ராப்ளம்” என்றாள் பதிலுக்கு…

 

“எனக்கு மெஷின்ல கழுவினா பிடிக்காது” என்றிட…

அவனையும் அவன் நிற்கும் பிரிவையும் ஒரு மார்க்கமாக பார்த்தவள் மனதிலோ ‘ஒரு ஜட்டிக்கா இவ்வளவு சீன்’ என்று நினைத்த படி அவனுக்காக திருமண ஆடைகளை பார்த்தாள்.

அண்ணா, அந்த டார்க் ப்ளூ ஷர்ட்டை எடுங்களேன் “ என்க…

அவனோ, அதை எட்டி எடுத்து அவளிடம் கொடுக்க, அவ் அடர் நீல நிற ஷர்ட்டை வருடிக் கொடுத்தவள் மனக் கண்ணில் ஷர்வீத்தின் தோற்றம் வந்து போக, மேலும் அவனுக்காக உடைகளை தேர்ந்தெடுத்தாள்.

அதனைத் தொடர்ந்து அனைத்தையும் வாங்கி எடுத்துக் கொண்டு காரில் ஏறிய அடுத்த நொடி, தன் மனதில் நீண்ட நேரமாக அரித்துக் கொண்டு இருக்கும் கேள்வியை அவனிடம் கேட்டு இருந்தாள்.

ஆம், அவள் கேட்ட கேள்வியில் அவன் முகத்தில் கோபம் எழவில்லை மாறாக புன்னகை மாத்திரமே தோன்றியது.

ஷீட் பெல்ட்டினை போட்டுக் கொண்டே காரினை கிளப்பியவன் “ நீ ஜென்ட்ஸ் கூட பேசினால் நான் உன்ன சந்தேகப் பட போறது இல்ல ஆதிரா. அதுக்காக எனக்கு பொசசிவ் இல்லையான்னு நீ நினைக்கலாம். லைட்டா இருக்கு, பட் அதுவே உன்மேல ஓவர் ப்ளோ ஆகிடுச்சுனா லைஃப்ல ப்ராப்ளம்ஸ் கிரியேட் பண்ண சான்ஸ் இருக்கு அதை உன்னால ஃபேஸ் பண்ண முடியாது என்றவன் தொடர்ந்து அவளின் திகைத்த முகத்தை பார்த்து அதுக்காக உன் கண்டிஷன்ஸ் அஹ் மாத்திக்காத பேபி” என்றவன் பார்வை சாலையில் படிந்தது.

அவனின் பதிலில் அவள் என்ன மாதிரி உணர்கிறாள் என்று அவளுக்கே தெரியவில்லை.

அப்படி என்றால் அவனுக்கு தன் மீதி அதீத பற்று உள்ளதென்றல்லவா சொல்கின்றான்.

நினைக்கும் போதே உள்ளுக்குள் குத்தாட்டம் போட்டவள் முகம் வெளியில் அப்பட்டமாக சிவந்து போனது.

👁️ 375 Views
4.8 5 votes
Article Rating
Subscribe
Notify of
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Anitha Ashok
Anitha Ashok
8 days ago

Anitha

⚠️ இத்தளத்தின் உள்ளடக்கங்கள் DMCA
பாதுகாப்பில் உள்ளது. Copy / Screenshot / PDF
உருவாக்குதல் தடை செய்யப்பட்டுள்ளது.