Menu

இதயம் – 13

இதயம் – 13

உடைகள் அடங்கிய பையினை எடுத்துக் கொண்டு வீட்டிற்குள் நுழையச் சென்றவளின் இடையைப் பிடித்து தன்னை நோக்கி இழுத்து இருந்தான் ஷர்வீத்.

உடைகள் அடங்கிய பையுடன் அவன் மேல் வந்து மோதிய பெண்ணவளோ, “என்ன பண்றீங்க?” என்று கேட்டுக் கொண்டே இடையில் இருந்த அவனின் கையை விலக்க முயன்றாள்.

ஆம், முயற்சி மாத்திரமே!

அவனாக விட்டாலே அன்றி வலுக்கட்டாயமாக செய்ய முயன்றால் எதுவும் அவனிடம் முடியாது என்று தெரிந்து வைத்து இருந்தவள் அவனை அடக்கப்பட்ட சினத்துடன் வெறித்தாள்.

அவளின் நெற்றியில் தவழ்ந்த முடிக் கற்றையினை செவிமடலின் பின் ஒதுக்கி விட்ட படி அவளின் விழிகளை ஆழ்ந்து நோக்கியவன் “நைட் லெவன் ஃபோர்ட்டி ஃபைவ்கு ரூப்டாப் வந்துடு” என்றான்.

“எதுக்காக?” என்றாள் கோபமாக…

“நைட் தெரிஞ்சிக்குவ” என்று சொன்னவன் அவளின் இடையில் கோலம் போட…

பதறிப் போய் அவன் பிடியில் இருந்து விலக திணறியவளிடம் “ப்ச, பேசிட்டு இருக்கேன்ல” என்று சொல்ல…

“ஓஹோ சார் பேசுற ஸ்டைல் இது தானோ? என தன் இடையில் தவழ்ந்த அவனின் கரங்களை விழிகளால் சுட்டிக் காட்ட, “ சோ வாட்?” என்றான் புருவம் உயர்த்தி….

“என்கூட நீங்க ஷிப்கு வராமல், அம்மா என்னை தனியா விட மாட்டாங்கனு நீங்க பண்ற எல்லாத்தையும் பொருத்துட்டு போற ஆள் நான் இல்ல ஷர்…” என்று பேசிக் கொண்டு இருக்கும் போதே அவளின் மீதி வார்த்தைகளை அவன் விழுங்கி இருந்தான்.

அவளின் இதழ்களை பாரபட்சம் இன்றி சுவைத்தவன் அவை தந்த தித்திப்பில் கிறக்கம் கொண்டான்.

அதுவே நீண்ட நெடிய ஆழ்ந்த முத்தமாகிப் போக, அவனின் திடீர் முத்தத்தில் அவள் தான் விதிர்விதித்து போனாள்.

ஒரு புறம் ஆத்திரமாக வந்தது.

வெட்ட வெளியில் வைத்து என்ன செய்து கொண்டு இருக்கின்றான்?

அவனுடைய பின்னந் தலையில் தன் கரத்தை நுழைத்து அவனின் சிகையை இறுக்கமாகப் பற்றிப் பிடித்தவள், அவனை தன்னில் இருந்து விலக்கி விட்டாள்.

அவ் ஆழ்ந்த முத்தத்தின் பயனாக இருவருக்கும் ஒருங்கே மூச்சு வாங்கியது.

தன்னை முயன்று சமன் படுத்திக் கொண்டவள் “ஷர்வீத் போதும் உங்க லிமிட்டை க்ராஸ் பண்ணிட்டு என்கிட்ட நெருங்குற வேலை வச்சிக்க வேணாம். ஐ நீட் டைம் அண்ட் ஸ்பேஸ் பிரோம் யூ” என சுட்டு விரல் நீட்டி சீறியவள் திரும்பி நடந்தாள்.

அவள் பேச பேச அவனுக்கோ இதழ்களில் புன்னகை தான் விரிந்தது.

பாதி தூரம் சென்று திரும்பிப் பார்த்து முறைத்தவள் “என்னால மிட்நைட்ல எல்லாம் ரூப் டாப் வர முடியாது” என்று சொன்னவள் திரும்பிப் பாராமல் சென்று இருக்க, போகும் அவளைப் பார்த்தவன் இதழ்களோ “ நீ என்னைத் தேடி வருவ பேபி” என்று சொல்லிக் கொண்டவன் இதழ் குவித்து ஊதிக் கொண்டே அவ் ஒற்றை முத்தத்தால் அவளால் எழுந்த உணர்வுகளை அடக்க வழியறியாது மீண்டும் காரிலேறி புறப்பட்டு இருந்தான்.

 

இங்கோ, அறைக்குள் வந்தவளுக்கு நிதானத்திற்கு வரவே சிறிது நேரம் பிடித்தது.

இன்னும் அவனின் இதழ்கள் செய்த மாயம் தன் இதழ்களில் ஒட்டிக் கொண்டு இருப்பதைப் போல அவளால் உணர முடிந்தது.

அவளின் ஒற்றைக் கரமோ உயர்ந்து இதழை வருடிக் கொண்ட அதே நேரம் முகமோ தானாக வெட்கத்தில் சிவந்துப் போனது.

அவன் முன் வெளிப்படுத்தாத உணர்வுகள் தனிமையாக இருக்கும் போது தோன்றி அவளை சுகமான இம்சை செய்து கொண்டிருந்தது.

அன்றைய நாள், அவனின் நினைப்பில் காலையில் இருந்தே உழன்றுக் கொண்டு இருந்தவளுக்கு இரவை நெருங்கும் போது ஏனோ இனம் புரியாத தவிப்பு.

இதயமோ கொஞ்சம் கொஞ்சமாக படபடக்க ஆரம்பித்து இருந்தது.

உணவை பிசைந்துக் கொண்டே அமர்ந்து இருந்தவளை யோசனையாகப் பார்த்த பூர்ணிமா “ஆதிரா” என்று உரக்க அழைத்து இருந்தார்.

அவரில் அழைப்பில் சுயம் அடைந்தவள் “ஹான்… சொல்லுங்க மா” என்றாள்.

“என்ன இவ்வளவு டீப்பா திங்க் பண்ணிட்டு இருக்க?”

“ஹி ஹி ஹி என்று பற்கள் தெரிய சிரித்து வைத்தவள் ஒன்னும் இல்லையே சும்மா” என்றவள் விழிகள் தேடியது என்னவோ அவனைத் தான்.

தாய் அறியாத சூலும் உண்டோ?

அவளின் முகம் போகும் போக்கைக் கண்டவர் இதழ்களுக்குள் சிரித்துக் கொண்டே “ஷர்வா வர லேட் ஆகும்ன்னு சொன்னான்” என்று சொல்ல சட்டென தன் அன்னையை பார்த்து முறைத்து வைத்தவள் “வரட்டும். எப்போ வந்தா எனக்கென்ன?” என்றபடி அவள் சாப்பிட ஆரம்பித்து விட, “உன் அப்பா போல நீயும் உண்மையை ஒத்துக்க மாட்ட ல” என்றவருக்கு ஓர் கசந்த புன்னகை தோன்றி மறைய, சட்டென தனது உடைந்த குரலை சரி செய்யவர் குரலை செருமிய படி சாப்பிட ஆரம்பித்தவரை “மா… என்று எழுந்து பூர்ணிமாவின் அருகில் சென்று அமர்ந்தவள் அப்பா கடவுள் போல நம்ம கூட இருப்பார் மா டோண்ட் வொர்ரி” என்றாள்.

“உன் கல்யாணத்தை நடத்தி வைக்க அவர் இல்லையே” என்று கலங்க, “ஒரு டிஜிபி இப்படி எல்லாம் கலங்கலாமா?” என்று சொன்னவள் இடக் கையால் அவரின் கன்னத்தில் வழிந்த கண்ணீரை துடைத்து விட்டவள் உணவை பிசைந்து ஊட்டி விட்டாள்.

பெற்ற மகளின் செயலில் கண் கலங்க உணவை வாங்கிக் கொண்டவரும் உணவை பிசைந்து அவளுக்கும் ஊட்டி விட, “நானும் வர்லாமா?” என்ற ஷர்வீத்தின் குரலில் அவளின் விழிகள் விரிந்து கொண்டன.

கலங்கிய விழிகளுடன் புன்னகைத்த பூர்ணிமா உணவை பிசைந்து அவனை நோக்கி நீட்ட, தன் தமக்கை கொடுத்த உணவை குனிந்து வாங்கிக் கொண்டவன் மறு பக்கத்தில் சென்று இருக்கையை இழுத்து போட்டு கொண்டு அமர்ந்தவன் தன் முன் பாதி சாப்பிட்டு விட்டு இருந்த உணவை பார்த்து புருவங்கள் உயர்தியவன், ஒரு மந்தகாச புன்னகையுடன் சாப்பிட ஆரம்பித்து விட்டான்.

சட்டென ஏறிட்டு முன்னால் பார்த்தவள் அதிர்ந்து விட்டாள்.

“ஹையோ நான் சாப்பிட்டது” என்றாள் சத்தமாக…

“சோ வாட்?” என்றவனின் பதிலில் “அம்மாமா… உங்க தம்பிக்கு சொல்லுங்களேன் ஓவரா போறார்” என்று சீற…

“நீ தான் அவனுக்கு ஊட்டல சோ உன் பிளேட்ல சாப்டுறான் என்று சொன்னவர் ஷர்வீத்திடம் “அப்படி தானே ஷர்வா?” என்று கேட்டு அடியெடுத்து கொடுக்க…

“ஒப்கோர்ஸ், எவ்வளவு நாள் தான் புருஷன் சாப்பிட்டதை பொண்டாட்டி சாப்பிடனும் ஒரு சேஞ்ச்கு பொண்டாட்டி மிச்சம் வச்சது நான் சப்பிடுறேன்” என்று தோள்களை குலுக்க….

“நான் மிச்சம் வைக்கல… பிறகு சாப்பிட வச்சிட்டு வந்தேன்” என்றதும் “எல்லாம் ஒன்னு தான்” என்று பதிலுக்கு அவன் சொல்ல….

எங்கே தன்னையும் மீறி அவனின் பேச்சில் தன் கன்னங்கள் சிவந்து விடுவோமோ? என்று அச்சம் கொண்டவள் திரும்பி “அம்மா என்று சிணுங்கியவள் எல்லாம் உங்களால தான் சோ நீங்களே ஊட்டுங்க” என்றதும் “நான் ஊட்டட்டுமா?” என்று அவன் சொன்னதும் அவளுக்கோ மீண்டும் விழிகள் அதிர்ச்சியில் விரிந்து கொண்டன.

 

“டேய் ஷர்வா, என்னையும் வச்சிட்டு என்னடா பேசிட்டு இருக்க? இது சரி பட்டு வராது சீக்கிரம் உங்க ரெண்டு பேருக்கும் மேரேஜ் பண்ணி வச்சிடனும்” என்று புன்னகையுடன் சொல்லிக் கொண்டே அவளுக்கு உணவை பிசைந்து ஊட்டி விட்டார்.

சாப்பிட்டு கொண்டே அவனைக் கடைக் கண்ணால் பார்க்க, அவனோ அவள் பார்ப்பதை உணர்ந்து உள்ளுக்குள் சிரித்துக் கொண்டவன் அவளை பார்த்து ஒற்றை புருவம் உயர்த்தி கண் அடித்து விட்டு, இதழ் குவித்து முத்தம் கொடுப்பதைப் போல சைகை செய்ய, அவளுக்கோ, உணவு கூட தொண்டைக் குழியிலேயே சிக்கிக் கொண்ட உணர்வு தான்.

 அதனைத் தொடர்ந்து சாப்பிட்டு விட்டு அறைக்குள் சென்று அடைந்து கொண்டவள் கட்டிலில் படுத்து தனக்கு நேர் எதிரே சுவரில் மாட்டி இருந்த சுவர் கடிகாரத்தை வெறித்தாள்.

 

 அவன் வர சொன்னதைப் போல பதினொன்று நாற்பத்து ஐந்திற்கு செல்ல வேண்டுமா?” என்ற அவளின் மூளை கேள்வி எழுப்ப, “ஐயோ! வர மாட்டேன்னு சீனை போட்டேனே. இப்போ போய் நின்னா மானமே போய்டுமே” என்று தனக்குத் தானே கேள்விகள் கேட்டு விடையையும் அளித்து பேசிக் கொண்டு இருந்தவள் இப்போது மணியைப் பார்த்தாள்.

பதினொன்று நாற்பத்து ஐந்திற்கு இன்னும் பத்து நிமிடங்களே இருக்க, “அப்படி என்ன விஷயம்ன்னு போய் பார்த்து தான் தெரிஞ்சுக்கலாம்” என்று ஒரு முடிவை எடுத்தவளாய் தன் மானங்கெட்ட மனதை நொந்துக் கொண்டு அலைபேசியையும் ப்ளூடூத் ஏர்பொட்ஸ்ஸையும் எடுத்துக் கொண்டு கதவைத் திறந்துக் கொண்டு வெளியில் வந்தாள்.

வீடே நிசப்தமாக இருந்தது.

பக்கத்து அறையை பார்த்தாள்.

உள் பக்கமாக பூட்டி இருக்கின்றது என்று தெரிந்தது.

‘ உள்ள தான் இருப்பான் ‘ என்று தனக்குள் சொல்லிக் கொண்டே அறையுடன் நான் ஒட்டிய படிகளில் மேலேறி ரூப்டாப்பிற்கு வந்திருந்தாள்.

நள்ளிரவு பன்னிரெண்டு மணிக்கு சில நிமிடங்களே ஆனாலும், மாடியில் வீசிய குளிர்க் காற்று மேனியை இதமாக வருடிச் செல்ல, மனதோ லேசாக சமன் பட்டது.

கழுத்தில் இருந்த துப்பட்டாவை விரித்து மேனியில் சுற்றி போர்த்திக் கொண்டே அலைபேசியில் பாட்டொன்றை ஒலிக்க விட்டு, விழிகளை மெதுவாக மூடப் போகும் சமயம் “நாட் பேட், சொன்ன டைம்கு முன்னாடி வந்து நிற்கிற” என்ற குரலில் விழிகளை மெதுவாகத் திறந்தவள் “தூக்கம் வர்ல சோ பாட்டு கேட்க வந்தேன் தட்ஸ் ஆல்” என்றாள் கெத்தை விடாமல்…

“இஸ் இட்?” என்றான் அடக்கப்பட்ட புன்னகையுடன்…

“ஒப்கோர்ஸ்” என்றவள் வெளியில் முகத்தை சாதாரணமாக வைத்துக் கொண்டாள்.

அவள் அருகே நெருங்கி வந்து பால்கனி திட்டில் சாய்ந்து நின்ற படி விழிகளை மூடிக் கொண்டவன் “ பட் எனக்கு எங்கயோ ஹார்ட் பீட் வேகமா குடிக்கிற போல கேட்குதே” என்று சொல்ல…

விழி விரித்தவள் தன் இடது புற மார்பை நீவி விட்ட படி ‘ கொஞ்சம் அடங்கி தொலை’ என்று தன்னை தானே கடிந்து கொண்டவள் “ஹார்ட்டா? எனக்கு ஒன்னும் கேட்கலையே என்றவள் ஒருவேளை உங்க ஹார்ட் தான் வேகமா பீட் பண்ணுதோ என்னவோ?” என்று சொல்லிக் கொண்டவள் இடைவெளி விட்டு நகர்ந்து நின்றாள்.

“நான் நார்மலா தான் இருக்கேன்” என்றதும் அவளோ பொறுமை இழந்து “அப்போ நான் நார்மலா இல்லாமல் அப்நார்மலா இருக்கேன்னு சொல்ல வர்றீங்களா?” என்றாள் எகிறிக் கொண்டு…

கோபத்தில் சிவந்த அவளின் மூக்கின் நுனியில் தன் சுட்டு விரல் நுனியை வைத்தவன் “ரொம்ப ஹாட்டா இருக்க” என்று குனிந்து முக்கில் முத்தம் பதிக்க, அவ்வளவு தான். அவளின் இதயத் துடிப்பின் வேகமோ பந்தைய குதிரையை போல தடதடத்து துடிக்க ஆரம்பித்து விட்டது.

காமம் இல்லாத அந்த ஒற்றை முத்தம் அவளின் மேனியை சிலிர்க்க வைத்து இருக்க, அதற்கு மேல் பேச நா எழாமல் கட்டில் இருந்த அலைபேசியை எட்டி எடுத்தவள் “நா….நான் போறேன்” என்று விட்டு திரும்ப, அவளை இடை மறித்த போல அவள் முன் வந்து நின்று பரிசுப் பொதியொன்றை நீட்டியவன் “விஷ் யூ மெனி மோர் ஹேப்பி ரிடர்ன்ஸ் ஆப் த டே மை பேபி” என்றவன் விழிகளில் என்ன இருந்தது என்று அவளாலேயே பிரித்தறிய முடியவில்லை.

 

அவள் தான் அதிர்ந்து போனாள்.

என் பிறந்தநாளை ஞாபகம் வைத்திருக்கிறானா? என்ற எண்ணம் தோன்ற, வியப்பாக இருந்தது.

அவளுக்கே அவளின் பிறந்த தினம் மறந்து போயிருக்க, அவளும் என்ன தான் செய்வாள்?

உணர்ச்சிப் பெருக்கில் இதழ்கள் நடுங்க “தே… தேங்க்ஸ் “ என்றவள் கரங்கள் தானாக உயர்ந்து அவன் நீட்டிய பரிசு பொதியை வாங்கிக் கொண்டன.

அவள் எங்கே மறுத்து விடுவாளோ? என்று ஒரு கணம் தாடுமாற்றத்துடன் நின்று இருந்தவன் இப்போது அவளே வாங்கிக் கொண்டது தாராளமாக இதழ் பிரித்து புன்னகைத்தவன் “பிரிச்சு பார்” என்றான்.

“இல்..இல்ல, நான் ரூம்க்கு போய் பிரிச்சு பார்க்குறேன்” என்று திணறியபடி அவள் கூறவும் “நோப், இப்பவே என் முன்னாடி பார்” என்றதும் இதற்கு மேல் அவளால் எதிர்த்து பேச முடியாது “ம்ம்” என்றவள் ஓர் ஆர்வத்தோடு அவன் கொடுத்த பரிசுப் பொதியை பிரித்தாள்.

பிரித்தவள் அதன் மேல் இருந்த வெண்ணிற காகிதத்தை விலக்கி விட்டு அதிலுள்ள உடையை கண்டவளுக்கோ, ஆனந்த அதிர்ச்சியாகிப் போனது.

ஆம், அதிலிருந்தது அவன் அவளுக்கு ஏற்ற உடையாக இருக்கும் என்று காட்டிய அடர் ஊதா நிற லெஹெங்கா தான்.

அவன் சென்ற பின் அவள் பார்த்த போது அந்த உடை அங்கு இல்லாமல் போனதற்கான காரணம் இப்போது விளங்கியது அவளுக்கு…

மீண்டும் “தேங்க்ஸ் தேங்க் யூ சோ மச் என்று சொன்னவள் சுத்தமா என் பர்த்டேன்னு மறந்தே போய்ட்டேன். தேங்க்ஸ் ஷர்.. என்றவள் திருத்தி மாமா” என்றாள்.

“நானும் வரலாமா?” என்ற படி கையில் கேக்குடன் மேலே வந்திருந்தார் பூர்ணிமா.

“மா”, என்று ஓடி வந்தவளிடம் “ஹே..ஹே நில்லு, கேக் டி” என பதறிய படி கேக்கினை ஷர்வீத்திடம் நீட்ட, அவளோ சிணுங்கிக் கொண்டு தன் அன்னையை அணைத்து இருந்தாள்.

“ஹேப்பி பர்த்டே டு யூ ஆதிரா. எப்பவும் இதே போல சந்தோஷமா இருக்கணும்” என்றவர் அவளின் நெற்றியில் முத்தம் பதித்தார்.

“கேக் கட் பண்லாமா?” என்ற அவனின் குரலில் மென் புன்னகையுடன் இருவரும் அவனை நோக்கி சென்று இருக்க, ஏற்கனவே தயார் செய்து வைத்து இருந்த அலங்கரிக்கப்பட்ட கத்தியை ஆதிராவின் கரத்தில் கொடுக்க, அவளோ இதழ்களில் தேங்கிய புன்னகையுடன் கேக்கின் மேல் எரிந்துக் கொண்டிருந்த மெழுகுவர்த்திகளை இதழ் குவித்து ஊதி அணைக்கும் சமயம் இருவரும் அவளுக்கு பிறந்தநாள் வாழ்த்து பாடினர்.

அகம் மகிழ்ந்து போனாள் பெண்ணவள்.

கேக்கை வெட்டி எடுத்து முதலில் யாருக்கு கொடுப்பது என்று அவள் திணற, கேக்கினை பிடித்து இருந்த அவளின் கரத்தை தன் கரத்தால் பிடித்தவன், பூர்ணிமாவிற்கு ஊட்டி விட்டு இருக்க, அவனின் கண நேர செயல் அவளை மொத்தமாக கவர்ந்திருந்தது.

இங்கு இப்படி இருக்க, தன் கரத்தில் இருந்த கேக்கினை விசிறி அடுத்து இருந்தாள் மீரா.

 

அவளின் உடல்மொழியே குரூரமாக இருந்தது.

 

கீழே வீழ்ந்து கிடந்த ஐசிங் கேக்கினை தன் காலால் நசித்தவள் முகத்தில் ஏகத்துக்கும் பழி தீர்க்கும் வெறி தாண்டவம் ஆடிக் கொண்டிருந்தது.

 

👁️ 304 Views
4.9 7 votes
Article Rating
Subscribe
Notify of
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Anitha Ashok
Anitha Ashok
7 days ago

Super super super da

⚠️ இத்தளத்தின் உள்ளடக்கங்கள் DMCA
பாதுகாப்பில் உள்ளது. Copy / Screenshot / PDF
உருவாக்குதல் தடை செய்யப்பட்டுள்ளது.