இதயம் – 17
உடையை சரி செய்ய சொன்னதும் அதிர்ந்து போய் தன்னைக் குனிந்து பார்த்தாள்.
போட்டு இருந்த உடையையும் தாண்டி உள்ளாடை சற்றே தென்பட, ‘போச்சு மானமே போச்சு’ என்று தனக்குள் பதறியவள் அவனின் முகத்தை ஏறிட்டுப் பார்த்து பேசவே தயக்கமாக இருந்தது.
தன் உடையை சரி செய்து கொண்டு பால்கனியில் நின்று இருந்தவன் பின்னால் வந்து நின்று குரலை செருமியவளோ “வெளில போகலாமா?” என்று கேட்டாள்.
சற்று முன்னர் அவளின் இதழைத் தீண்டியவனுக்கு இன்னும் அவளின் இதழ் தேனை பருக வேண்டும் என்ற ஆவல் எழ, தன்னை முயன்று கட்டுக்குள் கொண்டு வந்தேன் “ம்ம்” என்றபடி அவளின் விழிகளை கூட சந்திக்காது சென்று விட,
அவன் தன்னைக் கண்டுக் கொள்ளவில்லை என்றதும் என்னவோ மனம் அமைதி இல்லாமல் தவிக்க,ஏதோ யோசனையில் நின்று இருந்தவளை அவன் குரல் கலைத்தது.
சட்டென அறையை விட்டு வெளியில் வந்தவள் “பீச் போய்ட்டு வர்லாம்” என்றாள்.
“ம்ம்” என்றவன் இதழ் குவித்து ஊதிக் கொண்டே அவளின் கரத்தை பற்றிக் கொண்டவன் கடற்கரையை நோக்கி நடந்தான்.
ரிசார்ட்டில் இருந்து கிட்டத்தட்ட பத்து நிமிடங்களில் கடற்கரையை அடைந்து இருக்க, அவளோ ஆர்ப்பரிக்கும் கடலைக் கண்டதும் வில்லில் இருந்து புறப்பட்ட அம்பு போல கடலை நோக்கி ஓடினாள்.
“ஹே… ஆதிரா தூரமா போகாத” என்று உரத்து சொல்லிக் கொண்டே மணலில் அமர்ந்துக் கொண்டவன் அவளையே தான் பார்த்து இருந்தான்.
சிறு பிள்ளை போல அலையில் கால் நனைத்து விளையாடிக் கொண்டு இருந்தவளை பார்க்க பார்க்க அவனுக்கு திகட்ட வில்லை.
அவளையே பார்த்துக் கொண்டு இருந்தவனுக்கு அப்போது தான் அவள் மின்ட் ஜூஸ் கேட்டதே ஞாபகத்துக்கு வந்து தொலைக்க, “ஷிட் இதை எப்படி மறந்தேன்” என்று சொல்லிக் கொண்டே எழுந்தவன் “ஆதிரா” என்று சத்தமாக அழைத்தான்.
அவளோ “என்ன?” என்று அவன் புறம் திரும்பாமலேயே கத்தியவள் ஒன்றன் பின் ஒன்றாக வந்த அலைகளில் துள்ளிக் குதித்து விளையாடுவதில் மும்முரமாக இருக்க, “கிரேசி” என்று முணுமுணுத்துக் கொண்டே “எங்கேயும் போகாத இங்கேயே வெயிட் பண்ணு. மின்ட் ஜூஸ் வாங்கிட்டு வரேன்” என்றான் சத்தமாக….
“ஓகே” என்றவள் அவன் எங்கே செல்கின்றான் என்று கூட பார்க்காமல் அவளோ தனி உலகில் சஞ்சரிப்பது போல விளையாடிக் கொண்டிருந்தாள்.
சற்று நேரத்தில் விளையாடிக் கொண்டு இருந்தவள் அருகில் குளிர்பானம் நீட்டப்பட, “தேங்க்ஸ்” என்று வாங்கிக் கொண்டவள் தன்னிடம் நீட்டியவனை பார்த்து புருவம் சுருக்கியவள் என்னவோ கேட்கும் முதலே “உங்க ஹஸ்பண்ட் கொடுத்து விட சொன்னார்” என்று எதிரே நின்றவன் சொல்ல….
அவன் அப்படி கூறியதும் அவளுக்கோ, சந்தேகம் ஏதும் எழவும் இல்லை.
“ஓகே” என்றவள் இவ்வளவு நேரமும் விளையாடிய களைப்பில் சற்று தள்ளி வந்தமர்ந்து அவன் கொடுத்த குளிர்பானத்தை சிப் சிப்பாக அருந்தியவளுக்கு அதன் சுவையே என்னவோ போலிருக்க, முகத்தை சுளித்தாள் .
அவனோ அவளையே தான் பார்த்து இருந்தான்.
“நீங்க போங்க” என்றாள் அவள்.
“நோ மேடம், கிளாஸ்” என்றான் இழுவையாக….
அவன் அங்கு நின்று தன்னையே பார்த்துக் கொண்டு இருக்கவும் அசௌகரியமாக உணர்ந்தவள் மூக்கைப் பிடித்துக் கொண்டு மடமடவென அப் பானத்தை குடித்து விட்டு அவனை நோக்கி கிளாஸை நீட்டி இருந்தாள்.
அவனோ அதை வாங்கிக் கொண்டு சிறிது தூரம் சென்றவன் அலைபேசியில் அழைப்பிலேயே காத்திருந்த பெண்ணிடம் “கொடுத்தாச்சு மேடம்” என்று சொல்ல…
“ஓகே, உன் அக்கவுண்ட்கு பணம் வந்து சேரும்” என்று அழைப்பைத் துண்டித்து இருந்தாள்.
ஒரு பெரு மூச்சுடன் உள்ளே நுழைந்தவனைக் கடந்து அவளை நோக்கி சென்று இருந்தான் ஷர்வீத்.
சற்று முன்னர் வந்து இருந்தால் கூட இனி நடக்கவிருக்கும் அசம்பாவிதத்தை தவிர்த்து இருப்பானோ என்னவோ!
இங்கோ, உள்ளே இறங்கிய குளிர்பானம். இல்லை இல்லை மதுபானம் கலந்த குளிர்பானத்தை அருந்தியவளுக்கோ கொஞ்சம் கொஞ்சமாக காட்சிகள் அனைத்தும் மங்கலாக தெரிய ஆரம்பித்து விட்டது.
தலையைப் பிடித்துக் கொண்டு தள்ளாடிய படி முயன்று எழுந்தவளின் தடுமாற்றத்தை அவளை நெருங்கும் போதே கண்டு கொண்டவன் சட்டென மறு கரத்தால் அவளைத் தாங்கி இருந்தான்.
தன்னவன் வாசத்தை உணர்ந்து கொண்டாள் போலும், அவனின் கழுத்தை சுற்றி கரங்களை போட்டுக் கொண்டவள் தன் இரு நீள் விழிகளையும் சிமிட்டி பற்கள் பளிச்சிட புன்னகைத்தாள்.
அவளின் நடவடிக்கையே வித்தியாசமாக இருக்க, அவளின் கண நேர நெருக்கத்தில் அவனுக்குத் தான் சோதனையாக இருந்தது.
“நீ கேட்ட மின்ட் ஜூஸ் “ என்று அவளின் வாயின் அருகே கொண்டு செல்ல, “உவேக்…” என்று வாந்தி எடுப்பதை போல சைகை செய்து காட்டியவள் “என்ன ஷர்வீத் இப்படி பண்ணிட்டு இருக்கீங்க? இப்போ தானே ஜூஸ் குடிச்சேன். அதுவே என்னவோ போல தான் இருக்கு” என்று தன் விழிகளை சிமிட்டிக் கொண்டு நா குழர சொன்னதும் அவனுக்கோ தூக்கி வாரிப் போட்டது.
“வாட்? என்னடி சொல்ற?” என்று அவளின் இரு கன்னங்களையும் தாங்கிய படி கேட்டான்.
“எஸ், ஷர்வீத் குடிச்சேன் என்னவோ போல இருக்கு” என்று அவனின் கைவளைவில் இருந்துக் கொண்டே தள்ளாடினாள்.
அவள் மேல் அடித்த மதுவின் நெடியில் உணர்வுக்கு வந்தவன் “யார் கொடுத்தது?” என்றான் புருவம் இடுங்க…
“வெயிட்டர் தான். என்று சொன்னவள் டேய் கேள்வி மேல கேள்வி கேட்காமல் என்னை கூட்டிட்டு போடா. எனக்கு என்னவோ பண்ணுது” என்று பிதற்ற….
அவளின் பன்மை அழைப்பில் அதிர்ந்து விழி விரித்தவன் தான் இல்லாத போது எவனோ ஒருவன் செய்து விட்டு போன செயலில் உடல் விறைத்தான்.
அவளை இந்நிலையில் வைத்துக் கொண்டு அவனை எங்கே தேடுவது ? என்று நினைக்கும் போதே ஆத்திரமாக வந்தது.
“ஷரு” என்றாள் அவனின் மூக்கை பிடித்து ஆட்டிய படி…
அவளின் ‘ஷரு’ என்ற அழைப்பில் இன்பமாக மேலும் அதிர்ந்தான்.
அவளைத் தெளிய வைத்து நாளை தேடி கொள்ளலாம் என்று நினைத்தவனுக்கு இப்போது அவளை பாதுகாக்க வேண்டிய கட்டாயம்.
நெளிந்து வளைந்து கொண்டு இருந்தவள் கையில் இருந்த மின்ட் ஜூஸ் அடங்கிய கிளாஸினைப் பிடுங்கி ஏறிந்தவன் அவளை அலேக்காக தன் கைகளில் ஏந்திக் கொண்டான்.
எங்கோ பறப்பது போலிருக்க, தன் இரு கரங்களையும் சிறகு போல் விரித்தவள் “ஷரு, நாம ரெண்டு பேரும் ஏன் ஸ்பீடா பறக்கக் கூடாது?” என்றாள் கேள்வியாக…
பல்லைக் கடித்தவன் தன்னவள் பேச பேச அவளை இந்நிலைக்கு கொண்டு வந்தவன் மட்டும் கையில் சிக்கினாள் கொல்லும் வெறியே மேலோங்கியது.
“ ஷரு நமக்கு இன்னைக்கு பர்ஸ்ட் நைட்ல” என்று பற்கள் தெரிய புன்னகைத்தவள் யூ டோண்ட் வொர்ரி மாமா. ஐ வில் மேனேஜ் யூ” என்று ஒற்றைக் கண்ணை அடித்தவள் எம்பி அவனின் நெற்றியில் முத்தம் பதிக்க, அவளின் பேச்சிலும் நடந்து கொள்ளும் விதத்திலும் அவனுக்கே முகம் வெட்கத்தில் சிவந்து விட்டிருந்தது.
பெண்களின் வெட்கம் அழகு என்றால் ஆண்களின் வெட்கம் பேரழகு அல்லவா!
“என்னடி எய்ட்டீன் பிளஸ்ஸா பேசுற?” என்றான் உள்ளே போன குரலில்…
“இது என்ன பிரமாதம் இன்னுமே பேசுவேனே” என்று கிளுக்கி நகைத்தாள் பெண்ணவள்.
அவளின் என்றும் இல்லாத துடுக்குப் பேச்சில் இதழ்களில் புன்னகைத் தவழ, அறைக்குள் நுழைந்தான் ரோஜா இதழ்கள் தூவப்பட்டிருந்த கட்டிலில் கிடத்தினான்.
அவன் கட்டிலில் கிடத்தியதும் “ஹையோ நாம கீழ விழுந்துட்டோம் ஷரு என்று நா குழற சொன்னவள் கத்தி அழ ஆரம்பித்து விட, ‘படுத்துறா’. இன்று முணுமுணுத்துக் கொண்டே எட்டி அவளின் வாயை தன் கரத்தால் பொத்திப் பிடித்தவன் “என்னவோ நான் ரேப் பண்ற போல கத்தாதடி” என்றான் அழுத்தமாக…
தன் வாயிலிருந்த அவனின் கரத்தை விலக்கியவள் “என்னது ரேப்பாஹ்?” என்று சத்தமாக அலற, அதிர்ந்து போய் மீண்டும் அவளின் வாயை பொத்திப் பிடித்தவன் “ஷட் அப் ஆதிரா” என்றான் சற்றே கர்ஜனையாக…
அவளுக்கோ சட்டென விழிகளில் நீர் தேங்கி விட்டன.
அவளின் கலங்கிய விழிகளைப் பார்த்தவன் “ஷிட்” என்று தன்னைத் தானே வைதவன் “சாரிடி” என்று அவளின் தலையை வருடிக் கொடுத்தான்.
அவன் மன்னிப்பு கேட்டதும் கண்கள் மின்ன எழுந்தமர்ந்தவள் “நான் குளிக்கணும்” என்றாளே பார்க்கலாம்.
அவனுக்கோ தண்ணீர் குடிக்காமலேயே புரை ஏறி விட, இறுமிக் கொண்டே “நீ ஆல்ரெடி குளிச்சிட்ட” என்றான் நெற்றியை நீவிக் கொண்டே…
“பரவால்ல ஷரு பேபி நான் இப்போ குளிக்கணும்” என்று மீண்டும் சொன்னதே கூற…
வரவழைத்த பொறுமையுடன் “ஹியர் பேபி லுக் அட் மீ, என்று அவளின் முகத்தை தன்னை நோக்கி பார்க்கச் செய்தவன் யூ ஆர் நாட் ஸ்டெடி. கொஞ்சம் கண்ணை மூடி தூங்கு” என்றான்.
அவள் அதற்கு எல்லாம் அடங்கும் ஆளா என்ன?
அவள் குடித்த குளர்பானத்தில் கலந்து இருந்தது ஒன்றும் சாதாரண மது வகை அல்லவே!
உள்ளே சென்றது ‘வயகரா’ ஆயிற்றே! அதன் வேலையை சிறப்பாக செய்து கொண்டு இருந்தது.
“போடாங்”, என்றவள் கட்டிலின் மறு புறமாக புரண்டு குளியலறைக்குள் பாய்ந்து ஓட முயன்றவளை கட்டிலில் ஏறி பாய்ந்தவனோ, அவளை மின்னல் வேகத்தில் இழுத்துப் பிடித்தான்.
“என்ன கருமத்தை குடிச்சு தொலைச்ச?” என்றவன் சீற, “நான் மின்ட் ஜூஸ் கேட்டா நீ வேற என்னவோ வெயிட்டர் கிட்ட கொடுத்து அனுப்பிருக்கல” என்று மூக்கை உறிஞ்சினாள் பெண்ணவள்.
“அதான் வேற என்னவோனு தெரிஞ்சது தானே அப்புறம் ஏன் டி குடிச்ச?”
“நீ என்னை திட்டுற ஷரு” என்று கண்ணைக் கசக்கிக் கொண்டு அழுகைக்கு தயாராக, இதழ் குவித்து ஊதிக் கொண்டே “நீ ரொம்ப டையர்ட்டா இருக்க பேபி சோ கொஞ்சம்…” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே “நான் குளிக்க்கணும்” என மீண்டும் பழைய பல்லவியை பாட,
‘சரியான இம்சை’ என்று மனதில் சொல்லிக் கொண்டவன் அவளை மீண்டும் எந்திக் கொண்டு குளியலறைக்குள் சென்றவன் ரோஜா இதழ்கள் நிரப்பப்பட்டு இருந்த பாத் டப்பிற்குள் பொத்தென போட்டான்.
இப்போதாவது சற்று போதை தெளிகின்றதா? என்று அவளை ஆழ்ந்துப் பார்த்தான்.
அவளோ, தண்ணிரில் மிதந்த ரோஜா இதழ்களை தன் முகம் முழுதும் போட்டுக் கொண்டு கை கால்களை அசைத்து விளையாட, இவ்வளவு நேரமும் அவளில் மோகமாக படியாத அவனின் பார்வையோ நீர் பட்டு நனைந்ததன் விளைவாக அவள் போட்டிருந்த நீல நிற ஆடையைத் தாண்டி தெரிந்த அங்க வனப்புகள் அவனைப் பித்தம் கொள்ள வைத்தது.
“ஓஹ் மை கோட், கொல்றாளே” என்ற படி கேசத்தை கோதிக் கொண்டவன் உணர்வுகளை அடக்கும் வழியறியாது அவளின் கவனம் தன் மேல் இல்லை என்பதை உணர்ந்து கொண்டவன் குளியலறையை விட்டு அறைக்குள் வந்தான்.
அவள் அனுமதி இல்லாமல் அதுவும் அவளின் சுயநினைவு இல்லாத போதும் கூட அவளை நெருங்க எள்ளளவும் அவனுக்கு விருப்பம் இல்லை.
இதில், அவளோ அவனின் உணர்வுகளுடன் அல்லவா சவால் விடும் அளவுக்கு நடந்துக் கொண்டிருக்கிறாள்.
நினைக்கவே ஆயாசமாக வந்தது.
ஆழ்ந்த பெருமூச்சொன்றை விட்டுக் கொண்டவன் அறையில் இருந்த மற்றுமொரு அலைபேசியில் ரூம் சர்வீஸிற்கு அழைப்பை எடுத்த மறுநோடி, மறு முனையில் அழைப்பை ஏற்றதும் “ கேன் ஐ கெட் டூ லெமன் ஸ்லைஸ்ட்?” என்று ஆங்கிலத்தில் அவன் வினவ, மறு முனையில் கேட்ட கேள்வியில் “ரூம் நம்பர் சிக்ஸ்” என்றவன் அழைப்பைத் துண்டித்து விட்டு திரும்பி மூச்சு விடுவதற்குள் “ஷரு” என்ற அவளின் குரல் சத்தமாக ஒலிக்க, வழுக்கி ஏதும் கீழே வீழ்ந்து விட்டாளோ என்று பதறிப் போய் குளியலறைக்குள் நுழைந்தவன் அவளின் கோலம் கண்டு ஸ்தம்பித்து போனான் ஆணவன்.
