Menu

இதயம் – 18

இதயம் – 18

 

ஆம், அவள் வெற்று மேனியுடன் ஷவரில் நனைந்துக் கொண்டு இருந்தாள்.

 

அவனும் சாதாரண உணர்வுகள் கொண்ட ஆண்மகன் தானே!

 

“ஷரு பேபி வா குளிக்கலாம்” என்று சர்வ சாதாரணமாக அவள் அழைக்க, தான் முத்தம் இட்டாளே நாணுபவள் இப்போது தன் முன் எவ்வித கூச்சமும் இன்றி தன்னை மறந்து நிற்கின்றாள் என்றால்?

 

நெஞ்சம் பிசைந்தது.

 

ஒரே ஒரு கணம் தான் அதிர்ந்து நின்றான்.

 

அடுத்த நொடியே சுதாரித்தவன் ஹேங்கரில் இருந்த டவலை எடுத்துக் கொண்டு அவளை நெருங்கி இருந்தான்.

 

 

 

அவளின் இந்நிலைக்கு காரணமாவனை நினைத்து உடல் இறுகியது.

 

 

 

அவளை நெருங்கியவன் பார்வை அவளின் விழிகளை விட்டு வேறெங்கும் நகரவே இல்லை.

 

அவளோடு சேர்ந்து ஷவரின் கீழ் நனைந்தவன் “போகலாமா?” என்று கேட்டான்.

 

 

 

“ஹான், இன்னும் குளிக்கணும் போல இருக்கே ஷரு என்று சிணுங்கியவள் என்ன நினைத்தாளோ அப்போ ஓகே போகலாம் எனக்கு குளிச்சது போதும் என்னை தூக்கிட்டு போடா” என்று கண்களை சுருக்கி கெஞ்சினாள்.

 

 

 

அவளின் விழிகளை உற்று நோக்கிய படி, அவளைச் சுற்றி டவலை சுற்றியவன் முகத்தில் சலனம் ஒரு துளி கூட இல்லை.

 

 

 

ஷவரை ஆப் செய்தவன் அவளைத் ஏந்திக் கொண்டு வந்து கட்டிலில் கிடைத்தினான்.

 

“ஷரு பேபி” என்றாள் நா குழற…

 

“ம்ம்” என்றவன் அவளுக்கு போர்வையை இழுத்து போர்த்தி விட்டான்.

 

 

 

“நமக்கு டுடே பர்ஸ்ட் நைட் தானே” என்று கேட்டாள்.

 

 

 

அவனோ பதில் ஏதும் சொல்லாது அவளின் முகத்தையே வெறித்து பார்த்தான்.

 

 

 

“என்னை உனக்கு பிடிக்கல தானே?” என்று விழிகள் கலங்க அவள் பிதற்ற , அவனோ மறு வினாடியே “ஐ லவ் யூ” என்றிருந்தான்.

 

அவனே எதிர்ப் பார்க்க வில்லை. இந்நிலையில் அவளிடம் தன் இத்தனை வருடக் காதலை கூறுவோம் என்று…

இந்நிலையை அரவே வெறுத்தான்.

 

 

அவளின் நிலையை உணர்ந்து கொண்டவன், தன் உணர்வுகளை மொத்தமாக கட்டுப் படுத்திக் கொண்டு அவளுக்கு பதில் கூறிக் கொண்டு இருந்தான்.

 

 

 

“போடா பொறுக்கி” என்று திட்டினாள்.

 

 

 

“பொறுக்கினு திட்டுனா கிஸ் பண்ணுவேன் மறந்துட்டியா?” என்றான் புருவம் உயர்த்தி…

 

 

 

அவளோ, வேண்டும் என்றே “பொறுக்கி… பொறுக்கி… பொறுக்கி…” என்று இடை விடாது கூவ, ‘குடிகாரி’ என்று மனதில் சொல்லிக் கொண்டவனுக்கு அவளின் நிலை தெள்ளத் தெளிவாக புரிந்து போனது.

 

“நான் பொறுக்கி சொல்றேன் என்னை ஏன் கிஸ் பண்ணல?”

 

இதழ் குவித்து ஊதிக் கொண்டே அவள் அருகில் அமர்ந்தவன் அவளின் விழிகளை ஆழ்ந்து பார்த்துக் கொண்டே “நீ பிறந்தது முதல் இப்போ வரை உன்ன அவ்ளோ பிடிக்கும் பேபி. இதோ இப்போ கூட உன்னை இழுத்து வச்சு கிஸ் பண்ணணும். உன்னை மொத்தமா உணரனும்னு தோணுதுடி பட் உன்னோட சம்மதம் இல்லாமல் இப்பவே லைஃப் ஸ்டார்ட் பண்ண விரும்பல அதுக்கான சிட்டுவேஷன் இது இல்லை” என்று அழுத்தம் திருத்தமாக சொன்னவன் கதவு தட்டப்படும் ஓசைக் கேட்கவும், சட்டென எழுந்துச் சென்று கதவைத் திறந்தான்.

அங்கு வேலை செய்யும் ஊழியனோ அவன் கேட்ட வெட்டப்பட்ட எலுமிச்சம் பழத்தை கொண்டு வந்திருக்க, அதனை வாங்கிக் கொண்டு உள்ளே வந்தவன் அவளருகில் அமர்ந்தான்.

 

 

 

“அது என்ன” என்று கேட்டு கொண்டு வாங்க எத்தனித்தவள் முகத்தைப் பற்றியவனோ எலுமிச்சம் சாற்றை அதிரடியாக வாயில் பிழிந்து விட்ட அடுத்த நொடி “ஹையோ! கொலை கொலை “ என்று கத்த ஆரம்பித்து விட்டாள்.

 

 

“இவளை” என்று பல்லைக் கடித்தவன் இறுக விழிகளை மூடிக் கொண்டு தன் வாய்க்குள் எலுமிச்சம் சாற்றை பிழிந்தவன் இடைவிடாது கத்திக் கொண்டு இருந்தவள் இதழ்களுக்குள் இடம் பெயர்த்து இருந்தான்.

 

 

 

அவனின் இதழ் அணைப்பில் கிறங்கிப் போனவள் அவனுக்கு பதில் முத்தம் வழங்க அவனோ திகைத்து விழித்தான்.

 

அவளாகத் தரும் முதல் முத்தம்.

 

அவளின் முத்தத்தில் அவன் சிலிர்த்தாலும் அவனால் அத் தருணத்தை ரசிக்கவும் முடியவில்லை. அவளோடு ஒன்றவும் முடியவில்லை.

 

அவள் தான் தன்னிலையில் அல்லவே!

சட்டென அவளை விட்டு வலுக்கட்டாயமாக விலயகிவன் “தூங்கு டி” என்று தலையை வருடி விட்டவன் எழுந்து கொள்ள, மிட்டாயைப் பிடுங்கிய சிறு பிள்ளை போல மலங்க மலங்க விழித்தவள் “எனக்கு கிஸ் வேணும்” என்று அழ ஆரம்பித்தவளை இயலாமையுடன் வெறித்தான்.

 

 

 

தனதருகாமையில் சுய நினைவு இருக்கும் போதும் சரி இல்லாத போதும் சரி அவன் முத்தமிடும் போதும் சற்றே எதிர்ப்பை காட்டுபவள் பின் அடங்கி தான் போவாள்.

 

ஆனால், இன்றைய இரவை நினைத்து வீட்டில் வைத்தே அவளின் முகம் காட்டிய நொடி நேர அச்சத்தை கண்டவனுக்கு என்னவோ நெருடலாக இருந்தது.

 

 

 

அவளின் நடவடிக்கைகளை வைத்து சட்டென அவனால் முடிவெடுக்க முடியாமல் தவித்தான்.

 

 

 

ஏன் தான் அவளின் இதழ்களைத் தீண்டினேன் என்று நினைக்கும் அளவுக்கு அவளின் கூச்சல் அதிகமாக, பொறுமை இழந்தவனோ “ஸ்டாப் இட் ஆதிரா” என்றான் சீறலாக…

 

 

 

அவளின் இதழ்களோ கப்பென்று மூடிக் கொண்டாலும் அவன் ஏசிவிட்டதன் விளைவாக இதழ்களோ அடுத்த அழுகைக்கு நடுங்க ஆரம்பித்து விட்டன.

 

 

 

“மாமா”, எனக்கு என்னவோ பண்ணுது என்று சொன்னவள் விழிகளில் இருந்து கண்ணீர் வழிய, “ஐ நீட் யூ” என்றாளே பார்க்கலாம்.

 

அவனுக்கோ, தூக்கி வாரிப் போட்டது.

 

தன் செவியில் வந்து வீழ்ந்த வார்த்தைகளை நம்ப முடியாது மீண்டும் சரிதானா என்பதை உறுதி படுத்திக் கொள்ள நினைத்தான் போலும்.

 

 

 

குரல் உடைய, “க… கம் அகைன்” என்றான்.

வார்த்தைகளோ வர மறுத்தன.

 

“ஐ நீட் யூ மாமா, எனக்கு என்னவோ பண்ணுது” என்று சொன்னவளின் நிலையையே அப்போது தான் உரைத்தது.

அது மட்டுமா என்ன அவளின் குரலில் இருந்த தவிப்பு, அவள் கொஞ்சம் கொஞ்சமாக சுய நினைவுக்கு திரும்புகின்றாள் என உணர்ந்தான் அவன்.

 

 

 

“ஆர் யூ ஆல்ரைட்?” என்றான் அதிர்ச்சி விலகாத குரலில்…

 

 

“பைன்” என்றவள் உடலோ அழுகையில் குலுங்கியது.

 

 

 

ஆக, அவள் குடித்த மதுவிலும் உணர்வுகளைத் தூண்டும் என்னவோ ஒரு போதைப் பொருள் கலந்து இருக்கின்றான் என்று ஊகித்துக் கொண்டவன் விழிகளில் இருந்து அவனே அறியாமல் கண்ணீரோ கன்னத்தில் வழிந்தது.

 

எச்சிலைக் கூட்டி விழுங்கிக் கொண்டான்.

 

“ஹாஸ்பிடல் போகலாமா பேபி? என்று கேட்டான்.

 

“நோ… மாமா என்னால எனக்குள்ள தோணுற ஃபீலிங்ஸ் அஹ் கன்ட்ரோல் பண்ண முடியல மாமா” என்றாள் கலக்கத்துடன்.

 

அவனுக்கோ, தாங்க முடியாத ஏதோ ஒன்று இதயத்தை அழுத்துவது போலிருந்தது.

 

அவளின் முகத்தில் வந்து போகும் இயலாமையுடன் கூடிய தவிப்பு யாரோ உயிரை உருவி எடுப்பதைப் போல வலித்தது.

 

இந்நிலையில் அவளுடன் தன்னால் உடலுறவு கொள்ள முடியுமா?

 

அடுத்த கணமே அவனது மனம் இல்லை என்று பதிலளித்தது.

 

அவளின் தன் மேலான பார்வையை உணர்ந்தவன் அவளை தன் மார்போடு அணைத்துக் கொண்டான்.

 

“ஈஸி பேபி ஈஸி, என்று சொன்னவன் அவளின் முதுகை தடவிக் கொடுத்தான்.

 

ஆனால், பேதை அவளால் தான் உள்ளே சென்ற போதையின் வீரியத்தில் தன்னுள் நடக்கும் இரசாயனத் தாக்கத்தை கட்டுப்படுத்த முடியாது போனது.

அவனின் அண்மை வாசம் அவளை என்னவோ செய்ய, தன் நிலையை நினைத்து வெட்கிப் போனாள்.

 

அவனிடம் வாய் விட்டு உடலுறவுக்கு அழைத்து விட்டோமே என்று எண்ணி மருகியவள் வெடித்து அழுதாள்.

 

அவனோ, பதறிப் போய் “ஆ… ஆதிரா.. ஹேய் பேபிமா இங்க பார்” என்று தவித்தவன் அவளின் இரு கன்னங்களையும் தாங்கி தன்னை பார்க்க செய்தவன் “சாரி மா என்னால எப்படி டி உன்கூட இந்த நிலைல…” என்று கேட்கும் போதே அதற்கு மேல் பேச முடியாது என்பதைப் போல அவனின் தொண்டைக்குழி ஏறி இறங்கியது.

 

அவனின் நிலை அவளுக்கு புரிந்தாலும் அவளுள் நடக்கும் இரசாயன மாற்றங்களை கட்டுக்குள் கொண்டு வர முடியாது திணறியவள் முகத்தை அழுந்த துடைத்துக் கொண்டு “மாமா எனக்காக ஒன்னு பண்ணுகிறீர்களா?” என்றவள் குரலோ ஈனமாக ஒலித்தது.

சிவந்த விழிகளால் அவளை ‘சொல்’ என்பதைப் போல வெறித்துப் பார்த்தான்.

 

“என்ன இங்க வச்சு லாக் பண்ணிடுங்க மாமா. நீங்க வேற ரூம் எடுத்து ஸ்டே பண்ணுங்க” என்று முடிக்க முதலே தாங்க முடியாமல் நொறுங்கிப் போனவன் அவளின் இதழ்களை தன் இதழ்களால் முற்றுகையிட்டு இருந்தான்.

 

அவனின் அதிரடி இதழ் அணைப்பில் மயங்கத் துடித்தவள் அவனை வலுக்கட்டாயமாக தன்னிலிருந்து பிரித்துத் தள்ளியவள் “வேணாம் மாமா, என்னால முடியல. நீங்க என்னை கேவலமா ஒரு பார்வை பார்த்தா கூட செத்துடுவேன் மாமா. நான் சொல்றதை கேளுங்க என்னை லாக் பண்ணிட்டு போங்க” என்றாள் குரல் தழுதழுக்க…

 

அவள் தன்னிடம் கெஞ்சிவதா?

என்னவள் அவள்.

 

எவ்வளவு அழுத்தமாக இருந்தால் இப்படி வார்த்தைகளை சொல்லிக் கொண்டு இருக்கின்றாள்?

அவளின் நிலையை எண்ணி இதயத்தில் இரத்தம் கசிந்தது.

 

 

அவளின் மார்பில் தொங்கிய மாங்கல்யத்தை தூக்கி காட்டியவன் “ எப்போ இருந்தாலும் இது நமக்குள்ள நடக்க வேண்டிய ஒன்னு தான் சோ ஒன்னை புரிஞ்சிக்கோ ஆதிரா என்று அவளின் கண்ணீரை தன் பெருவிரலால் துடைத்து விட்டவன் நீ உன் புருஷன் கிட்ட தான் கேட்டு இருக்க சோ அழுது வடியிற அளவுக்கு இட்ஸ் நாட் அ இஸ்யூ” என்றான்.

 

“பட் எனக்கு” என்றவள் பார்வையோ அவனில் மோகமாக படிவதை என்ன முயன்றும் அவளால் தடுக்க முடியவில்லை.

 

‘உஷ்’ என்று தன் சுட்டு விரலை அவளின் வாயில் வைத்தவன் அவனவளுக்காக தன்னைக் கொடுக்க முடிவை எடுத்திருந்தான்.

அவனுள் அவள்மேல் ஆழ் கடல் போல் நேசம் விரவிக் கிடக்க, அவளின் தவிப்பை இதற்கு மேல் பார்த்துக் கொண்டு அவனால் இருக்க முடியவில்லை.

 

“அம் ஆல் யுவர்ஸ் என்ற ஒவ்வொரு வார்த்தைகளையும் அழுத்தமாக சொன்னவன் டேக் மீ” என்று அவளின் கரத்தை தன் இடது மார்பில் வைத்து அழுத்தினான்.

 

இருவரின் இதயத் துடிப்பும் வெளியில் கேட்கும் அளவுக்கு அந்த அறையே நிசப்தமான இருந்தது.

 

ஒரு வேகத்தில் ஐ நீட் யூ என்று கேட்டவளுக்கோ அவனை நாட கூச்சமாக இருந்தது.

அவளையே அறியாமல் போதையின் வீரியத்தையும் தாண்டி அவளின் பெண்மை விழித்துக் கொள்ள, அவளையே ஆழ்ந்து பார்த்திருந்தவன் அவளின் நிலை மோசமாக மாறுவதற்குள் மொத்த காதலையும் விழிகளில் தேக்கி அவளை ஆழ்ந்து பார்த்தவன் “லெட் மீ ஸ்டார்ட்” என்று சொன்னவன் அவளோடு கட்டிலில் சரிந்தான்.

 

இருவரிடம் நேசம் கொட்டிக் கிடக்க, அவர்களுக்கு தடை ஏது?

 

வீட்டில் இருக்கும் போது அவளின் முகத்தில் தெரிந்த கலக்கம் இப்போது அவளின் முகத்தில் தெரிகின்றதா? என்று பார்த்தான்.

 

அவளின் விழிகளில் அவனுக்கான என்னவோ ஒன்றை கண்டு கொண்டான் போலும்.

எங்கே தன் தொடுகை அவளை கலங்கச் செய்து விடுமோ என்ற அச்சம் இருந்தாலும் அதனை புறம் தள்ளி விட்டு அவளின் தவிப்பை நீக்க, தன்னையே அவளிற்கு கொடுத்திருந்தான்.

 

இருவரின் உடையும் தூரப் போனது.

இருவரும் ஒரே போர்வைக்குள் ஆதாம் ஏவாலை போல கிடந்தனர்.

 

அவனோ, அவளின் சிவந்த முகத்தைப் பார்த்துக் கொண்டே விழிகளை ஆழ்ந்து பார்த்தவன் அவளின் சம்மதம் வேண்டி “நான் உனக்குள்ள வரட்டுமா?” என்று கேட்க, அவளுக்கோ எந்த நிலையில் வைத்துக் கொண்டு என்ன கேட்டுக் கொண்டு இருக்கிறான் என்ற எண்ணம் தான்.

 

வெட்கத்தில் பூமிக்குள் புதைந்து விட மாட்டோமா? என்றிருந்தது அவளுக்கு….

“ஷரு” என முனகியவள் எம்பி அவனின் நெற்றியில் முத்தம் பதித்து தன் சம்மதத்தை கூறி இருக்க, அது போதுமே அவனுக்கு, தன் காதலை அவளின் மேனியில் காட்ட ஆரம்பித்து இருந்தான் ஷர்வீத்.

 

மனதுக்கு பிடித்தவனின் அதுவும் தன் கணவனின் தீண்டல் அவளை திக்குமுக்காட செய்தது.

 

அவனை மொத்தமாக தன்னுள் உள்வாங்கிக் கொண்டவளது பெண்மையின் வலியை உணர்ந்தவள் கண்ணீர் சிந்த, அவளின் கண்ணீரைத் தன் இதழ் கொண்டு துடைத்தவன் அவளை மென்மையிலும் மென்மையாக கையாண்டான்.

உள்ளே சென்ற போதையின் தாக்கமாக இருந்ததாலும் அவள் சுய நினைவில் அல்லவா இருந்தாள்.

 

பெண்மை விழித்துக் கொள்ள, அவனின் ஆளுகையில் வெட்கி சிவந்தாள் பெண்ணவள்.

 

 

தன்னவளை மனதில் ரசித்துக் கொண்டான்.

 

அவனின் அவளின் மீதான காதலானது காட்டாற்று வெள்ளம் போல இருந்தாலும் அவனோ தன் உணர்வுகளை அடக்கிக் கொண்டு மென் பூவை கையாளுவது போல அவளை ஆட்கொண்டு விட்டு விலகிப் படுத்தவன் அவளைத் தன் மார்போடு அணைத்துக் கொண்டே “ஆர் யூ ஓகே பேபி?” என்று கேட்டான்.

 

அக் குரலில் அத்தனை மென்மை.

“அம் ஓகே மாமா” என்றவள் தன்னுள் இன்னுமே போதையின் தாக்கத்தில் நிகழ்ந்து கொண்டிருக்கும் மாற்றத்தை எண்ணி நொந்து கொண்டவள் உணர்வுகளைக் கட்டுப்படுத்தும் வழியறியாது மேனியில் நடுக்கம் பரவியது.

 

அவளின் அகமும் புறமும் அறிந்தவன் ஆயிற்றே அவன்!

 

அவளை இறுக அணைத்துக் கொண்டவன் அவளின் செவியில் “டேக் மீ பேபி” என்ற அடுத்த நொடி, அவளின் வேகத்தில் அவன் தான் அரண்டு போனான்.

 

அவளின் முன் தன் முகம் காட்டும் உணர்வுகளை மறைத்துக் கொண்டான் ஆணவன்.

 

அவளின் உள்ளே சென்ற போதையின் தாக்கத்தை அவளின் உடல்மொழியின் உணர்ந்து கொண்டவன் மனதோ கொஞ்சம் கொஞ்சமாக மரித்துக் கொண்டிருந்தது.

 

தன்னவளை இந்நிலைக்கு கொண்டு வந்தவன் யாராக இருந்தாலும் நான் உயிரோடு விடப் போவதே இல்லை என்று இக் கணம் உறுதி கொண்டவன் தன் மார்பில் கலைத்து போய் விழி மூடிக் கிடந்தவள் தலையில் முத்தம் பதித்தவன் அவளை வருடி கொடுத்து உறங்க வைத்தவன் தாயுமானவாக மாறிப் போனான்.

 

 

 

👁️ 369 Views
5 9 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
⚠️ இத்தளத்தின் உள்ளடக்கங்கள் DMCA
பாதுகாப்பில் உள்ளது. Copy / Screenshot / PDF
உருவாக்குதல் தடை செய்யப்பட்டுள்ளது.