Menu

நொடி – 22

நொடி – 22

 

முகம் மற்றும் கழுத்து பகுதியில் ஈரமாக இருப்பதை உணர்ந்து விழிகளை மலர்த்தி தன்னை ஆராய்ந்து பார்த்தாள் பெண்ணவள். 

 

முதலில் அவளது விழிகளோ தன்னவனைத் தான் தேடின. 

 

அவன் தான் அங்கு இல்லையே!

 

கட்டிலின் இரு புறமும் அன்னையும் அத்தையும் பதட்டமாக தன்னையே பார்த்து கொண்டு அமர்ந்திருப்பது தெரிந்தது. 

 

அவளது முகத்தில் சட்டென ஒருவித ஏமாற்றம் பரவியது.

 

“இசை இப்போ எப்படி இருக்கு மா?” என்ற தன் அன்னையை வெறித்தவள் “ஜிதன் எங்க மாஹ்? ” என்று கேட்டாள். 

 

இதழ் பிரித்து பேசும் போதே அவன் முத்தமிட்ட இதழ்கள் வேறு காந்தியது. 

 

ஷீலாவோ, அவர் பங்குக்கு “என்னடாமா முகமெல்லாம் சிவந்திருக்கு. உதடு வேற வீங்கி இருக்கே” என்று கேட்டு விட,

 

அவளுக்கோ ஐயோடா என்றிருந்தது.

 

தன்னை இந்த நிலையில் விட்டுவிட்டு எங்கே சென்றானாம்? என்று முதல் முறை கோபம் வந்தது தன்னவன் மேல்,

 

 

“ஜிதன் அப்போவே கிளம்பிட்டார் மா. நீ அப்படி என்னத்தை பார்த்த? மயங்கி விழுற அளவுக்கு?” என்ற தன் அன்னையின் பேச்சில் மலங்க மலங்க விழித்தாள் பேதை. 

 

“என்ன வாசு, அவளே பயந்து போய் முகமே என்னவோ போல வாடி இருக்கு அவகிட்ட போய் இப்படி பேசிட்டு இருக்க?” என கடிந்த படி அவளிடம் தண்ணீர் போத்தலை நீட்டி ” இதை குடி மாஹ்” என்றிட,

 

போத்தலை வாங்கி மட மடவென நீரை பருகியவளுக்கு, தன்னவன் அவர்களிடம் கூறிய, தான் மயங்கி வீழ்ந்ததற்கான காரணத்தை எண்ணி உள்ளே சிரிப்பு தான் வந்தது.

 

அடக்கிக் கொண்டாள்.

 

அருகிலிருந்த மேசையில் போத்தலை மூடி வைத்தவள், “விண்டோ ஓபன் ல இருந்திருக்கு அத்தை அது வழியா உள்ள தேனீ ஒண்ணு வந்துடுச்சு… அதான் சத்தமா கத்திட்டேன். அதுக்கு பிறகு….” என்றவளுக்கு மேலும் சொல்ல முடியாது முகம் முழுதும் சிவந்து ஒருவித சிலிர்ப்பு மேனியில் பரவுவதை உணர முடிந்தது.

 

அதை வேறு விதமாக, அவள் பயப்படுகின்றாள் என்று புரிந்து கொண்ட ஷீலா, ” ஓஹ்! அது தான் மயக்கமா? முதல்ல அவன் சொல்லும் போதே பயந்துட்டேன் மா என்னவோ ஏதோனு…” என ஒரு பெரு மூச்சுடன் சொன்னவர் ஓகே ரெஸ்ட் எடு மா” என்று எழுந்து கொண்டார்.

 

 

” நான் என் பொண்ணோட இங்கேயே இருக்கேன் ஷீலா நீ போ” என்ற வாசுகி அவளின் தலையை ஆதுரமாக வருட ஆரம்பித்து விட,

 

“என்னவோ நான் சொல்ல சொல்ல கேட்காம கிளம்ப ரெடி ஆகுன இப்போ என்னவாம்?” என அலுத்துக் கொண்ட ஷீலாவிடம்,

 

“என் பொண்ணு இப்படி இருக்கப்போ நான் எப்படி நிம்மதியா போக முடியும் சொல்லு” என்றிட,

 

“ஐயோ மாஹ், டோண்ட் ட்ரீட் மீ லைக் அ சைல்ட் எனக்கு ஒன்னும் இல்ல. ஜஸ்ட் பயந்துட்டேன் அதுக்குள்ள ஜிதன் வந்துட்டார் இப்போ நான் நல்ல்ல்லா இருக்கேன்” என அழுத்தமாக சொன்னாள் அவரை அறையை விட்டு அனுப்பும் பொருட்டு,

அமைதியாக ஒருவித யோசனையில் லயித்திருப்பவளை ஒரு கணம் ஆழ்ந்து பார்த்தார்.

 

ஒருவேளை அவள் தன் அருகாமையை தவிர்க்கின்றாளோ? என்ற எண்ணம் எழவும் வாசுகியின் முகமோ நொடியில் வாடிப் போனது.

 

” ப்ச்ச… என்னமா?” என சலித்துக் கொண்டே அன்னையின் கரத்தை பற்றி, “நான் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்திட்டு வரேன் அத்தை கூட போங்க” என்றாள் மென்மையாக,

 

 

“ம்ம் ஃப்ரெஷ் ஆகிட்டு ரெஸ்ட் எடு” என்று சொன்னவரோ ஷீலாவுடன் அறையை விட்டு வெளியேறி இருக்க,

 

அவர்கள் போகும் வரை சோர்ந்து போனவளாய் அமர்ந்து இருந்தவள் கட்டிலிலிருந்து பாய்ந்து எழுந்தாள்.

 

அவளுக்கே சற்று தனிமை தேவைப்பட்டது.

 

தன்னை பார்த்த கணத்திலிருந்து வார்த்தைகளால் தன் இதயத்தை வலிக்கச் செய்பவன் இன்று தன்னை முத்தமிட்டு இருக்கின்றான்.

 

முதல் முத்தம் அல்லவா! அதுவும் அவளின் ஜிதன் கொடுத்த முத்தம்!

 

நினைக்கவே ஜிவ்வென்ற உணர்வு.

 

அவன் இப்போது இங்கு இல்லை என்பதை தாண்டி அவளின் சிந்தை மொத்தமும் அவன் கொடுத்த ஆழமான முத்தத்திலேயே தேங்கி நின்றது.

 

 

ஆளுயரக் கண்ணாடியின் முன் நின்று தன்னை பார்த்தாள்.

 

 

இரவிரவாக அழுது வாடி விரக்தியில் சூழ்ந்திருந்த தன் முகமா இது? என்ற வியப்பு தான் அவளுக்கு,

 

பின்ன, முகம் முழுதும் இன்னுமே சிவந்து தான் இருந்தது.

 

அது மட்டுமா என்ன?

 

அவளின் இதழ்களோ கன்றி சிவந்து போயிருந்தன.

 

 

இப்போதே, அவனுக்கே அவனுக்காக அவள் வாரி வழங்க துடிக்கும் மொத்த காதலையும் உணர்த்தி விட வேண்டும் என என்னவோ ஓர் உணர்வு அடிவயிற்றிலிருந்து பீறிட்டு கொண்டு கிளம்பியது.

 

ஆனால் முடியாதே!

 

தன்னவனின் உடல்நிலை? என்ற கேள்வி எழுந்தது.

 

 

வலக் கரம் உயர்த்தி தன் இதழ்களை வருடிய படியே, ” நமக்குள்ள நடந்ததை பத்தி என்னை போல நீங்க இப்போ நினைச்சிட்டு இருப்பீங்களா ஜிதன்?” என தன் இதழ்களை ஆழ்ந்து பார்த்துக் கொண்டே சொல்லிக் கொண்டவள் அறியவில்லை.

 

 

அவன், அவளை முத்தமிட்டதை சர்வ சாதாரணமாக கடந்து விட்டானென…

 

***************

 

“AJ Group of Industries” என்ற தங்க நிற எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட வானுயர்ந்த கட்டிடம் என்றும் போல இன்றும் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டு இருந்தது.

 

இதே சமயம் அதற்கு உரிமையாளரான அவனோ, தன்னை ஒருவள் நினைத்துக் கொண்டு இருக்கின்றாள் என அறியாது, நுனி நாக்கில் ஆங்கிலம் தவழ வெகு வெகு நிதானமாக பேசிக் கொண்டு இருந்தான்.

 

 

வீட்டில் அவன் காட்டும் முகம் வேறு; அலுவலகத்தில் அவன் காட்டும் முகம் வேறு அல்லவா!

 

இடை இடையே ஒற்றை புருவத்தை வருடிக் கொண்டே, அவன் விளக்கமளித்த விதம் அங்கு அமர்ந்திருந்த ஆண்களை மட்டுமல்ல பெண்களை கூட மயக்கம் கொள்ள வைத்தது.

 

 

இதழ்களில் புன்னகை தவழ ஆளுமையுடன் லாவகமாக அனைத்தையும் அவன் கையாண்ட தோரணையே, அவனுக்கு நேரெதிரே அமர்ந்து அனைத்தையும் பார்வையிட்டு கொண்டிருந்த வெளிநாட்டவர்கள், புராஜெக்ட்டை முழுமனதாக ஒப்புக்கொள்ள போதுமானதாக இருந்தது.

 

 

அதனைத் தொடர்ந்து அவனது அறைக்குள் நுழைந்தவன், டையினை தளர்த்தி விட்ட படி சுழல் இருக்கையில் அமர்ந்து கொண்டே “குணால்” என்றழத்தான்.

 

குரலோ, இப்போது கடினமாக ஒலித்தது.

 

 

ஃபைல் ஒன்றை வெகு தீவிரமாக பார்வையிட்டு கொண்டு இருந்தவன், திடீரென ஒலித்த குரலில் தூக்கி வாரிப் போட விழித்தவன் கரத்திலிருந்த ஃபைலையும் கூட பதட்டத்தில் கீழே நழுவ விட்டும் இருந்தான்.

 

ஓர் அழுத்தமான பார்வையுடன் “சாரோட நினைப்பு எல்லாம் எங்க இருக்கு?” என்று கேட்டனே பார்க்கலாம்.

 

அவனது கேள்வியில் குணாலுக்கோ இதயமே ஆட்டம் கண்டது.

 

 

“சார்.. ரிப்போர்ட்ஸ்.. ” என்று வார்த்தைகளை கோர்க்க முடியாது திணறியவனிடம் ” உன் எக்ஸ்ப்லநேஷன் எனக்கு தேவையில்ல… அரேஞ்ச் த பார்டி” என்று சொல்லி விட்டு கணனியில் ஆழ்ந்து விட, 

 

 

“ஓகே சார்” என்று சொல்லி விட்டு கீழே வீழ்ந்த ஃபைலை எடுத்து கொண்டே ஏறிட்டு அவனை பார்த்தவனுக்கு ‘ என் நிலைமையே இப்படி அப்போ இவர் ஒய்ஃப் நிலைமை? ‘ என மனதுக்குள் கேட்டுக் கொண்டவனுக்கு அந்த கேள்வியை வெளியில் கேட்குமளவுக்கு தைரியம் தான் இருக்கவில்லை.

 

*******

 

இன்று தன்னவனை எவ்வாறு நேருக்கு நேர் எதிர் கொள்வது என பலவிதமாக தனக்குள் பேசி பேசி வாதம் நடத்திக் கொண்டு இருந்தவள் அவன் வரவுக்காக ஆர்வமாக காத்திருக்க, 

 

அவனோ, மாலையில் ஏற்பாடு செய்த பார்ட்டியில் நன்றாக குடித்து விட்டு ஒருவித இறுக்கத்துடன் தான் அறைக்குள் வந்திருந்தான்.

 

அவன் வந்து விட்டான் என உள்ளே மனம் துள்ளினாலும் மனம் நிறைய காதலுடன் கடந்த இரண்டு நாட்களாக அவன் விரட்டி விட்ட அவனது அறையிலேயே அவனை எதிர் கொள்ள காத்திருந்தாள் பெண்.

 

ஆனால், வந்தவன் நேற்று போல இன்றும் குடித்திருக்க, காரணமே இன்றி லியாவின் எண்ணம் வேறு வந்து போனது அவளுக்கு,

 

 

மனம் பிசைய எதுவும் பேச தோன்றாமல் மழுக்கென்று முகிழ்த்து விட்ட கண்ணீருடன் அறையை விட்டு வெளியே செல்ல முயன்றவள் சட்டென திடுக்கிட்டு விழித்தாள்.

 

அவளது வலக் கரமோ அவனது கரத்தின் பிடியில் சிக்கி இருந்தது.

 

” என் ரூம்ல ஸ்டே பண்ணு” என்றான் சட்டென்று,

 

அவனது வார்த்தைகளில் அவளின் முகமோ சட்டென மலர்ந்து விகர்சித்தது.

 

ஒரு வித வெட்கம் ஆட்கொள்ள தன்னவனின் கரத்தில் சிக்கிக் கொண்டிருந்த தன் கரத்தை பார்த்து விட்டு அவனை ஏறிட்டவள் ” சாரி” என்றாள்.

 

அவள் எதற்காக மன்னிப்பு கேட்கிறாள் என்ற கேள்வி எழ,

 

புருவங்கள் இடுங்க “ஃபோர் வாட்?” 

என்றான்.

 

” அ.. அது ஒன்னும் இல்ல சும்மா சொல்லணும்னு தோணிச்சு” என்றவள் முகம் இன்னும் இன்னும் வெட்கத்தில் சிவக்க,

 

 

அவளை விசித்திரமாக பார்த்தவன், “ஐ வாண்ட் ஆன்சர். ரீசன் தெரியாம ஐ காண்ட் அச்செப்ட் யூர் சாரி” என்றவன் பற்றி இருந்த கரத்தில் அழுத்தம் கொடுத்து அவளை தன்னை நோக்கி இழுத்திருந்தான்.

 

 

தன் மார்பில் வந்து பூக் குவியலாக மோதியவளின் சிவந்திருந்த இரு கன்னங்களையும் வருடிக் கொண்டிருந்தவனின் நெருக்கத்தில் மொத்தமாக தன் சுயத்தை இழந்தாள் மாது.

 

 

இப்போதே, அவன் முழுமையாக தன்னை ஆட்கொண்டால் கூட அவளுக்கு சம்மந்தம் எனும் மனநிலையில் இருந்தாள் பேதையவள்.

 

அவனது ஷர்ட்டின் பட்டனில் பார்வையை பதித்த படி, ” மார்னிங் மயங்கிடேன் ல அதுக்காக தான்” என்றாள் எங்கே தன்னால் அவனின் உணர்வுகள் அறுபட்டு விட்டதோ என்ற பரிதவிப்புடன், 

 

அவள் பரிதவிப்புக்கெல்லாம் அப்பாற்பட்டவன் அவன் ஆயிற்றே!

 

 

” ஓஹ் பட் ஐ என்ஜாய்ட் இட். இவ்ளோ நாளா ஏன் எந்த பொண்ணையும் தொடவே இல்லன்னு செம்ம ஃபீல் பண்ணேன்” என்றவனின் பேச்சில் வெட்கத்தை பூசி மலர்ந்திருந்த அவளது வதனமோ இருண்டு போனது.

 

என்ன வார்த்தை சொல்லி விட்டான் அவன்?

 

இதழ் கடித்து வெடித்து கிளம்பிய அழுகையை அடக்கிக் கொண்டே “நான் ப… பக்கத்து ரூம்ல தூங்குறேன்” என்றவள் அவனை விட்டு விலக முயல,

 

அவனா விடுவான்?

 

இன்னும் இன்னும் அவளை தன்னோடு இறுக அணைத்துக் கொண்டே ” ஒரு கிஸ்’ ல இவ்வளவு கிக் ஏறுதுனா மொத்தமும் ஃபீல் பண்ணுனா?” என ஒற்றை புருவம் உயர்த்தியவனின் மோகமான குரல், அவளின் செவிமடலை உரசி சூடேற்ற, 

 

அவளின் காதல் கொண்ட மனம், மொத்தமும் அவனது காதலில்லா காமம் கலந்த வார்த்தைகளில் அருவெறுத்து போக,

 

அதற்கு எதிர் மாறாக அவளின் மேனியோ, அவனின் தீண்டலில் உருகி கரைந்து அவனுடன் ஒன்ற துடித்துக் கொண்டு இருந்தது.

 

“டூ யூ க்னோ? நான் இதுவரை எந்த பொண்ணு பின்னாடியும் போனது இல்ல, வொய் எவ்வளவோ சான்ஸ் கிடைச்சும் ஐ மீன் பொண்ணுங்க என்னை தேடி வந்து அப்ரோச் பண்ணுறப்போ ரிஜெக்ட் பண்ணி இருக்கேன். அம் நாட் இன்ட்ரெஸ்டெட் வித் இட் பட் இப்போ ஐ ஃபீல் அஷேம்ட்” என பேசியவனையே வெறித்து பார்த்தவளுக்கு அடுத்து அவன் என்ன பேசப் போகின்றான் என புரிந்து போனது.

 

தன்னை வதைக்கவென அவன் விடும் வார்த்தைகள் எனக்கு தீரா வலியைக் கொடுப்பதை விட இவ்வாறெல்லாம் பேசி அவனை, அவனே அல்லவா கேவலப்படுத்திக் கொண்டு இருக்கிறான். 

 

 

நெஞ்சம் விம்மி தவித்தது.

 

 

“ப்..ப்ளீஸ் ஜிதன் இப்.. இப்படி பேச வேணாம்” என்று சொன்னவள் அவனது இதழ்களில் விரல் வைத்து தடுக்க,

 

 

அவளின் வெண்டை பிஞ்சி விரல் தான் அவன் கொட்டும் விஷம் தோய்ந்த வார்த்தைகளை தடுத்து நிறுத்த போகின்றதா என்ன?

 

 

” நான் இன்னும் பேசி முடிக்கல” என்றவனோ அவளின் விரலை தன் இதழ்களில் இருந்து விலக்கி விட்டவன் ” எக்ஸ்ட்ரா மேரிடல் அஃப்பைர்….” என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போதே,

 

அதற்கு மேலும் தாங்க மாட்டாமல் “ஜிதன்…” என ஈனக் குரலில் கேவியவள் அவனது மார்பிலேயே புதைந்து விடுவதை போல தலை புதைத்து விம்மி வெடித்து கதறி அழுதிருந்தாள் பெண்ணவள்.

 

 

👁️ 918 Views
4.9 9 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
⚠️ இத்தளத்தின் உள்ளடக்கங்கள் DMCA
பாதுகாப்பில் உள்ளது. Copy / Screenshot / PDF
உருவாக்குதல் தடை செய்யப்பட்டுள்ளது.