Menu

நொடி – 23

நொடி – 23

 

தன் மார்பில் புதைந்து கதறி அழுபவளையே வெறித்திருந்தான். 

 

முகம் முழுதும் சிவந்து பார்க்கவே பாவமான தோற்றம் தான்.

 

ஆனால் அவனின் உடலோ இறுகி விறைத்தது.

 

என்னவோ இதயத்தில் ஓர் இனம் புரியாத தவிப்பு.

 

” டோண்ட் க்ரை யாழ்” என்றான் இறுகிய குரலில்….

 

ம்ஹூம் அவளுக்கு எங்கே அவன் சொல்வது கேட்கும்?

 

அவளின் மொத்த சிந்தையும் தான் அவன் கூற வந்த வார்த்தைகளிலேயே சிக்கி கண்ணீர் சுரப்பிகளை தூண்டி விட்டிருந்தன அல்லவா! 

 

என்ன முயன்றும் அவளின் அழுகை நின்ற பாடு தான் இல்லை.

 

அப்படியே நின்ற நிலையிலேயே நீண்ட நேரமாக அழுபவளை பார்த்து கொஞ்சம் பயம் கூட தொற்றிக் கொண்டது அவனுக்கு….

 

 

“ஏய்! என்னை பார்…” என்ற படியே வலுக்கட்டாயமாக அவளின் இரு கன்னங்களையும் பற்றி தன்னைப் பார்க்கச் செய்து, “அழாத யாழ். எனக்கு என்னவோ பண்ணுது டி” 

 

” ஜிதன்” என்றாள் குரல் தழுதழுக்காக,

 

” டோண்ட் கால் மீ ஜிதன்” என்ற படி இரு கரங்களாலும் அவளின் கன்னங்களை தீண்டி கண்ணீரை அழுந்த துடைத்து விட்டான்.

 

“ஏன்?” என்று தவிப்பாக அழுகையோடு கேட்டவளின் இதழ்களை கவ்வி விடுவித்தவன் அவள் கேட்ட கேள்விக்கு பதில் கூறாது, திகைத்து விழித்தவளின் விழிகளை ஆழ்ந்து பார்த்தான்.

 

“நான் சொல்ல வர்றதை முழுசா கேட்டுட்டு அழறதா? இல்லையானு முடிவு பண்ண மாட்டியா டி?” 

 

 

” ப்ளீஸ் வேண்டாம் ஜித… என்றவள் சட்டென்று மீதி வார்த்தைகளை தொண்டைக்குள் விழுங்கிக் கொண்டு மீண்டும் ” வேண்டாம் எதுவுமே சொல்ல வேண்டாம்” என்றிருந்தாள் இயலாமையும் தவிப்புமாய்…

 

 

கூறும் போதே அவளின் குரல் கூட உடைந்திருந்தது.

 

” பட் உன்கிட்ட சொல்லாம எப்படி? ஐ வாண்ட் யுவர் பெர்மிஷன்” என்றவனை, ஏறிட்டு பார்த்தவள் “என்..என்ன என்கிட்ட பெர்மிஷன் கேட்கணும்?…… நோ, என்னால அக்சப்ட் பண்ணிக்க முடியாது. உங்களை எந்த பொண்ணுக்கும் என்னால விட்டு கொடுக்க முடியாது” என்று பித்து பிடித்தவள் போல பிதற்றிக் கொண்டே மார்புக் கூடு ஏறி இறங்க இதழ் பிதுக்கி அவனை கலங்கிய விழிகளுடன் பார்த்து “நா…நான் செத்த பிறகு இன்…இன்னொரு பொ…பொண்ணு கூட…” என்று சொல்ல வந்தவளின் வார்த்தைகளை விழுங்கிக் கொண்டான் அவன்.

 

அழுத்தமான முத்தம்.

 

மேல் இதழ், கீழ் இதழ் என பாரபட்சம் இன்றி கவ்வி சுவைத்தவன் அதில் அழுத்தமாக தன் பல் தடத்தை வேறு பதித்து விட,

 

 

சுர்ரென்று இதழ்களில் பரவிய வலியில், அவனிதழ்களுக்குள் மெல்ல முனகினாள் பெண்ணவள்.

 

என்ன நினைத்தானோ மெல்ல அவளின் இதழ்களை விடுவித்தவன், அவளின் விழிகளை மோகமாக பார்த்துக் கொண்டே,

 

 

“என் கிஸ்சிங் பார்ட்னர் நீ பக்கத்துல இருக்கப்போ நான் ஏன் அஃபைர் வச்சுக்க போறேன் பேபி?” என்றானே பார்க்கலாம்.

 

முதலில் ஒன்றும் புரியாது மலங்க மலங்க விழித்தவள், பின் புரிந்து வெட்கம் வருவதற்கு பதிலாக அவளுக்கோ மனம் நிறைய கலக்கம் தான் பிறந்தது. 

 

என்ன மாதிரியான பார்வை இது? 

 

அம் மோக பார்வையில் கிஞ்சித்தும் காதல் இல்லையே!

 

அவனுடன் அவள் வாழ ஆசைப்பட்ட வாழ்க்கைத் தான்.

 

அவனே நேரடியாக கேட்டும் விட்டான்.

 

ஆனால் அவள் மனம் தான் தவியாய் தவித்து கொண்டு இருந்தது.

 

 

தன்னவனுக்கு தன்மேல் காதல் வந்த பிறகே தன் ஒட்டு மொத்த காதலையும் அவனுக்கு உணர்த்தி, அவனுடன் கூடிக் கழிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்தவளுக்கு,

 

வெறும் மோகத்தை மட்டும் கொண்டு உடல் பசியை தீர்த்துக் கொள்ள அவன் தன்னை பயன்படுத்த எண்ணியதை நினைத்து அவளின் காதல் கொண்ட மனம் உயிரோடு மரித்தது.

 

தாங்க முடியாத பாரம் நெஞ்சை அடைக்க, உருவமில்லா பந்தொன்று குரல்வளையை கவ்வி பிடிப்பதை போலொரு உணர்வு.

 

இதழ் கடித்து அவனை ஏறிட்டாள்.

 

“ஹே என்னால உன் லிப்ஸ் ஆல்ரெடி ப்ளீட் ஆகிட்டு இருக்கு. நீயும் உன் லிப்ஸ் அஹ் பைட் பண்ணிட்டு இருக்க” என்று சொல்லிக் கொண்டே அவளின் பற்களுக்கு இடையே சிக்கி இருந்த இதழ்களை தன் விரல் கொண்டு விடுவித்து , அதில் லேசாக கசிந்த குருதியை மிக மென்மையாக துடைத்து விட்டான்.

 

முதன் முறை, அந்த அமைதியான இரவு பொழுதில் இருவருக்குமான நீண்ட நேர தனிமை.

 

அவளின் அருகாமையில் அவன் குடித்து விட்டு வந்த மதுவின் போதை கூட குறைந்து விட்டு இருந்தது.

 

 

“என்ன இப்படியே என்னை பார்த்திட்டு இருக்க போறியா? டெல் மீ” 

 

” எ.. எனக்கு உங்களை ல..லவ் பண்ணனும்” என்றாள் தைரியத்தை வரவழைத்துக் கொண்டே,

 

” பண்ணிக்கோ” என்று விட்டான்.

 

நடுங்கிக் கொண்டு இருந்த அவளின் இதழ்களில் சட்டென புன்னகை விரிந்தது.

 

நெஞ்சம் முழுவதும் முட்டி நின்ற காதலின் வெளிப்பாடாக, அவளின் இதயமோ மார்புக் கூட்டை விட்டு எம்பி தரையில் குதித்து விடுமோ? எனுமளவுக்கு தாளம் தப்பி துடித்துக் கொண்டிருந்தது.

 

அவனது ஒற்றை சொல்லில்.. இல்லை இல்லை அவன் கொடுத்த அந்த ஒற்றை அனுமதியில் என்னவோ யுகம் யுகமாய் காத்திருந்து வரம் பெற்றவள் போல “உ… உண்மையாவா சொல்றீங்க? நான் உங்களை லவ் பண்ணிக்கலாமா?” என சந்தோஷ ஆர்ப்பரிப்பில் அவனது ஷர்ட் காலரை பற்றி இருந்தாள் பெண்ணவள்.

 

“எஸ் யூ கேன், இட்ஸ் யுவர் பீலிங்க்ஸ். நீ என்னை தாராளமா லவ் பண்ணிக்கலாம் பிக்காஸ் உன்னால எனக்கு லஸ்ட் கிடைக்கும்னா ஒய் நாட்? நான் ஏன் உன் பீலிங்க்ஸ் அஹ் தடுக்க போறேன்?” என்றவனின் வார்த்தைகளை முழுதாக உள்வாங்கிக் கொண்டவளுக்கு மேனி விறைத்து போனது.

 

” அப்போ நீங்க என்னை லவ் மாட்டீங்களா?” என மூச்சை இழுத்து பிடித்துக் கொண்டு கேட்டவளின் நம்பிக்கை அவன் கூறப் போகும் பதிலுக்காக ஒரு நூலிழையில் ஊசலாடிக் கொண்டு இருக்க,

 

அவனோ, ” லவ்வா?” என்று கேள்வியாக புருவம் உயர்த்தி அவளை உறுத்து விழித்துக் கொண்டே சத்தமாக இதழ் பிரித்து சிரித்தான்.

 

அவளுக்கு புரிந்து விட்டது.

 

தன்னை போகப் பொருளாக உடல் இசைக்காக பயன்படுத்த எண்ணுபவனிடம் காதலை எப்படி எதிர் பார்க்க முடியும்?

 

” நீ இன்னும் என்னை புரிஞ்சிகலனு நினைக்கிறேன் யாழிசை. எஸ் எனக்கு இது பிடிக்காத கல்யாணம் தான் பட் எப்போ உன்னை கிஸ் பண்ணேனோ அப்போல இருந்து நான் நானா இல்ல ஐ திங்க், ஐ நீட் யூ. அதுக்காக நான் உன்னை லவ் பண்ணுவேன்னு எல்லாம் தேவையில்லாம கற்பனையை வளர்த்துக்காத. உன்ன என் உணர்வுகளுக்கு வடிகாலா தான் பார்க்குறேன் தட்ஸ் ஆல்” என்று சொல்லிக் கொண்டே ஷர்ட்டை கழற்றி ஹங்கேரில் போட்டவன் “ஜஸ்ட் லைக் அ பெட் பார்ட்னரா ஹியர் ஆஃப்டர் நீ என் ரூம்லயே ஸ்டே பண்ணிக்கலாம். ஐ டோண்ட் மைண்ட். ” என்று சொல்லிக் கொண்டே குளியலறைக்குள் நுழைந்து விட்டான்.

 

 

அவன் பேச பேச அவள், அவன் மீது வைத்திருந்த காதலின் ஆழம் கொடுத்த உணர்வுகள் யாவும் ஒருமித்து அவளை கொஞ்சம் கொஞ்சமாக சிதைத்துக் கொண்டு இருந்தது.

 

 

இனி அழுது கதறும் நிலையில் அவள் இல்லை.

 

அழுது கதறி அவளின் கண்ணீரும் வற்றி விட்டிருக்க, மூளை மந்தித்த நிலையில் கட்டிலில் தொப்பென அமர்ந்தாள்.

 

 

ஒரு மனிதனுக்கு பழையதெல்லாம் மறந்தாலும் கூட அடிப்படையாக தோன்றும் மனிதாபிமானம் கூடவா இருக்காது?

 

அதுவும் கட்டிய மனைவியிடம் எப்படி இப்படி எல்லாம் நா கூசாமல் பேச முடிகின்றது?

 

 

” ஜிதன்… நான் உங்க பக்கத்துல வந்தால் கூட, என்னை உங்களை நெருங்க விட மாட்டீங்களே அவ்ளோ கண்ணியமா என்கிட்ட நடந்த நீங்க எப்படி இப்பிடி மொத்தமா மாறி நம்ம காதலையும் மறந்து என்னை உயிரோட கொல்லுறீங்க….” என்று இதழ்களுக்குள் மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டே இருந்தவளுக்கு அவனது வார்த்தைகள் அவளது ஆழ் மனதில் வடுவாக படிந்து போனது.

 

ஆக, அவளுக்கு ஒன்று மட்டும் நன்றாக புரிந்து விட்டது.

 

அவன் தன் அனுமதியை கேட்கவில்லை.

 

நான் உன்னை எடுத்துக் கொள்ளத் தான் போகின்றேன் என்று அவனது முடிவை வலுக்கட்டாயமாக திணித்து விட்டு சென்றிருக்கிறான்.

 

தன் உணர்வுகளை நித்தமும், கண்ட நொடி முதல் சிதைக்கத் துணிந்தவனிடம், இதற்கு மேல் பேசிப் புரிய வைக்க என்ன இருக்கிறது?

 

“பெட் பார்ட்னர்…”

 

என்று அவன் கூறிய வார்த்தை அவளின் செவிப்பறையை நீங்காத ரீங்காரமாய் கேட்டுக் கொண்டே இருக்க, தான் இரு செவிகளையும் இரு கரம் உயர்த்தி அழுத்தி பொத்திக் கொண்டாள் பாவை.

 

” நான் உங்க ஒய்ஃப் ஜிதன். ஏன் அப்படி சொன்னிங்க என்னவோ உடம்பெல்லாம் கூசுற போல இருக்கு” என்று பிதற்றிக் கொண்டே ஆதரவற்ற குழந்தை போல கால்களைக் குறுக்கி முழங்காலில் முகத்தை புதைத்துக் கொண்டாள் அவள்.

 

 

எவ்வளவு நேரம் அப்படியே அமர்ந்திருந்தாளோ, குளியலறை கதவு திறக்கும் சத்தம் கேட்டு நிமிர்ந்து அமர்ந்தாள்.

 

 

இடையில் வெண்ணிற டவலுடன் அறைக்குள் வந்தான் அவளவன்.

 

அவளை ஓர் ஆராயும் பார்வை பார்த்துக் கொண்டே, ” ஹவ் அபௌட் டுடே நைட்?” என்று கேட்டே விட்டான்.

 

 

அவளுக்கோ, உடலெல்லாம் தீப்பற்றி எரிவதை போல சூடேறி இறுகி விறைத்தது.

 

அவன் மேல் காதல் இருக்கின்றது என்பதற்காக அவன் கேட்டதும் அவளால் அவனுடன் கூட முடியுமா என்ன?

 

அங்கே தன் காதல் அல்லவா பொய்த்துப் போகும்!

 

எச்சிலைக் கூட்டி விழுங்கிக் கொண்டே சிவப்பேரிய விழிகளுடன் அவனை வெறித்தவள், ” எனக்கு இதுல கொஞ்சம் கூட விருப்பம் இல்ல ஜிதன். நான் உங்களை… ” என்று சொல்ல வந்தவள் சற்று இடைவெளி விட்டு அமைதி காத்தவள் பொறுமையாக வார்த்தைகளை கோர்த்தாள்.

 

“நீங்க எப்போ என் கழுத்துல தாலி கட்டுனீங்களோ அந்த நொடில இருந்து நான் உங்களை காதலிக்க ஆரம்பிச்சிட்டேன்”

 

“ஸ்டாப் இட் யாழிசை” 

 

” நான் சொல்றதை கொஞ்சம் கேளுங்க. என்ன சொன்னிங்க? ஹான், பெட் பார்ட்னரா? உங்களை மட்டுமே காதலிக்கிற உங்க பொண்டாட்டி கிட்ட இப்படி தான் பேசுவீங்களா ஜிதன்? நீங்க மார்னிங் கிஸ் பண்றப்போ நானும் என் சுய உணர்வுல இல்ல… அப்போவே நீங்க என்னை எடுத்திருந்தாலும் உங்க கூட நான்….” என்றவளுக்கு மேலும் பேச வார்த்தைகள் வர மறுத்து தொண்டைக் குழியிலேயே சிக்கிக் கொண்டன.

 

” உன் சில்லி நான்சென்ஸ் டாக்ஸ் எல்லாம் கேட்க ஐ ஹேவ் நோ டைம். என்கூட பிசிகல் ரிலேஷன்ஷிப் வச்சுக்க உனக்கு ஓகேவா இல்லையா?” என்று அழுத்தம் திருத்தமாக கேட்டவனிடம்,

 

” இல்லன்னு சொன்னா என்ன பண்றதா இருக்கீங்க?” என்று கேட்டவளுக்கு இதயமே நின்று விடும் போலிருக்க, இடது மார்பினை நீவி விட்டு கொண்டாள்.

 

அவளை ஆழ்ந்து பார்த்துக் கொண்டே கேலியாக இதழ் வளைத்து புன்னகைத்தவன் ” உன்மேல வந்த பீலிங்ஸ் அஹ் வேற…” என்று அவன் முடிப்பதற்குள் ” எனக்கு டைம் வேணும்… ரெண்டு நாள் டைம் கொடுங்க” என நா தழுதழுக்க சொன்னவளுக்கு தன் காதலை அவனின் மோக உணர்விற்காக விட்டுக் கொடுப்பதை விட வேறு வழியும் தெரியவில்லை.

 

 

👁️ 960 Views
4.9 10 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
⚠️ இத்தளத்தின் உள்ளடக்கங்கள் DMCA
பாதுகாப்பில் உள்ளது. Copy / Screenshot / PDF
உருவாக்குதல் தடை செய்யப்பட்டுள்ளது.