Menu

நொடி – 24

நொடி – 24

 

‘ காதல் காமத்தை சேர்ந்தது அல்ல,

கண்கள் ரசிக்கும் அழகைத் தாண்டி

இதயம் உணரும் உயிரின் மொழியே காதல்! ‘ 

 

 

ஆயிற்று அவள் கேட்ட இரண்டு நாட்களும் முடிந்து விட்டு இருந்தன.

 

இவ்விரண்டு நாட்களும் அவளின் வாசம், அவன் அறையில் தான்.

 

எங்கே தன்னை நெருங்கி விடுவானோ? என்ற பதைபதைப்பில் இருந்தவளுக்கு அதற்கு சந்தர்ப்பமே வழங்காது அவன், அவள் இருக்கும் திசை பக்கமே திரும்பாது இருந்தது அவளுக்கு பெருத்த நிம்மதியே!

 

ஒரு மாதிரி இரண்டு நாட்களை கடந்தாயிற்று ஆனால் இன்று?

 

இரண்டு நாட்கள் தருமாறு அவள் கேட்டு விட்ட போதிலும், அவளுக்கு அவனுடன் உடல் அளவில் மட்டும் மோகத்துடன் இணைவதில் உடன்பாடே இல்லை என்பதில் மனதளவில் திண்ணமாக இருந்தாள்.

 

ஆனால், அவன் வேறு பெண்ணை நாடி விடுவானோ? என்ற அச்சம், அவன் வாய் வார்த்தையாக சொல்லி விட்ட பிறகு தான் அதிகரிக்கத் தொடங்கி இருந்தது.

 

‘ நீங்க இன்னொருதிக்கிட்ட போவேன்னு சொல்லியும் இன்னும் என் மனசு உங்களை வெறுக்கல ஜிதன்…’ என மனதோடு கசப்பாக பேசிக் கொண்டு இருந்தவளுக்கு வெளியில் அவன் வந்து விட்டான் என்பதன் அடையாளமாக வண்டி சத்தம் கேட்டது.

 

மனதின் ஆழத்தில் அவன் வரவை எதிர் பார்த்திருந்தாள் போலும்,

 

தன்னவன் வருகைக்காக விழி மேல் விழி வைத்து காத்திருந்தவள் காரின் சத்தம் கேட்டு வெளியில் ஓடினாள்.

 

காரின் கதவை அறைந்து சாற்றியவன் தன் எதிரே ஒருவள் நிற்கின்றாள் என கிஞ்சித்தும் பொருட்படுத்தாமல் அவளைத் தாண்டி வீட்டுக்குள் நுழைந்தவனிடம் “ஜிதன் எங்க போயிட்டு வர்றீங்க?” என்று கேட்டிருந்தாள்.

 

கேட்கும் போதே அவளின் குரல் கூட தழுதழுத்து விட்டது.

 

அது மட்டுமா என்ன? அவனிடமிருந்து வந்த மதுவின் நெடியில் அவளுக்கோ என்றும் இல்லாது இன்று குமட்டிக் கொண்டு வந்தது.

 

அவளின் கேள்வியில் சட்டென நின்று திரும்பி அவளை எரித்து விடுவது போல அழுத்தமாக பார்த்தவன் பதிலேதும் கூறாது விறுவிறுவென மாடிப் படிகளில் ஏற, அவளுக்கோ உருவமில்லா பந்தொன்று தொண்டையை அடைப்பதைப் போலிருந்தது. 

 

இது எப்போதும் நடப்பது தானே!

 

அவனின் உதாசீனம் அவளுக்கொன்றும் புதிதல்லவே!

 

நாவெனும் சாட்டையால் நெருப்புக் கங்குகளை வாரி இறைக்கும் அவனிடமே! அவளது கேடு கெட்ட காதல் மனமோ மீண்டும் சென்று மண்டியிட்டது.

 

எச்சிலைக் கூட்டி விழுங்கியவள் சற்றும் தாமதிக்காது அவன் பின்னாலேயே ஓடினாள்.

 

வேகமாக வந்தவன் அறையின் முன் நின்று சட்டென பின்னால் திரும்பி பார்க்கவும், அவனைப் பின் தொடர்ந்து வேகமாக ஓடி வந்தவளோ அவன் மீது மோதவும் சரியாக இருக்க, சமநிலையின்றி பின்னோக்கி விழ போனவள் பக்கவாட்டு சுவற்றை பற்றிய படி கால்களை அழுந்த தரையில் ஊன்றி நின்று தன்னை நிதானித்துக் கொண்டாள். 

 

அவளுக்கோ, தான் விழவில்லை என்று உணரவே சில நிமிடங்களை பிடித்திருந்தன.

 

தான் விழ நேரிட்டும் தன்னை அவன் காப்பாற்ற முயலவில்லை என்று உணர்ந்த கணம், சட்டென விழிகளும் கலங்கி விட்டன.

 

தலை வேறு விண்விண்ணென்று வலித்தது.

 

அவனுக்கோ, தான் கேட்டும் அவள் தன்னை நிராகரித்த கோபம் உள்ளே கொழுந்து விட்டு எரிந்து கொண்டு இருக்க, இப்போதைய அவளின் செயலில் அவனின் ஆத்திரம் உச்சத்தை தொட்டிருந்தது.

 

தன்னையே உணர்வற்று வெறித்திருந்தவளை உறுத்து விழித்தவனோ “உனக்கு ஒரு தடவ சொன்னா புரியாதா என்னை ஜிதன்னு அழைக்க வேணாம்னு சொல்லி இருக்கேன் ல?” என்றவனின் எப்போதும் போலான பேச்சில் விரக்தியாக புன்னகைத்தவள் “பட் எனக்கு பிடிச்சிருக்கே… அது உங்க பேர் தானே கூப்பிட்டா என்ன ஜிதன்? என்றாள் அவனை ஆழ்ந்து பார்த்துக் கொண்டே,

 

“ யாழிசை, திஸ் இஸ் யுவர் லிமிட் என்னை மிருகமாக்காத” என எச்சரித்தான்

 

“நான் ஒன்னும் தேர்ட் பெர்சன் இல்ல லிமிட் மெயின்டெய்ன் பண்ண, நான் உங்க பொண்டாட்டி. உங்களை எப்படி வேணாலும் அழைக்கலாம்” 

 

“யூ டாமிட், என கர்ஜித்தவன் யாருக்கு யார்டி பொண்டாட்டி? என் அம்மாவுக்காக பார்க்குறேன் இல்லனா சாவடிச்சிடுவேன்” என்றபடி நொடிப் பொழுதில் அவளின் கழுத்தை பற்றிப் பிடித்திருந்தான்.

 

அவளின் எடுத்தெறிந்த பேச்சில் அவனின் பொறுமை மொத்தமும் காற்றில் பறந்திருந்தது.

 

“என்னடி விட்டா ஓவரா போற? நான் உன்ன படுக்**…..” என சொல்ல வந்தவன் விழிகளை இறுக மூடித் திறந்தான்.

 

விழிகள் இரண்டும் ரத்தமென சிவந்திருக்க அவளை உறுத்து விழித்தவன்” இப்போ நானே சொல்றேன். எனக்கு நீ தேவையே இல்ல கெட் லாஸ்” என்று வார்த்தைகளை கடித்து துப்பினான்.

 

அவன் கழுத்தில் கொடுத்த அழுத்தத்தில் அவ்விடத்தில் வேறெந்த பெண்ணாக இருந்தாலும் கத்தி கதறியிருப்பாள் ஆனால் அவனவளோ, அப்போதும் வலியுடன் புன்னகைத்து கொண்டே ” பட் எனக்கு லைஃப் லாங் நீங்க வேணுமே ஜிதன்“ என்று வார்த்தைகளை திக்கி திணறி கூறியவளின் விழிகளில் தெரிந்த காதலில், அவனோ சட்டென அவளது கழுத்தை இறுக்கிப் பற்றி இருந்த பிடியை விட்டு விட்டான்

 

 

பதட்டமாக திரும்பி விழிகளை சுழல விட்டான். 

 

வலியில் விழிகளை சுருக்கி கழுத்தை வருடிக் கொடுத்த படியே,”அத்த, அம்மா கூட என் வீட்டுக்கு போயிருக்காங்க ” என்றாள் அவனின் அந்த ஒற்றை பார்வை சுழற்சிக்கே, 

 

அடுத்த நொடியே அவளின் கரத்தை பற்றி அறைக்குள் இழுத்துச் சென்று கதவை தாழிட்டு விட்டு அவளை எரித்து விடுவதை போல பார்த்தவன்,

 

இதழ் குவித்து ஊதிக் கொண்டே ஓர் ஆழ்ந்த பெரு மூச்சை விட்டான்.

 

முதல் முறை, ஒரு பெண்ணிடம் வன்மையாக அதுவும் கழுத்தை பற்றி இருக்கின்றான்.

 

அவனுக்கோ, கரங்கள் நடுங்கிக் கொண்டு இருந்தன.

 

எனென்றே தெரியாமல் அவள் மீது பெருகிய கட்டுக்கடங்கா கோபத்தை 

குறைக்க, அறைக்குள்ளேயே குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டே,

 

” இன்னும் நான் என்ன பண்ணா என்னை வெறுத்து விட்டு போவ?… ” என்று கேட்டவனின் ஒவ்வொரு வார்த்தைகளும் அழுத்தமாக வெளிவந்திருந்தன.

 

 

அவனுக்கு கசந்த புன்னகையொன்றை பதிலாக கொடுத்தவள் ” நீங்க, என்னைகிட்ட உணர்ந்த உணர்வை இன்னொருத்தி கிட்ட தீர்த்துப்பேன்னு சொல்லியும் உங்க மேல இருக்க காதல் துளியும் குறையலையே ஜிதன் நான் என்ன பண்ணட்டும்?” என்று கேள்வியாக கேட்டவளுக்கு குரலே உடைந்து விட்டிருந்தது.

 

அடிவயிற்றிலிருந்து இருந்து பொங்கிய கேவலை அடக்கிக் கொண்டு நின்றுந்தாள் பாவை.

 

அவள் கூறியதைக் கேட்டு அவள் விழிகளை ஏறிட்டு பார்க்க கூட முடியாமல் சுவரில் பார்வையை பதித்துக் கொண்டே,

 

“ஆல் ரைட். உன் நான்சென்ஸ் கேள்விக்கு எல்லாம் எனக்கு அன்சர் பண்ண முடியாது. நைட், டின்னர் பார்டி அரேஞ்ச் பண்ணி இருக்கேன். என்கூட நீ வரணும்” என்று கட்டளையாக சொன்னவனோ அவளை மேலிருந்து கீழாக ஒரு பார்வை பார்த்தான்.

 

வீட்டுக்குள் நுழைந்த நொடி முதல் நெருப்பாய் தகித்துக் கொண்டிருந்த அவனது வார்த்தைகளும் செயல்களும், இவ்வளவு நேரமும் ஒன்றுமே நடக்கவில்லை எனும் தோரணையில் மாறியிருக்க, அவள் தான் அதிர்வில் சிலை போல் உறைந்து நின்றிருந்தாள்.

 

அசைவற்று நின்றிருந்தவளின் முகத்தின் முன்னே சொடக்கிட்டு “என்ன பகல் கனவா?” என்றான் புருவத்தை உயர்த்தி,

 

அவளுக்கோ, அனைத்தும் வெறுத்து விட்ட உணர்வு.

 

அவன் கேட்பதற்கு எல்லாம் பதில் கூறக் கூட விரும்பவில்லை.

 

தான் என்ன கூறினாலும் அதற்கு அவன் கூறும் பதில், தனக்கு தான் தீரா வலியைக் கொடுக்கும் அதற்கு அவன் சொல்வதற்கு செவி சாய்க்கலாம் என்ற முடிவுக்கே வந்து விட்டு இருந்தாள் பெண்ணவள்.

 

 

” டைம்?” என்றாள் சுரத்தே இன்றி,

 

” என்ன கோர்ட் வேர்ட்டா?” என்று புருவத்தை உயர்த்த,

 

‘நாம் என்ன ஆதர்ஷ தம்பதிகளா மறை பொருளில் பேச?’ என மனதில் கேள்வி எழுந்தாலும் வெளியில் காட்டிக் கொள்ளாது” என்ன டைம்க்கு ரெடி ஆகணும்?” என்று கேட்டாள் உணர்வற்ற குரலில்,

 

 

” அட் செவன் தர்ட்டி பீ. எம் ரெடியா இரு என்று திரும்பியவனோ, ” ஒகே உன்கிட்ட பார்டி வேயார்ஸ் இருக்கு தானே? இல்லனா, இப்பவே கிளம்பு வாங்கிட்டு வந்திடலாம்” என்றவனை ஓர் அடிப்பட்ட பார்வை பார்த்தவள்,

 

“நிறையவே இருக்கு ஜிதன்” என முயன்று வரவழைத்த குரலில் சொன்னவள் அவனை திரும்பியும் பாராது விறுவிறுவென குளியலறைக்குள் சென்று கதவை தாழிட்டுக் கொண்டாள்.

 

என்னவோ தன்னை அவன் மட்டம் தட்டி பேசுவதை போலவே இருந்தது.

 

அவன் என்னவோ சாதாரணமாக தான் கேட்டான் ஆனால் அவளுக்கு அவனின் அந்த கேள்வியில் தன் சுயம் அடிபட்டு போனதை போல உணர்ந்தாள். 

 

******************

அதே சமயம், மூடியிருந்த குளியலறை கதவை துளைத்தது அவனின் ஊடுருவும் பார்வை.

 

பார்வையில் ஒரு வெறுமை.

 

இன்னுமே அவள் இறுதியாக கேட்ட கேள்வி, சாட்டையால் விளாசி அடித்ததை போல மனதை அரித்துக் கொண்டே இருக்க, அவ் உணர்வை அரவே வெறுத்து போனான்.

 

போட்டிருந்த ஷர்ட்டின் கையை முட்டி வரை மடித்துக் கொண்டே பால்கனியில் போட்டிருந்த நீள்விருக்கையில் அமர்ந்து கொண்டான்.

 

அங்கு அமர்ந்திருந்து பார்த்தாலே குளியலறையிலிருந்து யார் வந்தாலும் போனாலும் நன்றாகவே தெரியும்.

 

கொஞ்சம் கூட தன் பார்வையை மாற்றிக் கொள்ளாது அவள் வரும் வரை அப்படியே நிலை மாறாது அமர்ந்து இருந்தான்.

 

இதே சமயம், அவனின் எண்ணத்தின் நாயகியே குளியலறை கதவை திறந்து கொண்டு கண்ணாடியின் முன் வந்து நின்றாள்.

 

முகம் முழுதும் ரத்தமென சிவந்து கண் மடல்கள் எல்லாம் வீங்கி தடித்திருந்தன.

 

 

பார்த்ததும் அழுது இருக்கின்றாள் என்று புரிந்து விட்டது.

 

“என்னை லவ் பண்ண போறேன்னு சொன்ன எப்போ பண்ண போறதா ஐடியா?” என்றான் கேலியாக,

 

ஆள் உயரக் கண்ணாடியை பார்த்து கொண்டே முகத்திலிருந்த நீர்த் திவலைகளை துடைத்தவள் அவனது பிம்பத்தை கண்ணாடியினூடு ஆழ்ந்து பார்த்தவாறே “உங்களை வெறுக்கலனு சொன்னேனே சோ அப்போவே புரியலையா ஜிதன்? இல்ல புரியாத போலவே நடிக்கிறீங்களா?” என்று கேட்டாளே பார்க்கலாம்.

 

அவன் கேட்ட கேள்விக்கு, கேள்வியாகவே தன் பதிலைக் கூறி இருந்தாள் பெண்ணவள்.

 

என்ன முயன்றும் தன் உணர்வுகளை கட்டுக்குள் வைக்க முடியாது, அவன் முன்னால் தன் கட்டுப்பாடுகளை இழந்து விடுகின்றாளே!

 

சற்று முன் தான் அவனுடன் அளவுக்கு மிஞ்சிய சொல்லாடல்கள் வைத்துக் கொள்ள கூடாது என்று எண்ணி இருந்தாள் ஆனால் அவனது அருகாமையும் கூர் ஈட்டியாக இதயத்தை துளைக்கும் கேள்விகளும் அவனுக்கு தன்னை உணர்த்தி விட வேண்டும் என்ற எண்ணத்தை விதைத்து விடுகின்றனவே!

 

அவனோ, அவளின் இத்தகைய பதிலை அவன் எதிர் பார்க்கவே இல்லை. சட்டென அவனது உடல் மொழியில் ஒரு நிமிட தடுமாற்றம்.

 

அதை அவள் தான் கவனிக்க தவறியிருந்தாள். கவனித்திருந்தால் அவளுக்கு புத்தியில் உரைக்க வேண்டியவைகள் எல்லாம் இப்போதே தெரிந்திருக்குமோ என்னவோ!

 

அவள் சுதாரிப்பதற்குள் சடுதியில்

தன்னை மீட்டுக் கொண்டவன் கண்ணாடியில் தெரிந்த அவளின் பிம்பத்தை ஆழ்ந்து நோக்கிய படியே எழுந்து அடிமேல் அடி வைத்து அவளை நெருங்கியிருந்தான்.

 

 

👁️ 898 Views
5 10 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
⚠️ இத்தளத்தின் உள்ளடக்கங்கள் DMCA
பாதுகாப்பில் உள்ளது. Copy / Screenshot / PDF
உருவாக்குதல் தடை செய்யப்பட்டுள்ளது.