Menu

நொடி – 25

ஆம், அவளை நெருங்கி விட்டான்.

ஆனால்,

அவள், அவன் புறம் திரும்பவில்லை.

மாறாக, கண்ணாடியில் தெரியும் அவன் விம்பத்தில் தான் அவளது பார்வை குவிந்தது.

  ” யூ ஆர் சம்திங் டிஃப்ரென்ட். உன்கிட்ட வந்தாலே என்னவோ பண்ணுது யாழ்” என்றான் மிக மிக மெல்லிய குரலில்,

குரலில் இழையோடிய அந்த மென்மை அவள் இதுவரை அவனிடம் உணராத ஒன்று.

ஒருவரின் ஒட்டுமொத்த உணர்வுகளையும் விழிகள் காட்டிக் கொடுத்து விடும் அல்லவா!

அவனிடம் மட்டுமே விடை தேடும் அவளது தீர்க்கமான பார்வையோ, சட்டென அவனது விழிகளில் நிலைத்து நின்றது.

என்ன விதமான பார்வை இது?

ஒற்றை பார்வை ஆளை விழுங்குமா என்ன?

அவளை மீள முடியாத  பிரளயச் சுழலுக்குள்  இழுத்தது அவனது கரை காணா காதலின் பேராழி.

அவள் எஞ்ஞான்றும் தன்னை ஒப்படைக்க துடித்துடிக் கொண்டிருக்கும் அக் காதல் பார்வையின் வீச்சில் அவளது விழிகள் வியப்பில் பெரிதாக விரிந்து கொண்ட அதே நொடி,

தன் வசம் இழந்த அவளது இதழ்களோ, மெல்ல பிரிந்து உணர்ச்சி தத்தளிப்போடு “ஜிதன்…” என உச்சரித்திருந்தன.

” வாட்?” என்று மோகமாக கேட்டவனது  விரல்களோ, பெண்ணவளது பின்னங் கழுத்தில்  வருடங்களை ஆரம்பித்து இருக்க, அவளுக்கோ உச்சி முதல் உள்ளங்கால் வரை கூசி சிலிர்த்தது.


“ஜிதன்…. நா…நான் ரெடி ஆகணும்” என்றவளது குரல் என்ன முயன்றும் முடியாது முனகலகவே வெளிவர,

அவளது மெல்லிய முனகலில் அவனது உணர்வுகள் யாவும் கட்டவிழ்ந்து  வெடிக்க காத்திருந்த அதே நேரம், அவனது அலைபேசி சத்தமாக ஒலித்து விட்டிருந்தது.

அவ்வளவு தான்.

இத்தனை நேரமாக அவளருகில் தன்னை மறந்து உருகி குழைந்து காதலை வெளிக்காட்டிய அவனது வதனம் சடுதியில் மாறிப் போக,

விழிகளை இறுக மூடித் திறந்து இதழ் குவித்து ஊதிக் கொண்டே சட்டென்று அவளை விட்டு விலகி நின்றவனோ,

“சாரி..  யூ கேரி ஆன்” என்று அவளிடம் சொல்லி விட்டு அழைப்பை ஏற்று காதில் வைத்துக் கொண்டே பால்கனி நோக்கி சென்றிருந்தான்.

சற்று நேரத்திற்கு முன் அவன் விழிகளில் தொக்கி நின்ற அக் கரை காணா காதல் பொய்யல்லவே!

இப்போது ஆனால் அவனின் விழிகளில் இருந்தது என்ன?

நொடியில் அவனது காதல் பார்வை அறுபட்டு நிச்சலனமாக மாறியதுடன், தன்னை ஓர் அண்ணிய பார்வை பார்த்து ‘நீ செய்து கொண்டு இருந்த வேலையை பார்’ என எவ்வளவு சாதாரணமாக சொல்லி விட்டு போகின்றான்?

இதில் மன்னிப்பு வேறு! நினைக்கவே மனம் குமுறியது.

எவ்வித சலனமும் இன்றி வெகு வெகு சாதாரணமாக அலைபேசியில் உரையாடிய படி நகர்ந்தவனையே ஒருவித அதிர்வுடன் வெறித்துக் கொண்டிருந்தாள் பெண்.

போகும் அவனின் முதுகை துளைத்தது அவளின் பார்வை.

எவ்வளவு நேரம் சிலை போல அப்படியே நிலைக் குத்திய பார்வையுடன் நின்று இருந்தாளோ,

அவன் வரும் அரவம் உணர்ந்து, சட்டென தன்னை மீட்டுக் கொண்டவள் விருட்டென்று ஆடை மாற்றும் அறைக்குள் நுழைந்திருந்தாள்.

நடையில் அத்தனை வேகம் அவளிடம்,


அதே நேரம், தன்னைக் கண்டு திடுக்கிட்டு விழித்து விட்டு சென்றவளை அவனும் கவனியாமல் இல்லை.

கண்டுகொண்டான் அவன்.

அவனுக்கோ, சற்று முன்னர் தனதருகாமையில் மெய் மறந்து தன் கை சிறைக்குள் கட்டுண்டு நின்றவள், இப்போது தன்னை கண்ட மாத்திரத்திலேயே ஏதோ பேய் துரத்துவது போல ஓடி ஒளிந்து கொண்டதும் யாரோ இதயத்தை ஊசியால் குத்தும் உணர்வு.

மனதில் என்னவோ ஒருவித இனம்புரியா தவிப்பு.

இதழ் குவித்து ஊதிக் கொண்டே ஷர்ட்டை கழற்றி ஹங்கேரில் போட்டவன்  குளியலறைக்குள் நுழைந்த மறு வினாடியே அவளோ, உடையை மாற்றிக் கொண்டு உடை மாற்றும் அறையிலிருந்து வெளியே வந்திருந்தாள்.

அறையே புயலடித்து ஓய்ந்தாற் போல நிசப்தமாக இருந்தது.

ஒரு பெரு மூச்சுடன் மூடியிருந்த குளியலறை கதவை வெறித்து பார்த்து விட்டு ஆளுயரைக் கண்ணாடியின் முன் சென்று நின்று தன் பிம்பத்தை முழுவதுமாக பார்த்தாள்.


வெண்ணிற அனார்கலி சுடிதாரில் சிறு சிறு செம்மஞ்சள் நிற ககல் வேலைப்பாடுகள் நிறைந்த அவ் உயர் தர வடிவமையில் மின்னிக் கொண்டிருந்த, தான் அணிந்திருந்த ஆடையை பார்த்தாள்.


முதல் முதலாக அவளின் ஜிதன் அவளுக்காக வாங்கி கொடுத்த பரிசு.

அவன் இப் பரிசை உடைப் பெட்டியில் தனக்கே தெரியாமல் மறைத்து வைத்ததும் பின், லண்டன் சென்ற பிறகே தான் அதை அறிந்து மகிழ்ந்து ஆர்ப்பரித்து அவனை அப்போதே பார்க்க வேண்டும் என்று துடியாய் துடித்த நிகழ்வுகளும் ஒன்றன் பின் ஒன்றாக அநியாயத்துக்கு ஞாபகத்திற்கு வந்து தொலைத்தன.

ஆனால், அன்று அவள் இருந்த மனநிலை என்ன? இப்போது அவள் இருக்கும் மனநிலை என்ன?

அழுகை தொண்டையை அடைக்க, எச்சிலைக் கூட்டி விழுங்கிக் கொண்டே    காதணிகளை எடுத்து அணிய ஆரம்பித்து விட்டாள்.

எங்கேயும் செல்ல பிடிக்கவே இல்லை.

அவளை தனியாக விட்டாள் போதும் போல இருந்தது.

திருமணம் ஆன பின் முதல் முறையாக அவனாக வெளியில் செல்ல அழைக்கிறான் மறுக்க முடியவில்லை.

அவனுடன் வெளியில் செல்ல ஆசை தான் ஆனால் இப்போதிருக்கும் அவளின் மனநிலை, என்னவோ ஓர் ஒவ்வாமையை கொடுத்திருக்க,

மனதோ, ‘போகாதே’ என்று உள்ளே எச்சரித்துக் கொண்டு இருந்தது.

கரங்கள் தன் பாட்டில் வதனத்தை அலங்கரித்துக் கொண்டு இருந்தாலும் அவளின் சிந்தை இங்கிருக்கவில்லை.

பந்தய குதிரையை போல தறிகெட்டு ஓடும் சிந்தையின் விளைவால் அவள், அவன் தன் பின்னால் வந்து நிற்பதைக் கூட முழுதாக உணர முடியாத அளவுக்கு  சுற்றம் மறந்திருந்தாள்.

அவளது பார்வையோ அவள் போட்டிருந்த உடையிலும், கரங்களோ அதன் போக்கில் துப்பட்டாவை சரி செய்த படி இருக்க,

அவன், அவளின் சுயம் மறந்த இந்நிலையை பார்த்து அதிர்ந்து நின்றது என்னவோ ஒரு நொடி தான்.

அடுத்த கணமே “யாழ்…” என சத்தமாக அழைத்தவனது குரலில் அத்தனை அழுத்தம்.

அவளுக்கோ, உடல் தூக்கி வாரிப் போட்டது.

அவளின் வெளிறிய தோற்றத்தை கண்டு தன்னை நிதானித்துக் கொண்டவனோ, ” ஹே கூல் ஏன் டென்ஷன் ஆகுற… ரிலாக்ஸ்”

அந்த குரலில் தான் எவ்வளவு மென்மை.

“நான் ரெடி ஆகிட்டேன். கிளம்பலாமா?” என்றாள் உணர்வற்ற குரலில்,

“ம்ம்… ஹால்ல வெயிட் பண்ணு வரேன்”  என்று சொல்லிக் கொண்டே அவளை ஆழ்ந்து பார்த்த படியே நெருங்கினான் அவன்.

பின்னால் சுவரோடு கண்ணாடி இருக்க, அவளுக்கோ பின்னோக்கி நகரக் கூட முடியாத நிலை தான்.

“என்ன புதுசா விலகி போற  பிடிக்கலையா?”  என்று கேட்டவன் குரல் மென்மையாக ஒலித்தாலும் அவனது முகம் என்னவோ இறுக்கத்தை தான் தத்தெடுத்து இருந்தது.

அதிலேயே உள்ளே திடுக்கிட்டு போனாள் பெண்ணவள்.

தன்னால் தாங்கிக் கொள்ள முடியாத எதுவும் சொல்லி நொந்து கிடக்கும் மனதை மீண்டும் ரணப்படுத்தி விடுவானோ? என்று ஐயம் கொண்டாள்.

ஆனால் அவனோ, அவளை உச்சி முதல் உள்ளங்கால் வரை தன் ஹேசல் விழிகளில் வஞ்சனை இன்றி ரசித்துக் கொண்டே அவளது வலப் புற காதணியில் சிறைபட்டிருந்த மூடிக் கற்றையை மிக மிக மென்மையாக காதுக்கு பின்னால் எடுத்து ஒதுக்கி விட்டான்.


அவளுக்கோ, அவனது செயலும் அருகாமையும் ஒருவித அவஸ்தையை கொடுத்தது.

” நான் கேட்டதுக்கு இன்னும் ஆன்சர் சொல்லவே இல்ல..” என்று ஒற்றை புருவத்தை உயர்த்தியவனை ஒருவித அச்சத்துடன் ஏறிட்டவள் “பி..பிடிச்சிருக்கு” என்றாள் திக்கி திணறி,

“ம்ம்… பிடிக்கணும்…. பிடிச்சே ஆகணும்” என்றவனின் அழுத்தமான குரலில், இழையோடியது  என்ன என்று அவளுக்கு கொஞ்சம் கூட பிரித்தறிய முடியவில்லை.

********************
இதே சமயம், பார்ட்டி ஏற்பாடு செய்திருந்த ஹோட்டலோ மிகுந்த ஆரவாரமும் கலகலப்புமாக அக் காரிருளிலும் ஜொலித்துக் கொண்டு இருந்தது.

பின்ன அதற்காகவென பணத்தை வாரி இறைத்திருந்தான் அவளவன்.

எங்கும் எதிலும் ஆடம்பரம் நிரம்ப வழிந்துக் கொண்டிருந்தது.

அது மட்டுமா என்ன?

அங்கேயே சற்று உள் புறமாகவே
உயர்தர கேளிக்கை விடுதி வேறு அமைந்திருக்க, இனி கேட்கவும் வேண்டுமா என்ன?

மேற்கத்தைய இசை நாலாபுறமும் எதிரொலிக்க, மிதமான நீல நிறத்துடன் கூடிய ஊதா நிற விளக்குகளின் ஒளி வெள்ளம் சூழ்ந்த மேடையில் உடலை ஒட்டிய ஆடையில் அங்க வனப்புகள் தெரியும் வண்ணம் நளினமாக உடல் வளைத்து ஆடிக் கொண்டு இருந்தாள் லியா.

தொடரும்…….

 

👁️ 652 Views
5 8 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
⚠️ இத்தளத்தின் உள்ளடக்கங்கள் DMCA
பாதுகாப்பில் உள்ளது. Copy / Screenshot / PDF
உருவாக்குதல் தடை செய்யப்பட்டுள்ளது.