Menu

நொடி – 29

நொடி – 29

 

செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டு ஆழ்ந்த உறக்கத்தின் பிடியில் படுத்திருந்தவளை தான் பார்த்திருந்தான் அவன். 

 

மாரடைப்பாம் அவளுக்கு, 

 

மருத்துவர் அவளின் நிலையைக் ஒன்வொன்றாக கூறக் கூற, அவனால் தாங்கிக் கொள்ள முடியாத அளவில் நெஞ்சம் விம்மித் தவித்தது.

 

இதயத்தை அழுத்தி பிசையும் வலியை விட, இறுதியாக அவள் தன்னைப் பார்த்த அந்த பார்வை.

 

அப்பப்பா என்ன பார்வை அது?

 

ஒற்றைப் பார்வை உயிரையே ஊடுருவி உருக்குலைத்து விடுமா என்ன? 

 

 

இதயம் துடித்துக் கொண்டிருக்கும் ஒவ்வொரு மணித்துளியும் மரணத்திலும் கொடிய வேதனையை அனுபவித்துக் கொண்டிருந்தான்.

 

அந்த அளவுக்கா அவனின் இறப்பை அவளுக்கு தாங்கிக் கொள்ள முடியாது போனது?

 

நினைக்கவே மனம் அழுந்தியது.

 

 

அவளது கலங்கிய தோற்றமே நினைவலைகளில் தோன்றி கொஞ்சம் கொஞ்சமாக தன் மனநிலையை முற்றிலுமாக குழைத்துக் கொண்டிருப்பதை நன்றாகவே உணர்ந்திருந்தான்.

 

அவரசர சிகிச்சை பிரிவில் போடப்பட்டிருந்த இருக்கையில் அப்படியே நிலைகுலைந்து போய் அமர்ந்து விட்டான். 

 

கசங்கிய உடையும் கலைந்த கேசமுமாக இருந்தவனை யார் பார்த்தாலும் பரிதாபமாக பார்க்கும் தோற்றத்தில் தான் இருந்தான்.

 

ஆனால், அங்கோ நீண்ட நேரமாக அவன் எதிரிலேயே அவனை வெறித்த படி நின்றிருந்த அந்த நெடியவனுக்கு இப்போதே அவனை கொன்று விடும் வேகம் பிறந்தது.

 

” இன்னும் எதுக்கு இங்க இருந்து சீன் போட்டுட்டு இருக்க? யூ மே லீவ் நவ்” என்ற அழுத்தமான குரலில் தன் எதிரே நின்றவனை ஏறிட்டு பார்த்தான்.

 

விழிகள் இரண்டும் இரத்தமென சிவந்திருக்க, ” அவளுக்கு பப் ல என்னாச்சு ?” என்று வார்த்தைகள் திணற கேட்டவனின் கலங்கிய குரல் எதிரே நின்றவனை அசைக்க வில்லை.

 

குறைந்தது அவனைக் கன்னம் கன்னமாக அரைய துடித்த தன் எண்ணத்தை சுற்றம் உணர்ந்து அடக்கிக் கொண்டவனோ, ” தட்ஸ் நன் ஆஃப் யூர் பிஸ்னஸ்” என்றான் இறுகிய குரலில்…

 

“சார்லஸ் ப்ளீஸ்” என்றான் இயலாமையுடன்…

 

விழிகளை இறுக மூடித் திறந்து இதழ் குவித்து ஊதிக் கொண்டே, ” எப்படி உன்னால எல்லாம் தெரிஞ்ச பிறகும் அவகிட்ட ரூட் ஆஹ் பிஹேவ் பண்ண முடிஞ்சது?” 

 

அவனின் தோரணையே அவனுக்கு அனைத்தையும் தன் அன்னை கூறி விட்டார் என தெரிந்து போயிற்று!

 

 

தான் இத்தனை மருகி தவிக்க அவர் தானே காரணம். ஏனோ கோபத்திற்கு பதிலாக ஒரு வித வெறுமையை உணர்ந்தான்.

 

 

கூர் அம்புகளைப் போல தன்னை நோக்கி பாயும் கேள்விகளுக்கு அவன் என்ன பதில் கூறுவான்?

 

அவளின் காதல் தனக்கு மட்டுமே வேண்டும் என்று நினைத்தவனுக்கு, அவளின் காதல் தான் அல்ல அதற்கு சொந்தமானவன் வேறொருவன் என்ற நிஜம், அவளை நெருங்க வேண்டும் என்று நினைக்கும் போதெல்லாம் பின்னந்தலையை சம்மட்டியால் அடிப்பதைப் போல் அல்லவா உரைக்கும்.

 

இதற்கிடையில் அவளை விலகவும் முடியாமல் நெருங்கும் முடியாமல் தீக்குள் இட்ட புழு போல ஒவ்வொரு முறையும் தனக்குள்ளேயே மருகி கொண்டல்லவா இருந்தான்.

 

” ஐ லவ் ஹேர்.. அவ என்னால கஷ்டப்பட கூடாதுன்னு என்னைவிட்டு விலகி போய்டுவானு நினைச்சு…” 

 

“வாவ் ஆர் யூ கிட்டிங்? அதுவும் நீ யாழிசையை லவ் பண்ணியா என்று வலியோடு புன்னகை சிந்தியவன் அப்போ ஏன்டா அவளை ஹர்ட் பண்ற போல நடந்துகிட்ட?” என்று பற்களுக்கிடைகிடையில் வார்த்தைகளை கடித்து துப்பினான் சார்லஸ்.

 

“அவ லவ் பண்றது இந்த முகத்தை என்று தன் முகத்தை சுட்டிக் காட்டியவன் என்… என்னை இல்ல” என்றவன் குரல் ஈனமாக ஒலித்தது.

 

அவனையே உணர்வற்று பார்த்திருந்தவன் தொண்டைக் குழி ஏறி இறங்கியது.

 

யாழிசையின் ஆழமான காதல் பற்றி முற்றும் முழுதாக அவள் சொல்லக் கேட்டு உணர்ந்தவன் ஆயிற்றே!

 

அவளின் காதலை அடைய, இவன் இனி என்ன செய்யப் போகிறான்? என்ன செய்து அவளை மீட்க போகின்றான்? அவனால் எதுவும் கணிக்க முடியவில்லை.

 

“ஓஹோ தென் , அவ அந்த முகத்துக்கு சொந்தக்காரனை லவ் பண்றானு உன் ஈகோ கிளாஷ் ஆகி அவளை ஹர்ட் பண்ணிருக்க ரைட்?” என்றவனின் கேள்வியில் அமைதியாக நின்றிருந்தான் அவன்.

 

உண்மை அது தானே. மறுத்து எதுவும் சொல்ல முயலவில்லை.

 

விழிகளை மூடித் திறந்து ஒரு பெரு மூச்சுடன் ” உன்ன பார்க்க பார்க்க கொல்லனும் போல வெறியே வருது பட் நான் அதை பண்ண மாட்டேன்” என்று அவனை ஆழ்ந்து பார்த்தவனோ, கட்டுக்கடங்காமல் பெருகிய சினத்தை கடினப்பட்டு கட்டுப்படுத்திக் கொண்டவன் “அவகிட்ட ஓப்பனா சொல்லிடு…. எல்லாமே” என்றான் எச்சரிக்கும் தொனியில்…

 

” ம்ம் ” என்றவன் குரல் உள்ளடங்கி ஒலிக்க,

 

” யூ ஹேவ் நோ சான்ஸ். நீ எல்லாமே சொல்லி தான் ஆகணும் இன்க்ளுட் உன் ரியல் நேம் ” என்றவனை ஏறிட்டு கசப்பாக புன்னகை சிந்தினான்.

 

 

 

அவனுக்கே, ‘அவளின் ஜிதன்’ என்று உதிர்க்கும் சாதாரண வார்த்தைகளைக் கூட உள்வாங்கிக் கொள்ள முடியாது மூச்சு முட்டியது என்றால் அவள் நேசிக்கும் இந்த முகத்தை வைத்துக் கொண்டு அவளின் முன்பே நான் நடந்துக் கொண்ட விதம்?

 

எப்படியெல்லாம் தவித்திருப்பாள் அதுவும் இன்னொரு பெண்ணை அவள் முன்னாலேயே…” மேற்கொண்டு எதையும் சிந்திக்க பயந்து போனான்.

 

அவளை பற்றியே சிந்திக்கக் கூடாது என்று தன் மனதிற்கு அறிவுத்திக் கொண்டே அவளை பற்றியே தான் நினைத்து நினைத்து மருகிப் போனான்.

 

எதை அரவே நினைவில் நிறுத்தக் கூடாது என்று எண்ணுகின்றோமோ, அதேயே மறக்க வேண்டுமென நினைத்து நினைத்து மறக்க முடியாமல் வேதனைப்படுவது தானே நிதர்சனம்.

 

என்ன செய்து அவளின் மனநிலையை மாற்றப் போகின்றான் என அவனுக்கே தெரியவில்லை.

 

 

 

முகத்தை அழுந்த துடைத்துக் கொண்டு சார்லஸை ஏறிட்டவன் ” தேங்க்ஸ்” என்றான்.

 

அவனோ இதழ் பிரித்து கேலியாக புன்னகைத்தவன் ” ஃபோர் வாட்?”

 

“ அவளை என்கிட்டே கொண்டு வந்து சேர்த்ததுக்கு”

 

“உண்மை முன்னாடியே தெரிஞ்சிருந்தா அந்த தப்பை பண்ணியிருக்க மாட்டேன்” என்று சொன்னவனை வெறித்தவனுக்கு எப்போதும் போல எடுத்தெறிந்த வார்த்தைகளுக்கு முட்டிக் கொண்டு வரும் ஆத்திரம் வரவில்லை மாறாக நெஞ்சம் தான் ரணப்பட்டுப் போனது..  

 

 

எச்சிலைக் கூட்டி விழுங்கிக் கொண்டே ” தப்பு பண்ணிட்டேன் சார்லஸ். ஐ வான்ட் ஹேர் பேக்… நான் அவகிட்ட எப்படியாவது பேசி புரிய வச்சுடுவேன்” என்றவனிடம்,

 

 

“வாட்?” என்று இதழ் பிரித்து மெலிதாக புன்னகைத்துக் கொண்டே, “அவளை பத்தி ஐ மீன் அவளோட காதலைப் பத்தி நீ என்ன நினைச்சிட்டு இருக்க?” என்று அவன் கேட்ட கேள்வியில் விழிகளில் மொத்த வலியையும் தேக்கி அவனை பார்த்தவனுக்கு தான் அவளிடம் ஒழுங்காக நடந்து கொண்டு இருக்கலாமோ? என்று ஆயிரமாவது முறையாக எண்ணி உள்ளூர மரித்து போனான்.

 

” ஷீ லவ்ஸ் ஜிதன். ஜிதன் ஒன்லி. பார்த்த தானே அவளுக்கு அட்டாக் வர்ற அளவுக்கு ஜிதனோட இழப்பை அவளால தாங்கிக்க முடியல. இப்பவும் சொல்றேன் இனியும் எல்லாரும் சேர்ந்து அவளை ஹர்ட் பண்ண வேண்டாம். கொஞ்சம் ஸ்பேஸ் கொடுங்க. மெய்ன்னா நீ அவ முன்னால போய் நிற்காத” என்று அறிவுறுத்தினான்.

 

” நோ.. என்னால முடியாது நான் இல்லாம அவ எப்படி…? அவ.. அவளோட ஜி..ஜிதன் நான் தான்” என்றான் குரல் அடைக்க,

 

அவ்வளவு தான் சார்லஸின் பொறுமை மொத்தமும் காற்றில் பறந்தது.

 

இதழ் குவித்து ஊதிக் கொண்டே” நீ பேஸ் டிரான்ஸ்பிளான்ட் பண்ணிட்டா மட்டும், நீ அவளோட ஜிதன் ஆகிட முடியுமா?” என்று நக்கலாக கேட்டவனின் ஷர்ட்டின் காலரை எட்டி பற்றியவன் ” ஷீ இஸ் மைன்.. அவ எவனையோ லவ் பண்ணி இருக்கலாம் பட் இப்போ யாழிசை என் பொண்டாட்டி சோ அவளை, நீ இல்ல ஏன் அவளே நினைச்சாலும் என்னை விட்டு விலகி போக விட மாட்டேன். மைண்ட் இட்” என்று கர்ஜித்தான் விழிகளில் கனல் தெறிக்க,

தன் ஷர்ட்டை பற்றியிருந்த அவனது கரத்தை மெல்ல விலக்கி விட்ட சார்லஸ், “பெஸ்ட் ஆஃப் லக்” என்றான் கேலியாக,

“தேங்க்ஸ் படி(buddy)” என்று மெலிதாக புன்னகைத்தவனோ, அவன் விழிகளை நேருக்கு நேராக எதிர் கொண்டு “அவளை எப்படி என்னை லவ் பண்ண வைக்கணும்னு எனக்கு தெரியும் ” என அமர்த்தலாக சொன்னவன் இருக்கையில் தெனாவட்டாக சாய்ந்து அமர்ந்தான்.

அந்தோ பரிதாபம், அவனுள் திடீரென்று முளைத்த சிறுதுளி நம்பிக்கையையும் சற்று நேரத்தில் காணாமல் போய்விடும் என அறியாது போனான் ஆணவன்.

சலிப்பாக கேசத்தைக் கோதிக் கொண்ட சார்லஸ் ” இதோ பார்! அவ ஸ்டில் வீக்கா தான் இருப்பா, இப்பவே அவசரப்பட்டு அவளை டென்ஷன் படுத்துற போல எதுவும் பேச வேண்டாம். ஆஃப்டர் ஒன் வீக், எல்லாமே அவகிட்ட சொல்லிடு” என்றவன் தொடர்ந்து ” அவ கான்சியஸ் ஆனதும் நான் இங்கிருந்தா உங்க எல்லார் கிட்ட இருந்தும் விலகி என்கூட வர ட்ரை பண்ணுவா…” என்று அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே விழுக்கென்று நிமிர்ந்தான்.

ஒரு ஊகத்தில் சொன்ன சொல்லையே அவனால் தாங்க முடியவில்லை. இதில் அவளின் எதிர்வினையை தாங்குவானா? என்ற கேள்வி மனதில் எழுந்தாலும் முகத்தில் எதையும் காட்டிக் கொள்ளாது குரலை செருமிக் கொண்டே “ சோ நான் இப்போ கிளம்புறேன். அவ ரெகவர் ஆனதும் வந்து பார்த்துக்கிறேன் என்றவன் இருக்கையில் கிடந்த கோட்டை கரத்தில் எடுத்துக் கொண்டே “உன்ன நம்பி விட்டுட்டு போறேன் டேக் கேர்…” என்று ஆழ்ந்த குரலில் சொன்னவனோ அடுத்த கணமே அங்கிருந்து புறப்பட்டு இருந்தான்.

 

 

இதே நேரம், அவசர சிகிச்சை பிரிவொடு ஒட்டிய அறையில் அனைத்தையும் பறிகொடுத்தவர் போல அமர்ந்திருந்தார் வாசுகி.

கண்ணீரோ நீயில்லாமல் கன்னங்களை ஊடறுத்து வழிந்துக் கொண்டிருக்க, தன் மகளின் இந்த மரணப் போராட்டத்திற்கும் தானே நேரடிக் காரணமாக இருந்துவிட்டததை எண்ணி எண்ணி மனதிலேயே வெந்துக் கொண்டு இருந்தார்.

“ அவகிட்ட எல்லாமே மெல்ல மெல்ல சொல்லி இருக்கலாம் ஷீலா. நான் தப்பு பண்ணிட்டேன் ஐயோஓஓஓ…. “ என்று கதறித் துடித்தவரை தோளோடு அணைத்துக் கொண்டு கண்ணீர் உதிர்த்தார் ஷீலா.

 “அவ…அவளுக்கு மட்டும் ஏ…ஏதாச்சும் ஆச்சுன்னா நான் உயிரோடவே இருக்க மாட்டேன்டி…” என்று வாசுகி நெஞ்சிலடித்துக் கொண்டு கதற, ஷீலாவோ தன் நண்பியை தேற்ற முடியாது தோற்று தான் போனார். கூடவே, தானும் அவளின் இந்த நிலைக்கு காரணம் என்ற உணர்வு ஷீலாவையும் உள்ளூரச் சுட்டெரித்துக் கொண்டிருந்தது.

யாழிசையின் துடிப்பை மேற்பார்வையிட்க்குக் கொண்டிருந்த செவிலிய பெண், மூடப்பட்ட திரைக்கு பின்னாலிருந்து கேட்ட அழு குரலில் எரிச்சலுடன் சென்று திரையை விலக்கி “ இங்க சத்தம் போடாதீங்க மா. பேஷன்ட் இருக்காங்கல” என எச்சரிக்க, வாசுகியின் கண்ணீரும் கேவலும் மேலும் நிற்காது அதிகரித்தது..

ஒரு பெரு மூச்சுடன் உடனடியாக கதவைத் தள்ளித் திறந்துக் கொண்டு வெளியே வந்த செவிலிய பெண்ணோ , “ சார். பேஷன்ட்டோட அம்மா சொல்ல சொல்ல கேட்காம டிஸ்டர்ப் பண்றபோல பிஹேவ் பண்றாங்க” என்றிட,  

 

 

எங்கிருந்து தான் அத்தனை வேகம் பிறந்ததோ, இருக்கையிலிருந்து ஆவேசமாக எழுந்தவன், நேராக வாசுகியும் ஷீலாவும் அமர்ந்திருந்த அந்தச் சிறிய அறையை அறைக்குள் விரைந்தான். 

சீறிப் பாய்ந்துவிட துடிக்கும் வேங்கையென வந்து நின்றவனை ஏறிட்ட ஷீலா, “ கண்ணா!” என்று விம்ம,

“ரெண்டு பெரும் இந்த ரூமை விட்டு வெளில போறீங்களா இல்லையா?” என்று அழுத்தமாக அதே நேரம் அமைதியாக வார்த்தைகளை கடித்துத் துப்பியவனை பார்த்து மிரண்டு தான் போனார் ஷீலா.

அதே நேரம் வாசுகியோ , “ஜி… ஜிதன்…” என கண்ணீருடன் இதழ்கள் நடுங்க வார்த்தைகளைத் தேடித் தவிக்க,  

“ஷட்அப்…” என்று அந்த அறையே அதிர ஆத்திரமாக கர்ஜித்தவனின் தோரணையில், வாசுகி அப்படியே உறைந்துபோய் நிற்க, அடுத்ததாக பேச எத்தனித்த ஷீலாவின் வார்த்தைகளும் வர மறுத்து அப்படியே தொண்டைக் குழிக்குள்ளேயே சிக்கிக் கொண்டன. 

 

 

“ ஐ செட், கெட் அவுட்” என்றான் மீண்டும் சீற்றத்துடன்,

அவனுக்கு கோபம் வந்தால் எப்படி நடந்து கொள்வான் என்று அவனைப் பெற்ற அன்னைக்கு தெரியாதா என்ன? 

ஷீலாவோ, விரைந்து வாசுகியின் கரங்களைப் பற்றி இழுக்காத குறையாக வெளியே அழைத்துச் சென்றார்.

போகும் அவர்களை ஒரு பார்வை பார்த்து விட்டு பக்கவாட்டாக திரும்பியவன் பார்வை, உயிரற்ற பாவை போல கட்டிலில் சலனமற்று கிடந்தவளின் மேல் படிந்தது.

அடி மேல் அடி வைத்து நகர மறுத்த கால்களை நகர்த்தி தன்னவளை நெருங்கினான்.

முற்றும் முழுதாக மருத்துவ உபகரணங்கள் சூழ, சீரற்ற சுவாசத்துடன் மரணத்துடன் போராடிக் கொண்டிருந்தவளை வெறித்தவன் விழிகளில் கண்ணீர்.

காரணமற்ற பயப்பந்தொன்று நெஞ்சைக் கவ்விக் பிடிப்பதை போலொரு உணர்வு.

அங்கேயே போடப்பட்டிருந்த இருக்கையில் தொப்பென்று அமர்ந்தான்.

 

வலக் கரம் உயர்த்தி குளிர்ந்து போயிருந்த அவளது விரல்களைத் தன் சூடான உள்ளங்கைக்குள் பொத்திக் கொண்டவன், “ வலிக்குது பேபிடால்… என்கிட்ட வந்துடு டி” என்று கூறியவனின் குரல் உடைந்து, கண்ணீர் துளிகள் அவளது கரத்தின் மீது பட்டுத் தெறித்தன.

 

‘ஜிதன்’ என இதழ்களுக்குள் சொல்லிக் கொண்டவன் “ அப்போ இந்த முகத்துக்கு பின்னால இருக்க என் பீலீங்ஸ்க்கு வேலிவ் இல்லையா யாழ்?” என அவளிடமே கேள்வியாக கேட்டவனின் இதயத்தின் ஓசை தாளம் தப்பித் துடித்தது.

 

“யாழ் நீ எனக்கு வேணும் டி. நா..நான் உன்கிட்ட பேசணும்…. எல்லாமே….ப்ளீஸ்” என மன்றாடி கொண்டிருந்தவனின் கரத்திற்குள் சிக்குப் பட்டிருந்த அவளின் கரத்தில் மெல்லிய அசைவு.

 

ஆனால் அதை உணர வேண்டியவனோ, மூளை மந்தித்த நிலையில் பித்து பிடித்தவன் போல பிதற்றிக் கொண்டல்லவா இருக்கின்றான்.

 

 அதையெல்லாம் உணரும் நிலையில் அவன் இல்லையே..

 

மீண்டும் ஒருமுறை… இம்முறை சற்று அழுத்தமாகவே அவனது கரத்துக்குள் அவளது விரல்கள் அசைந்தன. 

அந்த மெலிதான அசைவிலேயே அவனது விழிகள் பெரிதாக விரிந்து போயிற்று!

 

உயிர் வரை சில்லென்ற ஓருணர்வு பரவுவதை அக்கணம் உணர்ந்தான்.

 

அடுத்த கணமே விழுக்கென்று தலையை உயர்த்தி அவளைப் பார்த்தான்!

அவளது மூடப்பட்ட விழிகளுக்குள் கருமணிகள் மெதுவாக உருளுவது தெளிவாத் தெரிந்தன.

 

செயற்கை சுவாசக் கருவியின் வழியே அவளது மூச்சுக் காற்று சீரானதன் அடையாளமாக இதய மின் அலை கருவியின் மூலமாக அவளது இதயத் துடிப்பைக் காட்டும் வரைக் கோடுகள் வேகமாகக் ஏறி இறங்கத் தொடங்க, அவனின் இதழ்களோ தாராளமாக புன்னகையில் விரிந்துக் கொண்டன.

 தன் கரத்துக்குள் பொதிந்திருந்த அவளது விரல்களுக்கு அழுத்தமாக முத்தம் பதித்த படி அவளை ஆழ்ந்து பார்த்தவனின் இதழ்களோ, “ யாழ்” என முணுமுணுத்தன.

 

 

 

👁️ 672 Views
4.9 14 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
⚠️ இத்தளத்தின் உள்ளடக்கங்கள் DMCA
பாதுகாப்பில் உள்ளது. Copy / Screenshot / PDF
உருவாக்குதல் தடை செய்யப்பட்டுள்ளது.