Menu

சிநேகம் 1

“கட்…கட்…கட்..” என்று கர்ஜித்துக் கொண்டே இருக்கையை விட்டு எழுந்தவன் தோரணையில் அவனைச் சுற்றி நின்றிருந்த அனைவருக்கும் உடல் நடுக்கம் கொண்டது.

“கரன், வாட் தி ஹெல் இஸ் ஹாப்பினிங்?” என அவன் சீறிய தொனியில் நடுங்கிப் போனவனோ “சார், தே க்னோ த ஷூட்டிங் டைம் பட் டுடே இஸ் ஃபேர்வல் சோ…” என்று வார்த்தைகளை கோர்க்க முடியாது இழுத்தவனை அனல் பார்வை பார்த்து விட்டு விறு விறுவென அப் பிரம்மாண்டமான பல்கலைக் கழக வளாகத்துடன் ஒட்டிய கலை அரங்கத்துக்குள் எவ்வித அலட்டுலுமின்றி நுழைந்திருந்தான்.

பின்ன, அந்த பல்கலைக் கழகத்தின் உரிமையாளரே அவன் தந்தை தயாளன் என்றால் அவனைத் தடுக்க யாரால் முடியும்?

தடுத்து விட தான் முடியுமா என்ன?

தென் இந்தியாவின் சினிமா துறையையே விரல் நுனியில் வைத்து ஆட்டிப் படைத்துக் கொண்டு வளம் வரும் புகழ் பெற்ற இயக்குநர் ஆதர்வ் பிரசாத் என்றால் சொல்லவும் வேண்டுமா?

அரங்கத்திற்குள் ஆளுமையாக நுழைந்தவனை தடுத்து நிறுத்தி கேள்வி கேட்கும் அளவுக்கு அங்கு யாருக்கும் தைரியம் இருக்கவில்லை.

இத்தனைக்கும் அவன் படித்து பட்டம் பெற்ற ஏ.பி.டி பல்கலைக்கழகம் தான்.

எங்கும் எதிலும் உயர்தரம் நிரம்பி வழிந்தது.

படப் பிடிப்பிற்கென அப் பிரம்மாண்ட பல்கலைக் கழகத்தின் ஒரு பகுதியை தன் கட்டுப்பாட்டின் கீழ் வைத்து அனைத்தையும் தயார் படுத்திக் கொண்டு இருக்கும் போது தான்  அரங்கத்தினுள் இருந்து பாடல் ஒலித்துக் கொண்டிருப்பது அவன் கவனத்தில் மட்டுமல்ல அங்கு சுற்றிலும் வேடிக்கை பார்க்கவென வந்திருந்த சிலரின் கவனத்திலும் காதைப் பிளக்கும் வண்ணம் சத்தமாக கேட்கத் தான் செய்தது.

*******************

“லட்சம் பெண்ணில் உள்ளது

உன் மட்சம் தன்னில் உள்ளது

மொத்தம் மட்சம் எத்தன

எண்ணி சொல்லவா…

தாகமுன்னு வந்து புட்டா

தண்ணி இல்ல பேதம் இல்ல

மோகமுன்னு வந்து புட்டா

முகவரியே தேவை இல்லை..

தொட்டாச்சி தொட்டாச்சி

தொடாத பாகம் தொட்டாச்சி

ஹிட்டாச்சி ஹிட்டாச்சி

நான் தொட்டதெல்லாம் ஹிட்டாச்சி

அல்லி மடல் மேனியிலே

நல்ல இடம் கண்டுவிட்டேன்

எந்த இடம் ருசி அதிகம்

அந்த இடம் கொள்ளையிட்டேன்

ஓ போடு! ஓ போடு! ஓ போடு! ஓ போடு!….” என்ற பாடல் வரிகளோ உச்சகட்டமாக ஹை டெசிபலில் சுற்றி இருக்கும் சூழலையே அதிரச் செய்யும் வண்ணம் ஒலித்துக் கொண்டு இருக்க,

கழுத்தில் கை வைத்து நெட்டி முறித்துக் கொண்டே உள் நுழைந்தவன் விழிகள் என்னவோ உச்ச கட்ட அதிர்ச்சியில் அதிர்ந்து விரிந்து கொண்டன.

ஆம், குடும்பப் பெண் என்ற திரையின் பின் வேறு உடல்மொழியுடன் வளம் வருபவள் இன்றோ முற்றிலும் மாறுபட்ட அவதாரத்தில் அவன் முன்னே!

ஆக அதிராமல் இருக்க முடியுமா என்ன?

ஆண்கள் அணியும் ஷர்ட் அணிந்து கிட்டத்த பெண் வேடத்திலிருக்கும் ஆண் போல அடாவடியான ஒருத்தியும், அவளைச் சுற்றி பெண்களைப் போல மாறு வேடமிட்டு இருந்த ஆண்களுமென சில பெண் தோழிகளுடன் எவ்வித கூச்சமுமின்றி தாறுமாறாக பரந்து விரிந்திருந்த மேடையின் நடுவில் நின்று ஆடிக் கொண்டு இருந்தாள் நம் கதையின் நாயகி ஷிரோனிகா.

வாயில் சுவிங்கத்தை மென்ற படி மார்புக்கு குறுக்காக கைகளைக் கட்டிக் கொண்டே கதவில் சாய்ந்து நின்று அவர்களையே வெறித்த படி நின்றவனுக்கு புரிந்தது அவர்களின் கவனம் வந்து நிற்கும் தன் மீது இல்லை என்று,

ஆம், அவ் அரங்கினுள் ஆடிக் கொண்டு இருக்கும் அவர்களைத் தவிர அங்கு யாருமே இருக்கவில்லை.

சொல்லப் போனால் பிரியாவிடை நிகழ்வு ஆரம்பிக்க இன்னும் நான்கு மணித்தியாலங்கள் இருந்தன.

எந்தவித இடையூறும் இன்றி ஷூட்டிங் நடக்க வேண்டும் என்றே அவன் தான் நிகழ்வை தாமதமாக ஏற்பாடு செய்யும் படி கட்டளையும் இட்டு இருந்தான்.

ஆனால், அதற்குள் தான்தோன்றித் தனமாக நடந்து கொள்ளும் அவர்களைப் பார்க்க பார்க்க ரௌத்திரம் தாறுமாறாக பெருகியது.

அடக்கிக் கொண்டான்.

புயலுக்குப் பின் அமைதி என்று சொல்வார்களே! அது போல தான் அவனின் செயல் இருக்கும்.

தனக்கு கீழ் வேலை பார்ப்பவர்கள் நேரத்தினை வீண் செய்தாலே கொஞ்சம் கூட தயவு தாட்சண்யம் இன்றி அவர்களை பணி நீக்கம் செய்து விடுவான்.

அதன் பின் தலைக் கீழாக நின்று தண்ணீர் குடித்தாலும் அவன் இறங்கி வரவும் மாட்டான். தான் எடுத்த முடிவில் உறுதியாக இருப்பான்.

அப்படிப் பட்டவனின் நேரத்தையே கெடுக்கும் வண்ணம் பிற்காலத்தில் அவனுக்கு சொந்தமாகப் போகும் பல்கலைக் கழக்கத்திலேயே இவ்வளவு சத்தமாக அதுவும் தடை உத்தரவையும் மீறி பாடலை ஒலிக்க விட்டு ஆண் பெண் பேதமின்றி ஆடுபவர்களை சும்மா விடுவானா என்ன?

கூட்டத்தின் நடுவில் ஆடிக் கொண்டு இருந்தவளை அழுத்தமாக பார்த்துக் கொண்டிருந்தவன் இதழ்களில் ஒரு கேலிப் புன்னகை.

இங்கோ தன்னை ஒருவன் உறுத்து விழித்துக் கொண்டு இருக்கின்றான் என்று அறியாமல், ஒரு கட்டத்தில் ஆடிக் கலைத்த பெண்ணவளோ, உடன் ஆடிக் கொண்டு இருந்தவர்கள் சுதாரிக்கும் முன்பே சட்டைப் பக்கெட்டில் உறைக்குள் கரைத்து வைத்திருந்த நீல நிற சாயத்தை தன் நண்பர்களை நோக்கி விசிறி அடிக்க, அதுவோ அனைவரின் ஆடைகளிலும் பட்டுத் தெறித்தது.

“ஹேய் உன்ன” என்ற படியே அதில் ஒருவன் அவளைத் துரத்திப் பிடிக்கப் பார்க்க,

அவளோ, அவன் கைகளில் அகப் படாமல் மேடையை விட்டு கீழ் இறங்க எத்தனிக்க பார்க்கவும், கண் இமைக்கும் நேரத்தில் அவளை இடையோடு தூக்கி தன் புறம் திருப்பி அணைத்து தன் ஆடையிலிருக்கும் சாயத்தை அவளின் ஆடைக்கு இடம் மாற்றி இருந்தான் அவன்.

.

அக் காட்சியை பார்த்துக் கொண்டு இருந்த ஆதர்வ் பிரசாத்தின் உடல் மொழியோ அவனையும் மீறி இறுகிப் விறைத்தது.

ஆனால், அவளுக்கோ அதுவெல்லாம் பொருட்டே இல்லை போலும், ” டேய் உன்ன…” என்ற படி அவனை துரத்திக் கொண்டு ஓடினாள்.

இங்கோ ஆதர்வ் பிரசாத்தின் கரம் கொடுத்த அழுத்தத்தில் அலைபேசியும் கூட ஒரு கணம் அதிர்ந்து தன் இருப்பை உணர்த்த,

சலிப்பாக அழைப்பை ஏற்று காதில் வைத்து ” கட் ஆஃப் தி எலக்ட்ரிசிட்டி” என்றவன் குரல் கட்டளையாக மட்டும் இல்லாது அழுத்தம் திருத்தமாக ஒலித்த மறு வினாடி, மொத்த பல்கலைக்கழகத்திற்கும் வழங்கப்பட்ட மின் இணைப்பும் ஒரே நேரத்தில் துண்டிக்கப் பட்டு விடப்பட்டிருந்தது.

அதே நேரம் கலை அரங்கத்தினுள் ஸ்பீக்கரில் சத்தமாக ஒலித்துக் கொண்டிருந்த பாடலும் நின்று போய் விட,

“ இர்ரென்ஸ்சிபல் இடியட்ஸ்” என இதழ்களுக்குள் சொல்லிக் கொண்டவன் அழுத்தமான காலடிகளுடன் அவர்களை நோக்கி நடக்க ஆரம்பித்தவனை அப்போது தான் மேடையில் நின்றவர்களின் பார்வையும் ஆட்டத்தை நிறுத்தி விட்டு கம்பீரமாக நடந்து வந்துக் கொண்டிருக்கும் அவன் மீது படிந்தது.

அழுத்தமான விழிகளில் மிதமிஞ்சிய சீற்றத்துடன் கம்பீரமான தோரணையுடன் தங்களை நோக்கி வருபவனைப் பார்த்தவர்களுக்கு விழிகள் தெறித்து கீழே வீழ்ந்து விடும் என்பதைப் போல அப்பட்டமான அதிர்ச்சியில்

விரிந்து கொண்டன.

“ ஹேய் காய்ஸ் என் பின்னாடி என்ன லுக் விடுறீங்க” என்ற படியே ஷர்ட்டின் காலரை இழுத்து விட்டுக் கொண்டே இடையில் இரு கரம் வைத்து சற்றே உடல் வளைத்து தலையை மட்டும் திருப்பி பின்னால் பார்த்தவளுக்கு நெஞ்சில் நீர் வெற்றிப் போனது.

பின்ன, அவன் அவளின் அத்தை மகன் அல்லவா!

அதுவும் தன் தந்தையின் மதிப்புக் குரிவன். நல்லவன். வல்லவன்.

இவன் கண்ணிலா இந்த கோலத்தில் பட்டுத் தொலைத்தோம்?

இவன் எப்படி இங்கே? என்ற கேள்வி பூதாகரமாக தோன்ற, அடுத்த நொடியே அவனது பல்கலைக் கழகம் தானே இது என்ற பதிலும் மூளையில் மின்னல் வெட்ட, அவளுக்கோ தலையை சுற்றிக் கொண்டு வந்தது.

அவளை மேலிருந்து கீழாக தனது ஹேசர் விழிகளால் அளந்தவன் “வாவ் வாட் அ பிளசன்ட் இண்ட்ரோ மிஸ் பெர்பெக்ட் இன்னொசெண்ட் குயின்” என நக்கலாக சொல்லிக் கொண்டே பக்கத்திலிருந்த இருக்கையை இழுத்துப் போட்டு கொண்டு கால் மேல் கால் போட்டு அமர்ந்தவன் அவளின் பின்னால் நிற்கும் அனைவரிலும் தன் பார்வையை படர விட்டான்.

அவளோ, அசையவில்லை.

உடல் வியர்த்து விறுவிறுத்து விட்டது.

அந்த ஒற்றை பார்வையே உயிரை ஆட்டம் காண வைப்பதைப் போல இருக்க, அனைவரும் ஒருசேர “சாரி சார்” என்று கூறவும்,

அவனோ மன்னிப்பை ஏற்றுக் கொண்டதை போல ஒரு சிறு தலை அசைப்பும் இன்றி அவனின் ஒட்டு மொத்த பார்வையும் நின்ற நிலை மாறாது சிலைப் போல் நிலைத்த பார்வையுடன் தன்னையே பார்த்துக் கொண்டு நின்றவள் மீது தான் படிந்திருந்தது.

“நாட் பேட்… பட் தப்பாச்சே” என்று சொல்லிக் கொண்டே கன்னத்தின் உட்புறமாக நாவை சுழற்றி ஒரு மார்க்கமாக கேட்டிருக்க,

அவள் பின்னால் நின்ற அவளின் தோழியோ, அவளின் இடையை லேசாக கிள்ளி “சாரி சொல்லு டி” என்று கிசுகிசுக்க,

அது எங்கே அவளுக்கு கேட்கும்?

அவளின் மூளையோ அடுத்தடுத்து என்ன நடக்க போகின்றது? என வேக வேகமாக கணக்கிட்டுக் கொண்டு அல்லவா இருந்தது.

ஒரு குண்டூசி வீழ்ந்தால்கூட சத்தம் கேட்டு விடும் என்ற ரீதியில் சுற்றிலும் நிசப்தம்.

இதழ் குவித்து ஊதிக் கொண்டே சொடக்கிட்டு அவள் பின்னால் நிற்கும் ஒருவனை “யூ” என சுட்டு விரல் நீட்டி அழைத்தான்.

இல்லை இல்லை சற்று முன்னர் அவளை அணைத்து விடுவித்தவனை என்று சொன்னால் பொருந்துமோ என்னவோ?

அவனோ, பதறியவனாய் பவ்யமாக அவன் முன் வந்து நிற்க,

அவனின் ஷர்ட்டின் இடப் புறத்தில் தொங்கிக் கொண்டிருக்கும் பெயர் பொறிக்கப்பட்ட பேட்ஜை கூர்ந்து பார்த்து விட்டு “திலீப்” என அவன் பெயரை இழுவையாக சொன்னவன் “நீ இப்போ என்ன பண்றனா…” என்ற படி அவனை மேலிருந்து கீழாக ஒரு பார்வை பார்த்த படி கேசத்தில் உயர்த்தி போடப்பட்டிருந்த கூலர்ஸை எடுத்து விழிகளில் அணிந்துக் கொண்டே,

” கோ அண்ட் சேவ் பிரேக் பாஸ்ட் டூ கோ அக்டர்ஸ்” என்றானே பார்க்கலாம்.

அவனோ அதிர்ந்து விட்டான்.

பின்ன, அவன் இன்று எடுத்துக் கொண்டு இருக்கும் பிரத்தியேக காட்சியில் மட்டுமே நடிக்க ஒன்றும் வாய் விட்டு எண்ணுமளவுக்கு நான்கு ஐந்து பேர் நடிக்கவில்லையே!

கிட்டத்தட்ட நூறு பேருக்கும் மேல் இப்போது எடுக்கத் தயாராகிக் கொண்டு இருக்கும் காட்சியில் நடிப்பதற்காக செட்டில் அமர்ந்து இருந்தனர்.

திலீப்போ, காலையிலேயே அவன் அதையும் கவனித்து மலைத்து போய் நின்றது தான் கண்முன் வந்து போனது.

பிரம்மை பிடித்தவன் போல அவனையே அதிர்ந்து போய் பார்த்துக் கொண்டிருந்தவனை சொடக்கிட்டு அழைத்தான்.

அவனோ, “ஓ..ஓகே சார்” என திணறிய படி சொன்னவன் அவனை விட்டு தாண்டி செல்ல முற்பட,

ஆதர்வோ ” விஸ்காம் கம்யூனிகேஷன் டிபார்ட்மெண்ட் ஆஹ்?” என்று கேட்க,

அவனோ, ஆம் என்பதைப் போல தலையை மேலும் கீழுமாக ஆட்டி விட்டு விட்டால் போதுமென செல்வதிலேயே குறியாக இருந்தான்.

ஒற்றை புருவத்தை வருடிக் கொண்டே “ஒன் செக்” என்றிட,

திலீப்போ இதயம் படபடக்க நின்று அவனைத் திரும்பிப் பார்த்தான்.

” அண்ட் ஹெல்ப் தெம் டு க்ளீன் த ஷூட்டிங் ஸ்பாட்” என்க,

எச்சிலைக் கூட்டி விழுங்கிக் கொண்டே “ஓகே சார், மே ஐ லீவ்?” என அனுமதி கேட்டவனை பார்க்காமலேயே “அவுட்” என்றவனின் இறுகிய குரல் அரங்கத்தின் நாலாப் புறமும் பட்டு எதிரொலித்திருந்தது.

👁️ 2,456 Views
4.8 17 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
⚠️ இத்தளத்தின் உள்ளடக்கங்கள் DMCA
பாதுகாப்பில் உள்ளது. Copy / Screenshot / PDF
உருவாக்குதல் தடை செய்யப்பட்டுள்ளது.