Menu

நொடி – 21

நொடி – 21

அறையை விட்டு அவசரமாக வெளியே வந்தவனுக்கு அவளின் அலறல் சத்தமோ இன்னும் இன்னும் அதிகமாகவே அடுத்த அறையில் இருந்து கேட்க,

அவனோ, மேற்கொண்டு எதுவும் சிந்திக்காமல் அவ் அறைக் கதவின் குமிழில் கரத்தை வைத்ததும் தாழிடப் படாமல் இருந்த கதவும் திறந்து கொண்டது. 

உள்ளூர பதறிப் போனவனாய் அறைக்குள் நுழைந்தவனின் பார்வை வட்டத்திற்குள் விழுந்தாள் அவள். 

முதலில் அவனின் ஹேசல் விழிகளோ உச்சி முதல் பாதம் வரை அவளை அங்குலம் அங்குலமாய் ஆராய்ந்து கொண்டிருக்க, அவளோ தன்னவனைக் கண்டதும் “ஜிதன் ப்ளீஸ் அதை விரட்டுங்க” என்று சொல்லிக் கொண்டே அதீத பயத்தில் தன்னை நெருங்கி நின்றவன் மேல் அப்படியே தாவி அவன் இடையில் அமர்ந்து கொண்டாள்.

அவனோ, சற்றும் இதை எதிர் பார்க்கவில்லை.

எந்த தைரியத்தில் இப்படி நடந்து கொண்டாள் என அவளும் அறியாள்! 

அந் நொடி அவனின் தன் மீதான வெறுப்பு கூட அவளுக்கு நினைவில் இல்லை போலும்,

தன்னை காக்க தன்னவன் வந்து விட்டான் என்ற எண்ணத்தினாலோ என்னவோ, அடைக்கலம் தேடி அவனிடம் சரண் புகுந்திருந்தாள்.

” ஹேய் வாட் ஆர் யூ டூயிங்? கீழ இறங்கு” என்றவன் குரல் எப்போதும் போல கடினமாக ஒலிக்க, 

அவளோ, ஐயோ ! ஜிதன் அதை விரட்டுங்களேன்” என்றபடி அவனது கழுத்தை சுற்றி இரு கரம் கோர்த்துக் கொண்டு தன்னிரு கால்களால் அவனது இடையை இறுக கட்டிக் கொண்டாள். 

அவ்வளவு தான். அவளின் திடீர் நெருக்கத்தில் அவனது ஆண்மை விழித்துக் கொண்டது. 

அவன் இதுவரை ஸ்பரிசித்து பார்த்திராத பெண்மையின் மென்மைகளை முதல் முறையாக உணர்ந்து கொண்டவனுக்கு சுவாசம் தடைப்பட்ட உணர்வு. 

அது மட்டுமா என்ன? அவளின் உஷ்ண மூச்சுக் காற்று அவனின் கழுத்து வளைவில் பட்டுத் தெறிக்க, இவ்வளவு நாளாகவும் கட்டுக்குள் வைத்திருந்த உணர்வுகள் யாவும் காட்டாற்று வெள்ளமென கிளர்ந்தெழுந்து உள்ளுக்குள் ஏதேதோ செய்ய ஆரம்பித்து விட்டன. 

தனக்குள் நிகழும் ரசாயன மாற்றங்களை முதல் முறை உணர்ந்துக் கொண்டவனுக்கு அதைக் கட்டுப்படுத்துவது பெரும் பாடாகி போக, “யாழிசை டோண்ட் பிஹேவ் லைக் சைல்ட். கீழ இறங்கு நான் என்னனு செக் பண்றேன்” என்றான் முயன்று வரவழைத்த பொறுமையுடன், 

“நோ, என்னை இறக்கி விட்டுடாதீங்க ஜிதன்” என்று பதறி துடித்தவளாய் மேலும் அவனில் ஒன்ற, அவனுக்கோ அதுவே அவஸ்தையாகி போனது.

‘ஓஹ் காட் இவ வேற’ என உள்ளே சலித்துக் கொண்டவன் பார்வை, தனக்கு நேர் எதிராக அங்குமிங்குமாக பறந்து கொண்டிருந்த தேனீயின் மீது அழுத்தமாக படிந்தது.

“ஹையோ அது கிட்ட வருது” என்று பதறிக் கொண்டே அவனின் கழுத்து வளைவில் முகத்தை புதைத்தே விட்டாள் பெண்ணவள்.

விழிகளை இறுக மூடித் திறந்தவனுக்கு மேனியெல்லாம் ஒருவித சிலிர்ப்பு.

சட்டென்று அவளிடம் கடுமையை காட்ட கூட வார்த்தைகள் வர மறுத்தன.

அவளின் இடையில் கரம் பதித்து தன்னுடன் அணைத்து பிடித்த படியே, காற்றினால் லேசாக மூடப்பட்டிருந்த ஜன்னலின் அருகே நெருங்கி அதை திறந்து விட்டான்.

சில்லென்ற தென்றல், அவனின் முகத்தில் வந்து மோதியது.

அந்த தருணம் மனம் லேசானது போலொரு மாயை அவனுள்.

இதழ்களோ தானாக புன்னகையில் விரிந்தன.

 சற்றே அவளை அணைத்து பிடித்த படி கட்டிலின் அருகே மீண்டும் வந்தவன் பார்வையோ, இப்போது திறந்திருந்த ஜன்னலின் வழியாக பறந்து வெளியில் சென்ற தேனீயின் மீது படிந்து மீண்டது.

தேனீ சென்று விட்டதை உறுதி செய்து கொண்டவன்,

தன் கழுத்து வளைவில் முகம் புதைத்து இருந்தவளை ஏறிட்டான்.

அவளின் மேனியோ பயத்தில் நடுங்கிக் கொண்டு இருந்தது.

“சோ உனக்கு கீழ இறங்குற ஐடியா இல்ல போல” என்று கேட்டவன் குரலோ அவனையும் மீறி கரகரப்பாக ஒலிக்க,

விழிகளை இறுக மூடி அவனது கழுத்து வளைவில் முகத்தை புதைத்து இருந்தவள் அவனது கேள்வியில் சட்டென்று விழிகளை திறந்து அதிர்ந்து போய் நிமிர்ந்தவளின் இதழ்களோ அவனின் இதழ்களோடு உரசி கொள்ள,

இருவரின் விழிகளும் அதிர்ச்சியில் கீழே வீழ்ந்து தெறித்து விடும் என்பதை போல பெரிதாக விரிந்து கொண்டன.

இருவரும் இதனை சற்றும் எதிர்ப் பார்க்கவில்லை.

அது மட்டுமா என்ன?

இருவரின் இதயங்களும் ஒருவருக்கு ஒருவர் கேட்குமளவுக்கே வேகமாக துடிக்க ஆரம்பித்து இருந்தன.

உரசியும் உரசா எதிர் பாரா முதல் இதழ் முத்தம்.

அவனுக்கு எப்படியோ அவளுக்கோ உயிர் வரை தித்தித்தது.

மேனியெங்கும் ஒருவித சிலிர்ப்பு.

அதற்கு ஏற்ற போல உடலின் மொத்த ரத்தமும் முகத்திற்கு பாய்ந்தாற் போல அவளின் வதனமோ சிவந்து போனது.

மனது நிறைய அவளின் அவன் மீது காதலை மட்டும் மந்திருப்பவளின் நிலையே இப்படி என்றால்!

ஈகோவிலேயே நித்தமும் குளித்து நாவில் விஷம் வைத்து பேசும் அவன் நிலை?

அந் நொடி அவனின், அவள் மீதான காரணமே இன்றி அவன் வளர்த்துக் கொண்ட வெறுப்பு, ஈகோ என அனைத்தும் அந்த ஒற்றை இதழ் தீண்டலில் தவிடு பொடி ஆனது போலும்,

ஏற்கனவே அவளால் கிளர்ந்து எழுந்த பெயர் தெரியா உணர்வுகளை அடங்கும் வழி அறியாது திண்டாடிக் கொண்டு இருந்தவன் என்ன நினைத்தானோ அதிர்ந்து போய் மொத்தமாய் சிவந்து விழித்துக் கொண்டு இருந்தவளை தன்னோடு மேலும் இறுக்கிக் கொண்டவன், அவளின் இதழ்களை கவ்வி சுவைக்க ஆரம்பித்து விட்டான்.

அவன் தான் அவனது கட்டுப்பாட்டை இழந்ததானே அன்று அவள் அல்லவே!

அவனின் ஆழமான இதழ் தீண்டலில் அவள் தான் இன்பமாக அதிர்ந்தாள்.

தன்னை அவனுக்கு பிடித்து இருக்கின்றதா?

என்னை என்னவன் மனைவியாக ஏற்றுக் கொண்டு விட்டானா? என பலவாறு கேள்விகள் அவளின் மனதில் முட்டி மோதிக் கொண்டு நிற்க, 

இங்கோ, விட்டால் அவளது இதழை மென்று தின்று விடும் வேகத்தில் மேல் இதழ் கீழ் இதழ் என பாரபட்சம் இன்றி மிக மிக ஆழமான முத்தத்தை வழங்கிக் கொண்டு இருந்தான் ஆவணவன்.

அவனது கழுத்தை சுற்றி கோர்த்திருந்த அவளது இரு கரங்களும் இப்போது உணர்ச்சியின் பிடியில் அவனது ஷர்ட்டின் காலரை இறுகப் பற்றி கசக்கியது.

அவளை முத்தமிட்டுக் கொண்டே அவளின் இடையை இறுக பற்றி இருந்த மறு கரத்தால் அவளது கழுத்தில் ஒரு பக்கம் சரிந்த நிலையில் அநாதரவாக தொங்கிக் கொண்டிருந்த துப்பட்டாவை உருவி கீழே எறிந்தான்.

அவளுக்கோ, அதுவெல்லம் உணரும் நிலையில் இல்லை.

அவனின் தன்னை முழுதாக ஒப்படைத்து விட்டாள் பேதை அவள்.

மூச்சு முட்ட அவனின் இதழ் முத்தம் தொடர்ந்து கொண்டே போக, அவள் தான் மூச்சுக் காற்றுக்கு தவிக்கும் நிலைக்கே தள்ளப்பட்டாள்.

தன் இதழில் முதல் முறையாக ஆசையாக முத்தம் பதிக்கின்றான்.

அவளால் அவனை விலகித் தள்ளுமளவுக்கு எண்ணம் இல்லை.

இப்போது கூட அவனுக்காக உயிரை விடு என்றாலும் அதற்கு உடன்பட்டு தன் உயிரை மாய்த்துக் கொள்ளும் அளவுக்கு அவன் மேல் காதல் விஞ்சி கிடந்தது அவளிடம்,

ஆனால், இரவிரவாக அழுது அழுது தூங்காமல் இருந்த அவளது உடலோ சோர்வாக இருக்க, அதுவோ ஓய்வுக்கு கெஞ்சிக் கொண்டு இருந்தது.

அதன் விளைவு,

சிறிது நேரத்திலேயே அவன் மீதே மயங்கி சரிந்தாள் பெண்ணவள்.

விழிகள் மூடி அவளின் இதழ்கள் கன்றி சிவக்கும் அளவுக்கு அவளின் தேனூறும் இதழ்களில் மூழ்கி திளைத்திருந்தவனுக்கோ, சட்டென அவள் அவன் மீது தொய்ந்து விழவும் பதறி போனான் மீண்டும்.

“யாழ்” என்றவனது தவிப்பான குரல் அவனையும் அறியாது வெளிப்பட்டிருந்தது.

இக் கணம், அவனின் ஆழ் மனதிலிருந்தே அவளது பெயரை கூட “யாழ்” என தவிப்பாகவும் காதலாகவும் கூறியதை அவன் உணரத் தவறி இருந்தான் என்பதே கவலைக்குரிய விடயம்.

அவளை தன்னிலிருந்து பிரித்து மெல்ல கட்டிலில் கிடத்தியவனுக்கு அப்போது தான் நிதர்சனம் நெற்றிப் பொட்டில் அறைந்தது.

சுற்றம் மறந்து, தான் இருக்கும் நிலை மறந்து, அவளை ஏந்திக் கொண்டு நான் என்ன செய்து கொண்டு இருக்கின்றேன்?

நான் அடியோடு வெறுக்கும் ஒருவளிடம் எவ்வாறு என்னால் இந்த அளவு ஒன்ற முடிந்தது?

அந்த அளவுக்கு நான் பலவீனமானவனா? அவளிடம் மதி மயங்கி விட்டேனா? என நம்ப முடியாது திகைத்து நின்றான்.

இவ்வாறு கேள்விகள் ஒரு புறம் மூளையை குடைந்து கொண்டிருக்க, 

அதற்கு மாறாக அவனது மனமோ, அவளது சுய நினைவற்ற நிலையை எண்ணி கலங்கி தவித்துக் கொண்டிருந்தது.

” என்னடி எனக்குள்ள பண்ற?” என அவளை வெறித்துப் பார்த்துக் கொண்டே சொன்னவன் “ஒரு மாதிரி இங்க என தன் இடது மார்பை சுட்டிக் கட்டிக் கட்டியவன் என்னவோ பண்ணுதுடி” என்றவன் தலை பிடித்துக் கொண்டு கட்டிலில் அமர்ந்து விட்டான்.

அவனுக்கே நிதானதுக்கு வர சற்றுநேரம் தேவைப் பட்டது.

ஓர் ஆழ்ந்த பெரு மூச்சுடன் முகத்தை அழுந்த தேய்த்துக் கொண்டு அவளின் புறமாக நெருங்கி அமர்ந்தான்.

முகத்தில் சலனமின்றி தன் மனதின் அமைதியை குழைத்து விட்டு சுயநினைவின்றி படுத்துக் கிடந்தவளை துளைத்து அவன் பார்வை.

தன்னை அறியாமலேயே அவனது வலக் கரமோ , உயர்த்தி இன்னுமே தன்னால் கன்றி சிவந்து போயிருந்த அவளின் இதழ்களை வருடியவன் சட்டென உடல் விறைக்க,

அவளின், மென் கன்னத்தை தட்டி “யாழிசை” என அழைத்தான்.

ம்ஹூம் அவள் எழவே இல்லை.

மீண்டும், “யாழிசை” என்றான் குரல் உயர்த்தி,

பலன் பூச்சியம் தான்.

“ஷிட்…” என்று நெற்றியை நீவிக் கொண்டே அலைபேசியை எடுத்து கீழே இருக்கும் தனது அன்னைக்கே அழைப்பை எடுத்தான்.

ஓரிரு அழைப்புக்களின் பின் மறு முனையில் அழைப்பு ஏற்க பட, ” மா வீட்ல இல்லாம எங்க போனீங்க? மேல யாழிசை சத்தமா கத்துறது கூட உங்களுக்கு கேட்கலையா?” என்றவனின் கூர் ஈட்டிகளாக வந்து வீழ்ந்த கேள்விகள், மறு முனையில் பதறி போய் அழைப்பை ஏற்று அவனுக்கு பதில் அளிக்க காத்துக் கொண்டிருக்கும் ஷீலாவின் உயிரையே ஆட்டம் காண வைத்தது.

“இல்லப்பா நான் என்னனு பார்க்க வர்றதுக்குள்ள நீ அந்த ரூம் உள்ள போயிட்ட. நீயே பார்த்துப்பனு..” என்றவர் மறு முனையில் நீடித்த தொடர் மௌனத்தில் மேலே பேச முடியாது திணறி போனார்.

” பொண்ணை பார்த்து வலுக்கட்டாயமா கட்டி வைக்க தெரியுது பட் அவளை ஒழுங்கா பார்த்துக்க முடியாது. எல்லாத்துக்கும் ஒவ்வொரு ரீசன் வச்சு இருக்கீங்கல…” என வார்த்தைகளை கடித்து துப்பியவன் கேசத்தை கோதிக் கொண்டே “அவ எதையோ பார்த்து மயங்கி விழுந்திட்டா” என்றவன் மேலும் பேசுவதற்குள் “ஐயோ! இசைக்கு என்னடா ஆச்சு?” என பதறினார் ஷீலா.

” மா லிசின் டு மீ” என பொறுமை யின்றி சீறியவன் “அதான் சொல்றேன்ல எதையோ பார்த்து பயந்து மயங்கி விழுந்திருக்கா சோ என்னனு வந்து பாருங்க. ஐ ஹேவ் நோ டைம். அம் லீவிங்” என்று தன் அன்னையிடம் அவன் கூறினாலும் அவனது மனமே ‘அப்படியா?’ என்று அவனிடமே கேள்வி கேட்டது.

என்ன நினைத்தானோ சட்டென எழுந்து அறையில் மூலையில் வீழ்ந்து கிடந்த கிடந்த துப்பட்டாவை எடுத்து அவளின் மார்பில் போட்டு விட்டான்.

மீண்டும் அவனது எண்ணங்களோ தறிகெட்டு எங்கெங்கோ பயணிக்க

ஆரம்பிக்கவும்,

தன் எண்ண ஓட்டங்களை கட்டுக்குள் கொண்டு வந்தவன் தலையை உலுக்கி சமன் செய்து கொண்டவன், அவளைத் திரும்பியும் பாராமல் விருட்டென அறையை விட்டு வெளியேறி இருந்தான்.

👁️ 478 Views
5 11 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
⚠️ இத்தளத்தின் உள்ளடக்கங்கள் DMCA
பாதுகாப்பில் உள்ளது. Copy / Screenshot / PDF
உருவாக்குதல் தடை செய்யப்பட்டுள்ளது.