நொடி – 26
வரவேற்பு பகுதி முழுவதுமே வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு அந்த இடத்தின் அழகை மென்மேலும் மெருகேற்றிக் கொண்டிருந்தது.
அதுவெல்லாம் ஓர் அழகா என்ன?
அதற்கெல்லாம் ஈடு கட்டும் வகையில் அங்கேயே நீண்டு வீற்றிருந்த பிரம்மாண்டமாக போடப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்திருந்தாள் யாழிசை.
சாதாரணமான அலங்காரமே அவளைப் பேரழகியாக காட்டிக் கொண்டிருக்க, அங்கு வருவோர் போவோர் கூட ஆண் பெண் பேதமின்றி அவளை ரசித்து விட்டு நகராமல் இல்லை.
ஆனால் அவளுக்கு தான் அதில் எல்லாம் கவனம் இல்லை போலும்,
தன்னை இங்கேயே தனியாக விட்டு, விட்டு தொழில் துறை அதிகாரிகளிடம் பேசிக் கொண்டிருந்தவனில் தான் அவளின் பார்வை மொத்தமும் படிந்திருந்தது.
‘தன்னை மனைவியென்று எல்லோரிடமும் கூறி இருப்பானா?’ என்ற கேள்வி எழுந்தாலும் அதற்கு பதிலாக ‘அப்படியென்றால் இங்கே தன்னை அழைத்து வந்திருக்க மாட்டானே’ என்ற எண்ணமும் உள்ளே ஓடிற்று….
அசைவற்று அமர்ந்திருந்தவள் அருகில் எங்கிருந்தோ வந்தமர்ந்திருந்தாள் ஒருத்தி!
தன்னருகே யாரோ வந்தமரவும் திடுக்கிட்டு பக்கவாட்டாக திரும்பியவளுக்கு முகமே அருவருப்பில் சுருங்கிப் போனது.
அங்க வனப்புகள் அப்பட்டமாக வெளியில் தெரியும் வண்ணம் உடலை ஒட்டிய நவீன ஆடையுடன் வந்தமர்ந்திருந்த பெண்ணைக் கண்டதும் என்ன முயன்றும் முடியாமல் அவளின் முகமே அசௌசையாக மாறி விட்டிருந்தது.
அதிலேயே எதிரில் அமர்ந்திருந்தவளுக்கு எரியும் தீயில் எண்ணெயை ஊற்றியதை போல உள்ளே கழன்று கொண்டிருந்த கோபத் தீயை மேலும் விசிறிவிட்டு இருக்க,
” நைஸ் டு மீட் யூ யாழிசை” என்றாள் எகத்தாளமாக,
யாழிசைக்கோ, அவள் பேசும் போதே அவளின் மீதிருந்து அதீதமாக வீசிய மதுவின் நெடியில் தலையை சுற்றிக் கொண்டு வந்தது.
” கிரீட் பண்ணா ஆன்சர் பண்ணனும்னு ஒரு பேசிக் மேனர் கூடவா தெரியாது” என்றவளின் பேச்சில் யாழிசைக்கோ உள்ளே சுறுசுறுவென ஆத்திரம் பெருகியது.
யார் இவள்? இத்தனை திமிராக பேசுகிறாள் அதுவும் அவளுக்கு தன்னை வேறு தெரிந்திருக்கிறதே எனும் கேள்வி உள்ளே எழ, ” எனக்கு ஆல்ககால் ஸ்மெல் ஒத்துக்காது மிஸ் என்றவள் எனிவே நைஸ் டு மீட் யூ டூ” என்றாள்.
தன்னவன் அழைத்து, வந்து விட்டோம். வந்த இடத்தில் பிரச்சனை எதுவும் வேண்டாம் என்று எண்ணிக் கொண்டே, மெல்ல இதழ் பிரித்து புன்னகைத்து வைத்தாள் நாகரிகம் கருதி.
” ஆல்ரைட் அம் லியா. உனக்கு தெரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன்” என்றாள் ஒருவித விஷம புன்னகையுடன்,
யாழிசைக்கோ, அதிர்ச்சியில் விழிகள் இரண்டும் பெரிதாக விரிந்துக் கொண்டன.
இவ்வளவு நேரமும் அவளை எப்படி மறந்தாள்?
கொஞ்சம் கூடவா என் புத்திக்கு அவளாக இருக்கக் கூடும் என்று கூட உரைக்கவில்லை.
அவளின் அந்த அதிர்ந்த பாவனையே தன்னை அவளுக்கு யார் என்று தெரிந்திருகின்றது என்று விளங்கிற்று!
“ஐ க்னோ அவர்…” என்று அங்கே வெகு சுவாரசியமாக பேசிக் கொண்டிருந்தவனை கண்களால் காட்டி என்னை பத்தி உனக்கிட்ட சொல்லாம இருந்திருக்க மாட்டார்னு… ஹி இஸ் சம்திங் ஸ்பெஷல் டு மீ” என்றாள் நா கூசாது,
பதிலுக்கு என்ன சொல்லிவிட முடியும் அவளால்?
இவ்வளவு உரிமையாகவும் துணிச்சலாகவும் பேசுகிறாள் என்றால், தன்னவன் அவளை எந்த இடத்தில் வைத்திருக்கிறான் என்று புரிந்து போனது.
அவன் தன்னிடம் கணவனாக இல்லை இல்லை குறைந்தது ஒழுங்காக பேசியது கூட இல்லை இதில், அவளிடம் நாக்கை பிடுங்கிக் கொள்வதைப் போல கேட்க வந்த வார்த்தைகள் யாவும் தொண்டை வரை வந்து உள்ளேயே சிக்கிக் கொண்டன.
இன்னும் இங்கிருந்தால் தான் அறிந்து கொள்ள கூடாதவை எல்லாம் கேட்க நேரிடுமோ? என்று பயந்து போனவளுக்கு அவ்விடத்தில் அமர்ந்திருப்பதே முள்ளின் மேல் அமர்ந்திருப்பதை போல ஒருவித ஒவ்வாமையை ஏற்படுத்தியிருக்க, “எக்ஸ்கியூஸ் மீ , வாஷ்ரூம் எங்க இருக்கு?” என்று கேட்டே விட்டாள் சட்டென்று,
லியவோ அவள் நிலையைக் கண்டு உள்ளே சிரித்துக் கொண்டாள்.
அவளின் பயந்த முகப் பாவனை இன்னும் அவளை ஏதாவது காயப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தை விளைவித்திருக்க, ” ஓஹ், இது போல ரிச் பார்ட்டீஸ் எல்லாம் போயிருக்க மாட்டல என அவளை பார்த்து இரக்கப்படுவது போல ஒரு பெரு மூச்சை விட்டுக் கொண்டவள், ஓகே வெல் நேரா போய் லெஃப்ட் சைட் போ. அவர் என்னை கூப்பிட்டார்” என்று எழுந்து கொண்டாள்.
யாழிசைக்கோ, ஏன் தான் இங்கே வந்தோம் என்றே ஆயிற்று!
என்னவோ சோர்வாக இருந்தது.
மனதின் சோர்வு மேனியை தாக்கிற்று போலும் நெஞ்சை அடைத்துக் கொண்டு வந்தது.
விட்டால் அழுது விடுவபவள் போல முகமே மாறிப் போக, ” வந்துருக்கேன் லியா பட் போக வழி சொன்னதுக்கு தேங்க்ஸ்” என்று சொன்னவள் வலுக்கட்டாயமாக இதழ் பிரித்து புன்னகைத்து விட்டு அவளைக் கடந்து அவள் காட்டிய திசையை நோக்கி நடக்க ஆரம்பித்து விட்டாள்.
தன்னவனோடு அவள் அலைபேசியில் கதைத்தாலே அவளுக்கு தாங்கிக் கொள்ள முடியாத போது அவள் கண் முன்னாடியே அவனோடு இணைந்து நிற்கப் போகின்றாளா? என எண்ணும்போதே நெஞ்சமெல்லாம் விம்மி தவித்தது.
முடியாது. முடியவே முடியாது.
அவர்களை ஒன்றாக பார்க்கும் சக்தி தனக்கு இல்லவே இல்லை.
அவளிடமிருந்து அகல வேண்டும் என்பதற்காக தான் கழிப்பறை எங்கே என்று கேட்டாள் ஆனால் இப்போது நிஜமாகவே போய் கதறி அழ வேண்டும் போல இருந்தது.
விறுவிறுவென சென்று வாஷ்ரூமிற்குள் நுழைந்து கொண்டாள்.
*****************
இதே நேரம், மெல்லிய புன்னகையுடன் தொழில் துறை வல்லுநர்களுடன் கதைத்துக் கொண்டு நின்றவன் முன் சென்று நின்றாள் லியா.
சட்டென்று அவனது பார்வை யாழிசை அமர்ந்திருந்த புறமாக சுற்றி சுழல, அந்தோ பரிதாபம் அவளை அந்த இடத்தில் காணவே இல்லை.
உள்ளே திடுக்கிட்டு போனான்.
அவனோ, அவளை தனது கண்பார்வையிலேயே வைத்து விட்டு கதைக்கும் சுவாரசியத்தில் அவள் எங்கே சென்றாள் என்று கவனிக்க தவற விட்டிருக்க, “எக்ஸ்கியூஸ் மீ” என்ற படி அங்கிருந்து வேகமாக அகன்று அவள் அமர்ந்திருந்த இடத்தை நோக்கி சென்றவனின் முகத்தில் அப்பட்டமான பதட்டம்.
தான் வந்து நின்றும் தன்னை கண்டு கொள்ளாது அவளைத் தேடி செல்லும் அவனின் செயலில் லியாவுக்கோ வெறியே வந்து விட்டது.
விட்டால் யாழிசையைக் கொன்று விடும் வேகம் பிறந்தது.
தன் ஆத்திரத்தை முயன்று கட்டுக்குள் கொண்டு வந்தவள் அவன் பின்னாலேயே சென்று “உன் வைஃப் என்கிட்ட பேசிட்டு இப்போ தான் வாஷ்ரூம் போனா” என்றாள் முயன்று வரவழைத்த புன்னகையுடன்,
இதழ் குவித்து ஊதிக் கொண்டே பட்டென்று திரும்பி ” வாட் தனியா போனாளா?” என்று கேட்டவன் குரலில் தெரிந்த தவிப்பில் அவளுக்கோ பற்றிக் கொண்டு வந்தது.
அவனையே விழி அகற்றாமல் பார்த்திருந்த அவளின் முகத்தின் முன் சொடக்கிட்டு “லியா?” என்றான் குரலை உயர்த்தி,
அவர்கள் நின்ற இடத்தை கடந்து சென்ற சிலரும் அவர்களை ஒரு மாதிரியாக பார்த்து விட்டு நகர,
லியாவோ, ” ஏன் ஜிதன் இவ்வளவு டென்ஷன் ஆகிறீங்க. தனியா தான் போனா. பட் ஷீ க்னோஸ் ஹவ் டு கம் என்று இடைவெளி விட்டவள் வரவழைத்த பொறுமையுடன் அவ வந்துடுவா” என்றாள்.
” ஓகே, நீ போ, நான் வெயிட் பண்ணி அவளை அழைச்சிட்டு வரேன்”
என்றவன் அலைபேசியில் அவளுக்கு அழைப்பை எடுப்பது தெரிந்தது.
இல்லை விடவே கூடாது எப்படியாவது அவனை இன்று தன் வசப்படுத்தி விட வேண்டும் என்ற எண்ணம் நொடியில் விஷமாக மனதில் பரவ,
” ஹே யூ ஆர் தி சிஇஓ. உனக்காக தான் அங்க எல்லாரும் வெயிட்டிங் சோ உன்ன கூட்டிட்டு போக தான் வந்தேன்” என்று சொன்னவள் அவனது கரத்தை பற்ற, அவனோ சட்டென்று அவளின் காரத்திலிருந்து தன் கரத்தை விடுவித்துக் கொண்டே” ஐ செட் கோ. நான் அவளோட வரேன்” என்றான் அழுத்தம் திருத்தமாக,
” இல்…இல்ல நான்…” என்று வார்த்தைகளை அவள் கோர்க்கும் முன்னரே, அவனது அலைபேசி சத்தமாக ஒலிக்க,
சலிப்பாக ஏற்று காதில் வைத்தவனுக்கு மறு முனையில் சொன்ன செய்தியில் எரிச்சலாக வந்தது.
“ஓகே வரேன்” என்று சொன்னவனுக்கு மொத்த கோபமும் இப்போது யாழிசை மீது தான் திரும்பியது.
இவ்வளவு நேரம் என்ன செய்கின்றாள் இவள்?
நேரம் கடக்க கடக்க சுர்றென்று ஆத்திரம் பரவியது.
“இர்ரெசிபல் இடியட்” என இதழ்களுக்குள் சொல்லிக் கொண்டே அவளுக்கு அழைப்பை மீண்டும் மீண்டும் எடுத்தான்.
அழைப்பு சென்றது தான் ஆனால் அவள் தான் மறுமுனையில் எடுக்கவே இல்லை.
அவனுக்கோ, அலைபேசியை சுவற்றில் அடித்து நொறுக்குமளவு அத்தனை ஆத்திரம்.
இருக்கும் இடம் உணர்ந்து தன்னை சமன் படுத்திக் கொண்டாலும் உள்ளே ஆத்திரம் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது.
சும்மாவே விஷம் தோய்ந்த வார்த்தைகளெனும் அம்பால் அவளின் மனதை உடைத்து ரணப்படுத்துவான் இப்போது சொல்லவா வேண்டும்?
நீண்ட நாட்களாக கட்டுக்குள் வைத்திருந்த ஈகோ எனும் அரக்கன் இப்போது தலை தூக்கிற்று அவனுக்கு,
விழிகளில் கனல் தெறிக்க இறுகிய முகத்துடன் “லெட்ஸ் கோ லியா” என்று விட்டு அவளைக் கடந்து முன்னால் சென்று விட,
போகும் அவனின் முதுகை விஷமமாக பார்த்து புன்னகைத்துக் கொண்டே அவளுக்கு நீட்டப்பட்ட காக்டெய்லை சிப் சிப்பாக பருக ஆரம்பித்து விட்டாள்.
இதே சமயம், குளியலறை கதவில் சாய்ந்து நின்ற படியே அலைபேசியில் அடித்து ஓய்ந்த அவனது அழைப்புகளை தான் வெறித்துக் கொண்டு இருந்தாள் யாழிசை.
அவளிடம் துளியேனும் பதட்டம் இல்லை.
மனதில் ஒரு வெறுமை.
என்னவோ நடக்கப் போகின்றது என உள்ளே தோன்றிக் கொண்டே இருக்க, நெற்றியை அழுத்தி விட்ட படியே கதவைத் திறந்து கொண்டு வெளியில் வந்தாள்.
அவள் இருக்கும் தளத்தில் பார்டிக்கு வந்த யாரும் இருக்கவில்லை.
அங்கு வேலை செய்பவர்கள் அங்கும் இங்குமாக செல்வது தெரிய, ” பேரர்..” என்று சத்தமாக அழைத்தாள்.
தூர இருந்தே அவளைக் கண்டு கொண்ட அந்த சிற்றூழியனோ வேகமாக அவளை நெருங்கி, “சொல்லுங்க மேம்”
” இங்க இருந்த எல்லாரும் எங்க? என்று கேட்டுக் கொண்டே விழிகளை சுழல விட்டாள் பதட்டமாக,
” யாரெல்லாம் மேடம் கேக்குறீங்க? இங்க பத்து ஃப்ளோர் இருக்கு. பத்து ஃப்ளோர்லயும் பார்ட்டீஸ் புக் ஆகி இருக்கு சோ நீங்க எந்த ஃப்ளோர் சொல்றீங்க மேடம்?” என்று கேட்டானே பார்க்கலாம்.
அவளுக்கோ தூக்கி வாரிப்போட்டது.
அவன் அழைத்த போதே அழைப்பை ஏற்று இருக்கலாமோ? என்ற எண்ணம் இப்போது காலத் தாமதமாக புத்தியில் உரைக்க, ” ஓஹ்..” என்று சுரத்தே இல்லாமல் சொன்னவள் விரல்களோ தன் போக்கில் அவனின் எண்ணை அழுத்தி அழைப்பை எடுத்துக் கொண்டே இருக்க, மறு முனையில் இப்போது அவன் அழைப்பை ஏற்கவே இல்லை.
அவளுக்கோ நேரம் செல்ல செல்ல அடிவயிற்றில் ஓர் இனம் புரியா பயப்பந்து உருண்டோடியது.
“ஜிதன்… பிக்கப்… பிக்கப் ப்ளீஸ்” என்று இதழ்களுக்குள் மந்திரம் போல உச்சரித்துக் கொண்டே அலைபேசியை காதில் வைத்தாள்.
எதிரே நின்றிருந்தவனுக்கோ, முகம் முழுதும் சிவந்து வாடிய முகமாக பதட்டத்துடன் நின்றவளைப் பார்க்கவே பரிதாபமாக இருந்திருக்க வேண்டும் போலும்,
“மேடம் எனி ஹெல்ப்?” என்றான் கேள்வியாக,
“எ.. என் ஹஸ்பன்ட் கூட பார்ட்டிக்கு வந்தேன் அண்ணா. என்றவள் சட்டென்று அவர்.. அவர் பெயர் ஜிதன்” என்றாள் வார்த்தைகளை கோர்க்க முயன்று,
அவளின் விழிகளில் எப்படியாவது அவனிடம் தன்னை சேர்ப்பித்து விடுங்களேன் எனும் இறைஞ்சல் தொக்கி நின்றது.
“கம்பனி நேம் என்னமா?”
அவளோ இதழ்களை பிதுக்கி”தெரியாது அண்ணா ” என்றாள்.
கணவனின் அலுவலக பெயர் தெரியாத மனைவியா? அவனுக்கு உள்ளுக்குள் திகைப்பு தான்.
ஆனால் வெளியில் காட்டிக் கொள்ளவில்லை.
சும்மாவே பயந்து போய் இருக்கும் பெண்ணிடம் அனாவசிய கேள்விகளை கேட்டுத் துருவ அவன் விரும்பவில்லை.
“ஒவ்வொரு ஃப்ளோர் உம் ரொம்ப மாஸ்ஸிவ்வா இருக்கும் மேம். சோ தனி தனியா போயிட்டு பார்க்கிறது இம்மோசிபல்…” என்றவன் சற்று யோசித்து விட்டு, ” டோண்ட் வொர்ரி மேம் என் ஃப்ரெண்ட்ஸ் ஒவ்வொரு ஃப்ளோர்லயும் இருக்காங்க அவங்களை போட்டோஸ் செண்ட் பண்ண சொல்றேன் அப்போ ஈசியா கண்டு பிடிச்சிடலாம்” என்று வேகமாக அவளுக்கு தீர்வை கொடுத்தவனோ அலைபேசியை எடுத்து பேச ஆரம்பித்து விட்டான்.
தன்னவனின் இப்போதைய வாழ்க்கை முறைப் பற்றி இன்னும் முழுதாக அறிந்து கொள்ளாது தினம் தினம் தனக்குள்ளேயே புழுங்கி அழுது அறைக்குள்ளேயே முடங்கி என்ன செய்து கொண்டு இருந்தேன்?
தன் நிலையை நினைத்து அரவே வெறுத்து போனாள்.
அவன் தன்னை, தன் காதலை மொத்தமாக மறந்து விட்டான் என்ற எண்ணத்திலேயே உழன்று அதிலேயே தான் தேங்கி விட்டது புரிந்தது.
முகத்தை அழுந்த துடைத்துக் கொண்டு தொப்பென்று அருகில் போடப்பட்ட இருக்கையில் அமர்ந்து அந்த சிற்றூழியனை ஏறிட்டாள்.
யாரென்றே தெரியாத எனக்கு உதவுகிறான்.
எப்படியாவது தன்னை சேர்பித்து விட வேண்டும் என்ற வேகம் அவனது உடல்மொழியில் அப்பட்டமாக தெரிந்தது.
இப்படியும் ஒரு நல்லவன் இருக்கின்றான் என்று நினைத்துக் கொண்டு நிலத்தை பார்த்து அமர்ந்திருந்தவள் முன் வந்து நின்றிருந்தான் அந்த சிற்றூழியன்.
“மேம் போட்டோஸ் கிடைச்சிருச்சு நீங்க பாருங்க இதுல உங்க ஹஸ்பன்ட் இருக்காரானு” என்ற படி அலைபேசியை அவள் முன் நீட்டினான்.
அவனை ஒருவித நன்றி உணர்வோடு ஏறிட்டவள் “தேங்க்ஸ் அண்ணா” என்றவள் குனிந்து அவசர அவசரமாக அனைத்தையும் திரையில் பார்வையிட்டு கொண்டு வந்தவளின் பார்வை ஒரு புகைப்படத்தில் நிலைக்குத்தி நின்றது.
இடது மார்பில் சுரீர் என்ற ஒரு வலி ஊடுருவி உடல் முழுக்க பரவ, “அண்…அண்ணா இந்த பார்ட்டி நடக்கிறது எ…ந்த ஃப்ளோர்?” என்று கேட்டாள் குரல் அடைக்க,
அப் புகைப்படத்தை பார்த்து அதிர்ந்து போனவனுக்கு அவளின் நிலை தெள்ளத் தெளிவாக புரிந்து போக, “நைந்த் ஃப்ளோர் மேம்” என்றவனின் கரத்தில் அலைபேசியை திணித்து “ஒன்ஸ் அகைன் தேங்க்ஸ் அண்ணா” என்று சொல்லி விட்டு மின்தூக்கியை நோக்கி விரைந்தாள் பெண்ணவள்.
கிட்டத்தட்ட ஓடினாள் என்றே சொல்லலாம்.
இதயம் தாறுமாறாக துடிக்க, வேகமாக சென்று மின்தூக்கிக்குள் நுழைந்து, ஒன்பதாம் தளத்திற்கு செல்ல வேண்டி ஒன்பதாம் எண்ணை பதட்டத்தில் ஒன்றுக்கு ஆறேழு முறையேனும் தட்டி விட்டு மேனி நடுங்க நின்றிருந்தாள்.
அவன் என்னவன்… என்னவன் தான்.
அதுவும் அந்த லியாவோடு அவ்வளவு நெருக்கமாக எப்படி இணைந்து ஆட முடிகின்றது? அவளுக்கு எதையும் அதற்கு மேல் சிந்திக்க தெம்பே இல்லை.
எதுவாக இருந்தாலும் நேரில் பார்த்து முடிவு செய்து கொள்ளலாம் என தைரியத்தை வரவழைத்துக் கொண்டு உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு அத் தளம் வரும் வரை பொறுமையின்றி காத்திருந்தாள்.
ஒரு சில விநாடிகளில் அத் தளத்தை அடைந்தது விட்டாள் பாவை.
சிறிய சத்தத்துடன் மின்தூக்கியின் கதவுகள் திறந்து கொள்ள, அவளுக்கோ அவளையும் மீறி உச்சு முதல் உள்ளங்கால் வரை சொல்லிட்டு போக,
அக் கேளிக்கை விடுதிக்குள் காலடி எடுத்து வைத்தாள்.
பார்க்கும் இடமெங்கிலும் ஆண் பெண் பேதமின்றி கட்டியணைத்து தங்களை மறந்து லயித்திருக்க அவளின் கலங்கிய விழிகளோ அங்கு பிரம்மாண்டமாக போட பட்டிருந்த மேடையை வெறித்து நோக்கின.
தன்னையும் மீறி இதயம் வெடித்து விடுமோ? என்ற பயம் அவளை ஆட்கொண்டது.
மேனியோ, அவளின் கட்டுப்பாட்டையும் மீறி சூடேறி வியர்வையில் குளிக்க, மொத்த உடலும் விறைத்து போனதை போல உணர்ந்தாள்.
தன் இடது மார்பை நீவி விட்ட படி “ஜிதன், என் காதல உயிரோட புதைச்சிடாங்க ப்ளீஸ்” என இதழ்களுக்குள் சொல்லிக் கொண்டவள் பார்வை, லியாவின் இடையை பற்றி பிடித்த படி ஆடிக் கொண்டிருந்த அவளின் ஜிதன் மேல் அழுத்தமாக படிந்தது.
சோர்ந்து வலுவற்று துவண்ட கால்களை முயன்று நகர்த்தி அவன் நிற்கும் இடத்தை நோக்கி மெல்ல நடக்க ஆரம்பித்தாள்.
எந்த பெண்ணுக்கு தான், தன் கணவன் இன்னொரு பெண்ணை கட்டித் தழுவி ஆடிக் கொண்டு இருப்பதை கண்கொண்டு காண முடியும்?
தனது உயிருக்குயிரான காதல் அவன் அல்லவா!
எப்படி விட்டுக் கொடுப்பாள் அவள்?
அனைவரின் மத்தியிலும் அவனின் அருகே செல்வதற்குள் தன் மீது வந்து மோதிய ஆண்களை கண்டு அருவருத்து போனாள்.
உடல் இறுக தன்னை கட்டுப் படுத்திக் கொண்டு மெல்ல அவனிருக்கும் இடத்தை அடைந்த அவளோ “ஜிதன்” என்று நா தழுதழுக்க அழைப்பதற்கும் அவனின் அணைப்பிற்குள் ஆடிக் கொண்டிருந்த லியா அவனின் இதழ்களை கவ்வி சுவைக்கவும் சரியாக இருந்தது.
அவ்வளவு தான் அவளின் சப்த நாளங்களும் வெடித்து சிதறும் வலியை கொடுத்திட இமைக்க மறந்து நின்றாள் பேதையவள்.
அவளவனோ லியாவின் இதழணைப்பில் பதறி விலகி விட்டான்.
எதிர்பாரா அவளின் செயல் அவனுக்குள் உச்சகட்ட ஆத்திரத்தை விளைவித்திருக்க, “வாட் அ ஃப** , ஆர் யூ மேட்” என கர்ஜித்தவன் உடல் இறுகி போனது.
அருவருப்பில் இதழ்களை அழுந்த துடைத்துக் கொண்டே பார்வையை திருப்பியவன், தன்னேதிரே தன்னையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்கும் தன்னவளைக் கண்டு ஸ்தம்பித்து போனான்.
அவளது சிலை போன்ற அதிர்ந்த தோற்றத்தைக் கண்டவனுக்கு உள்ளுக்குள் என்னவோ உடைவதை போலிருக்க, அப்போதே அவளை கட்டி அணைத்து கொள்ள வேண்டி உடலும் மனமும் பரபரத்தன.
ஆனால், அடுத்த நொடியே தன் எண்ணப்போக்கு போகும் திசையில் தன்னை அரவே வெறுத்தவன் அவளை உறுத்து விழித்த படி , லியாவின் இடையை பற்றி தன்னை நோக்கி இழுக்க, அவளோ அவனின் மார்பில் வந்து மோதி இருந்தாள்.
அவனையே பார்த்திருந்த அவனின் சரிபாதியின் இதழ்களோ, கீழ் நோக்கி வளைந்தன.
அவளுக்கு தெரியும். அவன் அடுத்து என்னவோ தன்னால் தாங்கிக் கொள்ள முடியாத ஒன்றை செய்ய போகின்றான் என,
அவனைத் தடுக்கும் அளவுக்கு அவளிடம் தைரியம் துளியும் இல்லை,
அவன் மீதான எனது உணர்வுகளை ஏன் மரிக்க செய்கின்றான்?
தாழ முடியாத வலி நெஞ்சை அடைத்தது.
அவன் மார்பில் வந்து மோதிய லியாவோ ” ஹேய் பேபி! ஒன் செக் ஐ காட் பேனிக்ட்” என முகம் விகர்சிக்க சொன்னவளின் கன்னங்களை பற்றி அவளின் இதழ்களில் இதழ் பதித்தவனின் பார்வை மொத்தமும் அவனின் சரிபாதியை தான் வெறித்துக் கொண்டிருந்தது.
தொடரும்….💥💥💥🏃♀️🏃♀️🏃♀️🏃♀️
