Menu

நொடி – 19

நொடி – 19

 

குரலை மெலிதாக செருமிக் கொண்டே ” பிஃபோர் ஒன் இயர் நான் கேட்டதுக்கு இப்போ என்ன முடிவு எடுத்திருக்க?” என சிறிதும் குரலில் தடுமாற்றம் இன்றி அவள் எழுப்பிய வினா அவனுக்கே புரியாது போக, 

 

மதுவை சிப் சிப்பாக அருந்திய படி “வாட்? உன்னை பத்தி நான் என்ன முடிவு எடுக்கணும்?” என புருவங்கள் இடுங்க அவளிடமே அவன் திருப்பிக் கேட்டான். 

 

அவளோ ஏற்கனவே திருமணம் ஆகி விட்ட ஒருவனிடம் பேசுகின்றோம் என சிறிதும் லஜ்ஜை இன்றி “உன்னை லவ் பண்றேன்னு சொன்னேன்ல சோ நம்ம மேரேஜ் எப்போ பண்ணிக்கலாம்?” என்று கேட்டாளே பார்க்கலாம்.

 

மதுவை அருந்திக் கொண்டு இருந்தவன் அவளது கேள்வியில் சட்டென ஏறிட்டு அவளை துளைத்தெடுக்கும் பார்வை பார்த்துக் கொண்டே” ஒன் இயர் பிஃபோர் நான் உனக்கான ஆன்சர் சொன்னதா ஞாபகம்” என்றான் மதுக் குவளையை வெறித்த படி,

 

ஆம், அவள் காதலை சொன்ன போதே அவன் மறுத்து விட்டிருக்க, அப்போதே அதனைப் பற்றி பெரிதாக அலட்டிக் கொள்ளாதவனோ பின் வந்த நாட்களில் அவள் எப்போதும் போல நட்பாக பேசி காதல் என பிதற்றாமல் இருக்கவும் நாளடைவில் எவ்வித அசௌகரியமும் இன்றி அவளிடம் மீண்டும் நட்பாக பேச ஆரம்பித்து இருந்தான்.

 

ஆனால், இப்போது மீண்டும் அதனைப் பற்றி கேட்கிறாள் என்றால்? அவனால் அதனைக் கொஞ்சமும் ஏற்க முடியவில்லை.

 

மேனியில் ஒரு வித இறுக்கம்.

 

அவனது இறுகிய முகத்தை கண்டு சட்டென சுதாரித்துக் கொண்டவள், மிகுந்த பிரயத்தனதுடன் முகம் மாறாது இதழ் பிரித்து புன்னகைத்தவள்,

 

” இல்..இல்ல இப்போ உன் டிசிஷன் ல ஏதாவது சேஞ்சஸ் இருக்கானு பார்த்தேன் தட்ஸ் ஆல்” என தட்டுத் தடுமாறி கூறி விட்டு சமாளித்தாள்.

 

 

“இஸ் இட்? பட் அம் ஆல்ரெடி மேரிட்” 

என்றான் அவளை உறுத்து விழித்த படி,

 

அவன் திருமணம் ஆனவன் என புத்திக்கு உரைத்தாலும் மனதில் ஏற்றிக் கொள்ள மறுத்தவள் இப்போது அதுவே அவன் வாயால் சொல்லக் கேட்டதும் எங்கிருந்து தான் அத்தனை ஆத்திரம் வந்ததோ “உனக்கு அவளை பிடிக்கல தானே எதுக்காக பிடிக்காத ஒருத்திகூட உன் லைஃப் ஷேர் பண்ணிக்கணும்? ஐ அம் வித் யூ ஃபோரெவர்” 

 

“லியாயாயா இட்ஸ் டன்” என்று கர்ஜித்த படி எழுந்தவன் மேசையில் இரு கரம் குற்றி உடலை முன்னோக்கி வளைத்து விழி விரித்து அதிர்ந்து வெறித்துக் கொண்டு இருந்தவளிடம் “அவ கூட லைஃப் ஷேர் பண்ணிக்க மாட்டேன்னு நான் உன்கிட்ட சொன்னேனா?” என ஒவ்வொரு வார்த்தைகளையும் அழுத்தம் கொடுத்து அவளிடம் வினவினான். 

 

அவனது தோரணையில் மிரண்டு போனவள் இல்லை என்பது போல இடமும் வளமுமாக தலையை அசைத்தாள். 

 

“சோ நீயா எப்படி என் லைஃப்பை டிசைட் பண்ண முடியும்?” என்று கேட்டவன் மேனி விறைத்து போனது. 

 

என்னவோ தன் வாழ்க்கையை மற்றவர்கள் முடிவெடுப்பது போல அவனுள் ஒரு மாயை.

 

கட்டுக்கடங்கா கோபம் கழன்றது. 

 

இழுத்து ஆழ்ந்த பெரு மூச்சொன்றை விட்டபடி கோட்டை கரத்தில் பிடித்துக் கொண்டு தன் உயரத்துக்கு நிமிர்ந்து நின்றவனோ “பேரர்” என சொடக்கிட்டு அழைத்தான். 

 

அவர்களை விட்டு சற்று தள்ளி நின்ற சிற்றூழியனோ அடித்து பிடித்துக் கொண்டு அவன் முன் வந்து நிற்க, 

 

பர்ஸ் இல் இருந்து பணக்கட்டை எடுத்து மேசையில் வைத்தவன், “டேக் இட்” என்றபடி விறுவிறுவென அங்கிருந்து வெளியேறி இருந்தான். 

 

 

என்னவோ ஒரு புயலே அடித்து ஓய்ந்ததைப் போலிருந்தது அவளுக்கு,

 

வெகு நேரம் கழித்தே அவன் அவ்விடம் இல்லை என்பதை உணர்ந்து கொண்டவளுக்கு தன் நிலையை நினைத்து பல்லைக் கடித்தாள். 

 

அவமானமாக இருந்தது.

 

தன்னை ஒருவன் அதுவும் அவளை ஈர்த்த ஒருவன் வேண்டாம் என்பதா? 

 

“நோ ஐ காண்ட். ஐ வில் நெவர் லெட் யூ கோ” என வன்மமாக சொல்லிக் கொண்டவளின் மொத்த ஆத்திரமும் யாழிசையின் மீது திரும்பியது.

 

தன் மீது ஒருவள் தீரா வஞ்சம் கொண்டு இருக்கின்றாள் என்று அறியாமலேயே ஆழ்ந்த துயில் கொண்டிருந்தாள் பெண்.

 

முகம் முழுவதும் ரத்தமென சிவந்திருக்க, இரு கன்னங்களிலும் அழுத தடம் மாறாது கண்ணீரைத் துடைக்க கூட சிந்தை இன்றி உறங்கி இருந்தாள் அவள். ஆனால் அவளின் இத்தகைய மருகித் தவிக்கும் துயருக்கு காரணமானவனோ மது மயக்கத்தின் பிடியில் காரை உயர் வேகத்தில் வீட்டை நோக்கி செலுத்திக் கொண்டு இருந்தான்.

 

உலகை அமைதியின் போர்வையில் சுருட்டிக் வைத்திருந்த அந்த அந்தகார இரவுப் பொழுதில் தனது வீட்டின் போர்டிகோவில் காரை கிறீச்சிட்டு நிறுத்தியவன் எண்ணத்தில் லியா இறுதியாக சொன்ன ‘ உனக்கு அவளை பிடிக்காது தானே ‘ என்ற வார்த்தைகள் தான் மீண்டும் மீண்டும் ஒலித்துக் கொண்டே இருந்தது.

 

அதன் கனம் தாளாது மனம் அழுத்தி பிசைய உச்சகட்ட எரிச்சலில்

இயலாமையையும் ஆத்திரத்தையும் ஒருங்கே தோன்ற, 

 

அந்த மதுவின் பிடியிலும் தன்னிடம் இருந்த சாவி கொண்டு வீட்டினை திறந்தவனோ, தள்ளாடும் நடையை சீர்செய்த படி தனது அறைக்குள் நுழைந்தான். 

 

 

அங்கோ, கலை இழந்த ஓவியமென கட்டிலில் கால்களைக் குறுக்கி சுருண்டு படுத்திருந்த யாழிசையைக் கண்டதும் அவனது இதயமோ ஒரு கணம் நின்று துடித்தது. 

 

அடுத்த நொடியே தன்னை மீட்டுக் கொண்டவன் முகத்தில் கடினம் ஏற, அவளை வெறித்த படி அப்படியே கட்டிலின் எதிராக போடப்பட்டிருந்த நீள்விருக்கையில் தொப்பென அமர்ந்து அவளையே வைத்த விழி அகலாமல் உறுத்து விழித்துக் கொண்டிருந்தது அவனது விழிகள். 

 

தான் இங்கே தவித்துக் கொண்டிருக்கும் போது அவள் மட்டும் எப்படி உறங்கலாம்?

 

வேண்டாம் அவளை நிம்மதியாக உறங்க விடாதே! என அவனது மூளை கட்டளை இட , முகத்தை அழுந்த துடைத்துக் கொண்டு கோர்ட்டை இருக்கையில் போட்டு விட்டு எழுந்து கழுத்தில் கரம் வைத்து நெட்டி முறித்த படி அவளில் ஆழ்ந்த பார்வையை செலுத்தினான்.

 

அவளோ, உறக்கத்திலும் கூட தன்னவனின் அரவம் உணர்ந்து வெகு நேரமாக கண்ணீரை சிந்தி ஓய்ந்து போன விழிகளை இமை பிரித்து வெகு சிரமப்பட்டு திறந்து பார்த்தவளுக்கு கொஞ்சமாக விழிகளில் ஒட்டிக் கொண்டிருந்த உறக்கம் கூட தன்னெதிரே நின்றவன் பார்த்த பார்வையின் தீட்சண்யத்தில் தூர போனது.

 

உள்ளூர நடுக்கம் பரவ சட்டென எழுந்து அமர்ந்தவள் ” எப்போ வ…வந்…வந்தீங்க?” என்று தட்டுத் தடுமாறி கேட்டவளுக்கு அவன் லியாவுடன் தான் எங்கோ சென்று வந்துள்ளான் என்ற நினைப்பே கசந்து வழிந்தது.

 

அவனோ பதிலேதும் கூறாது அவளை வெறிக்கவும் சட்டென்று ஞாபகம் வந்தவளாய் கட்டிலை விட்டு எழுந்து நின்றவள் கண நேரத்தில் கட்டிலில் விரித்திருந்த வெண்ணிற விரிப்பை உருவி எடுத்துக் கொண்டே”ஸ்ஸ்…ஸ்ஸா…சாரி , இனி இங்க நான் படுக்க மாட்டேன்” என குரல் நடுங்க சொன்னவள் வேக வேகமாக வேறொரு விரிப்பை விரித்து விட்டு அவனது முகத்தை ஏறிட்டாள்.

 

அவளின் செயல்களை கவனித்துக் கொண்டு இருந்தவன் முகத்தில் என்ன உணர்வென்று அவளால் கணிக்க முடியவில்லை.

 

அவனது மாறாத பார்வையில் உள்ளே தாறு மாறாக துடித்த இதயத்தை அடக்கும் வழி அறியாது விழிகள் தாழ்த்தி ” சாப்பிட வாங்க” என்ற படி கதவை நோக்கி சென்றவள் அவன் சொடக்கிடும் சத்தத்தில் கால்கள் தரையில் வேரூன்றி விட்டதை போல அப்படியே நின்று விட்டாள். 

 

 

” லுக் அட் மீ” என்றவனது கர்ஜனையில் ஆழ்ந்த மூச்சை உள் இழுத்து வெளிவிட்ட படி அவன் புறமாக திரும்பி நின்றாள். 

 

 

” டோண்ட் டேக் அட்வான்டேஜ் ஆன் மீ. உன்னோட லிமிட் என்னவோ அதோட நில்லு. அதை கிராஸ் பண்ணி நீ என்னை நெருங்க நினைச்சா தொலைச்சுடுவேன்” என்றவன் அவளை பார்த்த பார்வையில் அவளுக்கோ முதுகு வடம் சில்லிட்டு போனது.

 

கண்கள் மீண்டும் கலங்கும் போலானது.

 

என்ன பார்வை இது? 

 

தன்னை அவன் அடியோடு வெறுக்கிறான் என அவனோடு இருந்த சில மணித்துளிகள் என்றாலும் அதை தெள்ளத் தெளிவாக உணர்ந்து கொண்டவளுக்கு இப்போது அவனின் இத்தகைய பார்வை என்ன மாதிரியானது என புரிந்து கொள்ள முடியாத நிலையாகியது.

 

குழம்பிப் போனாள் பேதை. 

 

வழமை போல அவளின் பதிலற்ற மௌனத்தில் அவனது ஆத்திரம் எல்லையைக் கடக்க, 

 

 

” என்ன புரிஞ்சுதா?” 

 

“ம்ம்…” என்றவள் குரலோ ஈனமாக ஒலித்தது. 

 

அதற்கு மேலும் அவள் முகம் பார்க்க விரும்பாத அவனோ குளியலறைக்குள் விறுவிறுவென சென்று விட்டான்.

 

போகும் அவன் முதுகை வெறித்தவள் இதழ்களில் விரக்தி புன்னகை.

 

அவனைப் பார்த்த முதல் பார்வையிலேயே அவன் குடித்து இருக்கின்றான் என தெரிந்து கொண்டவளுக்கு மனம் துணுக்குற்றது.

 

 

என் ஜிதனா குடித்தான்? அவளால் நம்ப முடியவில்லை.

 

மனதில் வெறுமை சூழ்ந்து கொண்டது.

 

 

நாட்களின் ஓட்டத்தில் அவனுடன் இருக்கும் பொழுதுகளில் அவள் இதுவரை அவனிடம் அறிந்திராத அவனது புதிய பக்கங்களை அறிந்து கொண்டு தான் இருக்கின்றாள்.

 

இன்னும் தன் காதல் கொண்ட இதயம் எதனை எல்லாம் சந்திக்க நேரிடுமோ? என ஆழ் மனதில் உதித்த கேள்வியே அவளைஒரு நிலையில் இல்லாமல் தவிக்க வைத்தது.

 

அந்த அறையில் நிற்பதே மூச்சு மு

ட்டுவதைப் போலொரு உணர்வு.

 

சிந்தை மழுங்கிய நிலையில் அவனது அறையை விட்டு வெளியேறி இருந்தாள் பேதை பெண்.

 

 

👁️ 591 Views
4.9 10 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
⚠️ இத்தளத்தின் உள்ளடக்கங்கள் DMCA
பாதுகாப்பில் உள்ளது. Copy / Screenshot / PDF
உருவாக்குதல் தடை செய்யப்பட்டுள்ளது.